கதையாசிரியர் தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி

21 கதைகள் கிடைத்துள்ளன.

சாந்தா டீச்சர்

 

 சாந்தா டீச்சருக்கு விழிப்பு வந்ததும் முதலில் பார்ப்பது சுவர்க் கடிகாரம். மணி ஐந்தே முக்கால். முப்பது வருஷங்களாக மாறுதல் ஏதுமில்லாமல் நடைபோடும் நிகழ்ச்சி. அந்தக் காலத்து கடிகாரம். அவள் அப்பா சென்னை மூர்மார்க்கெட்டில் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் முப்பத்தைந்து ரூபாய்க்கு வாங்கின கடிகாரம் இதுவரை ஒரு தடவை கூட நின்றதில்லை. சர்வீஸ் செய்யவும் கொடுத்த தில்லை. ஆனால் அப்பாதான் போய் விட்டார், அம்மா போன அடுத்த வருஷம். பத்து வருஷங்களுக்கு முன்னால். சாந்தா டீச்சருக்கு இன்றும் வழக்கம்போல்


நாயகன்

 

 பக்கத்திலிருந்த வங்கிக்குப் போகலாமென்று கிளம்பினார் ராமதுரை. ஒன்பது மணிக்கே நல்ல வெயில் வந்து விட்டது. குடை எடுத்துக் கொண்டு போவதென்பது அவர் வாழ்க்கையிலேயே செய்திராத ஒரு செயல். அவருக்கு மறதி அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம் என்றாலும், இதை விட முக்கியமான காரணம், குடையை அவர் நடுத்தர வகுப்பு பாதுகாப்பு உணர்வின் ஓர் அடையாளமாகப் பார்த்ததுதான். பார்வதி, இருந்தபோது, கோபத்துடன் சொல்வாள், ‘ஆமா… நடுத்தர வகுப்பு, ஃபிலிஸ்டின் அது இதுன்னு சொல்லிண்டு நாம என்ன பெரிசா


கன்னி

 

 இது தான் முதல் தடவை அவன் ஒரு திரைப்பட ‘ஸ்டுடியோ’வுக்குள் நுழைவது. அவன் நாவலை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இயக்குநரின் வற்புறுத்தல் பேரில் அவன் வந்தான். வந்த அரை மணிக்குள் அவனுக்கு ‘போர’ டிக்கத் தொடங்கியது. சமைக்கும்போது சமையலறைக்குள் எட்டிப் பார்ப்பது போன்ற ஓரனுபவம், இரண்டு வாக்கியங்கள் பேசுவதற்குள் மூன்று ரீடேக் அவன் சலிப்படைந்தான். அவன் ‘செட்’டை விட்டு வெளியே வந்தான். ஜூன் மாதத்து வெயில், மழைக்காக ஏங்கிக் கிடந்தது வானம். எத்தனை பள்ளிக்கூடச் சிறுவர்கள்! தோளில் புத்தக


பாரத நாடு பழம்பெரும் நாடு

 

 கிருஷ்ணன் அன்று மிகவும் உற்சாகத்தில் இருந்தார். அரசாங்க நிறுவனத்தைச் சார்ந்த எஃகு உற்பத்திச் சாலையின் விற்பனைப் பகுதித் தலைவராக இருந்த அவருக்கு அரைமணி முன்புதான் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்தது. ஓர் அயல்நாடு தங்கள் ரயில்வே நிறுவனத்துக்காக எஃகு வேண்டி சர்வதேச டெண்டர் கோரியிருந்தது. பாரத அரசாங்கமும் அதற்கு மனு அனுப்பியபோது, கிருஷ்ணனின் யோசனையின் பேரில் கிலோ பதினாறு ரூபாய் என்ற விலையைக் குறிப்பிட்டிருந்தது. மேற்கு ஜெர்மனி பதினெட்டு ரூபாய், ஜப்பான் பதினேழு ரூபாய் …. இவ்வாறு


கோட்சேக்கு நன்றி

 

 திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு, எது விழிப்பு என்று பிரித்தறிய முடியாதபடி ஒரு குழப்பம். சொப்பணாவஸ்தை. எது பாம்பு, எது பழுதை? சங்கரரும் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டிருப்பாரோ? வள்ளுவர் நன்றாக உறங்கியிருக்கக் கூடும். கண் விழித்தால் வாழ்க்கை, தூங்கினால் சாக்காடு. மணி நாலரை. விளக்கைப் போட்டேன். அவள் இருந்திருந்தால் சொல்லி யிருப்பாள் ‘ரத்திரிப் பேய்தான் நீங்க!’ ‘இது ராத்திரியில்லே, மைடியர். ரிஷிகள்


