கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

மார்க்கண்டேயன் கதை

 

 மிருகண்டு என்பவர் பெருந்தவ முனிவர். அவருக்கும் அவரது பத்தினியாகிய மித்ராவதிக்கும் புத்திரப்பேறு இல்லாதது பெருங்குறை. இருவரும் காசிக்குச் சென்று மணிகரணிகையில் நீராடி விஸ்வநாதரை நினைத்து தவமிருந்தனர். ஓராண்டு காலம் கடும் தவமிருந்தனர். தவத்தில் மகிழ்ந்து சர்வேஸ்வரன் அவர்கள் முன்தோன்றி “யாது வரம் வேண்டும்?” என்று வினவ, முனிவர் “புத்திரப்பேறு வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு சிவன், “நூறு வயதுவரை வாழும் புத்திரன் வேண்டுமா? அல்லது பதினாறு வயதே வாழக்கூடிய புத்திரன் வேண்டுமா? இதில் நூறு வயதுவரை வாழும்


நாடோடி

 

 அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் அவனால் மறக்க முடியவில்லை. 28 வயதில் முதன்முறையாக அவன் ஒரு பெண்ணை ஸ்பரிசித்தான். அந்தப் பெண் அவனுடைய மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அவனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்றாலும் அவனுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. அந்த முதல் அனுபவம் ஒருவாரம் வரை அவனைப் பரவசத்தில் வைத்திருந்தது. ஏதோ பெரிதாகச் சாதித்து


லூட்டி

 

 ஸ்பிடி (Spiti valley, Himachal Pradesh) பள்ளத்தாக்கிற்கு என்னைக்காவது போயிருக்கீங்களா? இந்தியாவிற்கு வடக்கே இமைய மலையில் இருக்கும் ஒரு தொலைதூர பள்ளத்தாக்குதான் இந்த ஸ்பிடி. மக்கள் தொகை குறைவான, மொபைல் சிக்கனாலே கிடைக்காத இடம் இது. அதனாலதான் நான் அங்கே போனேன். நிம்மதியா ஒரு சுதந்திரப் பறவை மாதிரி உணரத்தான் நான் அங்கே போனேன். நான், என் தோழி மற்றும் என் டிரைவர் மட்டும்தான் அங்கே போனோம். அன்று ராத்திரி என் டிரைவர் எங்களுக்கு ஒரு பேப்பர்


வலிகள்

 

 இதுக்கு முன்னாடிகூட என் கணவர்கிட்ட பொய் சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் அதுல இருக்கிற நல்லது கெட்டது பத்தி தெரிஞசிக்கிட்டேன். ஆனா இந்தமுறை ஏதோ தெரியாத ஒண்ணுல விழுந்துட்டா மாதிரி ஓர் உணர்வு வந்துச்சு. இந்தப் பிரச்சினை வேறு மாதிரியானதா இருந்துச்சு. என் கணவர் மது குடிச்சு அதுல பணத்தை விரயமாக்குறத நிறுத்தி, பணத்தை சேமிக்க நான் விரும்பினேன். அதனால, நான் வாங்குற சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தை வாங்குற மாதிரி அவரிடம் சொன்னேன். நான் பொய் சொல்றத அவர்


களவாடிய பொழுதுகள்

 

 மாயாவுடன் நான் வாழ்வது பணத்திற்காக மட்டுமே என்று என் நண்பர்களும், தெரிந்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையாக நான் மாயாவை காதலிக்கிறேன். காதல் என்பது இரு மனிதர்களுக்கு இடையே ஏற்படுவது. இதில் மற்றவர்களின் எண்ணம்தான் என்னை கஷ்டப் படுத்துகிறது. நான் ஒரு திருநங்கையோ திருநம்பியோ அல்ல. ஒரு சாதாரணமான ஆண். ஆனால் என் மனைவி மாயா ஒரு திருநங்கை. திருநங்கைகளிடம் கணிசமாக பணம் இருக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானது. உண்மை என்ன தெரியுமா?


