கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2014

77 கதைகள் கிடைத்துள்ளன.

ஒலி

 

 குட்டைக்கார முனியாண்டி முன் மண்டியிட்டுக் கதறிய சின்னியை முதலில் பார்த்தது பிளாக்காயன்தான். அவள் உச்சக்குரல் எடுத்து ஓலமிட்டு அழுதபோது அவர் சுவர் ஓரமாக காவி வேட்டியைத்தூக்கி ஒன்னுக்கடித்துக்கொண்டிருந்தார். திடுமென தூக்கிப்போட்டதில் பீய்ச்சிய சிறுநீர், குறி தவறி பக்கத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பு நாயின் முகத்தில் பட்டுவிட பதறியடித்துக்கொண்டு ஓடி தலையிலிருந்து தொடங்கி உடல் முழுதும் உலுக்கி சுதாகரித்துக்கொண்டது. அதற்குப்பின் ஓட இடம் இல்லாமல் ஒரு சின்ன முனகலுக்குப் பின் தாடை முழுவதும் தரையில் பதிய அங்கேயே படுத்துக்கொண்டது.


கல் சிலம்பம்

 

 செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு, கூடிவருவது போல கேட்டது. மேற்கில் இருந்து கெண்டைக்கால் அளவு நீரோடு வரும் உப்பாறு, தெற்கில் இருந்து இடுப்பு அளவு நீரோடு வரும் அமராவதியுடன் கலக்கும் கூடுதுறை இது. இவர் கைத்தடியை ஈரமண்ணில் ஊன்றிவிட்டு, ஆற்று நீரில் கால் வைத்தார். நீர் குளிர்ந்துகிடந்தது. சிப்பிலி மீன்கள் கலைந்து ஓடின. நீரை அள்ளி முகத்தில் அடித்தார். உள் ஒடுங்கிய


உமிக்கருக்கு

 

 வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை எழுந்தது. வணங்காமுடிக்குப் புகை மூக்கில் ஏறி இருமல் வந்தது. புகையால் அவனது கண்களில் நீர் கசிந்தது. அவனுக்கு இந்த வேலை புதிது. வணங்காமுடியின் பட்டறை ஓனர் சானாகூணா, தாமரை டாலரின் கல் துவாரங்களை ராவுவதில் மும்முரமாக இருந்தார். பட்டறையின் வாசலைத் தாண்டி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கொக்கு பரமசிவமும், அடுத்ததாக பூனைக் கண்ணும் அமர்ந்திருந்தார்கள். தேவாரம்


நானும் உந்தன் உறவை… நாடி வந்த பறவை!

 

  ”டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?’ காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள லயத்தில் அடித்துக்கொண்டே போனான். ஒருவன் எவனிடமாவது மாட்டிக்கொண்டால், அடுத்தவனுக்கு இயற்கையிலேயே எழும் மகிழ்ச்சியை அந்த ட்ரிங்… ட்ரிங்… ட்ட்ட்ரிங்ங்… ட்ட்ட்ரிங்ங்… ட்ரிங்… ட்ரிங்… உணர்த்தியது. எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. இத்தனைக்கும் டி.ஆரால் தேடப்படுபவன் நான் அல்ல. என் அருகில் அமர்ந்திருக்கும் ரகு. ‘எதுக்குடா டி.ஆர். என்னையத் தேடுறாப்லயாம்?’ – லேசாகச் செருமிக்கொண்டே கேட்டான் ரகு.


பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும்

 

 ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர் அடி தள்ளி நின்னு, ‘என் இனிய பொன் நிலாவே…’ பாட்டை வாசிச்சிருக்கணும். ஆனா, இவை ஏதும் இல்லாமத் திண்ணையில உக்காந்து, கடலையை நங்குநங்குனு அடிச்சு உடைக்கிற மாதிரி சொன்னா… ‘நான் நாதனைக் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன்!’ பச்சக் கடலை வாசம் எப்பவும் அலாதியானது. லேசா மண்வாசனையும் எப்பவோ பெய்த மழையோட வாசனையும் நிறைஞ்சுகிடக்கும் அதுல. அதெல்லாம்


ராமலிங்க வாத்தியார்

 

 ராமலிங்க வாத்தியாருக்குப் பெருமிதமாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று, நான்கு ஆண்டுகள் முன்பு வரை இப்படி ஒரு கிராமமே இந்திய தேசப்படத்துக்குத் தெரியாமலிருந்த நிலை மாறி, இன்றைக்குப் புஞ்சை மேடு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, சுற்றிலும் வேலி போடப்பட்டு, நீல நிற அறிவிப்புப் பலகைகளுடன் காட்சியளித்தது. நிறைய ஜீப்கள், வேன்கள் அந்த இடத்துக்கு வர ஆரம்பித்துவிட்டன. முருகேசுவின் டீக்கடை முன்னால் உள்ளூர்க்காரர்கள் டீயும் பீடியுமாக உட்கார்ந்திருந்தார்கள். ராமலிங்கத்தைப் பார்த்ததும், உட்கார்ந்திருந்த இளவட்டங்கள் பீடியைச் சுண்டியெறிந்துவிட்டு, டீ குடிப்பது மாதிரி பாவ்லா


அம்மா

 

 எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு – பெரிய வேலை, பெரிய படிப்பு – நல்ல வேலை என்ற வழக்கமான தேடல் தளங்களுக்குப் போகாமல், நான், என் ரசனை, என் எதிர்பார்ப்பு; அதுபோலவே மாப்பிள்ளை, அவர் ஆசைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் அலசித் தேடிப்பார்த்து எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நாங்கள் தீவிரமாக நம்பும் விஷயங்கள், எந்தக் காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாத எங்கள் விருப்பங்கள் மற்றும் எங்கள்


இது காதல் இல்லாத கதை!

 

 சென்னை. கோல்ஃப் க்ளப். 80 ஏக்கரில் விரிந்திருந்த அந்தப் பரந்த புல்வெளியில், சிறிய பேட்டரி கார்கள் ஆங்காங்கே மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன. புல்வெளியின் தெற்கு ஓரத்தில் தனது பந்துக்கு ஆங்கிள் பார்த்துக்கொண்டிருந்தான் 27 வயது மிதுன். அந்த மிதுன்… அழகன். அவனுடைய தலைமுடிகள் கழுத்தைத் தாண்டி வளர்ந்து, நெளிநெளியாக தோளில் அழகாகப் படர்ந்திருந்தன. டி-ஷர்ட், த்ரி ஃபோர்த், கையில் ஏதோ கச்சாமுச்சா பேண்டு. அவன் பாக்கெட்டில் இருந்த க்ரெஸ்ஸோ கிராண்ட் மொனாக்கோ செல்போனின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம்


தாத்தா வைத்தியம்

 

 ”பறந்துபோன கிளி திரும்பி வரும்னு இன்னுமாடா நம்பற நீ?’ என்று ஏளனமாகக் கேட்டார் செல்லமுத்து சித்தப்பா. நெருப்பில் வைத்த இரும்புவலைக் கரண்டியின் உள்குழியிலேயே என் கவனம் பதிந்திருந்தது. முதலில் ஒவ்வொரு கம்பியாகச் சிவக்கத் தொடங்கி, பிறகு அந்தக் கரண்டியே நெருப்பில் பூத்த மலர் போல மாறியது. பக்கத்தில் வைத்திருந்த கூடையில் இருந்து உலர்ந்த எருக்கம்பூ ஒன்றை எடுத்து கரண்டியில் போட்டேன். மறுகணமே, அது புகைவிட்டு எரிந்து, சிவந்து, பிறகு சுற்றியும் அடர்த்தியான நெடி பரவ, கருகிச் சுருண்டு


நீரோட்டம்

 

 அவன் ஈரத்தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. புங்க மரத்தடி காலை நிழல் இதமானதாக இருந்தது. என்னைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து வந்தான். அவன் கையில் மூங்கில் குச்சி ஒன்று இருந்தது. ஈரத் தரையைப் பார்த்தேன். செவ்வக வடிவில் கோடிட்டு இருந்தான். ஆள் தாட்டியாகவும், அதற்கேற்ற உயரத்துடனும், மாநிறமாகவும் இருந்தான். இந்தப் பக்கத்து முகஜாடையோ உடல்வாகோ இல்லை. அவனை உள்வாங்கும் முன்பே, ”வணக்கம் சார்” எனக் கை கூப்பினான். நான் பதிலுக்குக் கையை எடுக்காமலேயே, ”யாரைப் பாக்கணும்?”