கதையாசிரியர் தொகுப்பு: சுபமி

1 கதை கிடைத்துள்ளன.

தகுதி

 

 சோபாவில் சாய்ந்தபடி மிகப்பெரிய பிளாஸ்மா, “டிவி’யில் ஆங்கில நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனா, எதையோ நினைத்துக் கொண்டவளாய், “விருட்’டெனத் திரும்பினாள். “”அம்மா… தாத்தா எங்கே?” “”கொஞ்சம் வெளிய போயிருக்கார் கண்ணு; இப்ப வந்துடுவார்…” என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. கையில் காகிதக் கற்றையோடு பெரியவர் உள்ளே நுழைந்தார். “”ஈஸ்வரி… ஊர்ல இருக்கற அத்தனை புரோக்கர்களையும் பார்த்து, கெடைச்ச ஜாதகங்களை வடிகட்டி, இருபது ஜாதகங்களைக் கொண்டாந்திருக்கேன். எல்லாம்