கதையாசிரியர் தொகுப்பு: மு.இராசாக்கண்ணு

16 கதைகள் கிடைத்துள்ளன.

முடவரும் நாகரும்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாம் வாழும் நிலப்பகுதிக்குத் ‘தமிழகம்’ என்று பெயர். தமிழகம் என்பது தமிழ்மொழி பேசப்படும் இடமாகும். இங்கே வாழ்வோர் தமிழ்மக்களாவர். முற்காலத்திருந்த- ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த – தமிழகத்தை இப்போது நாம் காண்கின்றேமில்லை. அக்காலத்தில் முடிதரித்த மன்னர் மூவர் வாழ்ந்திருந்தனர். அவர் சேர, சோழ, பாண்டியர் எனப்படுவார். இம் மூவரின் ஆட்சிக்கும் உட்பட்டு விளங்கிய இடமே தமிழகம் எனச் சிறந்திருந்தது. ஒரு காலத்தில்


மணிபல்லவத்து மறைதல்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடெங்கும் மழைவளம் சிறந்தது; பச்சைப் பசேலென்று பசும் பயிர் எங்கும் காணப்பட்டது. நெல் பாக்குமரம் போல் வளர்ந்தது. நாடு எல்லா வளங்களும் பெற்றது. ஒவ்வொருவரும் செல்வராயினர். இன்மை என்பது தலைகாட்டா தொழிந்தது. பசியைப் போக்கும் நெல் முதலிய தானியங்களை ஒவ்வொருவரும் தம் வீட்டில் நிரப்பி வைத்திருந்தனர்; ஆதலின், பிச்சை எடுக்க வேண்டிய தன்மை யாருக்கும் இல்லாம லொழிந்தது. ஆமகனுக்கும் சோறு இடும் தொழில்


உறுதியுள்ள மருதி

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழ் நாட்டின் மூன்று பிரிவுகளுள் ஒன்று சோழ நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதனைக் ககந்தன் என்னும் சோழன் அரசாண்டான். அவன் காவிரிப்பூம்பட்டினத் தைத் தலைநகரமாகக் கொண்டிருந்தான். காவி ரிப்பூம்பட்டினம் துறைமுகமாகவும் விளங்கிற்று. ககந்தன் ஒரு நல்ல அரசன். அவன் உயர்ந்த குணங்களை எல்லாம் பெற்றிருந்தான். குற்றங்கள் செய்யாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். குற்றங்களே ஒருவன் வாழ்வைப் பாழாக்கும் என்பது நம் –


தமிழ் முழுதறிந்தோன்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நம் தமிழ் நாட்டைப் பல சிறிய அரசர்களும், பெரிய அரசர்களும் ஆண்டு வந்தனர். அவர்கள் தங்களுடைய அடையாளங்களாகப் பலவற்றை வைத்துக்கொண்டிருந்தனர். அவற்றுள் ‘முரசு’ என்பதும் ஒன்று. இம் முரசினை எவ்வாறு செய்தார்கள்? காட்டில் வாழ்கின்ற விலங்குகளுக்குள் சண்டை உண்டாவது வழக்கம். காளைமாடு புலியுடன் சண்டையிட்டுத் தன் கொம்புகளால் புலியைக் கிழித்துக் கொல்லும். அவ்வாறு கொன்ற காளை இறந்த பிறகு அதன் தோலால் முரசினைச்


சாலி மகன்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) I பசு மகன் ஆறுகளில் உயர்ந்தது கங்கை. இதில் வந்து கலக்கும் சிறிய ஆறுகள் பல இருக்கின் றன. அவ்வாறு கலக்கின்றவற்றுள் இரண்டு. வாரணை, அசி என்பவை. இவை கங்கையோடு சேரும் இடத்தில் ஓர் ஊர் இருக்கின்றது. அதற்கு வாரணாசி என்பது பெயர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாரணாசியில் அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந் தான். அவன் பெயர் அபஞ்சிகன்; வேதத்தை


முருகவேள் திருமணம்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாண்டி நாட்டிற்குத் தலை நகரமாக மதுரை விளங்கிற்று. அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் சிலர் காலையில் நான்கு மணிக்கெல்லாம் வழக்கமாக எழுந்திருப்பார்;வேறு சிலர் சோம்பலுடன் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்க ஆசைப்படுவார்கள்; ஆனால் அவர்களை வேறு சில ஒலிகள் எப்படியேனும் எழுப்பி விடும். அந்த ஒலிகள் எவை? மாணவர்கள் பாடங்களைப் படிக்கும் ஒலி, புலவர்கள் நூல்களை ஆராயும் ஒலி, ஆகியவையே அவை. மதுரை நகரம் முழுவதும்


கற்புடைய மங்கை

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1.தலைவன் பிரிவு காவிரிப்பூம்பட்டினம், சோழர் தலை நகரமாய்த் திகழ்ந்தது. கடலின் துறைமுகமாகவும் சிறப்புற்று விளங்கியது. அப்பட்டினத்தில் சாதுவன் என்போன் ஒருவன் வாழ்ந்துவந்தனன்; செல்வம் மிகப் பெற்றவன்; ‘பொருளினைப் போற்றி வாழ்,’ எனும் உயர்மொழியைக் கடைப் பிடித்து அவன் மூதாதையர் ஈட்டிய பொரு ளுக்கோ எல்லை இல்லை. ஆயினும், அதனை எவ்வழியில் செலவிடுதல் நல்லது என்பது சாதுவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு நல்லறிவு இல்லை. அவன்


நெடுஞ்செழியனும் இரும்பொறையும்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1.வளம் பெருக்கிய மன்னன் பாண்டிநாடு, கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் கடலையே எல்லையாக உடையது. அக்’ கடலொலியினும் மிக்க ஆரவாரத்துடன் மக்கள் நிறைந்து காணப்படுகின்றனர். ‘நம் மன்னனுக்கு இனிக் கவலை வேண்டியதில்லை. அவனுக்குப் பின் முத்தமிழ் செறிந்த இந்நாட்டினை ஆளுதற்குரிய மகன் பிறந்துவிட்டான்,’ என்று பாண்டி நாட்டினர் களிப்புக்கடலில் ஆழ்ந்தனர். எங்கும் மகிழ்ச்சி! எவர் முகத்திலும் மகிழ்ச்சியின் விளக்கம் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தது. பிறந்த


தாமப்பல் கண்ணனார்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொண்டை நாட்டில் சிறந்த ஊர்கள் பல உண்டு. காஞ்சிபுரம் அவற்றுள் புகழ்வாய்ந் தது. பழையகாலத்தில், காஞ்சிபுரம் தலை நகரமாகவும் விளங்கியிருந்தது. காஞ்சியை அடுத்துப் பல ஊர்கள் விளங்கின. அவற்றுள், தாமல் (அல்லது) தாமப்பல் என்பதும் ஒன்று. அவ்வூரில் அறிவு மிக்க புலவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருடைய இயற்பெயர் கண்ண னார். தாமப் பல் என்ற அவர் ஊருடன் அவர் பெயரையுங் கூட்டித் தாமப்பல்


கரிகாலனும் சேரமானும்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கரிகாலன் என்பவன் தலைசிறந்த சோழ நாட்டு மன்னன். இவன் இளமையில் மிகுந்த அல்லலை அடைந்தான். தொல்லைகளால் துய ருற்றான். ஆனால், முயற்சியை இழக்கவில்லை. மேலும் மேலும் முயற்சியைக் கைக்கொண்டு முன்னேற்றம் அடைந்தான். சிறையிலிட்டுப் பெருந்தீக்கொண்டு இவனைக் கொல்லுதற்கு இவன் பங்காளிகள் சூழ்ச்சி செய்தனர். அத்துன்பமும் இவனை நெருங்கவில்லை. வயது நிரம்பிக் கட்டிளைஞனான இவனுக்கு ஓர் ஆவல் உண்டாயிற்று. அஃதாவது, தண் தமிழ் நாடே