கர்வ பங்கம்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 535 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

எப்படிக் கதை எழுதுவது என்பதை இப்போது தான் கற்றுக்கொண்டேன். பங்கிம் பாபுவையோ ஸர் வால்டர் ஸ்காட்டையோ படித்து ஒன்றும் பிரமாத பலன் ஏற்பட்டுவிடவில்லை. அது யாரால் எப்படி ஏற்பட்டது என்பதை என்னுடைய இந்த முதல் கதையிலேயே எழுதப் போகிறேன். 

    என் தந்தையின் மனப்போக்குப் பலவிதமாயிருக்கும்; இருந்தாலும் பால்ய விவாகத்துக்கு எதிராக அவருக்குத் தனிப்பட்ட கருத்து எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. எனக்குக் கல்யாணம் ஆகும்போது வயசு பதினேழு நிரம்பிப் பதினெட்டு ஆரம்பம். அப்போது நான் கலா சாலையில் மூன்றாம் வருஷம் படித்துக்கொண் டிருந்தேன். என் மனோராஜ்யத்தில் யௌவனத்தின் இளந்தென்றல் வீசியது; கண்ணுக்கு எட்டாத பல திசைகளிலிருந்து அபூர்வமான பல ராகங்களில், பல வகை மணம் கமழ, சந்தம் பல ஒலிக்க, என்னை மயக்கியது அது. இப்போது நினைத்தால்கூட, ‘ஆ ! அந்த நாள் வருமா?’ என்று பெரு மூச்சு விடத் தோன்றுகிறது. 

    என் தாய் அப்போது இல்லை; கிருஹலக்ஷ்மி இல்லாமல் வீடு வெறிச்சென்றிருந்ததால், என் படிப்பு முடியும் வரையில் காத்திராமல் பன்னீரண்டு வயசு பாலிகையான நிர்ஜரிணியை என் ஸஹதர்மிணியாக அப்பா அகத்துக்கு அழைத்து வந்தார். 

    வாசகர்களுக்கு இந்தப் பெயரைத் திடீரென்று அறிவிக்க எனக்குச் சற்றுச் சங்கோசமாகத்தான் இருக் கிறது. ஏனெனில் அவர்களில் அநேகம் பேர் வயசானவர் களாய் இருப்பார்கள்; பள்ளிக்கூட உபாத்தியாயர், முன்சீப், அல்லது சிலபேர் பத்திராசிரியர்களாகவும்’ இருக்கலாம்; என் மாமனார் இம்மாதிரி அதிநூதனமாகப் பெண்ணுக்குப் பெயரிட்டிருப்பதைக் கேட்டு நகைப் பார்கள். ஆனால் அப்போது அறியாத வயசானதால் நான் எதையும் ஆழ்ந்து யோசிப்பதில்லை. விவாகம் நிச்சயமாகும்போது பெண்ணின் பெயரைக் கேட்டதுமே, 

    “செவியினுட் பாய்ந்தது தெளிவாய் மனத்தினுட் பதிந்தென் ஆவியைப் பருகிய தந்தோ!” 

    இப்பொதோ வயசாகிவிட்டது; வக்கீல் தொழிலை வீட்டு முன்சீப் ஆக முயன்றுவருகிறேன்; ஆனால், இந்த ஒரு பெயர் மட்டும் பழையதோர் யாழின் இன்னீசை போல் என் உள்ளத்தினுள் மென்மையாக ஒலிக்கிறது. 

    இளமையின் தொடக்கத்தில் பல சின்னஞ் சிறு இடையீடுகளிடையே காதல் நிகழ்த்துவதைப் போல் இனிமையானது வேறொன்றும் இல்லை. வெட்கம் ஒரு பக்கம் தடைசெய்ய, ஒருபக்கம் வீட்டிலிருப்பவர்களாலும், நமக்கே முன் பின் அநுபவம் இல்லாததாலும் தடை ஏற்படும். இவர்களுக் கிடையே முதல் முதலாகக் காதலர் இருவரும் ரகசியமாய்க் கூடி ஒருவரையொருவர் அறிவதை வைகறையின் வர்ண வைசித்திரியத்துக்கு ஒப்பிடலாம்; பகற்பொழுதில் பளிச்செனக் காணும். வர்ண பேதம் அற்ற ஒளிக்கு அல்ல! 

    இதற்கு இடையூறாக ஆரம்பத்தில் அப்பா விந்திய மலைபோல் குறுக்கே நின்றிருந்தார். என்னை ஹாஸ்டலுக்கு அனுப்பிவீட்டு நாட்டுப் பெண்ணுக்கு வங்காளி கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். கதையின் ஆரம்பம் இந்த இடத்தில்தான். 

    என் மாமனார் தம் பெண்ணுக்கு இம்மாதிரிப் பெயர் வைத்து வீட்டு மட்டும் சும்மா இருந்துவிடவில்லை. அவளது கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருந் தார். அஸ்திவாரம் போட்டு முடித்து விட்டார் அவர்; அதனால் ‘மேகநாதவத காவியம்’ * படிப்பதற்கு ஹேம பாபுவின் உரைகூட அவளுக்குத் தேவையில்லை. 

    ஹாஸ்டலுக்கு வந்தபின் அவளோடு கடித மூலமாக அதிகப் பரிசயம் ஏற்பட்டது. அப்பாவுக்குத் தெரியாமல், புதிதாக உண்டான விரகவேதனையினால், உணர்ச்சி வேகத்துடன் இரண்டொரு கடிதம் அவளுக்கு எழுத லானேன், அங்கிருந்தபடியே. இன்னாருடையது என்று விளங்கும்படி மேற்கோள் குறி போடாதபடி அவைகளில் நம்முடைய புதிய கவிஞர்களிடமிருந்து வடிக்கட்டி எடுத்துப் பல கவிதைகள் இயற்றினேன். ‘அன்புத்தளை யால் அவளைப் பிணைத்துக்கொண்டால் மட்டும் போதாது; நம்மிடத்தில் அவளுக்கு மதிப்பும் இருக்கவேண்டும் என்று அப்போது எண்ணினேன். அது ஏற்பட வேண்டு மானால் வங்க மொழியில் எழுதும் திறமை வேண்டும்; அது சுயமாக எனக்கு வரவில்லை. ஆகையால், ‘மணௌ வஜ்ர ஸமுத் கீர்ணே ஸூத்ரஸ்யேவாஸ்தி மே கதி:’ அதாவது, மற்றவர்கள் கோக்கத் தயாராகத் துளையிட் டிருந்த மணிகளை என் கடிதத்தில் மாலையாகக் கோத்து அனுப்பினேன். ஆனால் இதிலுள்ள மணிகள் பிறருடை யவை ; நூல் மட்டும் என்னுடையது. இதை வெளிப் படையாகச் சொல்வது சரியல்ல என்று எண்ணினேன். நான் என்ன ? காளிதாஸன் கூடத்தான் சொல்ல மாட்டான், உண்மையாக அவன் திருடியிருந்தனானால்! 

    அந்தக் கடிதத்திற்குப் பதில் கிடைத்தது; அது முதல் உரிய இடங்களில் மேற்கோள் குறிபோடத் தவறுவதில்லை நான். புது நாட்டுப் பெண்ணுக்குத் தாய் மொழி நன்றாகத் தெரியும் என்பது தெளிவாகி விட்டது. அவள் கடிதத்தில் எழுத்துப் பீழை இருந்ததா இல்லையா என்று விசாரணை செய்ய நான் தயாராயில்லை; இலக்கிய அறிவும், பாஷா ஞானமும் இராவீட்டால் இத்தகைய கடிதம் எழுத முடியாது என்று மட்டுமே எனக்குச் சொல்லத் தெரியும். 

    மனைவி படித்தவளாயிருந்தால் நல்ல கணவனாயிருப் யவன் இன்பமும் பெருமையும் அடையவேண்டியது நியாயந்தானே!’அப்படி ஒன்றும் எனக்கு ஏற்படவில்லை என்று என் மேலேயே குறைகூறிக் கொள்ள நான் தயாராயில்லை. இருந்தாலும் சிறிது மனசில் என்னவோ மாதிரித்தான் இருந்தது. அது உயர்ந்த எண்ணமாக இரா திருக்கலாம்; ஆனால் ஒரு பெரிய சங்கடம் என்ன வென்றால், என் படிப்புத் திறமையை யெல்லாம் நான் வெளிக் காட்டின வீதம் அந்தப் பெண்ணுக்குப் புரிய வில்லை. நான் பர்க், மெக்காலே முதலானவர்கள் எழுதுகிற ரீதியில் கடிதம் வரைந்து தள்ளினேன். அவளுக்குத் தெரிந்த கொஞ்சநஞ்சம் இங்கிலீஷ் அறிவு இதற்குப் பயன்படுமா? கொசுவைக் கொல்லப் பீரங்கியால் சுட்டால் கொசு அதனால் சாகுமா என்ன? வெடியும் புகையுந்தானே மிஞ்சும்?

    எனக்கு மூன்றுபேர் உயிர் நண்பர்கள். அவர்க ளிடம் மட்டும், என் மனைவியின் கடிதத்தைக் காட்டாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் ஆச்சரியப்பட்டு, “அடே ! இப்படிப்பட்ட பெண்டாட்டி கிடைத்தது உன் அதிருஷ்டந்தாண்டா” என்றார்கள். நான் அவளுக்கேற்ற கணவ னல்ல என்பதுதான் அதற்கு அர்த்தம். 

    நிர்ஜரிணியிடமிருந்து பதில் வருவதற்குமுன் நான் அவளுக்கு எழுதிப்போட்ட இரண்டொரு கடிதத்தில் உள் ளத்தில் இருப்பதையெல்லாம் கொட்டி அளந்திருந்தேன்; அவைகளில் இருந்த எழுத்துப் பிழைகள் இவ்வளவு அவ் வளவல்ல. ஜாக்கிரதையாக எழுதவேண்டுமே என்று அப்போது தோன்றவே இல்லை. அப்படி எழுதினால் எழுத்துப்பிழை அவ்வளவாக ஏற்படுவதில்லை என்பது உண்மைதான்; ஆனால், உள்ளத்திலிருந்து எழும் உணர்ச்சிவெள்ளம் தடைப்பட்டு வீடும். இந்த நிலையில் இனிமேல் கடிதப்போக்கு வரத்தை நிறுத்திக்கொண்டு நேரில் ஸம்பாஷிப்பதே உத்தமம் என்று தோன்றியது. அப்பா ஆபீஸுக்குப் போனதும் நான் காலேஜைவீட்டு ஓடிவந்து வீடுவேன். இதனால் எங்கள் இரண்டு பேர் படிப்பும் கெட்டுக் குட்டிச் சுவராயிற்று. ஆனாலும் உரை யாடுவதில் தேர்ந்து அதற்கு ஈடு செய்து கொண்டோம். இந்த விசாலமான உலகில் எதுவும் ஒரேயடியாகப் பாழாகி விடுவதில்லை. ஒரு வீதத்தில் நஷ்டமானால் மற்றொரு வீதத்தில் லாபம் இருக்கிறது. இந்தப் பேருண்மையை எங்கள் காதல் பேச்சிடையே அடிக்கடி கண்டு தெளிந்தேன்.

    இப்படியிருக்கும்போது, என் மனைவியின் பெரியப்பா. பெண்ணுக்கு விவாகமாயிற்று. நாங்களெல்லோரும் கல்யாணச் சாப்பாட்டைச் சாப்பீட்டு வீட்டு ‘ஹாய்’ என்று இருந்தோம். ஆனால் என் மனைவி தன் தங்கை பேரிலுள்ள ஆசையினால் ஒரு கவிதை கட்டி ரோஜா வர்ணக் காகிதத்தில் சிவப்பு மையால் எழுதி அதை அப் பெண்ணுக்கு அனுப்பினாள். அது எப்படியோ அப்பா கையில் அகப்பட்டுவிட்டது. தம் நாட்டுப்பெண்ணின் கவிதையில் கவிதைத்திறமை, நல்ல கருத்து, அழகு, நோக்கு, பத்ததி, எளிமை – என்ற சாஸ்திர சம்மதமான பல அம்சங்களும் பொருந்தியிருப்பதைக் கண்டு பூரித்துப் போனார். தம்முடைய வயசான நண்பர்களிடம் அதைக் காட்டினார். அவர்களும் புகையிலை போட்டுக்கொண்டே, யிருக்கிறது!” என்றார்கள். அவளுக்குக் கவிதை எழுதத் திறமை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இப்படித் திடீரென்று தன் பெயர் பிரஸித்தியாகிவிடவே வெட்கத்தால் அவள் காது, கன்னம் எல்லாம் சிவந்துவிட்டன. ஆனால் நாளடைவில் அது நீங்கிவிட்டது. முன்னமேயே நான் தான் சொல்லியிருக்கிறேனே : இந்த உலகத்தில் எதுவும் ஒரேயடியாக அழிந்தோ, நீங்கியோ போய்விடாது என்று. அந்த வெட்கம் அவள் கன்னத்தை வீட்டு நீங்கி என் அந்தரங்கத் தின் ஓர் இருண்ட மூலையில் குடிபுகுந்துவிட்டதோ, என்னவோ,யார் கண்டார்கள்? 

    ஆனாலும், அதற்காகக் கணவனுக்கு உள்ள கடமையை நான் மறந்துவிடவில்லை. பக்ஷபாதம் இல்லாத படி என் மனைவி எழுதியவற்றிலுள்ள குற்றங் குறை களைத் திருத்துவதற்குப் பீன் வாங்குவதில்லை நான். அவற்றை அப்பா ஆழ்ந்து கவனியாமலே அவளுக்கு உற்சாக மூட்டுவார். நானோ அப்போதுதான், மிகவும் ஊன்றி ஊன்றித் தப்புக் கண்டுபிடித்து அவர் அளித்த ஊக்கத்தை என்னாலான மட்டும் குன்றச் செய்வேன். 

    ஆங்கிலத்தில் மிக மிகப் பெரியவர்கள் எழுதியவற்றைக் காட்டி அவளை மட்டந்தட்டச் சிறிதும் பின்வாங்குவ தில்லை நான். குயில்மீது ஒரு செய்யுள் இயற்றி யிருந்தாள் அவள். நான் ஷெல்லியின் ‘ஸ்கைலார்க்’, கீட்ஸின் ‘நைட்டிங்கேல்’ என்னும் கவிதைகளை அவளுக்குப் படித்துக்காட்டி ஒரு வீதமாக அவள் வாயை அடக்கிவிட்டேன். ‘நாம் ஆங்கிலம் படிக்கிறோம்’ என்ற தலைக்கிறுக்கில் ஷெல்லி, கீட்ஸ் – இவர்களுக்கிருந்த கௌரவத்தில் எனக்கும் சிறிது பங்கு உண்டு என்று தோன்றிற்று. அதுமுதல் ஆங்கில இலக்கியத்திலிருந்து ரஸமானவற்றைத் தனக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் படி என் மனைவியும் என்னைத் தொந்தரவு செய்ய ஆரம் பித்தாள். நான் மிகவும் இறுமாப்படைந்தேன். அவள் வேண்டுகோளின்படியே ஆங்கில இலக்கியத்தின் மேன் மையை நன்றாக விளக்கினேன்; என் விருப்பம் நிறை லேறிவிட்டது. எவ்விதமோ என் மனைவியின் புகழை மங்கி மறையச் செய்து விட்டேனல்லவா? பெண் பாலாரை மெல்லியலார் என்றுதானே நாம் சொல்லுகிறோம்; அதற்கேற்றபடி அவர்களைச் சற்று நிழல் மறை விலேயே வைத்திருக்க வேண்டியது நம் கடமை அல்லவா? அப்பாவுக்கும் அவர் நண்பர்களுக்கும் இதெல்லாம் தெரிகிறதா? அதனால் நானே இந்தப் பெரிய பொறுப்பைத் தலையில் ஏற்றுக் கொண்டேன். இரவில் திகழும் முழுமதி பகலில் கதிரவனைப்போல் ஒளி வீசினால் முதலில், “ஆஹா! ஆஹா!” என்றுதான் ஆச்சரியப்படுவோம். ஆனால் சற்றுக்கழித்து, ‘இதை எப்படியடா மறைப்பது?’ என்றகவலை ஏற்படுவது இயல்புதானே? 

    என் மனைவி எழுதியவற்றை யெல்லாம் அப்பாவும் மற்றவர்களும் பத்திரிகைகளில் போடவேண்டுமென்றார்கள். நிர்ஜரிணி சிறிது நாணப்பட்டாள் : பெண்களுக்கு இயல்பாயுள்ள அக்குணம் அவளிடமிருந்து நீங்கா தபடி நான் பார்த்துக்கொண்டேன். பத்திரிகையில் அவற்றைப் பிரசுரிக்க நான் வீடவீல்லை; ஆனால் தெரிந்தவர்களிடம் படித்துக் காட்டுவதை மட்டும் தடை. செய்ய என்னால் முடியவில்லை! 

    இதனால் ஏற்பட்ட வீபரீத பலனை மிக விரைவிலேயே நான் அனுபவிக்க நேர்ந்தது. அப்போது நான் வக்கீலாகி விட்டேன்; ஆலிபுரத்திற்குப் போயிருந்தேன், உயில் சம்பந்தமான ஒரு வியாஜ்யத்திற்கு. அதில் பிரதி வாதிக்கு எதிராகப் பலமாய் வழக்காடிக்கொண் டிருந்தேன். உயில் வங்காளியில் எழுதப்பட்டிருந்தது. “வாதிக்கு அநு கூலமாகத்தான் உயில் இருக்கிறதென்பது அதன் பொருளிலிருந்தே நன்றாகப் புலனாகின்றது” என்று சட்ட ரீதியாக நான் நிரூபீத்துக்கொண் டிருந்தேன். அப்போது பிரதி வாதியின் வக்கீல் எழுந்து, “மேதாவியாகிய என் நண்பர் பண்டிதையான தம் பாரியாளிடம் இந்த உயிலுக்கு அர்த்தம் தெரிந்துகொண்டு வந்திருந்தால் இந்த மாதிரியான அற்புத வியாக்கியானம் செய்து தாய் மொழியைக் கொலை பண்ணியிருக்க மாட்டார்” என்றார். 

    மூக்கிலும் கண்ணிலும் நீர் வர அடுப்பிலே நெருப்புப் பற்ற வைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு வீடு எப்படியோ தானாகப் பற்றிக்கொண்டு எரிகிறதே; ; அப்போது நெருப்பை எப்படியடா அணைப்பது என்று திண்டாடுகிறோம். ஒருவன் நல்லது செய்தால் அது கொஞ்சத்தில் பிரபலமாகாது; ஆனால் அவனைப்பற்றி அருவருக்கத்தக்க விஷயம் ஏதாவது இருந்தாலோ அது எல்லார் வாயிலும் அடிபடும். உலைவாயை மூடலாம் ; ஊர் வாயை எப்படி மூடுவது? இந்த உயில் விஷயமும் எங்கும் பரவி வீட்டது. என் மனைவீக்கு இது எட்டப் போகிறதே என்று எனக்கு உள்ளூறத் திகில்தான்; நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நேரவில்லை. எதுவோ, இன்று வரையில் இதைப்பற்றி அவள் ஒரு வார்த்தையும் எடுக்க வில்லை. 

    முன் பின் அறியாத ஒருவரை, ஒருநாள் நான் சந்திக்க நேர்ந்தது; அவரோடு பரிசயம் ஏற்பட்டதும், “தாங்கள் தாம் ஸ்ரீமதி நிர்ஜரிணி தேவியின் கணவரா?” என்று கேட்டார். அதற்கு, “நான் அந்த அம்மாளுடைய கணவனா அல்லவா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல எனக்கு இஷ்டமில்லை ; ஆனால் அந்த அம்மாள் என் மனைவிதான். அதுமட்டும் நிச்சயம்” என்றேன். ‘இன்னவள் புருஷன் இவன்’ என்று பிறரிடம் பெய ரெடுப்பது என் கௌரவத்திற்கு ஏற்றதாக எனக்குப் படவில்லை. 

    உண்மையாகவே இது கௌரவப்படக்கூடிய விஷயம் அல்ல என்பதை இன்னும் தெளிவாக வேறு ஓர் ஆசாமி எனக்கு அறிவுறுத்தி விட்டான். என் மனைவியின் பெரியப்பா பெண்ணுக்கு வீவாகமான விஷயம் வாசகர் களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். அவள் கணவன் மகாமுரடன்; தூர்த்தன். அவளை அவன் படுத்தி வைத்த பாட்டைச் சொல்லி முடியாது. அந்தக் கல்நெஞ்சனுடைய கொடூர நடத்தையைப் பற்றிப் பந்துக்களோடு பேசிக் கொண்டிருந்தேன். இது எப்படியோ பெரியதாகப் போய் அவன் காதுக்கு எட்டிவீட்டது. அது முதற்கொண்டு அவன், “தன்னாலே ஒருவன் பெயரெடுப்பது சிலாக்கிய மான விஷயம்; மாமனாரால் பெயரெடுத்தான் மாப்பிள்ளை என்பது ஒருவிதம். சாஸ்திரத்தில் சொல்லியிருப்பது போல் உத்தமம், மத்தியமம், அதமம் என்று இப்படிப் பல வீதத்தில் பெயரெடுப்பது சகஜம். ஆனால் இதுபோல பெண்டாட்டி பெயரால் கணவன் பிரபலமாகிற யுக்தி இதுவரையில் எந்த மேதாவியின் மூளைக்கும் எட்ட வில்லையே !” என்று என்னைக் குறித்து எல்லோரிடமும் பேசித் திரிகிறான். 

    இப்படி யெல்லாம் ஊரார் பேசிக்கொள்ள ஆரம் பித்தால் என் மனைவிக்கு இயல்பாகவே தலைக்கிறுக்கு ஏற்படவேண்டியதுதானே? முக்கியமாக அப்பாவீடத்தில் ஒரு கெட்ட வழக்கம் உண்டு. நிர்ஜரிணியின் எதிரிலேயே வங்கபாஷையில் எனக்கும் அவளுக்கும் உள்ள ஞானத்தின் ஏற்றத்தாழ்வை எடுத்துச் சொல்லி என்னை ஏளனம் செய்வார். ஒரு நாள் அவர், “ஹரிச், வங்காளியில் எழுதுகிற கடிதங்களில் இருக்கிற எழுத்துப் பிழையை நீ ஒரு தடவை பார்த்துத் திருத்திக் கொடுக்கக் கூடாதா, அம்மா? எனக்கு அவன் ஒரு கடுதாசி எழுதியிருந்தான். அதில் ‘ஜகதிந்திர’ என்பதற்குப் பதில் ‘ஜகதீந்திர’ என்று இகரத்தை நீட்டியிருக்கிறான்” என்றார். 

    இதைக் கேட்டதும் அவள் ஒரு விதமாகப் புன்னகை செய்தாள். நானும் ‘இது தமாஷா தானே’ என்று அவ ளோடு சேர்ந்து சிரித்தேன். ஆனாலும் இப்படிக் கிண்டல் செய்வது சரியென்று எனக்குப் படவில்லை. 

    என் மனைவிக்கு எவ்வளவு வித்தியாகர்வம் இருக்கிற தென்பதை விரைவிலேயே அறிந்துகொண்டேன். அந்தப் பேட்டையில் வாலிபர் சங்கம் ஒன்று இருந்தது. அங்கே ஒருநாள் பிரபல வங்க எழுத்தாளர் ஒருவரைப் பேச அழைத்திருந்தார்கள்; பிரசித்தரான மற்றொருவரையும் தலைவராகப் போட்டிருந்தார்கள். பிரசங்கத்திற்கு முந்தின நாள் இரவு ‘உடம்பு சரியாயில்லை’ என்று சொல்லி வீட்டார் அவர். வேறு வழியில்லாமல் சிறுவர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு தொந்தரவு கொடுத்தார்கள். என்னிடத்தில் அவர்களுக்குத் திடீரென ஏற்பட்ட மதிப் பைக் கண்டு உள்ளம் பூரித்துவிட்டேன்; “அது சரி; பிரசங்கம் எந்த விஷயத்தைப்பற்றி ?” என்று கேட்டேன். 

    “புராதன வங்க இலக்கியமும், நவீன வங்க இலக்கியமும்” என்றார்கள். 

    “அப்படியே ஆகட்டும், இரண்டும் எனக்குச் சரி சமமாகத் தெரியும்” என்றேன். 

    மறுநாள் இளைஞர் கழகத்திற்குப் புறப்படுமுன் சிற் றுண்டி அருந்தி உடை மாற்றிக்கொள்வதற்காகப் பின் கட்டுக்குப் போனேன்; மனைவியைச் சற்று அதட்டினேன்.

    “ஏன்னா! எதற்காக இப்படி அவசரப்படுகிறீர்கள்? மறுபடியும் எங்கேயாவது பெண் பார்க்கப் போகிறீர் களா என்ன ?” என்று கேட்டாள் நிர்ஜரிணி. 

    “ஒரு தடவை போய்ப் பார்த்து வீட்டுத்தான் சிண்டைக் கொடுத்து வீட்டுத் திண்டாடுகிறேனே! இன்னுமா?போதுமே” என்றேன். 

    “அப்படியானால் ஏன் இவ்வளவு தடபுடல்?” 

    நடந்த சங்கதியை என் மனைவியிடம் அதிகப் பெருமையோடு தெரிவித்துக் கொண்டேன்.அதைக் கேட்டு அவள் உற்சாகம் அடையவேண்டுமே ! – அது தான் இல்லை; வருத்தமுற்றவள்போல் முகத்தை வைத் துக்கொண்டு என் கையைப் பீடித்தபடி, “உங்களுக்குப் பைத்தியமா என்ன? வேண்டாம்; அங்கே போகக் கூடாது; சொன்னேன்” என்றாள். 

    நான், “ராஜபுத்திர ஸ்திரீகள் தங்கள் கணவன் மாருக்கு யுத்த ஆடை உடுத்துப் போர்க்களத்திற்கு அனுப்புவார்களாம். வங்காளிப் பெண்கள் கணவனைப் பிரசங்கமேடைக்கு அனுப்புவதற்குக்கூடத் தயங்குவது அழகா ?” என்றேன். 

    “நீங்கள் இங்கிலீஷில் பிரசங்கம் பண்ணுவதாயிருந் தால் எனக்கு ஒரு திகிலும் இல்லை. ஆனால் வேண் டாமே ! அநேகம் பேர் அங்கே வருவார்கள்: உங்களுக்கு. வங்காளியில் பேசி வழக்கமில்லை – கடைசியில்-” 

    முடிவில் என்ன நேரும் என்பதை நானும் யோசிக் காமற் போகவில்லை. அப்போது ராம்மோஹன் ராயரின் பாட்டு ஒன்று என் நினைவுக்கு வந்தது: 

    ‘அந்தப் பயங்கர அந்திம நாள்வரும் ; 
    வந்தவர் பேச நீ மௌனமாய் நிற்பாய்.’ 

    பிரசங்கி தம் சொற்பொழிவை முடித்துவிட்டு நிற்கும்போது தலைவருக்குத் திடீரென ஏழு நாடியும் ஒடுங்கிப்போய் உடம்பு சில்லிட்டு வாய் அடைத்துவீட் டால் என்ன செய்வது? இவற்றை யெல்லாம் தீர ஆலோசித்துப் பார்த்தபோது தேக அசௌக்கியம் என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு ஓடிவிட்ட அந்தத் தலை வரைவிட நான் எந்த விஷயத்தில் அதிகத் தைரியசாலி என்று எனக்கே விளங்கவில்லை!

    அப்போது என் மார்பை என்னவோ செய்யவே நான் அதைப் பிடித்துக்கொண்டே, “நிர்ஜர், என்ன செய்கிறது சொல்லேன்?” என்று கேட்டேன். 

    என் மனைவி, “நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? எனக்கு என்னவோ தலையெல்லாம் கனக்கிறது. ஜூரம் வரும்போல் இருக்கிறது; நீங்கள் இன்றைக்கு என்னை இப்படி விட்டுவிட்டுப் போகக்கூடாது” என்றாள். 

    நான், “அது சரி; உன் மூஞ்சிகூடச் சற்றுச் சிவந்துதான் இருக்கிறது” என்றேன். 

    அவள் முகம் சிவந்தது, பிரசங்க மேடையில் நான் அவமானப்படப் போகிறேன் என்று எண்ணி வெட்கப் பட்டதாலோ அல்லது ஜுரம் வரப்போவதாலோ ; அது எதனால் என்பதைக் குறித்து நான் அப்போது யோசனை செய்யவில்லை. சங்கக் காரியதரிசியிடம் சென்று, “என் மனைவிக்கு உடம்பு சரியாயில்லை” என்று சொல்லி மெது வாகத் தப்பித்துக்கொண்டேன். 

    என் மனைவிக்கும் உடம்பு உடனே குணமாய் வீட் டது என்று சொல்ல வேண்டியதில்லை. உள்ளத்திலே ஒன்று, “எல்லாம் சரி; ஆனால் தாய்மொழியில் உனக்கு எவ்வளவு ஞானம் உண்டு என்பதை உன் மனைவி நன்றாகக் கண்டு கொண்டு வீட்டாள். இது ஒன்றுதான் மனசுக்குத் திருப்தியாயில்லை. தான் பிரமாதமாகப் படித்தவள் என்று அவளுக்குக் கர்வம். ஒருநாள் இல்லா வீட்டால் ஒருநாள் திரைமறைவில் இராப் பள்ளிக் கூடம் வைத்து உனக்கு வங்காளி கற்றுக்கொடுக்கக்கூட ஆரம்பித்து விடுவாள்!” என்றது. 

    நான், “அது சரிதான் ; இப்போதே அவள் கொட்டத்தை அடக்கினால்தான் ஆயிற்று. இல்லாவிட் டால் அவள் தலையைப் பீடிக்க முடியாது” என்று தீர்மானித்துக் கொண்டேன். 

    அன்று இரவே அவளோடு சச்சரவு செய்ய ஆரம் பித்து விட்டேன். அரைகுறைக் கல்வியினால் விளையும் கேட்டைப்பற்றிப் போப் எழுதிய ஒரு காவியத்திலிருந்து அவளுக்கு மேற்கோள் ஒன்று எடுத்துக் காட்டினேன். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதி விடுவதால் ஒன்றும் பயனில்லை ; முக்கியமாக வேண்டியது கருத்துத்தான் என்றும் தெரிவித்தேன். 

    பிறகு சற்றுக் கனைத்து வீட்டு, “ஒரு பாஷையின் அடிப்படையான விஷயங்கள் தெரிந்தால் மட்டும் கருத் துக்கள் மனத்தில் தோன்றி விடுமா? அதற்குச் சுயமாகவே மூளைவேண்டும். அதுதான் பிரதானம்” என் றேன். மூளை எங்கே இருக்கிறது என்பதை நான் அவ ளுக்குத் தெளிவாகக் காட்டா விட்டாலும் நான் சொன்ன தன் அர்த்தம் அவளுக்கு விளங்காமற் போயிராது. 

    “எங்கேயாவது, என்றாவது ஒரு பெண்பிள்ளை நல்ல எழுதியிருக்கிறாள் என்று கேள்விப்பட் டிருக்கிறாயா?” என்றேன். 

    இதைக் கேட்டதும் நிர்ஜரிணி பெண்களுக்கு இயல்” பான வீதண்டாவாதத்தில் இறங்கிவிட்டாள். “பெண் பீள்ளைகளுக்கு எழுத யோக்கியதை இல்லாமற் போவா னேன்? பெண்கள் என்றால் என்ன, அவ்வளவு இழிவா?” என்றாள். 

    “கோபித்துக்கொண்டு என்ன பயன்? திருஷ்டாந்தம் ஏதாவது இருந்தால் காட்டேன்” என்றேன். 

    நிர்ஜரிணி, “உங்களைப்போல் சரித்திரம் கிரித்திரம் படித்திருந்தால் நான் எத்தனையோ திருஷ்டாந்தம் காட்டி யிருப்பேன்” என்றாள். 

    இதற்கப்புறம் ஒருவாறு என் மனம் அமைதி அடைந்தது. ஆனாலும் விவாதம் இதோடு நின்றுவிட வில்லை. அது எப்படி முடிந்தது என்பதைத்தான் பீன் னால் விவரமாகக் கூறப்போகிறேன். 

    ‘உத்தீபனா’ என்ற ஒரு மாதப்பத்திரிகையில் ‘உயர் தரக் கதைக்கு 50 ரூபாய் பரிசு’ என்று வீளம்பரம் செய் திருந்தது. நாங்கள் இருவரும் தனித்தனியே ஒவ்வொரு கதை எழுதி அனுப்புவது, யார் அந்தப் பரிசு பெறக் கொடுத்து வைத்திருக்கிறார்களோ பார்க்கலாம் என்று ஒரு தீர்மானம் செய்துகொண்டோம். 

    இது அன்று இரவு நடந்த விஷயம். மறுநாள் பொழுது விடிந்து மூளை தெளிந்திருந்தபோது எழுதலாமா, வேண்டாமா என்று தயக்கம் ஏற்பட்டது. லும் ‘இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது; எப் படியிருந்தாலும் இதில் ஜயித்தே தீருவது’ என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். இன்னும் இரண்டு மாதம் தவணை இருந்தது. 

    ‘மரபுத்தொடர் அகராதி’ ஒன்று வாங்கினேன். பங்கிம் பாபுவின் நூல்களையும் சேகரித்தேன். ஆனால் அவர் எழுதும் நடை என்னைவிட என் அகத்துக்காரிக்குத் தான் அதிகப் பழக்கமானது. ஆகையால் அதைக் கை வீட்டேன். ஆங்கிலக் கதைப் புத்தகங்களை நிறையப் படிக்க ஆரம்பித்தேன். பல கதைகளிலிருந்து பிய்த்துத் திருடி ஒரு ‘பிளாட்’ கண்டு பிடித்துவிட்டேன். ‘பிளாட்’ என்னவோ மிகவும் அழகாக அமைந்திருந்தது. ஆனால் ஒரு சங்கடம் : அந்த மாதிரிச் சம்பவங்கள் எல்லாம் ஒரு போதும் வங்க சமூகத்தில் நிகழ முடியாது; ஆகவே பண்டைக்காலத்தில் பாஞ்சால நாட்டின் எல்லைப்புறத்தில் கதை நிகழ்வதாகப் புனைந்தேன். அங்கே நடக்கக் கூடி யதையும் நடக்கக் கூடாததையும் இங்கே யார் கண் டார்கள்? தங்கு தடை இல்லாமல் பேனா போகிற போக்கில் வீட்டுவிட்டேன். காந்தர்வ விவாகம், அபார மான வீரதீரச் செயல், துன்பகரமான முடிவு – இப்படி ஒன்றன்பின் ஒன்றாகச் சம்பவங்களைச் சர்க்கஸ் குதிரை காட்டும் சாமர்த்தியங்களைப் போல் என் கதையில் அமைத்துவிட்டேன். 

    இரா வேளைகளில் தூக்கம் என்பதே இல்லை. பகலிலோ சாப்பிடும்போது சாதத்தட்டில் குழம்பையும் குழம்புக் கிண்ணத்தில் சாதத்தையும் எடுத்துப் போட்டுக் கொள்வேன். இதைப் பார்த்து நிர்ஜரிணி, “இப்படி யெல்லாம் பண்ணினால் என் தலையைத் தின்றாற் போலே! 

    நீங்கள் ஒரு கதையும் எழுத வேண்டாம்; நான்தான் தோற்றுப்போய் வீட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். இதில் என்ன வந்தது?” என்று என்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். 

    நான், “இரவும் பகலும் கேவலம் கதை எழுதுவதற் காகவா மண்டையை உடைத்துக்கொண்டு திண்டாடு கிறேன் என்று எண்ணுகிறாய்? அதெல்லாம் ஒன்றும் இல்லை. கக்ஷிக்காரனைப் பற்றித்தான் யோசனை. உன்னைப் போலக் கதையும் கவிதையும் எழுதுவதற்கு எனக்கு அவகாசம் இருந்தால்தான் பரவாயில்லையே ; எங்கே இருக்கிறது?” என்றேன். 

    எப்படியோ ஆங்கிலப் ‘பிளாட்’டையும் ஸம்ஸ்கிருத அகராதியையும் வைத்துக்கொண்டு ஒரு கதையை உருவாக்கிவிட்டேன். 

    ஆனால், ‘பாவம்,நிர்ஜரிணி ஆங்கில இலக்கியமே படிக் காதவள்; அவளுக்குக் கிடைக்கக் கூடிய விஷயமோ சொற்பந்தான். நம்மோடு அவள் போட்டியிட்டது சரியாகுமா?’ என்று நியாய அநியாய விசாரணையில் ஆழ்ந்து விட்டது என் மனம். 

    பின்னுரை 

    எழுதின கதைகளை அனுப்பியாகி விட்டது. வைகாசி மாத இதழில் பரிசு பெற்ற கதை வெளியாகப் போகிறது. எனக்கே பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனக்கு ; ஆனாலும் நாள் நெருங்க நெருங்க மனம் குழம்ப ஆரம்பித்துவிட்டது. 

    வைகாசி மா தம் பிறந்துவிட்டது. ஒருநாள் கோர்ட்டி லிருந்து மிக விரைவாகத் திரும்பி வந்தேன். வந்ததும் ‘உத்தீபனாவின் வைகாசி இதழ் வந்துவிட்டது; என் மனைவி அதை வாங்கிக்கொண்டாள்’ என்று சங்கதி எட்டியது. 

    மெல்ல மெல்லச் சப்தம் செய்யாமல் பின் கட்டிற்குப் போனேன். படுக்கையறையில் எட்டிப் பார்த்தேன். என் மனைவி ஏதோ புஸ்தகம் ஒன்றைக் கொளுத்திக் கொண்டிருந்தாள். அங்கே சுவரிலுள்ள கண்ணாடியில் நிர் ஜரிணியின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் சற்றுமுன் அவள் அழுதிருக்க வேண்டுமென்று தோன்றியது. 

    எனக்கு உள்ளுற உவகைதான்; அதோடு கருணை யும் பிறந்தது – ஐயோ பாவம்! ‘உத்தீபனா’வில் அவள் கதை வெளிவரவில்லை யாக்கும்! இந்த ஸாமான்ய விஷயத்திற்கா இவ்வளவு துக்கம் ? ஏன் இராது? பெண்பிள்ளைகளுக்கு இந்தமாதிரி அற்ப விஷயமே பிரமாதமாகப் பட்டுவீடும்! 

    நான் வந்ததுபோலவே நிச்சப்தமாகத் திரும்பிப் போய் விட்டேன். ‘உத்தீபனா ‘காரியாலயத்திலிருந்து துட்டுக்கொடுத்து ஒரு பீரதி வாங்கி வந்தேன். என் னுடைய கதை வந்திருக்கிறதா என்று அதைத் திறந்து பார்த்தேன். அட்டவணையில் பரிசு பெற்ற கதையின் பெயர் ‘விக்ரம நாராயணன்’ என்று போட்டிருக்கவில்லை; “நாத்தனார்” என்ற தலைப்புடைய கதைதான் அதற்குப் பதிலாக இருந்தது ! அதை எழுதினது யார்? – என்ன இது? இதோ நிர்ஜரிணி என்று இருக்கிறதே! 

    ‘வங்காளத்தில் என் மனைவி ஒருத்திதானா நிர்ஜரிE/ வேறு யாருக்கும் அந்தமாதிரிப் பெயர் இராதா ?’ என்று எண்ணிக்கொண்டே அதைப் பிரித்துக் கதையைப் படித்தேன். நிர்ஜரிணியின் பெரியப்பா பெண் சங்கதி தான் காது, மூக்கு, கண், கை, கால் வைத்து வர்ணிக்கப் பட்டிருந்தது. பார்க்கப் போனால் கேவலம் குடும்ப விஷயம் – எளிய நடை. ஆனாலும் ஒரு சித்திரம்போல் காணப்பட்டது. அதைப் படிக்கும்போதே கண்களில் நீர் நிரம்பியது. இந்த நிர்ஜரிணி என் மனைவி தான் ; அதில் ஸந்தேகமே இல்லை. அப்போது, படுக்கை அறை யில் புஸ்தகம் கொளுத்திய காட்சியும் அவள் விசனம் தோய்ந்த வாடிய முகமும் என் நினைவுக்கு வந்தன. நெடு நேரம் மௌனமாக உட்கார்ந்துகொண்டு அதே. சிந்தனையில் மூழ்கியிருந்தேன். 