அவன் பெயர் நாகராஜன்

 

 அவன் தன் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தான். இனிமேல் அவன் மறுபடியும் உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. ஒரு வாரத்துக்குரிய சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். இது அவன் தில்லிக்கு வந்த இந்த மூன்று மாதங்களில் பதினைந்தாவது வேலை. இங்குதான் அவன் அதிக நாட்கள் வேலை செய்தான். இன்னொரு வேலையை தேடிச் சென்றானானால் அங்கு ‘இண்டர்வியூ’வில் கேட்பார்கள். “அநுபவம்?” “மூன்று மாதங்கள்.” “எங்கு வேலை செய்து கொண்டிருந்தாய்?” “கடைசியாக வீலர் அன்ட் பாட்லிபாய்.” “கடைசியாகவா?” அந்தக் குரலில் நிச்சயம்


திரிவிக்கிரமன்

 

 பரசுராம் அந்தப் பதினாறு மாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தான். கோபத்தின் சக்தியைக் கனலாக மாற்றக்கூடிய வலிமை அவனுக்கு இருந்திருந்தால், அக்கட்டடம் எரிந்து சாம்பலாகி யிருக்கும். அவன் வெளியிலிருந்து அண்ணாந்து அந்தப் பதினாறாவது மாடியை நோக்கினான். அவனுக்கு நெற்றிக் கண்ணுமில்லை. அதுதான் அவன் துரதிர்ஷ்ட ம். அந்தப் பதினாறாவது மாடியில்தான், அவன் வேலை தேடும் முயற்சியில் பதினாறாவது தடவையாக – என்ன ஒற்றுமை அவனுக்கு வேலை இல்லை என்று சொன்னார்கள். காரணம் அவனுக்குப் போட்டியாக வந்திருந்த அந்தப்


சொர்க்கத்துக்கு ஒரு குறுக்குவழி

 

 துறவி பரமானந்தருக்கு மிகவும் கோபம். ‘முட்டாள் ஜனங்கள்! பூத உடலுடனேயே பேரின்பத்தை அடைய குறுக்கு வழியைக் காட்டுகிறேன் என்றால் ஒருவராவது வர வில்லையே!’ அவர் கங்கையாற்றைத் தம் கையினால் துழாவினார். அமைதியைக் கிழித்துத் தண்ணீர் சலசலத்தது. லட்சுமண் ஜுலா எவ்வளவு ரம்மியமான இடம்! இந்த இடத்தில்தான் அவரால் உலகத்துக்கு உபதேசம் செய்வதற்கான மாபெரும் உண்மையைக் கண்டுபிடிக்க முடிந்தது! ‘பதினைந்தே நிமிஷங்களில் பரம நிலையை அடையலாம். கால் மணி நேரத்தில் கடவுள் தரிசனம்….! எப்பேர்ப்பட்ட உண்மையைக் கண்டு பிடித்திருக்கிறோம்.


அறியாமை என்னும் பொய்கை

 

 நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது போல் அவர் உடம்பில் பூசியிருந்த திருநீறு சுகந்தமான வாசனையை அறை முழுவதும் வாரியிறைத்தது. அவர் அணிந்திருந்த கதர்ப் பட்டாலாகிய மஞ்சள் சட்டையின் வண்ணத்துடன் இசைந்து பொலிந்த தங்கப் பித்தான்கள், அவ்வறையில் பாய்ந்த காலை வெயிலின் ஒளியில் மின்னின. அவர் கண்கள் லேசாக மூடியிருந்தன. அவரெதிரே அம்பி ‘படபடப்பாகப் பேசிக் கொண்டிருந்தான். கோபத்தில் அவன் குரல் கிறீச்சிட்டது.


அவள் என் மனைவி

 

 திரைகட லோடி திரவியம் தேடிய தமிழர் பரம்பரையில் வந்தது முத்து ‘கிராண் டிரங்க்’ ஏறி தில்லியை வந்தடைந்தான். பல்கலைக் கழக பட்டமா பெற்றிருக்கிறான் அவன், வேலை கிடைக்காமல் போக? இரண்டு கைகள் இருந்தன; உறுதி இருந்தது மனதில். வந்ததும் வேலை கிடைத்து விட்டது. மத்திய சர்க்கார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஐந்தாறு உத்தியோகஸ்தர்களுடைய வீட்டையும், பாத்திரங்களையும் ‘விளங்க’ வைப்பதுதான் அந்த வேலை… மாதம் நூற்றிருபது ரூபாய் வந்தது. சேலத்தில் இடைப்பாடியைச் சேர்ந்த அவனுக்கு ஊரில் பெரிய