ஹவுஸ் ஹஸ்பெண்ட்

 

 மூன்று வருடங்களாகக் காதலித்து அவளை திருமணம் செய்து கொண்டேன். தற்போது எங்களுக்கு ஒரு மகள். வாழ்க்கை நல்ல புரிதலுடன் சென்று கொண்டிருக்கிறது. அன்று என் மனைவியின் தங்கை திருமணத்திற்கு சென்று இருந்தோம். மனைவி தன்னை திருமண கொண்டாட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். என் செல்ல மகள் என்னுடனே ஒட்டிக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவள் எப்போதும் என்கூடவே இருப்பாள். அவளுக்குத் தேவையான அனைத்தையும் நானே செய்வேன். நாங்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது , என் மகளின் டயாபர் ஈரமாகி விட்டது.


இமைக்கா நொடிகள்

 

 சென்னை, மயிலாப்பூர் லஸ் கார்னர். இரவு இரண்டு மணியிருக்கும். தன்னுடைய பிரம்மாண்டமான வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ மாணிக்கத்தை அவரது மொபைல் எழுப்பியது. பதட்டத்துடன் எழுந்து உட்கார்ந்து லைட்டைப் போட்டு பேசினார். “மிஸ்டர் ராஜ மாணிக்கம்?” “எஸ்.” “நான் நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பேசுகிறேன். உங்க மகன் இப்ப எங்கே இருக்கிறான்?” “அவனோட ரூமில் தூங்கிக்கிட்டு இருக்கான் சார்..” “மொபைலோட அங்க போங்க எனக்கு உடனே பார்த்துச் சொல்லுங்க.” ராஜ மாணிக்கம் விரைந்து போய்ப் பார்த்தார்.


கொள்ளுத் தாத்தா

 

 கதை கேட்க: https://www.youtube.com/watch?v=bSDLT_ORioU அப்பா இனி பிழைக்க மாட்டார் என டாக்டர்கள் கையை விரித்து விட்டனர். அவரை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு தனியறையில் படுக்க வைத்தோம். உறவினர்களுக்கு உடனே தெரிவிக்கப் பட்டது. எல்லோரும் வந்து அப்பாவின் இறப்பிற்காக காத்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. காத்திருந்து பிறகு ஒவ்வொருவராக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டார்கள். இது நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு. அப்போதே அப்பாவுக்கு எழுபத்தியேழு வயது. பிழைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் தற்போது வீட்டிற்குள்ளேயே நன்றாக நடமாடுகிறார்.


முன்னி

 

 பெங்களூர். அன்று சனிக்கிழமை செப்டம்பர் பதினெட்டு. காலை ஆறரை மணிக்கு எனக்கு திடீரென பயங்கர மூச்சத் திணறல் ஏற்பட்டது. சுவாசிக்கவே மிகவும் திணறினேன் . உயிர் பயம் ஏற்பட்டது. என் ஒரே மகன் ராகுல் உடனே என்னை அருகிலுள்ள ஆஸ்டர் ஹாஸபிடல் எமர்ஜென்சியில் சேர்த்து விட்டான். அங்கு உள்ள டாக்டர்கள் உடனே என்னை சூழ்ந்துகொண்டு பெரிய விவாதம் நடத்தினார்கள். நிறைய பரிசோதனைகள் மேற்கொண்டார்கள். ஏற்கனவே பை பாஸ் சர்ஜரி செய்யப் பட்டவன் என்பதால் என் மீது அதிகக்


என் மகள்

 

 அது ஒரு பின்னிரவு. எங்கள் படுக்கை அறையில் என் மனைவியின் செல்போன் அடித்துக்கொண்டே இருந்தது. அதை எடுத்துப் பேசாமல் அவள் தவிர்த்துக்கொண்டே இருந்தாள். எங்கள் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். செல்போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும், அவள் அதைத் தவிர்த்துவிட்டாள். மீண்டும் அது அடித்தது. எனவே நானே அதைக் கையில் எடுத்துப் பேசப்போனேன். திடுக்கிட்ட என் மனைவி திடீரென குளியலறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாள். நான் எழுந்துசென்று கதவைத் தட்டினேன். அவள் திறக்கவில்லை. பயந்துபோன நான் கதவை