கதையாசிரியர் தொகுப்பு: பி.பாலசுப்ரமணியன்

1 கதை கிடைத்துள்ளன.

ஆப்பிள்

 

 இப்போது பெய்கிற மழையை எதிர்பார்க்கவில்லை. வெயில் உச்சத்தைத் தொட்டுச் சரிந்த வேளையில் திறந்த வானின் மதகுகள் இன்னும் மூடாமல் பெய்கின்றன. ஊழிக்காலத்து உக்கிரம் இல்லை என்றாலும், நகரங்களில் பெய்கிற எந்தப் பெருமழையும் ஊழியை ஞாபகப்படுத்திவிடும். நகரத்தில் மழையை எதிர்பார்த்திருப்பவர் யார்? இருந்தாலும் பெய்து தொலைக்கிறது. உடை போட்டுக்கொண்டு தெருவில் நடமாட வாய்த்த ஜீவன்கள் அனைத்தும் நனைந்து, மழையின் துளிகளைச் சிறிதளவாவது உடையில் சேமித்துச் சென்றன. நனைந்ததால் கேசம் கற்றையாய் ஆகின. நாய்கள் கிடைத்த இடங்களில் ஒதுங்கின. உடலை