கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2018

67 கதைகள் கிடைத்துள்ளன.

நண்பன்

 

 குமார் என் பால்ய சினேகிதன். மறக்க முடியாத எனது பள்ளிக்கூட நண்பர்களில் ஒருவன். நான் சிவகுமார். தனியார் நிறுவனத்தில் தனியாய் கணக்கெழுதுகிற வேலை, எல்லாம்… எந்தச் சங்கிலியும் இல்லாமலேயே நாள் முழுதும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிற அந்தப் பாழாய்ப் போன கணினியில் தான். இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது கடைசியாக நான் குமாரைப் பார்த்து. அடிக்கடி அவனை நினைத்துக் கொள்வேன். நமது சூழல்கள் எவ்வளவு தான் மாறினாலும் இப்படித்தான் சிலர் நமது நினைவுகளிலிருந்து நீங்காது இம்சையாக இருப்பார்கள் சிலர். எங்கிருக்கிறான்


வியாபாரி

 

 ” அலோ…..யாருய்யா….” என்று தடித்த குரலில் மளிகைக்கடையில் நின்ற அனைவரும் தன்னை திருப்பிப்பார்க்கும் விதமாய் சத்தமாய் கேட்டார் லிங்க நாடார். மறுமுனையில் தன் சொந்த ஊரு திசையன்விளையிலிருந்து என்று அறிந்தவுடன் முகம் மலர்ந்து ஆவலாகவும், மகிழ்ச்சியுடனும் தொடர்ந்தார்.சத்தம் மட்டும் அப்படியே….” என்ன மாப்பிள…சொல்லுங்க…விசேசமால்லா இருக்கு…திடுதிப்புன்னு போன போட்றுக்கீறு ” என்று மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்தார், லிங்க நாடார். மறுமுனை பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் லிங்க நாடார் தன் வலது பக்க நெற்றியின் மேல் முடியின் அடிபாகத்தை


பசித்த மரம்

 

 அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான். நான் எழுதுவதை நிறுத்த நேர்ந்தது. எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். அங்கே காந்தி பாபுவை நான் எதிர்பார்க்கவேயில்லை. “என்ன ஆச்சர்யம் வாங்க, வாங்க!” என்றேன். “என்னைத் தெரிகிறதா?” “முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது.” அவரை நான் உள்ளே அழைத்து வந்தேன்.


இனி எந்தக்காடு…?

 

 forestகரும்பச்சைச் சுனாமி அலைகள் வானைமுட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற முகில்களின் தூக்கம். அது அந்தக் காட்டிற்கு வெண்ணிற ஆடை போர்த்தியதான கோலம். பரந்த காட்டின் கரைகளில் சில வரண்ட பகுதிகள். அவை அந்தக் காட்டை அரண் செய்வது போல வறட்சித் தாவரங்களை வாளாக்கிய இயற்கை. எழுந்த சுனாமி அலைகளின் ஏற்றம் மத்தியில் பெரும் மலைகளாகப் பொங்கி எழுந்த கோலம். அந்த மலைகளைத் தடவும் இறகுகளாக மேலும்


கானல் வரி

 

 எம் மேல கோபமா? அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று ஏதோ ஒரு சிவப்பு நிறப் பொருளை அலகுகளில் கவ்வி வந்தது. ஈரமணலில் அமர்ந்து பரவும் அலைகளுக்கு விலகி அலகுகளால் குத்தியது. சுற்றுமுற்றும் ஒர பார்வையை வீசி புரட்டிப் பார்த்தது. சில வினாடிகள தயங்கி க்ரா க்ரா என பறந்தது. பழைய எல்லைகளைத் தாண்டி வந்த அலையொன்று அநதப் பொருளையும் நனைத்து உறிஞ்சியபடி உள்நகர்ந்தது. நான் கேட்டதுக்கு பதிலே


பூட்டு, சாவி எங்கே?

