விநோதினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,216 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இதுவரை அப்படியான விநோதமான பூச்சியை அந்தப் பக்கத்திலேயே யாருமே காண வில்லை என்று சொன்னார்கள். எட்டுக் கால்கள், முதுகெல் லாம் அடர்ந்த கபில நிறம். தலையிலிருந்து கறுப்பு நிற மாக நீண்ட கூரான கொம்பு, நீலமான கண்கள். உஸ்உஸ் ஸென்று இரைச்சலை எழுப் பிற்று. சட்டென்று அதை கையிலே வைத்திருந்த பெட் டிக்குள் தந்திரத்தோடு தள்ளி மூடினாள் விநோதினி.

– “இது கடுதாசிப் பெட்டியை யும் கிழித்துக் கொண்டு போய் விடும். இன்னொரு மரப்பெட்டிக் குள்ளை வைக்கிறது நல்லது” என்று கூறியவாறு அவள் எதிரே நின்றவர்களைப் பார்த் தாள். நடுத்தர வயதான பாக் கியம், “தங்கச்சி, என்னட்டை ஒரு பழைய டிறங்குப் பெட்டி – கிடக்குது கொண்டு வரட்டுக் குமோ?” என்றாள். “அதென் றால் இன்னமும் பாதுகாப்பு” என்றவாறே விநோதினி எதிரே பார்த்தாள்,

வட்டுக்கருகிய தென்னை மரங்கள். மூளியாய் சிதைந்து – போய் நிற்கிற பூவரசுகள். அந்த ஊருக்கே பிரபலமான பேரைத் தேடிக்கொடுத்த கறிமுருங்கை மரங்கள் பூசணம் பிடித்தாற் போல சரிந்து முட்கள் உதிர்ந்த உடம்போடு நின்றன. இவற்றின் பழைய தோற்றத்தை கற்பனை செய்ய முயன்ற பொது விநோதினியின் கண்கள் கலங்கின. எவ்வளவு பசுமையாகவும் குளிர்மையாகவும் கண்களை நிறைத்திருந்த மரங்கள்…

“பிள்ளை , இந்தாரும் டிறங்குப் பெட்டி…”

பாக்கியம் நீட்டிய டிறங்குப் பெட்டியை வாங்கியவாறே, “இது உங்களுக்குத் தேவையில்லையோ?’ என்று விநோதினி பரிவோடு கேட்டாள்.

பாக்கியம் பெருமூச்செறிந்தாள். பிறகு தெற்குப் பக்கமாகப் பார்த்தாள், கூரை முற்றாகச் சிதைந்த வீடுகள் கண்களினை நிறைத்தன. எல்லாவற்றுக்கும் நடுவே கலசங்கள் உடைந்து நிற்கிற பிள்ளையார் கோவிலின் அழகிய கோபுரம்.

சட்டென்று கவனத்தை நிகழ்காலத்திற்கு அவள் இறக்கினாள்.

“நான் வைச்சுப் பாதுகாக்கிறதுக்கு என்ரை கையிலை என்ன பிள்ளை இருக்குது? எனக்கு யார் இருக்கினை?’

மூக்கை உறிஞ்சினாள் பாக்கியம். கடுதாசிப் பெட்டியை டிறங்குப் பெட்டியின் உள்ளே வைத்து மூடினாள் விநோதினி. பாக்கியத்தின் குரல் மனதை அழுத்திற்று. முன்னே நிற்கிற ஒவ்வொருவரிடமும் அதே கதை இருப்பதை அவள் அறிவாள். யாருக்கு யார் ஆறுதல் கூறுவது?

தொலைவில் யாரோ அலறும் சத்தம் கேட்டது.

எல்லாரும் அந்தத் திசையைப் பார்த்தனர். பாக்கியம் மெல்லிய குரலிலே, “தங்கச்சியம்மா தன்னுடைய நாலு வயதுப் பிள்ளைக்கு சுகமில்லை என்று அழுது கொண்டிருந்தவள்… அதுதான் மோசம் போயிட்டுதோ தெரியேல்லை….” என்றாள்.

“இருக்கும்… இருக்கும்…” கூறியவாறு எழுந்தாள் செல்லம்.

விநோதினி, எந்த உணர்ச்சியுமற்றுக் கூறிவிட்டு எழுந்து போய்க் கொண்டிருந்த செல்லத்தைப் பார்த்தாள்.

செல்லத்திற்கு முப்பது வயதென்று கூறியபோது விநோதினியால் நம்ப முடியவில்லை . வளைந்த முதுகு. ஒடுங்கிய கன்னம், பொருக்கு வெடித்த தேகம். திருமணம் ஆகாதவள். பற்கள் மட்டும் துருத்தித் தெரிந்தன. காவி படிந்த பற்கள்.

அழுகைக்குரல் சத்தமாகக் கேட்டது,

“யாராவது என்னோடை வாறியளோ, தங்கச்சியம்மா வீட்டுக்குப் போய்ப் பார்ப்பம்….”

யாரும் ஒன்றும் பேசவில்லை . “நீங்க வாறியளோ?’

பாக்கியத்தைப் பார்த்துக் கேட்டாள் விநோதினி. மூக்கை உறிஞ்சியவாறே அவளைப் பார்த்து தலையை ஆட்டினாள் பாக்கியம்.

நான்கு வயதுக் குழந்தை, மூன்று நாள் அவஸ்தையின் பிறகு பரிதாபமாக இறந்து போய்க் கிடந்தது. நீலம் பாரித்து, முகம் கோரமாகி, கைகால்கள் குருவிக் கிடந்தது அந்தப் பிஞ்சு. தலைதலையாக அடித்துக் கொண்டு கதறினாள் தங்கச்சியம்மா. ஆறுபேர் மட்டுமே அங்கு நின்றனர். வார்த்தைகளற்று, உணர்வேதுமற்ற முகத்துடன் அந்தக் குழந்தையை வெறித்துப் பார்த்தபடி நின்றனர்.

விநோதினி தங்கச்சியம்மாவுக்கு பார்வையினால் ஆறுதல் சொன்னாள்:

“தகப்பனில்லாத இந்தக் குஞ்சை வளர்த்து ஆளாக்க வேணுமென்று நினைச்சேன்… இனி எனக்கு ஆர் துணை…கடவுளே எனக்கு இனி ஆர் துணை?”

தோளிலே ஆதரவாகத் தொட்ட விநோதினியைப் பார்த்து விசும்பி விசும்பி அழுதாள் தங்கச்சியம்மா.

விநோதினி மௌனமாக நின்றாள்.

“என்னுடைய பிள்ளையைப் போலை ஆறு பிள்ளைகள் இந்தப் பக்கத்திலை மோசம் போயிட்டுதுகள் பிள்ளை…”

தங்கச்சியம்மா கண்களைத் துடைத்தவாறு அவளைப் பார்த்தாள். வேதனை பெருக்கெடுக்கக் கூறினாள்:

“இப்பிடி வாற வியாதிக்கு மருந்தே கிடையாதென்று டொக்டர் சொன்னாராம். அது மெய்தானே பிள்ளை…. அப்பிடி என்றால் இந்த இடத்திலையுள்ள பிள்ளைகளுக்கு இந்த வியாதி வந்தால் தப்பவே முடியாதோ?”

பெருமூச்சு விட்டாள் விநோதினி.

“எங்கையெல்லாம் சண்டை நடந்து இரசாயனக் குண்டுகள் போடப்படுகுதோ அங்கை இப்பிடியான நோய் குழந்தைகளுக்கு உண்டாகும்… இந்த இரசாயனக் குண்டுகள் சுற்றாடலை, மரஞ்செடிகளை, மண்ணை எல்லாம் நச்சுப்படுத்திவிடும்.

விதம்விதமான கிருமிகளை உண்டாக்கும். அந்தக் கிருமிகள் நோயைப் பரப்பும். இப்பிடியான நோயிலை ஒன்றுதான் செப்டிசேமியா… உலகத்திலே குழந்தைகளைப் பயங்கரமாகச் சித்திரவதை செய்து கொல்லுகிற நோய்…. வெறுமனே பனடோலை மட்டும் எல்லா நோய்களுக்கும் மருந்தாகக் கொடுக்கிற சூழ்நிலையிலை இந்த நோய்க்கு, யாராலை சரியான மருந்தைக் கொடுக்க முடியும்? எதுக்கும் நான் நாளைக்கு பெரியாஸ்பத்திரிக்குப் போறன். இதைப்பற்றி அங்கையுள்ள டொக்டரிட்டைக் கேட்டுக் கொண்டு வாறன்…”

வெளியே இருந்து இன்னொரு இளம்பெண் அழுதுகொண்டு வந்தாள். உள்ளே நின்றவர்களைப் பார்த்து தலைதலையாக அடித்துக் கொண்டாள்.

“கடவுளே, தங்கச்சியம்மா அக்காவின்ரை பிள்ளைக்கு வந்தமாதிரி என்ரை பிள்ளைக்கும் வந்திருக்குது… நான் என்ன செய்வேன்? தகப்பனில்லாத பிள்ளை … மூச்சுவிட அவதிப் படுகுதே….”

தங்கச்சியம்மா அவளை அணைத்துக் கொண்டாள்.

விநோதினியின் அருகே நின்ற பதினாறு வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி அலட்சியமாகச் சிரித்தாள். அடர்ந்திருந்த தலைமயிரைச் சொறிந்தவாறே, “இந்தச் சின்னக்குஞ்சுகள் அதிர்ஷ்டம் செய்ததுகள்… எங்களைப் போலை நெருக்குவாரப் படாமல் நேரத்துக்கே போய்ச் சேர்ந்திட்டுதுகள் ” என்றாள்.

திடுக்கிட்டுப் போனாள் விநோதினி.

அந்த யுவதியையே பார்த்தாள் அவள். தலைமுடியை முன்னே இழுத்து விட்டவாறே, “எனக்கு விசர் என்று நீங்களும் சொல்லப் போறியளோ?’ என்று பரிதாபகரமான சிரிப்போடு விநோதியிடம் கேட்டாள் அந்த யுவதி.

விநோதினி கனிவோடு அவளைப் பார்த்தாள். மனதினுள்ளே நெருப்புத் துளிகள் உதிர்ந்தன.

இரவு முழுவதும் அவளுக்கு நித்திரையே வரவில்லை . புரண்டு புரண்டு படுத்தாள்.

மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் அவள், இங்கே வந்து ஒருவார காலமே ஆகின்றது. மருத்துவ வசதியற்ற மக்களுக்கு உதவுவதற்காக வந்த மருத்துவக் குழுவோடு இப்பகுதிக்கு விநோதினி வந்தாள். ஒரு மாதகாலம் வரை பணி செய்வதென்று தீர்மானமாகி இருந்தது.

தான் சென்று வந்த ஒவ்வொரு இடமும், சந்தித்த மக்களும் மாறிமாறி அவளது நினைவிலே வந்தனர். எந்தக் கதியுமற்ற சொந்தச் சகோதரர்களாய் அவர்களை உணர்ந்தாள் விநோதினி.

பாலைவனம் போல சுற்றாடலை உணர்ந்தாள் அவள். தான் பிறந்து வளர்ந்து தவழ்ந்து விளையாடிய வெண்மணற் பரப்பும்…. போதும் மொட்டும் பூவுமாய்ச் சுமந்து நின்ற பூச்செடி, வாழை மரங்களும், மெல்லிய வாசனை கமழ்கின்ற கறுத்தக் கொழும் பான்களைச் சுமந்த மாமரங்களும், செம்பினில் அழுதெனப் பருகும் தண்ணீரைத் தரும் சுத்தமான கிணறுகளும், அழகான வீடுகளும், தூய்மை சுமந்து வரும் பூங்காற்றும், சித்திரையில் இளம்பச்சையில் துளிர்க்கும் இலைகளின் நடுவே இருந்து குக்கூ என்று கூவும் குயில்களும், காலையில் மேயப்போய் அடிவானில் சரியும் செஞ்சூரியனைக் கண்டு, “அம்மா… ம்மா…” என நெகிழ்வாய் அழைத்து வீடு திரும்புகிற பசுக்களும், கிளித்தட்டு விளையாட்டில் உச்ச நேரத்தில் சத்தமிடுகிற சிறுவர்களும்…

நெஞ்சு விம்மித் தவித்தது அவளுக்கு.

படுக்கையில் இருந்து எழுந்தாள் விநோதினி.

மண்ணெண்ணை விளக்கைப் பற்ற வைத்தாள். மேசையின் அருகே உட்கார்த்திருந்தாள். ‘கியூமன் அனட்டமி’ புத்தகத்தை எடுத்தாள். எதேச்சையாகப் பக்கங்களை விரித்தாள். நீலக்கடிதம் ஒன்று வெளிப்பட்டது. சிரத்தை இன்றி எடுத்தாள். தியாகராஜனின் கடிதம். லண்டனிலே இருந்து வந்த கடிதம். அதை விரிக்காமல் மீண்டும் புத்தகத்தினுள்ளே வைத்தாள்.

மங்கிய வெளிச்சத்தில் வெளியே பார்த்தாள். மௌனம். அச்சத்தையூட்டும் மௌனம் இருளோடு பிணைந்து படர்ந்தி ருந்தது. எந்தக் குருவியின், பூச்சியின், நாயின் குரலுமே இல்லை. இவை யாவும் எங்கே போயின?

யாரிடம் கேட்பது- காற்றிடமா? இருளிடமா? எவரிடம் கேட்பது?

திடீரென்று வீரிடல், பெண் ஒருத்தியின், நெஞ்சைக் கிழித்து இரத்தம் வழிய வைக்கும் வீரிடல்.

பெருமூச்செறிந்தாள் விநோதினி.

சட்டென்று அவள் முன்னே அகோரக்குரலொன்று கோரமாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.

“என்னைத் தெரியவில்லையா….?”

கையிலே வைத்திருந்த உருக்குலைந்த குழந்தையின் உடலை மேலும் துண்டு துண்டாகப் பிய்ந்தெறிந்தது அந்த இராட்சத வடிவம். குரங்காய், கரடியாய், பூதமாய், நாயாய், பன் முகங்காட்டிய குரூரம்.

“நான்தான் செப்டிசேமியா… நான் உனது மண்ணில், காற்றில், நீரில் இழைந்திருக்கிறேன். ஆகாயத்தைப் பார். அங்கேயும் இருப்பேன்… என்னை எவர் என்ன செய்ய முடியும்? என்னைப் பெற்றெடுத்தவர் யாரென்று உனக்குத் தெரியுமா….?”

அகோரமான சிரிப்பு. மனதுள் உதைந்து உதைந்து பெருகிய கோரச் சிரிப்பு.

வெளியே இப்போது அந்தத் தாயின் குரல் தீனமாக ஒலித்தது.

“கடவுளே, எனக்கு ஏன் இப்பிடிச் செய்தனீர்?”

விநோதினியின் கண்கள் கலங்கின.

டொக்டர் தயாளன் அமைதியாக அவளைப் பார்த்தார்.

“விநோதினி நான் முன்னரே சொன்னது போல நமது சூழல் முற்றிலும் மாசடைந்து விட்டது. இரசாயனம் பேரழிவை உண்டாக்கப் போகிறது. இதன் ஒரு பகுதி நோயே செப்டிசேமியா. இது குழந்தைகளை அழிக்கும் கொடூரமான நோய். இதற்கு எம்மிடங்கொடுக்க மருந்தே இல்லை…”

தயாளனின் குரல் கலங்கிற்று.

