கதையாசிரியர் தொகுப்பு: கற்பனை மனிதன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்ப்பூனை + நான் / 3 பூனைக்குட்டிகள்

 

 கடையில் நான் சாமான் வாங்கிக்கொண்டு இருந்த போது யதார்த்தமாக குப்பைத்தொட்டியை பார்த்தேன். குப்பையின் மேலுள்ள ஒருஅட்டைபெட்டியில் சமீபத்தில் பிறந்த மூன்று பூனைக்குட்டிகள் இருந்தன . அதில் இரண்டு கட்டிப்புரண்டு கத்திக் கொண்டே இருந்தது. மற்றொன்று நன்கு தூங்கிக்கொண்டு இருந்தது . சாமானைவாங்கியவாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லோரும்பார்த்தும் பார்க்காததைப் போல அவசர அவசரமாக போய்க்கொண்டுஇருந்தனர். பிறந்த மூன்று பூனைக்குட்டிகளை குப்பையில் போட யாருக்கு மனசு வந்திருக்கும் என்ற நினைப்போடு நடக்க ஆரம்பித்தேன்.ஒரு சிறுவன் மட்டும் குப்பைத்தொட்டியின் அருகில்


நிலாவில் பேய் ஸ்கூல்

 

 ஒரு பேய் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டுமென்ற என்னுடைய நீண்ட நாள்கனவு. லட்சியம் ,ஆசையும் கூட. என் சிறுவயதில் கனவில் வரும் பேய்களிடம் பேச முயற்சித்ததுண்டு.முதன் முதலாக கனவில் வந்த பேய்கள் படக்படக்கென வந்து என்னைபயமுறுத்திவிட்டு சென்றுவிடும். உடனே நான் முழித்துகொள்வேன். ஆறு வருடங்களுக்கு பிறகு பேய்கள் என் கனவில் சகஜமாக வரஆரம்பித்தன. பேய்களுடன் கனவில் பேச தயக்கமாக இருந்ததால் அவர்கள் செய்யும்நடவடிக்கையை கவனிக்க தொடங்கினேன். நீண்ட காலத்திற்கு பிறகுதயங்கித்தயங்கி கனவில் அவர்களுடன் பேச ஆரம்பித்தேன். ஒரு பேய்


சிவப்பு நிறம் கொண்ட வெள்ளை திமிங்கலம்

 

 நாங்கள் ஒரு புதிய கிரகத்தை கண்டு பிடித்தமகிழ்ச்சியில் இருந்தோம் .எங்களது விண்கல ராக்கெட் சுற்றி சுற்றிவட்டமடித்து பாதுகாப்பான பகுதியில் இறங்கியது .அந்த புதிய கிரகம்பார்ப்பத்தற்கு மனிதர்கள் வாழும் இடத்தை போல இருந்தது . பச்சை பசேல் என செடி கொடிகள் இருந்தன.மனிதர்கள்தங்கும் வசதிக்கேற்ப அக்கிரகமும் இருந்தது .நாங்கள் இறங்கியஇடத்தில் யாருமில்லை .நாங்கள் சிறிது தூரம் நடந்த போது ஒருமரத்தின் இலையில் இருந்து பட்டாம்பூச்சி போன்ற ஒரு உயிரினம் தோன்றியது .அது பிறந்த உடனே சத்தம்போட்ட படியே பறக்கத்தொடங்கியது