 

 மரக்காட்டில் முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. நேகா அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. மிக அழகான நேகாவைப் பார்க்க தினமும் யாராவது விருந்தினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஒருநாள் நரியும் பார்க்க வந்தது. முயல் குடும்பத்தினருக்குப் பயமாக இருந்தது. “அடடே! இப்படி ஒரு அழகான முயல் குட்டியை நான் பார்த்ததே இல்லை!” என்றது நரி. இந்தப் பொல்லாத நரியால் நேகாவுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எல்லோரும் அஞ்சினர். உடனே வளைக்கு ஒரு கதவை ஏற்பாடு செய்தனர். “நேகா, நீ எளிதில்


முகவரி தேவை

 

 அந்த ஆரஞ்சுப்பழம் என்னப்பா விலை? கிலோ நாற்பது ரூபா சார். சரி அதுல அரை கிலோ கொடு, பர்ஸில் இருந்து பணம் எடுத்து கொடுத்து பழத்தை வாங்கியவன், மிகுந்த எச்சரிக்கையுடன் இரு புறமும் பார்த்து வாகனங்கள் வராத நேரம் பாதையை தாண்டி எதிரில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தேன்.பார்க்க வந்தவர் ஒரு விபத்தில் அடிபட்டு இரண்டாம் மாடியில் படுத்திருக்கிறார்,விபத்துக்கு காரணம் நான் தான். மனசு பட படத்தது. விபத்து நடந்தபோது கொண்டு வந்து சேர்த்தது. அதன் பின்


பண்பு…!

 

 எதிர் வீட்டு எதிரி, எமன் வடிவில் தன் கல்லூரி வகுப்பறைக்கு வாத்தியாராக இப்படி எதிரில் நிற்பாரென்று வருண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘நிச்சயம் இந்த ஆள் எதிரி, எமன்தான்.!! சந்தேகமே இல்லை. அதிலும் முக்கியப்பாடத்திற்கு ஆசிரியர். தியரில் நன்றாக எழுதி தப்பித்தாலும் செய்முறை வகுப்பில் கண்டிப்பாக இவர் தன்னைப் பெயிலாக்குவதற்கு கை நீளும், ஆக்கியேத் தீருவார்.!’ நினைக்கும் போதே இவனுக்கு நெஞ்சு நடுங்கியது. கொஞ்;ச நஞ்சமா சண்டை.?! படிப்பறிவில்லாத அம்மா, இவர் மனைவியின் தலைமயிரை எகிறிப் பிடித்து உருண்டு


கைகள்

 

 பல வருடங்களுக்கு முன் நான் டைட்டான் வாட்சஸ் கம்பெனியின் பெங்களூர் தலைமையகத்தில் வேலை செய்தபோது என்னுடைய  மேனஜராக லெப்டினன்ட் கேனல் ராஜேந்திர குமார் இருந்தார். அவர் கடைசியாக ராணுவத்தில் லே என்கிற உயரமான இடத்தில் பணியாற்றி வாலன்டரி ஓய்வுபெற்று; அதன்பின் டைட்டான் வாட்சஸ் கம்பெனியில் அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரை நான் சமீபத்தில் பெங்களூர் ப்ரிகேட் ரோடில் சந்திக்க நேரிட்டது. என்னைப் பார்த்ததும் பழைய டைட்டான் நாட்களை  நினைவு கூர்ந்து பிறகு இந்திரா நகரில்


சிறப்புப் பரிசு

 

 என்ன மோசமான பையன்! அவனை உதைக்க வேண்டியது தான், மற்றப் பையன்களோடு அவன் சண்டை போடுவது பற்றியும் அதிகம் கேள்விப் படுகிறேன். அவனைக் கூப்பிடு உடனே. “மோகன்! ஏய் மோகன்!” தலைமை ஆசிரியர் தன் பியூனை கூப்பிட்டார். அவர் குரலின் வெடிப்பைக் கேட்டே, தலைமை ஆசிரியர் வெகு கோபமாக இருக்கிறார் என மோகன் புரிந்து கொண்டான். உள்ளே விரைந்து, “என்ன ஐயா?” என்று பணிவுடன் கேட்டான். “சீக்கிரம் போய் ஐந்தாம் வகுப்பு தபனைக் கூட்டி வா” என்று