கதையாசிரியர் தொகுப்பு: ப்ரியா தம்பி

2 கதைகள் கிடைத்துள்ளன.

எனக்கான முத்தம்

 

 ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ”இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது” என்ற இடத்தில், இப்போது எட்டாம் வகுப்பு B செக்ஷன் செயல்படுவதாக கரும்பலகை சொன்னது. அரை சுவரும் அதற்கு மேல் ஓட்டுக் கூரையுமாகக் கட்டடம் அப்படியே இருந்தது. ”இதுல நீ எங்க உட்காந்திருந்த… ஃபர்ஸ்ட் பெஞ்சா?” ”அப்பல்லாம் பெஞ்ச் இல்லை, தரையிலதான் உட்காருவோம்.” ”அப்ப உன் ஃப்ரெண்ட் யாரு?” எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. என் ஞாபகத்திறனின்


அப்பா மகள்

 

 ஏதோ ஒரு நடுக்காட்டில் ரயில் சிக்னலுக்காகக் காத்திருந்தது. பயணங்களில் தூங்கும் பழக்கம் தேவாவுக்கு இல்லை. ஜன்னல் கண்ணாடி வழியே, வெளியே தெரியும் வெளிச்சப் புள்ளிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எதிர் இருக்கையில் அம்மாவின் அருகே படுத்து இருந்த குழந்தை ஒன்று, ஏ.சி-யின் குளிர் தாங்காமல் நெளிந்துகொண்டு இருந்தது. அப்பர் பெர்த்தில் இருந்து அதைப் பார்த்த அப்பா, எழுந்து வந்து குழந்தைக்கு போர்வை போர்த்தினார். மனைவியின் அருகில் அமர்ந்து பாதி வெளிச்சத்தில் மனைவியையும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு இருந்தார். அந்த அப்பாவை