கதையாசிரியர் தொகுப்பு: முனைவர். கு.சிதம்பரம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்தக் கண்ணீர்

 

 எங்கள் கிராமத்துக்கு பள்ளிக்கூடம் வேண்டுமென்று பல அறப் போராட்டங்களைச் செய்ததற்கு அரசாங்கம் செவிமடுத்து ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கூடம் ஒறைக் கட்டிக் கொடுத்தது. இந்த அறப் போராட்டங்களுக்கு பக்க பலமாகவும், செயல் ஊக்கியாகவும் இருந்தவர்கள், எங்கள் ஊரில் அன்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சில கொள்கைவாதிகள்தான். அரசாங்கத்தின் பார்வையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றி ஒரு போதும் கவலைப்படவுமில்லை, தெரிந்து கொள்ள விரும்பவுமில்லை. ஆனால், அவர்களை அறிவு ஜீவிகளாகத்தான் பார்த்தனர், எங்கள் ஊர் மக்கள்.


செவ்வாய் தோசம் பிடித்த…?

 

 இன்று நான் படுக்கையிலிருந்து தூக்கம் தெளிந்து கண் விழித்த நேரம் விடியற்காலை ஐந்து மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்! ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டேன். இருளை விரட்டிக் கொண்டிருந்தது சூரியனின் இளங்கதிர்கள். பறவைகள் ஆனந்தத்தில் ஆடிப்பாடிக் கொண்டிருந்தன. விடியற்காலையில் பறவையின் கீதங்களைக் கேட்பதில் எனக்கு அலாதிப் பிரியம். மெய்மறந்து சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே ஊடுருவிய சூரியன் அறையிலிருந்த இருளையும் விரட்டியது. நாட்காட்டியைப் பார்த்தேன். நேற்றைய தேதியைக் காட்டியது. அதைக் கிழித்து எறிந்தேன். என் கண்ணில்