எதிரே முனகிக் கொண்டு போகிற நோயாளிகளைப் பார்த்தவாறே கூறினார் அவர்:

“இந்தச் சூழலில் உங்களைப் போன்ற பலர் இந்த மக்களுக்கு உதவ முன்வர வேணும். உடலாலும் மனதாலும் சேதமும் காயமும் பட்ட இந்த மக்களுக்கு நிறைய ஆதரவு தேவை. இவர்களை நாம் குணப்படுத்தலாம்… அணுகுண்டுகள் மழையாகப் பெய்து நாசமாக்கிய ஜப்பானின் ஹிரோசிமாவுக்கு நான் போயிருக்கிறேன்… புத்தகத்தில் படித்ததை என்னால் நம்ப முடியவில்லை … பூக்களும், அழகும் மலர்ந்திருக்கிற புதிய ஹிரோசீமாவை ஜப்பான் உருவாக்கியிருக்கிறது. அங்கே சந்தோஷமாக மக்கள் வாழ்கின்றனர்… இளந்தலை முறையே அதைச் சாதித்தது….”

வெளியே அலறல் குரல்.

“அவசரமான சிகிச்சை போல இருக்கிறது. விநோதினி பிறகு வந்து என்னைச் சந்தியும்…”

அவசரமாகப் புறப்பட்டார் தயாளன்.

‘கொம்யூனிக்கேஷன்’ பொறுப்பாளர் குணசேகரம், தொலைவில் அவளைக் கண்டதும் அவசரமாக அவ்விடம் நோக்கி வந்தார்.

“மிஸ்… உங்களுக்கு லண்டன் கோல்…”

வேகமாகச் சென்றாள் விநோதினி.

தொலைபேசியில் அப்பா. லண்டனில் இருந்து.

“விநோ, உனக்கு ஏதேனும் சுகமில்லையா என்று பயந்து விட்டேன். அப்படி ஒன்றுமில்லையே…?”

பரபரத்தது அவரின் குரல்.

“இல்லையப்பா….”

“தியாகராஜன் உன்னைப்பற்றி ‘லண்டன் பொயட்றி’ என்ற கவிதைப் பத்திரிகையில் எழுதிய அருமையான கவிதையைப் பார்த்தாயா? காளிதாசன் சகுந்தலையை வர்ணித்தது போல உன்னை வர்ணித்திருக்கிறான்…”

“இல்லையப்பா…”

சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறினார் அப்பா:

“விநோ… என்ன உற்சாகமே இல்லாமல் பேசுகிறாய்? ஏதும் சுகமில்லையா? அதுதான் நான் உன்னை இந்தக் தொண்டு வேலைகளுக்குப் போக வேண்டாமென்று சொன்னேன். இன்றோடு அதை நிறுத்தவும். தியாகராஜன் ஏதாவது அறிவித்தானா?”

“ஓம்…”

“என்ன?”

“இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்காவின் டிஸ்போ கொம்ப்யூட்டர் நிறுவனத்தின் செயற்பாட்டு இயக்குநராக தனக்கு நியமனம் கிடைத்திருக்கிறதாம். அதற்குள் திருமணத்தை முடித்துக் கொண்டு என்னையும் கூட்டிக் கொண்டு போக வேணுமாம்…”

மறுமுனையில் சந்தோஷம் பிரதிபலித்தது.

“விநோ, ஆவணி இரண்டாம் கிழமை லண்டன் முருகன் கோயிலில் தமிழ் முறைப்படி கலியாணம். மெட்ராசிலை தான் நகையும் காஞ்சிபுரஞ்சேலையும் பூமாலைகளும் வாங்க வேணும்… மூன்று கிழமையிலை நீர் மெட்ராசுக்கு வரவேணும்…என்ன?”

“அப்பா…” நிதானமாக அழைத்தாள் விநோதினி.

“என்னடா?”

“நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேணும்…”

“என்ன?” பரபரத்தார்.

“அப்பா, எனக்கு கலியாணம் வேணாம். நான் இங்கேயே இருக்கப்போறன்…”

“வட் நொன்சென்ஸ்” அவர் கத்தலில் தொலைபேசி அதிர்ந்தது.

வெளியே அழுகுரல். “அப்பா, இந்த முடிவிலை இருந்த நான் மாறமாட்டேன்…” தொலைபேசியை வைத்தாள் விநோதினி.

– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *