கதையாசிரியர் தொகுப்பு: ரிஷபக் கோமான்

5 கதைகள் கிடைத்துள்ளன.

தித்திப்பாய் ஒரு விபத்து

 

 (நவம்பர் 1981-ல் நடந்தது) ‘தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான் என்று முடி-வெடுத்தாயிற்று. சரி, எங்கே, எப்படி செய்து கொள்வது? விஷம் எங்கே கிடைக்கும்? மூட்டைப் பூச்சி மருந்து? அது எங்கு வேண்டுமானாலும் கிடைக்குமே. எது வேகம், எது வேதனை குறைவு? தண்டவாளத்தில் தலை கொடுத்தால்? ஏதோ சயனைடாமே, அது அதிவேகம் என்கிறார்களே, அது கிடைக்குமா? சரி, வேண்டாம், கயிறு? முழி பிதுங்கி, நாக்கு வெளியே தள்ளி.. கோரமாய் இருக்குமோ? கணவனின் முகம் பார்த்து கதறி அழ முடியாமல்


அடக் கடவுளே !

 

 எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். நாக்குல சனிம்பாங்களே, அது நமக்கு இருக்கு போல. எம் மச்சான் தண்டபாணியாலத் தான் அது எனக்கு தெரியணும்னு இருந்திருக்கு. ‘கவலையை விடுங்க மாமா, நீங்க எங்க போகப் போறீங்க பாருங்க’ன்னானே, அப்ப ‘ஜிவ்’வுன்னு பறந்தவன், இப்படி ‘பொதேர்’னு விழுவேன்னு நினைக்கவே இல்லை. ‘தங்கத் தேர்’ தினமும் 8 மணிக்கு ‘உண்மை’ சானல்ல வர்ற ஸீரியல். அதை பாத்தே ஆகணும் எனக்கு; இல்லேன்னா தலை வெடிச்சுடும். அன்னைக்கு அதைப் பாத்துக்கிட்டிருக்கும் போது


இப்படியும் ஒருத்தியா!

 

 மனோகரி வெகு நேரமாய் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறாள். முக்கால் மணி நேரமாய் காத்திருந்ததில் கால்கள் கடுக்கத் தொடங்கியதோடு, காலையில் வாங்கிய புதிய மை வேறு கண்ணைக் கரிக்கிறது. மணி இரவு ஒன்பதேகாலை தாண்டியும், வைகாசி மாதத்து பகல் வெப்பத்தின் மிச்சம், அவள் முகத்து, பௌடர் பூச்சை வியர்வையால் திட்டு திட்டாக்கிக் கொண்டிருந்தது. இவற்றோடு பாழும் பசியும் சேர்ந்து கொண்டு அவளை பாடாய்ப் படுத்தியது. மனோகரி காத்துக் கொண்டிருந்தது பஸ்ஸுக்காக அல்ல. கஸ்டமருக்காக.. கடவுளே! எவனையாவது


அப்படிப் போடுடா சாமி!

 

 மொதல்லேயே சொல்லிப்புடுறேன், கதை கொஞ்சம் விவகாரமாத்தான் இருக்கும். படிச்சுப்புட்டு, ‘எளவு புடிச்சவன், இப்பிடியா எழுதுவான்?’ன்னு திட்டாதீங்க. நடந்ததைத்தான் அங்கங்கே நகாசு பூசி எழுதியிருக்கேன். நான் பொம்பளைங்க விஷயத்துல கொஞ்சம் வீக்கு. அட, கொஞ்சம் என்ன, நிறையவே வீக்கு. வயசை கேக்குறீங்களா? ஆச்சுங்க, அம்பத்தெட்டு. மக வயத்துப் பேத்தி மூணாங்கிளாஸ் படிக்குறான்னா பாத்துக்குங்களேன். அந்த மூணாங்கிளாஸ்லத்தான் விவகாரமே ஆரம்பிச்சிச்சு. ரெண்டு தெரு தள்ளித்தான் இருக்கா மக கலைவாணி. ஒரு நாளைக்கு புள்ளைய கொண்டு போய் இஸ்கூல்ல விட்டுட்டு, வீட்டுக்கு


இளைமையில் வறுமை

 

 இன்றோடு கவிதாவின் பெங்களூரு வாசம் முடிந்து விடுகிறது. திருச்சியில் உள்ள அந்தப் பெரிய நிறுவனத்தில் நாளை அவள் வேலை ஏற்க வேண்டும். அவள் இங்கேயே தொடர்ந்திருக்கலாம், ஆனால் வேண்டு-மென்றுதானே என்னை விட்டுப் போகிறாள்! அவள் மீது எந்தத் தப்பும் இல்லை; எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறாள். அவளைப் பார்க்க சதாசிவ நகரிலிருந்து மல்லேஸ்வரத்துக்கு வந்து போக, பஸ் டிக்கெட்டுக்குக் கூட பணம் கொடுத்திருக்கிறாள். பேசிக் கொண்டே நடந்து ஏதாவது தர்ஷிணிக்குள் நுழைந்து ‘ஒந்து காலி தோசா, எரடு காஃபி’