கதையாசிரியர் தொகுப்பு: செம்பியன் செல்வன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

இதயக் குமுறல்

 

 “மகனே!” “உன்னை மகனே என்று வாய்விட்டழைக்கமுடியாத பாவியாக இருந்து விட்டேனடா என் கண்ணே! என் உணர்ச்சிகளை … உள்ளத் துடிப்புகளை எல்லாம் ஒன்றாக்கி அழைக்கிறேன்!” ‘மகனே!” “என் இதயம் அலறுவதை உன்னால் புரிந்துகொள்ள வும் முடியாது! என் அன்பு அழைப்பு…. இதயதாபம்… எல்லாம் பாழும் பெருவெளியில் மோதிக் கலந்து உருச் சிதைந்து போவதையும் என்னால் பொறுக்கமுடியவில் லையே!” “மகனே!” “அன்புக்கு மணமில்லை…நிறமில்லை…உருவில்லை…ஆனால்?..உயிருண்டுடா மகனே! உணர்ச்சி உண்டு என் உயிரின் புலம்பலை நீ புரிந்துகொள்ள மாட்டாயா?” “அக்கா! நான்


சர்ப்ப வியூகம்

 

 அனல் பறக்கும் வயல் வெளியை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தான் திரவியம். வெறுமையின் தகிப்பில் வயல்வெளி பாலை என நீண்டு கிடந்தது. வெப்பத்தால் இலை கருகியும், புழுதிப் புயலில் அடிபட்ட பசுந்தளிர்கள் கூட மண் பூத்த செந்நிற மரங்கள் வரியமைத்து அடிவானின் விளிம்பாக காட்டெல்லை தெரிந்தது. வயலின் வரம்புகள் மனிதனின் காலடியே படாத கன்னி நிலமென, உடைந்தும், சிதறியும், கரணை கட்டிகளாயும், உருக்குலைந்து கிடக்க…. நெருஞ்சி, தொட்டாற்சிணுங்கி, கிடைச்சி எனப் பரவி, பூக்களாய்ச் சிரித்து முட்களாய்ச் சிலிர்த்திருந்தன. திரவியம்


மாயாவதியின் கனவு

 

 ‘புரிந்துணர்வுப் போர்நிறுத்தம்’, ‘தற்காலிகப் பேச்சு வார்த்தை’, ‘புலிகளே முன்வரும் போர்நிறுத்தம்’, ‘இனி வடக்குக்கும் போய் வரலாம்’, ‘ஏ – 9 பாதை திறப்பு’, ‘ஆஹா! இனி வடக்குக்கும் தெற்குக்கும் இடையே போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை…’, ‘நாகதீபத்துக்குச் சென்று எத்தனை வருடங்களாகிவிட்டன’, ‘அந்தப் புத்த பகவானின் கருணை விழிகளின் முன்றலிலே அன்றலர்ந்த வெண்தாமரைகளாகிப் பனித்துளி மின்னக் கிடந்த காலைப் பொழுதுகள் தான் எத்தனை……?’ ஆத்மலயமும், சுருதியும் பிரபஞ்ச வெளியில் மோனரகஸ்யங்களுடன் ஒன்றி… ஒரே வெளிச்ச வீட்டில் வாசம் செய்த


பாதி மலர்!

 

 சரசு யன்னலுக்கூடாக வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தைப் போலவே வெளியே வெறுமை முத்திரையிட்டிருந்தது….. வெளியே – சித்திரை மாதத்துக் கோடை வெயில் தகித்துக் கொண்டிருந்தது. அந்த வெயிலின் தகிப்பிலே ‘தார் றோட்’டெல்லாம், உருகி அவற்றின் மேற் கானல் நெளிந்தாடிக்கொண்டிருந்தது… அந்தத் தார் றோட்டில் அந்த உச்சிப் பொழுதில் ஒருகாக்கைக்குருவியைக் காண வேண்டுமே?… இடையிடையே அந்தப் பாதையிற் பயங்கரமாக ஓசையிட்டுக்கொண்டுவரும் லாரிகளையும், கடகடவெனத் தனது வருகையைப் பறைசாற்றி வரும் ‘இ.போ.ச.’ பஸ் வண்டிகளையும் தவிர எந்தவிதப் போக்கு