கதையாசிரியர் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு

23 கதைகள் கிடைத்துள்ளன.

வேளை வந்துவிட்டது

 

 மகனுக்கு ஈமெயில் எழுத உட்கார்ந்தார் சதாசிவம். மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் மகன் அண்மையில் அடிக்கடி “வாங்க அப்பா! வந்து நாங்கள் எப்படி இருக்கோம்னு பாத்துட்டுப் போங்க. பேரப் பிள்ளைகளையும் வந்து கொஞ்சுங்க” என்று எழுதிக் கொண்டிருக்கிறான். இப்போது போவது என்று முடிவெடுத்து அமெரிக்க விசாவுக்கு மனுப்போட்டிருக்கிறார். மூன்று மாதத்திற்கு முன் மனுப்போட்டது. அதுவும் கிடைத்து விட்டது. அது விவரம்தான் எழுத வேண்டும். விசைப் பலகையில் தட்டினார்: “அன்பு மகன் சுந்தரம், நல்ல செய்தி.


ஓர் இளைஞனின் புன்னகை

 

 நேற்றே எடிட்டர் சொல்லியிருந்தார். “காலையிலேயே போய்ப் பாத்துடுங்க. தலைவர் நாளைக்கு வெளியூர் போகவேண்டியிருக்காம். ஆகவே பிறந்த நாள் விழா காலையில ஏழு மணிக்கு அவர் வீட்டில கொண்டாடிட்டு கிளம்பிடுவார். அதுக்குள்ள பாத்திட்டு ஒரு ஸ்டேட்மண்ட் வாங்கிடுங்க. போட்டோ நிறைய எடுக்கணும்.” பிறந்த நாள் கொண்டாடும் தலைவர் அரசியல்வாதி மட்டுமல்ல. நிருபர் கலாதரன் வேலை பார்க்கும் பத்திரிகையின் புதிய முதலாளியும் அவர்தான். ஆகவே அந்தக் கோரிக்கையை இலேசாக எடுத்துக்கொள்ள முடியாது. குளித்துச் சாப்பிட்டு மோட்டார் சைக்கிளைக் கிளப்பி பிரதான


அண்ணன் வாங்கிய வீடு

 

 ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வேலு ஒரு அட்டையைப் பரப்பிக் கீழே படுத்திருந்தான். நட்டுத் துருப்பிடித்துக் கிடந்தது. ஆண்டுக் கணக்கில் கிரீசைக் காணாத நட்டு. காரை சர்வீஸ் பண்ணி எத்தனை வருஷமோ தெரியவில்லை. அப்படிக் கார்கள்தான் இந்தப் பட்டறைக்கு வருகின்றன. ஓலைக்குடிசையின் கீழ் ‘ஓ’வென்று கிடக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பட்டறைக்கு வேறு என்ன மாதிரி கார்கள் வரும்? “சுலைமான், அந்த


விடுதலையாதல்!

 

 சாப்பாட்டு மேசை மீது இருந்த டெலிபோன் மீண்டும் அடித்தது. என்ன பார்க்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் டிவியின் பிம்பங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வனிதா எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தாள். அழைப்பவர் யாரானாலும் என்ன விஷயம் பேசுவார்கள் என்று தெரியும். டெலிபோனை எடுத்துப் பார்த்தால் யார் அழைக்கிறார்கள் என்றும் தெரிந்து விடும். பெர்லின் அழைப்பாக இருக்கலாம். சிக்காகோவாக இருக்கலாம். டெல்லியாகவும் இருக்கலாம். ஆனால் எல்லா ஊர்களும் எல்லா அழைப்புக்களும் நினைத்தாலே சோர்வூட்டின. ஒரே மாதிரிக் கேள்விகள்தான் வரும்.


மஹேஸ்வரியின் பிள்ளை

 

 இன்றைக்குத்தான் அந்த நாள் என்று முடிவெடுத்து நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. அதாவது நாள் குறித்ததுதான் நான்கு வாரங்களுக்கு முன். முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுத்தது. மஹேஸ்வரியின் மூத்த அக்காளின் மகனுக்குக் கல்யாணம் குறித்து கார்டு வந்தது. “உங்கள் மேலான வருகையை எதிர்பார்க்கும்…” என்ற தலைப்பின் கீழ் அவள் பெயரும் அவள் கணவனாக என் பெயரும் கூடப் போட்டிருந்தார்கள். “நான் தூக்கி வளர்ந்த பையங்க….!” என மகேஸ் பெருமூச்சு விட்டாள். அந்தப் பெரு மூச்சுக்கு விளக்கம் “எப்படி


ஒரு கதையின் ஸ்டோரி

 

 ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான் இருக்க வேண்டும். அருமையான அச்சு வார்ப்புள்ள அந்த இதழில் அந்தக்கதை தோற்றம் பெற்றிருந்தது. மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்தது அந்தக் கதை. அதன் நடை சுண்டி வசீகரிக்கும் அழகு. அந்தக் கதையை முதன் முதலில் படித்தவர்கள் அது ஒரு பெரும் மாயத் தோற்றம் என்றும் அதன் பின் பெரும் மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பினார்கள். மிகவும் படித்தவர்களும்


நீர் மேல் எழுத்து

 

 கார்த்தியாயினி தனது சுகமான இருக்கை/படுக்கையில் கொஞ்சம் புரண்டபோது ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. அதோடு தூக்கமும் கலைந்தது. என்ன இது? சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்?’ இப்படித் தன் கவனம் கலைந்த வேளைகளில் சில கருத்துக்கள் திடீரென்று முண்டிக்கொண்டு வந்து பிரக்ஞை வெளியைப் பற்றிக் கொள்வது அவருக்கு எரிச்சலாகக் கூட இருந்தது. இதனால்தான் தூக்கம் கெடுகிறது. தூக்கம் கெடுவதால் உடல் நலம் கெடுகிறது. இப்படி மூளை ஓய்ந்திருக்கும்போது பிரக்ஞைக்குள் வந்து குதிக்கும்


ஒரு நாள் உணவை…

 

 அன்றிரவு எனக்கு உணவுப் பிரச்சினை அத்தனை பூதாகாரமாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. அன்று மாலை மனைவி “இன்னைக்கு சாப்பிட ஏதாச்சும் கடையில வாங்கிக்கிறிங்களா!” என்று கேட்ட போது கணினியில் எதையோ படித்துக் கொண்டிருந்தவன் கவனமில்லாமல் “சரி” என்று சொல்லிவிட்டேன். இரவு உணவு என்பது எனக்குப் பெரிய பிரச்சினையே அல்ல. பெரும்பாலான இரவுகளில் அது என் மனைவியின் விருப்பத்தைப் பொறுத்தது. மகளும் மருமகனும் இன்று சாப்பிட வருகிறார்கள் என்றால் தோசை, இட்டலி, புட்டு, நூடல்ஸ் (ஏன் இதற்கு


உண்மை அறிந்தவர்…

 

 வீட்டின் முன் பக்க இரும்பு கேட் துருப்பிடித்துக் கிடந்தது. மெல்லத் தள்ளினாள் சிவகாமி. மெதுவாகக் கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. நாதாங்கி பொருத்தப்பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது. காம்பவுண்டில் புல் மண்டிக் கிடந்தது. சின்னக் காம்பவுண்டுதான். புல் வெட்டி ஆறு மாதம் இருக்கும் என நினைத்துக் கொண்டாள். தான் கடைசியாக சென்ற வருடம் வந்தபோது இருந்ததை விட நிலைமை மேலும் மோசமாகியிருப்பதாகத் தெரிந்தது. கேட்டை மூடி நாதாங்கியைப் போட்டுவிட்டு உள்ளே சென்றாள்.


என் வயிற்றில் ஓர் எலி!

 

 பினாங்கில் அன்று கொஞ்சம் பிசு பிசுவென்று மழை தூறியவாறிருந்தது. நல்ல வேளை காரில் குடை இருக்கிறது. மல்லியை மழலைப் பள்ளியில் இறக்கிவிடும் போது நனையாமல் கொண்டு விட வேண்டும். மல்லி, என் மகன் வழிப் பேத்தி. பெற்றோர் இருவரும் காலை முதல் மாலை வரை முழு நேர வேலையில் இருப்பதால் அவளைக் குழந்தைகள் பள்ளியில் கொண்டு விடுவதும் திரும்பக் கொண்டு வருவதும் என் கடமைகள். காரை மெதுவாகத்தான் ஓட்டிப் போனேன். மல்லி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அந்த