குழந்தையும் தெய்வமும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2024
பார்வையிட்டோர்: 485 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘டேய் ரவி இங்க கொஞ்சம் வாயேன்!’ ரவி சுத்தி சுத்தி பார்த்தான், பஸ் ஸ்டாப்ல அந்த சின்னப் பொண்ண தவிர வேற யாரும் இல்ல. எட்டு வயசு இருக்கும்.

‘என்னையவா கூப்பிட்டெ?’

‘உன்னைத்தாண்டா’. அடிக்கவே போயிட்டான்.

‘சாரிப்பா ப்ளீஸ்! காலைலேயிருந்து ஒரே கன்ஃப்யுஷன். யார எப்படி கூப்பிடுறதுன்னே தெரியலை’

‘இத்தனூண்டு இருந்துகிட்டு டா போட்டா கூப்பிடுறே! ஆமா உங்க அப்பா அம்மா எங்க?’

‘அதுங்களைப்பத்தி பேசாதே. நெனச்சாலே கோபம் கோபமா வருது. இவங்க யாருன்னே தெரியலே. காலேலருந்து என்னோட அப்பா அம்மான்னு சொல்லிகிட்டிருக்காங்க. எனக்கு அதுங்களை பிடிக்கவே இல்லை.’

‘உன்ன எங்க இருந்தும் கடத்திட்டு வந்திட்டாங்களா?’

‘அதுக்கெலலாம் கொஞ்சமாவது தில் வேணும். இவங்கள யாராவது கடத்தாம இருந்தா சரி’.

‘சரி என்ன கிளாஸ் படிக்கிற?’

‘என் கஷ்டகாலம் இன்னிக்கு ஃபோர்த்து ஸ்டாண்டர்ட் போனேன்.’

‘அதுல என்ன கஷ்டம்?’

‘எத்தனை தடவை அத படிக்கிறது?’

‘ஏன் ஃபெயில் ஆயிட்டியா?’

‘நீ வேற! ஸாரி. நான் பி.எஸ்.சி ஸ்டூடண்ட் அல்ஜிப்ரா நல்லா போடுவேன். இன்னிக்கு உட்கார்ந்து மல்டிப்ளிகேஷன் டேபிள் எழுதினேன்! இங்கிலீஷ் டீச்சர்க்கு கிராமர் தெரியலை. தப்பு தப்பா சொல்லிக் கொடுக்கிறாங்க.’

ரவிக்கு சீக்கிரம் பஸ் வந்தா நல்லதுன்னு தோணுச்சு.

‘ஏம்மா இப்படி கொழப்புற?’

‘சரி இந்த ஈக்ஃயுவேஷனுக்கு ஷொலிஸன் எழுது பார்ப்போம்.’ ஒரு பேப்பர எடுத்து நீட்டினாள்.

பார்த்தாலே தல சுத்துச்சு. ‘இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?’

‘அதான் சொல்றனே நான் பி.எஸ்.சி .ஸ்டூடண்ட்.’

கிழிஞ்சது. ‘உனக்கு என்னதான் ப்ராப்ளம்?’

‘நேத்து நைட்டு துங்கப் போற வரைக்கும் எல்லாம் சரியாத்தான் இருந்தது. காலைல எந்திரிக்கும் போது பார்த்தா நான் யார் வீட்டுல படுத்திருக்கேன்னே தெரியலே. கண்ணாடியை பார்த்தா யாரையோ பார்த்த மாதிரி இருக்கு. சின்னப்பொன்னா வேற தெரியுறேன். இப்ப என்ன பண்றதுன்னே தெரியலே.’

‘என் பேரு உனக்கு எப்படி தெரியும்?’

‘எங்க தெருவுலதானே நீ இருக்கே. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணேன். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. என்ன உன்கூட கூட்டிட்டு போயிரேன் ப்ளீஸ்.’

சரி இதுக்கு மேல இங்க நின்னா கத கந்தல்தான். ‘சரி கொஞ்சம் வெயிட் பண்ணு. இப்போ வந்திர்றேன்’ ன்னுட்டு பய எஸ்கேப் ஆயிட்டான்.

அவன் போகவும் அவ முகத்தில ரொம்பவே சந்தோசம் தெரிஞ்சது. பத்து நிமிஷம் கழிச்சு அவளோட அப்பா வந்தார் பைக்குல கூட்டிபோக. ‘ஸாரிடா ரொம்ப வெயிட் பண்ண வச்சிட்டேன்’. கொழந்த தனிய நிக்குதேன்கிற பதட்டம் தெரிஞ்சது.

‘அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. எனக்கு நல்லாவே நேரம் போச்சு.’

– சிறுநனி சிறுகதைத் தொகுப்பு, ஜூலை 2014, வெளியீடு: Freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *