கதையாசிரியர் தொகுப்பு: பட்டுக்கோட்டை பிரபாகர்

18 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் – சில காட்சிகள்

 

 காதல் – முட்டாள் செய்கிற புத்திசாலித்தனமான காரியம். புத்திசாலி செய்கிற முட்டாள்தனமான காரியம்! – ரூ சாமுவேல் ஜான்சன் சுவாமிநாதன் ஸ்கூட்டரை நிறுத்தினார். ஜிப்பா உயர்த்தி பல்லால் கடித்துக் கொண்டு தளர்ந்திருந்த வேட்டியை இறுக்கிக் கட்டினார். படிகள் ஏறி இரண்டாவது மாடியில் இருந்த தனது ஃபிளாட்டுக்கு வந்தார். அழைப்பு மணியை ஒலிக்கச் செய்துவிட்டு, கண்ணாடியைக் கழற்றி ஊதித் துடைத்தார். கதவைத் திறந்த மனைவியிடம் உற்சாகமாக, “ஒரு சந்தோஷமான விஷயம் ஆனந்தி…” என்றார். செருப்புகளை விலக்கிவிட்டு, நைலான் வயர்


புலி வருது!

 

 சத்தியமங்கலம் காட்டிலாகா அலுவலகம் முன்பாக திடீரென்று ஜீப்பில் வந்து கலெக்டரே இறங்குவார் என்ற அதிகாரிகள் யாரும் எதிர் பார்க்கவில்லை “இதோட எட்டு பேர் செத்தாச்சு. என்னதான் பண்ணிட்டிருக்கீங்க நீங்க?” கத்தினார் கலெக்டர் “சார், கிராமத்துக்காரங்களே ஒரு குழு அமைச்சி தினம் பத்து பேர்னு தீப்பந்தம் கொளுத்திக்கிட்டு ஊரைச் சுத்தி வந்து காவல் காத்திக்கிட்ருக்காங்க. நாங்க ரெண்டு ஆபீசர்ஸ் ஜீப்புல துப்பாக்கியை வெச்சிகிட்டு அலைஞ்சிட்டுக்கோம். இனிமே எந்த பிராப்ளமும் வராது சார்.” “என்ன இப்படிப் பொறுப்பில்லாமல் பேசறீங்க? எட்டு


இது ஒரு முற்றும் துறந்த கதை

 

 9-9-99 கம்ப்யூட்டர் துப்பிய கார்டில் அந்தத் தேதியைப் பார்த்த குமாஸ்தா கவுண்ட்டரின் இந்தப் பக்கம் தவிப்புடன் காத்திருந்த என் முகத்தைப் பார்த்தான். “பரவாயில்லை சார். உங்களுக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் இருக்கு. இந்தாங்க” அரசாங்க முத்திரை பதித்த அந்த அட்டையை என்னிடம் ஒப்படைத்தான். நான் வாங்கி தேதி பார்த்தேன். 9-9-99! மனம் பதறியது. கண்கள் கலங்கின. இளம் மனைவி. மூன்று பெண் குழந்தைகள். தெரிந்த எல்லா இடத்திலும் கடன். காதல் திருமணமென்பதால் உறவுகளோடு பகை. யாரும்


வில்லன் என்கிற கதாநாயகன்

 

 எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த வேளையில்தான் அது ஆரம்பித்தது. அதைத்தான் அறுபதுகளில் எழுதின கதாசிரியர்கள் விதி சிரித்தது என்று வர்ணிப்பார்கள். முகேஷ், ஸ்வேதாவை முதன்முதலில் எங்கே சந்தித்தான், அவர்களுக்குள் காதல் எப்படி ஏற்பட்டது என்பதையெல்லலாம் இது நாவல் இல்லை என்பதால், கடந்து வந்து விடலாம். இன்னும் பதினைந்து நாட்களில் அவர்களுக்குக் கல்யாணம். பட்டுப்புடவை எடுத்தாயிற்று. பந்தலக்குச் சொல்லியாயிற்று. பத்திரிகை புரூஃப் பார்த்துக் கொடுத்தாயிற்று. பாயசம் என்ன என்ற முடிவெடுத்தாயிற்று. முகேஷுக்கு உள்ளே ஒரு கன்றுக் குட்டி உதைத்துக்


பரத் VS சுசிலா

 

 கட்டிக்கொண்டிருந்த மேம்பாலத்தில் வெல்டு வைத்து, நெருப்புப் பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்தார்கள். வெட்டிப் போட்ட மணல் மேடுகளின் மேல் படகுகளாக அசைந்தசைந்து கார்கள் ஊர்ந்தன. ஓர் ஏராள் அசைவில் பரத்மேல் சரிந்து நிமிர்ந்த சுசிலா, “எத்தனை மணிக்கு வரச் சொன்னார் பரத்…?” “மணியெல்லாம் சொல்லலை. உடனே வாங்கன்னார். அதனாலதான் உனக்கு பனியன் மாத்தக்கூட அவகாசம் கொடுக்க முடியலை….” என்ற பரத், சாலையின் சிக்கலிலிருந்து மீண்டு, கியர் மாற்றி, உதட்டில் சிகரெட் வைத்துக் கொண்டன். லைட்டர் கிளிக்கிப் பற்ற வைத்த


