கதையாசிரியர் தொகுப்பு: ச.தமிழ்ச்செல்வன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கருப்பசாமியின் அய்யா

 

 பெரிய்ய இவன் கணக்காத்தான் பேசிக்கொண்டு திரிந்தான். கருப்பசாமி இந்த ரெண்டு நாளாக கூலிங் கிளாஸ் கண்ணாடி, சோப்பு, பவுடர் எல்லாம் அவன் கிட்ட இருக்காம். அதான் அப்படி பேசிக்கொண்டு திரியறான். இருக்கட்டுமே, அதுக்காக ரொம்பவுந்தான் பீத்திக்கொண்டு திரிந்தால் யாருக்குப்பிடிக்கும். காளியம்மன் கோயிலுக்குப் பொறத்தாலே கூட்டம் போட்டு இனிமேக்கொண்டு கருப்பசாமியை எந்த ஆட்டையிலும் சேக்கக்கூடாதென்றும் அவனோடு யாரும் பேசவும் கூடாதென்றும் அவனுடைய சேக்காளிகள் முடிவு கட்டிவிட்டார்கள். ஆனால் இதப்பத்தியெல்லாம் கவலைப்படுகிற மாதிரி கருப்பசாமி இல்லை. அவனுக்கு அவனுடைய அய்யா


வெயிலோடு போய்…

 

 மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை. “ஓம் மாப்பிள்ளை வல்லியாடி” என்று கேட்டதுக்கு ‘பொறு பொறு’ங்கிற மாதிரி கையைக் காமிச்சிட்டு விறுவிறுன்னு உள்ள போயி ரெண்டு செம்பு தண்ணியை கடக்குக் கடக்குன்னு குடிச்சிட்டு ‘ஸ்… ஆத்தாடி’ன்னு உட்கார்ந்தாள். “ஓம் மாப்பள்ளை வல்லியாடி?” “அவரு… ராத்திரி பொங்க வைக்கிற நேரத்துக்கு வருவாராம். இந்நியேரமே வந்தா அவுக யேவாரம் கெட்டுப் போயிருமாம்.” “சரி… அப்பன்னா