கதையாசிரியர் தொகுப்பு: லெ.முருகபூபதி

1 கதை கிடைத்துள்ளன.

புதர்க்காடுகளில்…

 

 (1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நெடிதுயர்ந்த பைன் மரங்கள் செறிந்து வளர்ந்த – வாழும் புதர்க்காடுகளுக்குள் நுழையும்போது மாலை ஆறு மணியும் கடந்துவிட்டது. வசந்த காலத்தை விரட்டியடித்துக் கொண்டு முன்னே வந்த கோடை காலத்தினால் ஆறு மணியாகியும் சூரியன் இன்னமும் உறங்கப் போகவில்லை. “புஷ்வோர்க்” – செல்வதற்கு இதுவே உகந்த நேரமென்று பிரேம்குமார் சொன்னதை நான் முதலில் நம்பவே இல்லை. “புஷ்வோர்க்.” “மச்சான் அதனைத் தமிழ்ப்படுத்து பார்ப்போம்” –