பூப்பூத்தல் அதன் இஷ்டம்

 

 “இந்த நோட்சை இன்னிக்க நைட்டே காப்பி பண்ணிடுவேன். நாளைக்கு காலையில் உங்க நோட்டைக் கொடுத்துடறேங்க” என்றான் பிரகாஷ் “சரி” என்ற நிஷா சற்று தள்ளி காத்திருந்த தன் தோழிகளோடு சேர்ந்து கொண்டு காலேஜ் கேண்டீன் நோக்கி நடந்தாள். வழியெல்லாம் மஞ்சள் பூக்கள் பூத்த மரங்கள் கிளைகளின் கூட்டணியில் நிழல் விரித்து வைத்திருந்தன. கல்லூரிப் பூக்கள் எல்லாத் திசைகளிலும் உற்சாகமாக நடந்து கொண்டிருந்தன. சுடிதார் அணிந்த பூக்கள் ஜீன்ஸ் அணிந்த பூக்கள், டி ஷர்ட் அணிந்த பூக்கள். கட்லெட்


ஆகஸ்ட் 15

 

 போக்குவரத்தின் நெரிசல் அதிகமாக இருந்ததாலும், தனது போசைக்கிளின் பிரேக் மேல் அவ்வளவாக நம்பிக்கை இல்லாததாலும், இறங்கி ஓரமாக தள்ளிக் கொண்டு நடந்தார் விநாயகம். ஆற்றுப் பாலத்தின் மேல் தள்ளிய போது, ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு இரும்புக் கிராதிகள் மேல் கையூன்றி பாலைவனமாய் மணல் வரிகள் கொண்ட காவிரியைப் பார்த்தார். இதென்ன நதியா, மைதானமா? எப்படி இருந்த காவிரி ஏன் இப்படி வாடிப் போனாள்? பெருமூச்சின் வெளிப்பாடு. மனம் கலங்கியது. இரண்டு கரைகளையும் அணைத்துக் கொண்டு , நுரைத்தபடி


இதுவரை…

 

  அழுகை எல்லாம் எப்போதோ தீர்ந்து போயிருந்தது. ஆக்ஸிஜன் சிலிண்டரின் உபயத்தால் சுவாசித்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. திரவ உணவு உள்ளே செலுத்த ஒரு ட்யூப் கழிவை வெளியே எடுக்க ஒரு ட்யூப் மூடியிருந்த அவர் இமைமேல் அமர்ந்த ஈயை புத்தகம் விசிறித் துரத்தினாள். உள்ளே வந்த நர்ஸ் கருவியின் மானிட்டரில் உயர்ந்து தாழ்ந்து – ஓடிக் கொண்டிருந்த அவரின் இதயத் துடிப்பின் கோடுகளை சற்று நேரம் மொனமாக கவனித்தாள். “ஏம்மா, டாக்டர் என்ன சொல்றாரு?”


அனாதை பிணம் பணம்

 

 மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை. இரண்டுபேர் கர்ச்சீப்பிலும், துண்டிலும் சுற்றிக் கூடியிருப்பவர்களிடம் ஏந்திக் கொண்டிருந்தனர். ஏந்திக் கொண்டிருந்தனர். “அனாதைப் பொணமுங்கோ… தர்மம் செய்ங்க. அடக்கம் செய்யணும்…” மக்களிடம் தயாள குணம் இன்னும் இருந்ததால்… கைக்குட்டை காசுக்குட்டையாகிக் கொண்டிருந்தது. மாலை மடிந்தது. பண்பாடு கருதி, செத்துப் போன மாலைக்காக கறுப்புப் போர்வை போர்த்திக்கொண்டு துக்கம் அனுஷ்டித்தது இரவு. ராஜனும் முத்துவும் காசுகளை எண்ணினார்கள்.


நான் – A அவள் – Z

 

 ‘ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம். நீயும் ஒரு அரசியல்வாதி!’ – என் வேதாவின் கவிதைகளில் இது ஒன்று. எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. புல்லாங்குழல் ஜடம், அரசியல்வாதி உயிருள்ள மனிதன். இவள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறாள்? எனக்கு கவிதைகளே அலர்ஜி, அவள் மனதுக்கு அவை தான் சாப்பாடு. வீடா ஹவ் ஸ்மார்ட்! ஹவ் இன்டெலிஜெண்ட்! என்ன என்னவோ நிறைய படிப்பாள். அந்த ஆசிரியர்களின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது. வேதா