கதையாசிரியர் தொகுப்பு: வத்ஸலா

3 கதைகள் கிடைத்துள்ளன.

நஷ்டம்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜனவரி 1, 1993: அப்பா! இந்த சுமித்ராவின் முகம்தான் எவ்வளவு வசீகரம் நிறைந்தது! அழகும், புத்திசாலித்தனமும் ஒருங்கே அமைந்ததனால் வந்த வசீகரமது. நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவளுடைய சுபாவமும் இனிமையானது. எல்லோரிடமும் சகஜமாகப் பழகுகிறாள். வேலையில் கெட்டிக்காரி. எத்தனை சீக்கிரம் முடிவெடுக்கிறாள்! இவ்வளவு தெளிவாக சிந்தித்து. தைரியமாக செயல்படும் பெண்ணை நான் இதுவரை கண்டதில்லை. இந்த சிறுவயதிலேயே அஸிஸ்டெண்ட் மானேஜர்


அதுவும் கடந்து…

 

 எல்லாம் முடிந்து விட்டது. இன்று காலை ஐந்தரை மணிக்கு வாசல் மணியின் ஓயாத ஓலம் என்னை எழுப்பியது. என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன் போலும். பால் காரன் அழைப்பு மணியின் மேல் தன் முழு பலத்தை பிரயோகித்து தன் பொறுமையின் எல்லையை கோடி காட்டிக் கொண்டிருந்தான். வாரி சுருட்டிக்கொண்டு எழுத்தேன். அந்த அவசரத்தில் நான் கடந்த சில நாட்களாக காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலையை செய்ய மறந்தேன் – ஸித்தார்த்தின் முகத்தை கவனமாக பார்க்கவில்லை. பாலை வாங்கிக்கொண்டு


வெறுப்பைத் தந்த வினாடி

 

 எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும் அவளுக்குப் புரியவில்லை. அவள் அவனை எப்பொழுதிலிருந்து வெறுக்க ஆரம்பித்தாள்? இந்த அருவெறுப்புக் கலந்த வெறுப்பு அவள் மனதில் எத்தருணத்தில் தோன்றியது? வெறுப்பைத் தந்த அந்த வினாடி எது? அவன் தட்டை வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே பாயசத்தை ‘சுர்’ என்று உறிஞ்சிக் குடித்துக் கொண்டு இருந்தான். (எந்த மனநிலையிலும் அவள் பண்டிகைகளைக் கொண்டாடத் தவறுவதில்லை. அப்படிச் செய்வதன் மூலம் தன் வாழ்க்கை ‘அப் நார்மலானது’ இல்லை என்று அவள் தனக்குத்தானே நிரூபிக்க