கதையாசிரியர் தொகுப்பு: யோ.கர்ணன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

யாரோ ஒருவன்

 

 நேற்று முழுவதும் அக்காவின் ஞாபகம் ஒரு காரிய நிழலாக மனதில் படர்ந்திருந்தது. அந்த அடர் திரையை விலக்கி ஒரு ஒளிக்கற்றைகூட மனத்திரையில் பதியவேயில்லை. மனதின் இருளில் வழிதெரியாத நினைவுகள் அல்லாடிக் கொண்டிருந்தன. அம்மாவின் முகமே இருண்டிருந்தது. யாருடனும் அவர் சரியாகக் கதைக்ககூடயில்லை. கடந்த சில மாதமாகத்தான் அவர் வாழ்வில் ஒளி கொண்டிருப்பதாக ஓயாத சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்று அனைத்தையும் இழந்துவிட்டார். அம்மா இவ்வளவு சீரியசாக இருக்கத் தேவையில்லையென்றுதான் எனக்குப்பட்டது. ஆனாலும் எதனையும் நான் சொல்லவில்லை. நீண்ட


கடைசிச் சடலம்

 

 எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை ராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டு, வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்குக் கொண்டுவந்தனர். அவரது வயிறு பிளந்து இருந்தது. பெரிய உடம்புக்காரரான அவர், ஒரு விலங்கைப்போலத் துடித்துக்கொண்டு இருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்போது வழியிலேயே இறந்துபோனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும்


ஆதிரையும் நாற்பது ஆமிகாரரும்

 

 ஆதிரைக்கு விரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ? இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது. இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ


வசனம்

 

 நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ரெலிபொன் அடிச்சுது. நித்திரை குழம்பின எரிச்சலோட, கண்ணை திறவாமலே தலைமாட்டில தடவி ரெலிபோனை எடுத்திட்டன். இப்பிடித்தான், அகாலங்களில ஊரிலயிருந்து அம்மா ரெலிபோன் எடுத்து, தம்பி சாப்பிட்டியோடா, தலைக்கு எண்ணை வைச்சு முழுகினனியோடா என்று கேட்டு கழுத்தறுப்பா. இப்பிடியேதோ கழுத்தறுப்புக்கேஸ் என்று நினைச்சுக் கொண்டுதான் காதுக்குள்ள வைச்சனனான். இது வேற கேஸ். நான் படுக்கையிலயிருந்து துள்ளியெழும்பினன். ரெலிபோன் கதைச்சது ரதி. அவள் என்ர மச்சாள். கதைச்சதை விட கூட நேரம் ஒப்பாரி வைச்சு அழுதாள்.


தமிழ்க்கதை

 

 ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும் பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள் போட்டுத்தள்ளிய கலைஞர் அப்புக்காத்துவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாவிட்டாலும் பாதகமெதுவுமில்லை. சிலர் அவரது புத்தகங்களில் ஓரிரண்டாவது படித்திருக்கக் கூடும். இந்த இரண்டு நிபந்தனைகளிற்கும் நீங்கள் உட்படுவீர்களெனில் இதற்கடுத்த பத்தியை வாசிக்கத் தேவையில்லை. கடந்து சென்று விடலாம். அவரை அறியாதவர்களிற்காக இதற்கடுத்த பகுதியை எழுத நேர்கிறது. முத்தமிழையும் கரைத்துக்குடித்த முத்தமிழறிஞர்கள் பரம்பரையில் கலைஞர் கருணாநிதிக்கு பின்பாகப் பெயர்