கதையாசிரியர் தொகுப்பு: எச்.எம்.அப்துல் ஹமீது

2 கதைகள் கிடைத்துள்ளன.

மறுமலர்ச்சி

 

 அன்று மாலைக் கதிரவன் தனது செங்கீற்றுக்களை அடிவானத்தில் பரப்பிக்கொண்டிருந்த வேளையது. ஹிஷாம் ‘ஷொபிங் பேக்’ ஒன்றில் மரக்கறிகளுடன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். அடர்ந்து வளர்ந்துள்ள வாழைத் தோட்டத்து நடுவே காணப்படும் அச்சிறிய மண் வீடு வாசற் படியில் நின்றுகொண்டிருந்த அஸ்ரா, தம்பி ஹிஷாம் கையில் சுமந்துகொண்டு வரும் ஷொப்பிங் பேக்கை உற்று நோக்கியவாறு; ‘தம்பி இன்டக்கி சரி சம்பளக் காசி கெடச்சா?’ என்று கேள்வி எழுப்பினாள். ‘இல்ல தாத்தா! தொர என்ன ஏமாத்திகிட்டே இருக்காரு! கடையில சேர்ந்து


நினைவுகள்

 

 ராசிகா தனது இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிறிது நேரம் வானொலி நிகழ்ச்சியை செவிமடுத்தவாறு, பக்கத்து மேசைமீதிருந்த பழைய, புதிய புத்தகங்கள் சிலவற்றை வாசித்துவிட்டு, கடிகாரத்தைப் பார்க்க அது பத்து மணி நாற்பது நிமிடத்தைக் காட்டியது. அவ்வேளை, ராசிகாவின் கண்களை தூக்கமும் இறுக்கமாக மூடிக்கொள்ளச் செய்தது. என்றாலும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்தவாறு தனது கடந்தகால வாழ்வில் நடந்து முடிந்த இனிமையான நினைவுகளை உள்ளத்திரையிலிட்டு ரசித்துக்கொண்டிருந்தாள். அத்தோடு, கசப்பான சம்பவங்கள் பற்றியும் சிறிது நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.