கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ராமமூர்த்தி

7 கதைகள் கிடைத்துள்ளன.

ஆடு புலி ஆட்டம்

 

 கண்மாய்க் கரையும் கருவேலங்காடுமாக காட்சியளிக்கும் இது ஈரம்புளி கிராமம். 24 மணிநேரத்தில் ஒருமுறையாவது அங்குள்ள முகங்கள் களைகட்டுமோ இல்லையோ, முன்று வேளையும் கச்சேரி போல களைகட்டுகிறது அங்குள்ள பேருந்து நிறுத்தம். பேருந்து பழசுதான், ஆனால் பிரயாணம் செய்யும் பயணிகள், கொஞ்சம் புதிதாகத் தெரிவார்கள். ஏனென்றால், என்றைக்கும் இல்லாத குளியல் அன்று நடந்திருக்கும் பயணம. செய்யும் பல பேருடைய முகங்கள் பவுடர் வாங்கியிருக்கும். கொன்னக்குடியைத் தாண்டி வரும் போது, ஹார்ன் சப்தம் கேட்டது. புறப்படுகிறவர்களை துரிதப்படுத்து வதற்காக விடப்படும்


இதுதான் சான்ஸ்..விடாதே!

 

 “என்னது புள்ளெ சொணங்கிப் போய் இருக்கான்..!. ஒடம்புக்கு சரியில்லையா..? என்று பார்க்க வந்தவர்கள், குடித்த காபிக்காக நலம் விசாரித்தார்கள். “பேத்திக்கு ஒண்ணுமில்லெ..” என்ற சொன்ன மாலதி “பொறந்ததிலே இருந்து அந்தப்பையன் அப்டித் தானே கெடக்கான். என்ன பண்றதுன்னு தெரியலேக்கா…” “உள்ளெ என்னமோ தெரியலெ.. வெளியெ பாக்கும்போது லட்சணக்கட்டியா இருப்பாளே அந்தப் பயலோட ஆத்தா.. அவளுக்கு பொறந்த புள்ளையா இப்டிக் கெடக்கான்…” “இவனோட அப்பன் லட்சணமா இல்லாட்டாலும் நல்ல பொழி எருது மாதிரி இருப்பானே… அந்த உடம்பு கூட


தாலி காத்த அம்மன்

 

 திருமணம் முடித்த சில மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ சிலருக்கு தாம்பத்ய வாழ்க்கை வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. எப்போதும் அவள் புதுப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று இயற்கைக்குப் புறம்பாக நினைக்கிறானோ என்னவோ, பல பெண்களுடைய வாழ்க்கை தொடங்கிய உடனேயே முடிவுக்கு வந்து விடுகிறது, ஆண்டவன் எதற்கும் குழந்தைப்பேறுக்கான உடலமைப்பை ஆண்களுக்கும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கடவுள்களுக்கும் ஒரு கறாரான நீதிபதி இருந்திருந்திருந்தாள் இதுகூட நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அனிதாவின் வாழ்க்கையும்


பிராயச்சித்தம்

 

 இப்போது சித்திரைத் திருவிழாவும் இல்லை, ஆடிப்பூச்சொரிதலும் இல்லை. ஆனால் உள்ளூர் மக்களின் சிறப்பு ஆராதனைகளால் பாகம்பிரியாள் கோவில் களைகட்டியிருந்த து. அர்ச்சனைத் தட்டுக்களோடு வந்த எல்லோரும் ஒரே ஒரு பெயருக்குத்தான் அர்ச்சனை செய்தார்கள். அந்த ஊரில் வசித்து வரும் அர்ச்சகர்களும் , அன்றுதான் மந்திரங்களைப் பிசகாமல் சொல்லி ஆராதனை செய்தனர். “…மந்திரத்தில் இவ்வளவு உண்டா..?” என்பது பாகம்பிரியாளுக்கே அன்றுதான் தெரிந்திருக்கும் போல. நாள்தோறும் அவ்வளவு அலங்காரத்தில் காட்சி தந்து கொண்டிருந்தார். கோவிலுக்குப் போன எல்லோரும் பெரிய அம்பலம்


குட்டையில் ஊறிய மட்டைகள்

 

 தீவிரவாதிகளின் ஊடுருவலாலும், அவர்களின் சதித் திட்டங்களாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரத்த பூமியாக மாறி இருந்தது. ஒருபுறம் சதித் திட்டங்களை முறியடிக்க அரசு முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில், மற்றொருபுறம் எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்தச் செய்தியை வெளியிடுவதை இந்திய ஊடகங்கள் ஒரு சடங்காகவே பின்பற்றி வந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசியல் பத்திரிகை மட்டும் எப்போதாவது இந்த செய்தியை வெளியிட்டது. பத்திரிகை விற்பனையும் குறைந்து போனதால் பத்திரிகைக்குச் சொந்தக்காரரான எதிர்க்கட்சித் தலைவர், ஜம்மு காஷமீர்


லீலையில் ஒரு வேலை

 

 சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஆல்பா சென்டர் . ஒரு புறம் ஜவுளிக்கடைகள், இன்னொருபுறம் நகைக் கடைகள், இதற்கிடையே ஜனநாட்டம். பைக்கட்டுகளோடும் குழந்தை குட்டிகளோடும் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கால் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் களைகட்டி இருக்கிறது அந்தப் பகுதியில் வெறிச்சோடிக் கிடந்த ஆல்பா சென்டர், ஏதோ புதுப் பொலிவு பெற்றமாதிரி களை கட்டியிருந்தது. நடிகர் திலகம் கட்சி தொடங்கியபோது இருந்த அதே பரபரப்பு. அதற்குப் பிறகு வானத்தை வில்லாக வளைக்கும் முக்கிய நிகழ்வு எதுவம்


மாங்கல்யம் தந்துனானே

 

 ஹரி கிருஷ்ணன் மறுபடியும் சுணங்கிப் போய்விட்டான். எல்லோருக்கும்போலத்தான் அந்த வீட்டுக்கும் விடிந்தது. அத்தனை பேருக்கும் தெரிந்த மஞ்சள் வானம்தான் ஜான்சிராணி கண்ணுக்கும் தெரிந்த்து. ஆனால் ஜான்சிராணி வீட்டுக்கு மட்டும் துயரத்தோடு விடிந்த து. எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்கிறான் அவளுடைய இளைய மகன். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மகன் எழுந்து விட்டானா என்று பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்த்து. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லும் முஸ்தீபுகளைத் தொடங்கி விட்டாள். ஒத்தாசையாக வருவதற்கு அந்த ஊரில் அவளுக்கு