காக்கைகள் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 2,223 
 

(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர் விசித்திர மனநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டவர். ஆனால் வெளியே இருக்கிறார். பணக்காரர். அவர் மனநோய் ஒரு மனோபாவம் எனக் கொண்டு பிறரால் பாராட்டப் பட்டுக் கொண்டிருந்தார்

வெறொன்றுமில்லை. 

எப்பொழுதும் தன்னைச் சுற்றி நாலுபேர் நிற்கவேண்டும். 

கொடை என்ற பேரில் பணத்தை வாரியிறைத்தார். நான்கு பேரென்ன? நாலாயிரம் பேர் சூழ்ந்து கொண்டனர், அவர் பூரித்தே போனார்? 

வள்ளல் என்ற பெயர் பெரிதாகப் படர்ந்து. 

செல்வம் கரையக் கரைய, கூட்டமும் குறையலாயிற்று. 

பைத்தியக்காரன்…. விசரன் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. 

இந்த அவமானங்களைவிட, தன்னைச் சூழ்ந்திருந்தவர்கள் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியது. திடீரென ஒரு சிந்தனை பிறந்தது. 

சோற்றை வாரியிறைத்தார். 

“காகா…கா…” 

காகக் கூட்டம் அவரைச் சூழ்ந்தது. 

அவருக்கு மீண்டும் மகிழ்ச்சி. 

காகக் கூட்டங்கள் பறந்து சென்றன. 

இப்போது அவர் தலை, தோள்…. முதுகு, முகம் எங்கும் காகங்களின் எச்சங்கள். 

முதன்முதலாக சிந்திக்கத் தொடங்கினார்.

– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்

– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *