கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2014

98 கதைகள் கிடைத்துள்ளன.

வீனஸில் இருந்து ஒரு வாடாமல்லி

 

 செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அது. அதிக ஜன நெருக்கடி இல்லாத உச்சிப் பகல் வேளையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருக்கும் ஓட்டலுக்கு வெளியே தூணை சுற்றி கட்டப்படிருக்கும் திண்டில் உட்கார்ந்து கொண்டு, வந்து போகும் எல்லா பஸ்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் அவளை அவ்வப்போது நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார் ஓட்டல் முதலாளி பகீரதன் பிள்ளை. “என்னா வெயில் அடிக்கி மழைக்கான சுவடே இல்ல” என்றவாறே நுழைந்த ரெகுலர் கஸ்டமரான மாடசாமியை கூட அவர் கவனிக்கவில்லை. அதை கவனித்த


இதெல்லாம் கலப்படமில்லீங்க….

 

 சீதாராமனுக்கு ஒரு ராசி. பொதுவாக அவன் நினைப்பது நடக்கும், மற்றவர்கள் மாதிரி கஷ்டப்பட வேண்டியதே இல்லை. மற்றவர்கள் நூறு மடங்கு கஷ்டப்பட்டால் அதை சுலபமாக அவன் செய்து விடுவான். அந்த மாதிரி ஜாதகம். ஆனால், அவன் மூன்று விஷயங்களுக்காக மட்டும் நினைப்பதுமில்லை. முயற்சி செய்வதுமில்லை என்று முடிவு செய்திருந்தான். முதலாவது அவன் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்பவில்லை. அதற்கு காரணம் இருந்தது. அமெரிக்காவில் நிமிடத்திற்கு மூன்று கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பதாக பத்திரிக்கை வாயிலாகப் படித்திருந்தான். இதில்


சிங்கக்குட்டியின் புது தீபாவளி!

 

 ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர் சிங்கக்குட்டி வழிதவறி நாட்டுக்குள் நுழைந்தது. இது தெரியாமல் காட்டில் விலங்குகள் இளவரசரைத் தேடிக் கொண்டிருந்தன. அன்றைக்குத் தீபாவளி. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். நம்ம இளவரசர் சிங்கக் குட்டிக்கோ பட்டாசு சத்தம் பயத்தை உண்டாக்கியது. இதற்கு முன்பு இதுபோன்ற சத்தத்தை அது கேட்டதே இல்லை. அதனால், ஒருவித பயத்துடன் எங்குச் செல்வது


வேதாளம் சொன்ன தேர்தல் கதை

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி அவன் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து , “ மன்னனே ! நீ என்ன வேலை செய்து வெற்றி அடையப் போகிறாய் என்பது எனக்குத் தெரியாது . ஒரு சிலர் மிகவும் கஷ்டப்பட்டுத் தாம் அடைந்ததைக்கூட எளிதில் விட்டு விடுகிறார்கள்


பேச நினைத்தேன் பேசுகிறேன்

 

 (இது முந்தய கதையின் தொடர் ) அன்று சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வழி அனுப்பும் இடத்தில் நிறையப் பேர் ! செல்வியும் மாதவனும் சுங்கச் சோதனை போகுமுன் விடை பெற குடும்பத்தினரிடம் வந்தனர் . பார்வையாளர் பகுதியில் சில கல்லூரிப் பெண்களும் இருந்தார்கள் . ‘அதோ பாருடி ! வாட் எ பேர் ! மேட் பார் ஈச் அதர் ! என்ன அருமையான ஜோடி ! புறப்படும் இடத்தில் இத்தனை பேர் இருந்தும் மாதவனும்


திரை மறைவில் ஓர் ஒளி நட்சத்திரம்

 

 ஆன்மீகப் பார்வையென்ற பூரணமான இலக்கிய வேள்வியில் ஒளி சஞ்சாரமாக சக்தி பயணிக்கத் தொடங்கிய முதல் கால கட்டம். .அப்போது அவளுக்குக் கல்யாணம் கூட ஆகியிருக்கவில்லை. பதினாறு வயசு கூட நிரம்பாத அவளுக்கு வாழ்க்கை குறித்து எந்தப் பிடிப்பும் இல்லாமல், மனசளவில் ஆன்மீக விழிப்புப் பெற்றுத் தேறுகின்ற சுயத் தோன்றுதலான ஒரு தனிமை நிலை இயல்பாகவே அவளுக்கு அமைந்த ஒரு வாழ்க்கை வரம் பெண்ணாகப் பிறந்து விட்டால் உரிய காலத்தில் கல்யாணமாகிப் பிள்ளை குட்டிகள் பெற்றுப் போட்டுக் கொண்டு


அக்கா

 

 தெரு முனையை நெருங்கியதும் மூக்கை பொத்திக்கொண்டேன்.நூறடி தூரத்தில் போடப் பட்டிருந்த துருவேறிய கட்டிலின் மேல் வைத்திருந்தார்கள்.சுண்ணாம்புத் துகள்கள் சிதறிக் கிடந்தன.மலமும் பினாய்லையும் கலந்தது போன்றொரு நாற்றம் குடலைப் பிடுங்கியது. “நீ போய் பாத்துட்டு வந்துரு டா.அங்க இருந்திருந்தா நான் போயிருக்க மாட்டேனா?,’அம்மா கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் தான் இங்கு வந்தேன்.நரைத்த தலைமயிர்.ஒடிசலான கன்னங்கள்.கருப்புத்துணியினை வாயில் திணித்து வைத்தால் போன்று,ஈக்கள் வாயினை அடைத்திருந்தன. தலைக்கருகில் அவளின் ஆஸ்தான பழுப்போரிய பை. நான் மட்டும் தான் அங்கிருக்கிறேன். அனாதைப்பிணம் கேள்விப்பட்டிருக்கிறேன்.சுற்றி ஒருவர்


கனவு நனவானபோது

 

 தனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆனால், அம்மாமாதிரி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வைதேகி. புராண இதிகாச காலங்களில் கணவனை வழிபட்ட பெண்கள் பிற கடவுளை நாட வேண்டி இருந்ததில்லையாம். அப்போது இருந்த ஆண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்களோ, என்னவோ! ஆனால், `பெண்’ என்றாலே ஒரு மாற்று குறைவாக எடைபோடும் அப்பாவின் மெத்தனத்தை, ஆணான தான் எது சொன்னாலும், செய்தாலும் அதை எல்லாப் பெண்களும் ஏற்க வேண்டும் என்று, ஒரு வரையறையே இல்லாது, உணர்ச்சிபூர்வமாக மனைவி


காதலை வேண்டி கரைகின்றேன்

 

 ‘வர்நிகா’ அழகான பெயர் என்று நீ சொன்னபோது அதை நான் ஏற்றுக்கொண்டு சிறு புன்னகை செய்வேன். எனக்கோ அந்த பெயர் அரவே பிடிக்கவில்லை என்பதுதான் நிஜம். இருந்தும் இதுவரை யாரிடமும் வெளிபடுத்தியது கிடையாது. உன்னிடமும் தான் அகிலன். உன்னுடனான சம்பவங்களும் உன்னிடம் நான் சொல்லாத விசயங்களும் இந்த கதையில் நீ படிக்கலாம். அகிலன் நீ இலக்கியம் வாசிப்பவன் என்பது எனக்கு தெரியும். என் நினைவு தெரிந்த நிலையிலிருந்து வெறுத்துப்போன வாழ்க்கையில் பெயரும் இருப்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.


பிரியம்!

 

 கதிரேசனுக்கு எழுபது வயசு பூர்த்தியாகி விட்டது. வயசானவர் என்பதற்கு அடையாளமாக சுகர், பிரஸர், மூட்டு வலி எல்லாம் நிரந்தரமாக வந்து விட்டது. அதனால் முன்பு மாதிரி எதற்கெடுத்தாலும் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போவதை நிறுத்திக் கொண்டார். முடிந்த வரை பூஜை, புனஸ்காரம் என்று ஓய்வாகவே இருந்தார். பேரன், பேத்திகளுக்கு தொடர்ந்தாற் போல் நான்கு நாட்கள் ஸ்கூல் லீவு. கதிரேசனின் ஒரே மகன் அரவிந்தனும், மருமகளும் கேரளாவில் ஆழப்புழை படகு வீட்டிலிருந்து, திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில்