கதையாசிரியர் தொகுப்பு: சோ.தர்மன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வரம்

 

 இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதில் தீர்க்கக் கூடிய கவலைகளின் அவஸ்தையை விட தீர்க்கவே முடியாத கவலைகளின் வலி கரையானைப் போல் தினமும் அரித்துக் கொண்டே இருக்கும். சமயத்தில் தன்னைப் படைத்த கடவுளையே சபிக்க வேண்டியிருக்கும். என்னுடைய அக்காவின் கவலை யாராலும் என்றென்றைக்கும் தீர்க்கவே முடியாத கவலை. என் அக்காளுக்கு என்ன குறை? சொந்த தாய் மாமனுக்கு மனைவியானவள், மாமா அரசில்


சோகவனம்

 

 கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின் மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக்