கதையாசிரியர் தொகுப்பு: ராணி பாலகிருஷ்ணன்

24 கதைகள் கிடைத்துள்ளன.

சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 பாகம் நான்கு | பாகம் ஐந்து யுதிஷ்டிரர், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் உள்ள அனைவரும் சபா பவனத்திற்கு வந்து சேர்ந்தனர். அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தனர். ராஜசூயயாகம் ஆரம்பிக்கப்பட்டது. வேடுவ தலைவர்கள், மலை வாழ் மன்னர்கள், குறுநில மன்னர்கள், ராஜாக்கள், ராஜாதி ராஜர்கள் என்று அகண்ட பாரதத்தின் எல்லா பிரதேசங்களில் இருந்தும் அனைத்து தரப்பு மக்களும் வந்திருந்தனர். யுதிஷ்டிரருக்கு கப்பம் செலுத்தியவர்களும், அன்பு பரிசுகள் கொடுப்பவர்களுமாக இருந்தார்கள். பலவகை ரத்தினங்களும் தங்கத்தால் பின்னப்பட்ட ஆடைகளும்,அணிமணிகளும் காணிக்கையாக வந்தன. தங்கத்தால்


சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 பாகம் மூன்று | பாகம் நான்கு | பாகம் ஐந்து யதிஷ்டிரர் ராஜசூயயாகம் நடத்த இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரின் யாகத்தில் கலந்து கொள்வதற்கு தீர்மானிக்கிறார். அதற்காக எல்லோரும் இந்திரபிரஸ்தம் செல்ல தயாராகுகிறார்கள். இவ்வாறாக இந்திரபிரஸ்த பிரயாணம் ஆரம்பமாகி விட்டது. ஸ்ரீகிருஷ்ணருடன் அனைத்து யாதவ சேவகர்களும் அந்தப்புரத்தில் உள்ள பெண்களும் ஆகிய அனைவரும் இந்திரபிரஸ்தம் செல்ல பிரயாணத்திற்கு தயாராகுகிறார்கள். துவரகாவிலிருந்து பயணம் ஆரம்பிக்கிறது. துவாரகாநகரம் மிகவும் மனோகரமாக இருக்கிறது. நகரம் முழுவதும் குவியல் குவியலாக விலை உயர்ந்த ரத்தினங்கள்


சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு இந்திரபிரஸ்த பிரயாணம். மந்திராலோசனை சபையில் ஸ்ரீகிருஷ்ணர், அண்ணன் பல ராமரிடமும், உத்தவரிடமும் அவர்களுடைய கருத்துக்களைகத் தெரியப்படுத்தும் படிக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க பலராமர் தன்னுடைய கருத்துக்களைக் கூறலானார். “சிசுபாலனை வதம் செய்யும் வெற்றிப் பயணம் தான் முக்கியம். இப்போது ராஜசுய யாகத்திற்காக யக்ஞ பயணம் முக்கியமல்ல.சிசுபாலன் வதம் செய்வதற்கு உசிதமான காலம். ஏனென்றால் உலகத்தினருக்குத் துன்பமும் துயரமும் விளைவிப்பவன் மட்டுமல்ல, உனக்கும் பகைவனாவான். முன்னொரு காலத்தில்


சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 பாகம் ஒன்று | பாகம் இரண்டு | பாகம் மூன்று நாரதமுனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து விடைபெற்று துவாரகா நகரில் இருந்து செல்லலானார். அதேசமயத்தில்இந்திரபிரஸ்தத்தில் இருந்து யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு வேறு ஒரு விண்ணப்பம் அனுப்பி வைத்தார். யுதிஷ்டிரர் விஷ்வகர்மா மயன் அமைத்தக் கொடுத்த இந்திரபிரஸ்த நகரை ஆட்சி செய்து வந்தார். விண்ணுலகில் உள்ள அவரது பிதா பாண்டு நாரதமுனிவர் மூலமாக தர்மராஜரை தன் தம்பிகளுடன் ராஜசூய யாகம் செய்தல் வேண்டும் என்ற செய்தி கூறி அனுப்பினார்.


சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 பாகம் ஒன்று | பாகம் இரண்டு வசுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் பகவான் ஸ்ரீவிஷ்ணு உலகத்தைக் காத்து ரக்ஷிப்பதற்காக கிருஷ்ணாவதாரம் எடுத்து அருள் பாலித்தார். வசுதேவர், தேவகிக்கு புத்திரராக அவதரித்தார். பெருமை மிகு துவாரகாபுரியை ஆட்சி புரிந்து அருள் பாலித்தார். அப்போது ஒருசமயம் ஸ்ரீ கிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக மூவுலக சஞ்சாரி நாரத மகரிஷி துவாரகாபுரிக்கு வந்து அருள் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் சிறப்புமிகு நாரத மகரிஷியை


நதியின் ஓட்டம்

 

 கோமதி அம்மன் உடனுறை மகாலிங்க சுவாமி கோயிலில் வைத்து சௌந்திரம் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் கோதண்டம். உறவினர்கள் அனைவரும் வாழ்த்தினர். கோதண்டத்தின் மதினி அழகம்மாள் உறவினர்கள் மத்தியில் மிகவும் ஜபர்தஸ்தாக இருந்தாள். அண்ணன் அருணாசலம் எப்போதும் போல அமைதியாக சிரித்தபடி இருந்தான். கோயிலில் திருமணம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். மதிய விருந்து முடிந்ததும் சில உறவினர்கள் கிளம்பி விட்டார்கள். சௌந்தரத்தின் சித்தி சுப்புவும் அப்பா சுந்தரமும் தம்பி பிரபுவும் மற்றும் சில உறவினர்கள் மட்டுமே


நீயின்றி நானில்லை

 

 ஒரு ஒரு மாலைப் பொழுதில் அடையாறு மேம்பாலத்தில் நின்று கீழே சலசலத்து ஓடும் நதியின் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சரளா. அவளைப் போல பலர் பார்த்துக் கொண்டிருந்தாலும் சற்று நேரத்தில் கிளம்பி விட்டார்கள். சரளா அசைவின்றி வெகு நேரமாக நின்று கொண்டு இருந்தாள். சமீபத்தில் பெய்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தினால் மழை வஞ்சனையின்றிப் பெய்திருந்தது. நுங்கும் நுரையுமாக வெள்ளம் கரை புரண்டு கடல் நோக்கி ஓடிக்கொண்டு இருந்தது. இதில் குதித்து விடவேண்டும். கொஞ்சம் இருட்டட்டும். ஆள்


அப்பா என்ற ஆகாசம்

 

 காரில் பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள் அனுராதா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்து கொண்டிருந்தது.அவள் அருகில் ஏழு வயது தனுஜா உட்கார்ந்து கலங்கி அழும் அம்மாவின் கண்ணீரைத் தன் பிஞ்சு கரத்தினால் துடைத்தாள். முன் சீட்டில் டிரைவர் மாணிக்கத்தின் அருகில் பூவராகன் உட்கார்ந்து இருந்தான். அவன் மடியில் நான்கு வயது தர்ஷனா அமர்ந்து கொண்டாள். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி கார் புறப்பட்டது. சென்னையில் வடபழனியில் அனுராதாவின் பிறந்த வீடு. அனுராதாவின் அப்பா ராஜாமணி


கிராதார்ஜுனீயம்

 

 பாகம் நான்கு | பாகம் ஐந்து ஒரே சமயத்தில் சிவனுடைய , அர்ஜுனனுடைய இருவரின் பாணங்களும் காட்டுப் பன்றியின் மீது தைத்தன. வேடன் உருவில் உள்ள சிவ பெருமான், ஒரு காட்டுவாசியை அர்ஜுனனிடம் அனுப்பி வைத்தார். அவன் அர்ஜுனன் சமீபம் வந்து போற்றி வணங்கி கூறுகிறான், “ஐயா, நீங்கள் அரசர்களில் சிறந்தவர் என்று நினைக்கிறேன். அதனால் எனது வணக்கங்களை உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இந்த காட்டுப் பன்றியின் மீது பதிந்துள்ள பாணம் எங்கள் எஜமானருடையது. மஹாபுருஷரே, சிவனுடைய


கிராதார்ஜுனீயம்

 

 பாகம் மூன்று | பாகம் நான்கு | பாகம் ஐந்து இந்திரியங்களை வென்று தவம் செய்யும் அர்ஜுனனை அப்ஸரஸ் பெண்களால் வசீகரம் செய்ய இயலவில்லை. இந்திரனிடம் சென்று இந்த முயற்சியில் தாங்கள் தோல்வி அடைந்ததாக கூறினர். இச்செய்தியைக் கேட்ட இந்திரன் அளவில்லா ஆனந்தம் அடைந்தான். ஆனாலும் மீண்டும் ஒருமுறை அர்ஜுனனை சோதனை செய்து பார்க்க விரும்பினான். அதனால் ஒரு முனிவரைப் போன்று வேஷமிட்டு தபோவனத்திற்கு சென்றான். முனிவரைக் கண்ட அர்ஜுனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பூஜைகள் பல