கதையாசிரியர் தொகுப்பு: சுப.திருப்பதி

1 கதை கிடைத்துள்ளன.

மனசாடுதல்

 

 பாரதி வேண்டிய காணி நிலம் போல இல்லாட்டியும், எனக்கு அதுதான் மனசுக்கும், உடலுக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய இந்த பூமியின் ஒரு துளி துண்டு நிலம். சின்ன வயசுலயே கொழும்பு சென்று, தொழில் கற்று, சிறுக சிறுகச் சேமித்து, சொந்த வீடு கட்ட வாங்கிய நிலம். ஊரு பழக்கத்துலேயும், அனுபவ அறிவிலும் ஞானஸ்தன் எங்க தகப்பனார் . அவர் அடிக்கடி சொல்வார், “”இந்த பூமி இருக்கே, அது கடவுள் நமக்கு கொடுத்த மிக பெரிய கொடைடா. ஒண்ணு நாம