கதையாசிரியர் தொகுப்பு: சௌ.முரளிதரன்

78 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

 

 ஒரு பட்டிமன்றம். காரசாரமான விவாதம் . தலைப்பு “ கடவுள் இருக்கிறாரா இல்லையா?” முத்தாய்ப்பாக இரண்டு அணியின் தலைவர்களும் பேசவேண்டும் . “கடவுள் இருக்கிறார்” அணியின் தலைவர் எழுந்தார் பேச: “எல்லோருக்கும் என் தாழ்மையான வணக்கம். நாம் பார்க்கிறோமே இந்த அண்ட பெருவெளி, அதற்கு யார் அம்மா? அல்லது அப்பா ? அது எங்கிருந்து வந்தது ? இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு சிறு பகுதிகளே இந்த நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் நமது சூரிய மண்டலம்.


நோய்நொடி

 

 எனக்கு ஒரு ப்ரைவேட் கம்பனியிலே வேலை. பிச்சு பிடுங்கற வேலை. சம்பளம் என்னவோ நல்லாதான் கிடைக்குது, ஆனால், வேலை தான், காலை 9 மணி முதல் ராத்திரி 7 மணி வரை. சில நாள் வீட்டுக்கு வர இன்னும் கூட நேரமாயிடும். வீட்டுக்கு வந்து படுக்கையில் அப்பாடா என்று விழுந்தால் போதும் என்றிருக்கும். ஆனால், தூக்கம் வராது. அலுவலக நினைவு அந்த பாடு படுத்தும். முடிக்காத வேலைகளை எப்படி அடுத்த நாள் முடிப்பது என்றே எண்ணம் ஓடும்.


நரகம்

 

 செல்லத்திற்கு வயது 83 அவளது கணவன் ராஜூவிற்கு வயது 88. இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஆயிற்று, இரண்டு மகள்களும் பேரன் பேத்தி எடுத்தாகி விட்டது. ராஜூவிற்கு சொந்தமாக சென்னையில் ஒரு வீடு இருக்கிறது. தேவையான அளவிற்கு மேலேயே வருமானம், வங்கியில் போட்டு வைத்திருக்கும் வைப்பு நிதியிலிருந்து வட்டியாக வருகிறது . தனியாகத்தான் வாழ்க்கை. நிம்மதியாக காலத்தை “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” என்று ஓட்டலாம், காலம் முடியும் வரை. ஆனால், விதி யாரை


விற்பனை

 

 அது ஒரு கம்ப்யூட்டர் விற்பனை கடை .கணினி, மடிகணினி, அவை சார்ந்த உபரி பாகங்கள், துணை கருவிகள் போன்றவை விற்பனை செய்யும் கடை. காலை நேரம் . கடையில் இரண்டு சிப்பந்திகள், வாடிக்கையாளர்களின் வருகைக்காக காத்திருந்தனர். மணி பதினொன்று . ஒரு நடுத்தர வயது மனிதர் கடைக்குள் நுழைந்தார் . நேராக முதல் சிப்பந்தியிடம் சென்றார். “ எனக்கு இரண்டு மணிக் கணினிகள் வேண்டுமே ! டெல் கம்புட்டர் காட்டுங்கள் “ “இதோ சார், இதை பாருங்கள்


ஈசா உபநிஷத் கதை

 

 ஒரு முறை , வசிஷ்டர், துர்வாசர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், மேரு மலையில் எல்லா முனிவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் . பெரிய ஞானிகள், முனிகள், ரிஷிகள் அந்த சந்திப்புக்கு வர வேண்டும் எனக் கட்டளை . வராவிட்டால், பெரிய தோஷத்திற்கு, பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு, ஆளாக நேரிடும் எனவும் ஆணை விதித்தார்கள். எல்லா முனிவர்களும் ஆஜர். ஆனால், வைசம்பாயனர் எனும் முனிவர் மட்டும் ஏதோ காரணத்தினால், வர முடியவில்லை . இதனால் கோபமடைந்த துர்வாசர், விஸ்வாமித்திரர்,


கதோபநிஷத் கதை

 

 கதோபநிஷத்தில் வரும் ஒரு முக்கியமான கதை நசிகேதன் பற்றியது. அந்த கதையில் முக்கிய அம்சம் நசிகேதன் எனும் ஒரு சிறுவனுக்கும் யமதர்மனுக்கும் இடையில் நடக்கும் சர்ச்சை. வேத காலத்தில் , நசிகேதனின் தந்தை வாஜஸ்வர முனிவர், ஸ்வர்க லோகம் வேண்டி, விஸ்வஜித் எனும் பெரும் யாகம் செய்தார். பெரிய முனிவர்கள், ரிஷிகள் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். விசுவஜித் யாகத்தின் நிபந்தனை விசித்திரமானது. உலகில் உள்ள அனைத்தையும் ஆளும் சக்தி பெறவே இந்த யாகம். ஆனால், அது


கேனோ உபநிஷத் கதை

 

 முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம். அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் . அப்போது, தேவர்களுக்கு ஒரு கர்வம் வந்து விட்டது . நம்மை போல் யாரும் இல்லை, நம்மை தோற்கடிக்க இந்த உலகத்தில் எவரும் எல்லை , என்ற ஆணவத்தில் திரிந்து கொண்டிருந்தனர். ஒரு நாள்., தேவர்களான இந்திரன், வருணன், வாயு, அக்னி போன்றவர்கள் , சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, பரமாத்மா பார்த்தார். இது


சுற்றுலா

 

 கோவிந்தனின் ஒரே மகள் ரோகினி படிப்பை முடித்து விட்டாள். லயோலா கல்லூரி, சென்னையில் , எம் ஏ சோசியாலஜி. நல்ல மார்க் . ஆனால், அவளுக்கு வேலைக்கு போவதில் இப்போது நாட்டமில்லை. “அப்பா! நான் இரண்டு வருடம் சமூக சேவை செய்யலாம் என்று இருக்கிறேன். அப்புறமா, திரும்பி வந்து, ஐ ஏ எஸ் அல்லது கல்லூரி விரிவாளர் வேலைக்கு போகிறேன் . ஆப்ரிக்காவில் சோமாலியாவிலே ஒரு என் ஜி ஒவிலே (அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்திலே) என்னை


சுறுக்கு

 

 காலை 11 மணி. வழக்கம் போல ‘தமிழ்த்தேன் அருவி’ பத்திரிகை அலுவலகம் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. உதவி தலைமை ஆசிரியர் அறையில் ஒரே சத்தம். “என்னய்யா எழுதறீங்க! எப்படி எழுதறதுன்னு தெரியாம ஏன் வந்து என் கழுத்தறுக்கிறீங்க. சே ! பேசாம பத்திரிகையை மூடிட்டு போக வேண்டியதுதான்.” கிட்டதட்ட ஒரு அரைமணி நேரமாக சத்தம் போட்டுக்கொண்டிருந்தவர் உதவி தலைமை ஆசிரியர் வாழப்பாடி ராம கிருஷ்ண சிவசங்கரன் (ராசி ) . முழுபெயரும் கூப்பிட்டு முடியற காரியமா


சாதனா

 

 சாதனா ஒன்றும் சின்ன குழந்தையல்ல. அவளுக்கு வயது இருபது. ஆனால், அவள் பாட்டி சொல்வது போல், “ சில வழிகளில், அவள் ஒரு குழந்தை போலத்தான்” அவளுக்கு திசை போக்கு (direction sense) இல்லை. மூன்று தெரு தள்ளி விட்டால், திரும்பி வர வழி தெரியாது. ஒரு பூட்டைக்கூட சரியாக திறக்கத்தேரியாது. இடது வலது பக்க குழப்பமுண்டு. சாதனா தன் உடைகளைக்கூட தலை கீழாக போட்டுக் கொள்வாள். அல்லது, உள்புறம் வெளியாக போட்டுக் கொள்வாள். அதை சொல்லவோ