கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.பர்வின் பானு

12 கதைகள் கிடைத்துள்ளன.

உன்பேர் எழுதிய உணவு…

 

 மினாரில் இன்னும் விளக்குகள் துளிர் விட்டு இருக்கவில்லை. காசிம் தன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த அமீரை அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான். அந்த வளர்பருவத்திற்கு உண்டான ஆர்வம் மிகுதியாயும் அந்தக் கண்ணில் மிதந்துகொண்டு இருந்தது. அத்தனையும் அவனுக்கு வேடிக்கையாய் விசித்திரமாக இருந்தது. முக்காடிட்டு கடந்துபோன பெண்களும், மற்றேனைய மனிதர்களும், அவர்களின் முகக்குறிப்பும், கொஞ்சமும் புரியாத அவர்களதுமொழியும் அவனுக்கு அத்தனை விசித்திரமாக இருந்தது. ஜந்தர் மந்தரைத் தாண்டி கொஞ்சம் உள்ளே நடக்கவேண்டும் அவர்கள் தேடி வந்த பள்ளிக்கு.குறுகலான சந்துகளில்


அட்டிகை எங்கே..?

 

 அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணி கேட்டுக் கொண்டிருந்தார். அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணி கேட்டுக் கொண்டிருந்தார். ராணியின் வேண்டுகோளுக்கிணங்கி, அந்த நகை வியாபாரி திறமை வாய்ந்த நகைத்தொழிலாளிகளை வைத்து அட்டிகை செய்ய ஏற்பாடு செய்தார். வேலை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அட்டிகைக்கு மெருகு


வெற்றிக்குள் ஒரு தோல்வி!

 

 மொட்டை மாடியில், அண்ணாந்து படுத்து, வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சஞ்சய். மனசு, எதையும் யோசிக்கும் திறனற்று நிர்சலனமாய் இருந்தது. காபி டம்ளருடன், மாடிக்கு வந்த வள்ளிக்கண்ணு, மகன் அருகில் பூரிப்பாய் வந்து, ‘என்னய்யா… இங்க வந்து படுத்துக்கிடக்குறே… உங்கப்பா உன்ன காணலன்னு கீழே தேடிட்டு இருக்காரு… நம்ம உறவு முறையில, எத்தனை பேர் போன் செய்து கேட்டாங்க தெரியுமா…’ அவள் சொல்லி முடிக்கும் முன், அழகுநம்பி வாயெல்லாம் பல்லாய் மாடிக்கு வந்தார். ‘சஞ்சய்,


மரு(று)மகள்!

 

 “வா கோமதி… நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா…” வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை, அன்பு மேவ பார்த்தாள் கோமதி. வசந்தா சமையல் அறைக்குள் சென்று, தட்டை எடுத்து வந்து பரிமாறுவதற்குள், கோமதியின் கண்கள், வீட்டை அலசின. கொஞ்சம் உள்ளடங்கி இருந்தாலும், விசாலமான, காற்றோட்டமான அழகான வீடு. இரண்டு படுக்கையறை, ஹால் வசதியுடன் அக்காலத்திலேயே சவுகரியமாக வீட்டை கட்டியிருந்தார் வசந்தாவின் கணவன். அதை, மகன்கள் இருவரும் எடுத்துக் கட்டி, மேல்தளத்தில் பெரியவனும்,


மாற்றம் மட்டுமே மாறாதது!

 

 அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய எம்.ஜி.ஆர். பாடலை ரசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். ஆனாலும் மனசுக்குள் எப்போதும் கும்மியடிக்கும் உற்சாகம் இல்லை. அய்யாவுச் செட்டி வயலில் இன்று கடைசி அறுப்பு. கடைசி அறுப்பு என்றால், இந்த வருடத்தின் கடைசி அறுப்பு மட்டுமில்லை, காலம் காலமாய் பலபேரின் வயிறு நிறைத்த, வளம் கொழித்த அந்த பூமிக்கே அது கடைசி அறுப்பு. நினைக்கும் போதே


இலக்கணத்தில் வாழு!

 

 கோவிலைச் சுற்றி இரைந்து கிடந்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களிலேயே சேகரித்துக் கொண்டிருந்தாள் ராதா. வெண்மையும், காவியும் கலந்த கோவில் சுவர்கள் இவளிடம் மவுனமாய் பேசாமல் பேசின. ஒருமுறை கிருஷ்ணனிடம் கோவில் சுவரைப் பற்றி விவாதித்த நினைவு வந்து போனது. ஏன்… எப்பவும் கோவில் சுவர்ல மட்டும் வெள்ளையும், காவியும் கலந்து அடிக்கிறாங்க. அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோ…’ சுவரில் படர்ந்து இருந்த காவி நிறத்தை நகக்கண்ணில் சுரண்டியபடி இவள் கேட்ட போது, கிருஷ்ணனுக்கு கோபம் தான் வந்தது.


குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!

 

 “என்னாச்சு சுந்தரம்… எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு… இப்போ எவ்வளவு அவஸ்தையா இருக்கு பாத்தியா?” டை முடிச்சை லூசாக்கி, மேல் பொத்தானை கழட்டி, காற்று வாங்கிக் கொண்டான் மனோகர். மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான், மணி பதினொன்று… இரண்டு மணிக்கு சைட்டில் இருந்தாக வேண்டும். சென்னைக்கும், திருப்பந்தளத்திற்கும் இடையே மாட்டிக் கொண்டாகி விட்டது. “சாரி சார்… நேத்துக் கூட நல்லாத்தான் இருந்தது… வெயிட் பண்ணுங்க சார்… ரெடி பண்ணிடறேன்.”


நாலு பேரு கூடி வாழ்த்த…

 

 பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா. “நல்ல சேதி சொன்னீங்க பிலால்… அல்லாவுடைய கருணை, இப்பதான் நம்ம மேல பட்டிருக்கு… என் மகள் யாஸ்மீனைவிட, உங்க மகள் ஆயிசா, இரண்டு வயசு மூப்பு… ஆனா, என் மகளுக்கு நிக்காஹ் முடிவாயிடுச்சு; உங்க மகளுக்கு ஆகலையேன்னு, நான் அல்லா கிட்ட மன்றாடிட்டு இருந்தேன்… அதுல பாருங்க, அல்லா என்னுடைய துவாவை நிறைவேத்தி தந்துட்டான்.” உண்மையான நண்பனின் சந்தோஷம் மட்டுமல்லாது,


ஜன்னல்

 

 திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில், ஒரு கூடாரம் முளைத்திருந்தது; நிறைய பேரின் நடமாட்டமும் தென்பட்டது… “பாமா… இங்க வந்து பாரு…” என்று அவர் கூறியதும், மரக்கரண்டியுடன், அடுக்களையில் இருந்து ஓடி வந்த பாமா, மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். முகத்தில், சன்னமாய் ஆச்சரிய ரேகையும், மெல்லிய புன்னகையும் தோன்றியது. “அடடே… யாருங்க இவங்க…?” “எதுக்கு இப்படி


அவள்

 

 “சொளேர்’ என்று அனல்காற்று கத்தையாய் வீசி, முகத்தை இம்சிக்க, இமைகளை குறுக்கி மூடிக் கொண்டாள் பாலாமணி. வேர்வை முதுகில் ஊர்ந்து வழிந்தது. உடம்பும், உடையும் தொப்பலாகி இருக்க, முந்திச்சேலை எடுத்து, முகத்தையும், கழுத்தையும் அழுந்த வழித்து துடைத்தாள். “ஏங்க… இருமாத்தூர் பஸ்சு போயிருச்சுங்களா?” “இல்லைங்க… ஒன்றரைக்கு வர வேண்டியது… மணி ரெண்டேகால் ஆகுது, இன்னும் வந்தபாடில்லை,” பக்கத்தில் நின்ற ஆள் அங்கலாய்த்தான். பாலாமணிக்கு உடம்பும், வயிறும் தகதகத்தது. காலையில் அரை குவளை நீராகாரத்துடன் டவுனுக்கு கிளம்பியவள், வழியில்