கதையாசிரியர் தொகுப்பு: மா.புகழேந்தி
இல்யாஸ்
Ильяс : இல்யாஸ் மூலம் : லியோ டால்ஸ்டாய் தமிழில் : மா. புகழேந்தி ஒரு காலத்தில் இல்யாஸ் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை அவனுக்கு ஒரு நல்ல பெண்ணை மணமுடித்துக் கொடுத்த ஓர் ஆண்டுக்குப் பின்னர் மறைந்து போனார், சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு சொத்தினையும் விட்டுச் செல்லவில்லை. இல்யாஸ் அப்போது ஏழு குதிரைகளையும், இரண்டு மாடுகளையும், சில ஆடுகளையும் வைத்திருந்தான். அவன் நல்ல நிர்வாகி விரைவில் தனது சொத்து பத்தினை அதிகரித்துக் கொண்டான்.
சூரத் காப்பிக் கடை
СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை மூலம் : லியோ டால்ஸ்டாய் தமிழில் : மா. புகழேந்தி ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக் கடை இருந்தது, அங்கே உலகின் எல்லா மூலையில் இருந்தும் பல வெளி நாட்டு வணிகர்கள் வந்து சந்தித்து தங்களுக்குள் அளவளாவிக் கொள்வார்கள். ஒரு நாள் ஒரு பாரசீக தத்துவ ஞானி அங்கு வந்தான். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கடவுளைப் பற்றிப் படித்தும் பேசியும் ஆராய்ந்தும் எழுதியும் கழித்திருந்தான். இவ்வாறு
மோசக்காரப் பையன்
Злой мальчик : மோசக்காரப் பையன் மூலம் ; அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி. வான் லாப்கின், அழகிய தோற்றம் கொண்ட இளைஞன், அனா சாம்ப்ளிட்ச்காயா, நுனி மூக்கு வளைந்த பெண், செங்குத்தான மலைப்பாதையில் ஆற்றங்கரையில் இறங்கி அடிவாரத்தில் இருந்த பலகையில் அமர்ந்தார்கள். பலகை ஆற்றங்கரையின் மிக அருகில் வில்லோ மரக்கூட்டங்களின் நடுவில் அமைந்திருந்தது. மிக அழகிய இடமாக இருந்தது. எந்தவித வெளியுலகத் தொடர்பும் இன்றி அங்கே அமர்ந்திருக்கலாம், நீருக்குள் நீந்தும் மீன்களும் நீர்ப்பரப்பில்
பிச்சைக்காரன்
Le Gueux : பிச்சைக்காரன் மூலம் : கய் தே மாப்பசான் (Guy de Maupassant) தமிழில் : மா. புகழேந்தி. தற்போது துன்பத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் மகிழ்ச்சியான நாட்களையும் அவன் பார்த்திருக்கிறான். அவனின் பதினைந்தாவது வயதில் வார்வில்லி நெடுஞ்சாலையில் எதோ ஒரு வண்டி செய்த விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்தன. அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான், சாலைகளிலும், வயல்வெளிகளிலும் ஊர்ந்து சென்றான், கைகளுக்கிடையில் ஊன்று
பழிதீர்ப்பவன்
Мститель : பழிதீர்ப்பவன் மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது வெளித்தோற்றம், ஆத்திரம் , சோகம் கலந்த கலவையாகவும் மாற்றமுடியாத உறுதி கொண்டவனாகவும் காட்டியது. “என்ன செய்ய வேணும்னு எனக்குத் தெரியும்”, தனக்குள் சொல்லிக்கொண்டான்.”குடும்பத்தின் புனிதம் கேட்டு விட்டது, குலப்பெருமை சேற்றில்
கொடியவர்கள்
Злодеи : கொடியவர்கள் மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ் தமிழில் : மா. புகழேந்தி 1 அதிகாலையில், விடிவதற்கும் முன்னர், அந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லோரும் துயில் எழுந்து, விளக்கேற்றி இருந்தனர். ஜன்னலுக்கு வெளியே இன்னும் இரவின் நீல நிறம் வானில் எஞ்சியிருந்தது, ஆனாலும் விடிவதை அறிவிக்க வெளுத்துக் கொண்டிருந்தது. குளிராக இருந்தது, அவளது முழு உடலும் நடுங்கியது, அவளிடம் ஆழ்ந்த சோகம் கப்பியிருந்தது. அதுதான் அவளை அதி காலையிலேயே எழுப்பி இருக்கக் கூடும். உணவறையில்
நல்ல முடிவு
Хороший конец : நல்ல முடிவு மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா , சொல்லக்கூடிய அளவுக்கு, சற்றே கொழுகொழுப்பான பெண்மணி, நாற்பதைத் தொட்டிருப்பவர், திருமண ஏற்பாட்டாளர், அது மட்டுமல்லாது காதும்காதும் வைத்தது போல சொல்லக் கூடிய பல வேலைகளைச் செய்பவர். தற்போது ஸ்டைட்ச்கின், ரயில்வே தலைமைக் காவலர், விடுமுறையில் இருக்கும் ஒரு நாளில் அவரைக் காண வந்திருந்தாள். ஸ்டைட்ச்கின், ஓரளவுக்குப் பரபரப்பாக, ஆனால், எப்போதும் இருப்பது போல இறுக்கமான
ஆனந்தம்
Счастье : ஆனந்தம் மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ் தமிழில் : மா. புகழேந்தி ஷாஷா, ஒரு விலை மகள், ஒரு காலத்தில் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்த அவளது முகம் இப்போது பொலிவிழந்து கன்னம் ஒட்டி, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவளது வாழ்க்கை, வாழ்க்கை என்று சொல்லிகொள்ளும் அனைத்தையும் இழந்திருந்தது.அது ஒரு கொடுமையான பிழைப்பாகவே இருந்தது. கொடுமையான நாள். பகல் தனது வெம்மையையும் வெளிச்சத்தையும் மெல்ல மெல்ல இழந்து, நம்பிக்கையற்ற இரவில் கரைந்தது, இரவோ முடிவே
யாரோ சொன்ன கதை
Рассказ Hеизвестного человека : யாரோ சொன்ன கதை மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி ஐந்தாம் நூற்றாண்டில், இப்போதைப்போலவே, சூரியன் ஒவ்வொரு காலையிலும் உதித்தது ஒவ்வொரு மாலையிலும் ஓய்வெடுக்கச் சென்றது. விடியலில் கதிரொளி பனித்துளியை முத்தமிட்ட போது, பூமி புத்துணர்ச்சி பெற்றது, காற்று உற்சாகமான நம்பிக்கை ஒலிகளால் நிறைந்தது. மாலையில் அதே பூமி இருளுக்குள் மூழ்கி அமைதியானது. ஒரு நாள் இன்னொரு நாளைப் போல இருந்தது, ஓர் இரவு இன்னோர் இரவைப்
பிறகு
Après : பிறகு மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி “கண்ணுகளா இனி நீங்க தூங்கப் போகலாம்.”, பாட்டியம்மா சொன்னார்கள். மூன்று குழந்தைகளும், இரு சிறுமிகள் ஒரு சிறுவன், எழுந்து தங்களது பாட்டியை முத்தமிட்டனர். பிறகு அவர்கள் பாதிரியாருக்கு இரவு வணக்கம் செய்தனர் , அவர் ஒவ்வொரு வியாழக் கிழமையும் போல அன்றும் இரவு உணவினை அங்கு தான் முடித்திருந்தார். அவர் இரு குழந்தைகளை தனது முழங்காலில் மேலே தூக்கினார், தனது