கதையாசிரியர் தொகுப்பு: தா.பாலகணேசன்

1 கதை கிடைத்துள்ளன.

அந்தக் கிழவனைக் காணவில்லை

 

 நாங்கள் இருக்கும் குடியிருப்பிற்கு சற்றுத் தொலைவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அது தன்னுடைய ரகசியங்களைப் பொத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒரு மாலை நேரச் சூரியனும் ஆறும். ஒரு கிறோந்தல் பட்சியும் ஆறும். ஆறும் கிழவனுமாக பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். எந்த ஓசையும் எழுப்பாமல் ஓடும் மாயத்தை அவர் அறியாதவராக இருந்து பார்த்துக்கொண்டே இருப்பார். அணைகளில் மோதி எழுப்பும் சிற்றலைகளில் அவரது மனது அலைந்து கொண்டிருக்கும். ‘நையின்ரி தேடப் படுகின்றார்” என பல குரல்கள் கட்டடத் தொகுதியில்