    இரவு படுக்கப் போகும்போது என் மனைவியைப் பார்த்து, “நிர்ஜா, நீ கதைகள் எழுதி வைத்திருக்கிறாயே, அந்த நோட்டுப் புத்தகம் எங்கே ?” என்றேன். 

    நிர்ஜரிணி: ஏன்? அது உங்களுக்கு எதற்கு ? நான்: அச்சிடப் போகிறேன். 

    நீர்: ஏளனம் பண்ணினது போதுமே! 

    நான் : நான் விளையாடவில்லை. வாஸ்தவமாகத்தான் அச்சிடக் கொடுக்கப் போகிறேன். 

    நீர்: அது எங்கே போயிற்றோ எனக்குத் தெரியாது.

    நானும் விடாப்பிடியாக, “இல்லை, நிர்ஜர், அதெல்லாம் முடியாது. எங்கே இருக்கிறது? சொல்லு” என்றேன். 

    நிர்: சத்தியமாகச் சொல்லுகிறேன்; அது இப்போது என் கிட்டே இல்லை. 

    நான் : ஏன் ? பின்னே அது என்ன ஆயிற்று ?

    நிர்: அதைக் கொளுத்திவிட்டேன்.

    திடுக்கிட்டு எழுந்தேன். “ஆ! எப்போது ? எப்போது கொளுத்தினாய்?” என்றேன். 

    நிர்: இன்றுதான். எனக்குத் தெரியாதா, நான் எழுதின லக்ஷணம்! அது குப்பைக்கூடைக்கோ சாம்பலாவதற்கோ தான் லாயக்கு! பொம்மனாட்டி எழுதிவிட்டாளே என்று என்னவோ எல்லாரும் புகழ்கிறார்கள். 

    இதற்குப்பின் எவ்வளவு முயன்றும் அவளை ஓர் அக்ஷரம் எழுதும்படிச் செய்யக்கூட என்னால் முடியவில்லை. 

    இங்ஙனம், 

    ஹரிச்சந்திர ஹால்தார் 

    மேலே எழுதியிருக்கிறது முக்காலே மூணுவீசமும் கட்டுக்கதை. என் கணவருக்கு வங்கமொழியில் எழுதும் ஆற்றல் உண்டா இல்லையா என்பது அவர் எழுதியுள்ள நவீனத்தைப் படித்தால் தெரியும். சீச்சீ ! பெண்டாட்டியை வைத்தே இந்த மாதிரி யாராவது கதை கட்டுவார்களா? 

    இப்படிக்கு, 
    ஸ்ரீ நிர்ஜரிணி தேவி 

    பெண்களின் திறமையைப் பற்றி நம் நாட்டிலும் பிற நாட்டிலும் உள்ள சாஸ்திரங்களிலும் பிற நூல் களிலும் அநேக விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. என்னுடைய எழுத்துப்பிழை முதலியவற்றை யார் திருத்தி இருக்கிறார் என்ற விஷயத்தை நான் இங்கே சொல்லப் போவதில்லை. என் மனைவி இதில் எத்தனை வரிகள் எழுதி யிருக்கிறாள் என்பதை நான் சொல்லா வீட்டாலும் அறிஞர்களாகிய வாசகர்கள் தாங்களே ஊகித்துக் கொள்வார்கள். அவள் போட்டுள்ள எழுத்துப் பிழைகளைப் பார்த்ததுமே அவை வேண்டுமென்றே போடப்பட்டன என்பதை அறிந்து கொள்வார்கள்; தன் கணவன் வங்கபாஷையில் எவ்வளவு நிபுணன், அவன் கதை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டவேண்டியே இந்த மாதிரிச் சூழ்ச்சி செய்திருக்கிறாள் அவள். இதனால்தான் காளிதாஸன் ‘ஸ்திரீணாம் அசிக்ஷித படுத்வம்’ (கல்லாமலே பெண்கள் அறிவிற் சிறந்து விளங்குகிறார்கள்) என்று எழுதி யிருக்கிறான். இந்தப் பெண்பாலாரின் இயல்பை அவன் நன்றாக அறிந்திருக் கிறான். இந்த விஷயத்தில் எனக்கும் இப்போதுதான் கண் திறந்தது; வரவர நானும் புரிந்து கொள்ள ஆரம்பித் திருக்கிறேன். நாளைக்கே நானும் காளிதாஸனாகி விடு கிறேன். அவனுக்கும் எனக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமை உண்டு. விவாகமான புதிதில் அந்த மகா கவீ பண்டிதை யான தன் ஸஹதர்மிணிக்கு ஒரு கவிதை எழுதிப் படித் துக் காட்டினானாம். அதில் ‘உஷ்ட்ர’ என்பதில் ரகரத்தை உச்சரிக்காமல் விட்டுவீட்டானாம். இக்காலத்திலும் எழுத் தாளர்கள் பலர் உச்சரிப்பு ஸம்பந்தமான இம்மாதிரிப் பிழைகளைச் செய்கிறார்கள். ஆகையால் எல்லாவற்றை யும் ஆர அமர யோசித்துப் பார்க்கும்போது காளிதாஸன் நாளடைவில் எப்படி ஆனானோ அப்படியே நானும் ஆகலா மென்ற ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. 

    இங்ஙனம், 
    ஸ்ரீஹ:- 

    இந்தக் கதை பிரசுரமானால் நான் என் பிறந்தகத் துக்குப் போய்விடப் போகிறேன். 

    ஸ்ரீமதி நி:- 

    நானும் அப்போதே என் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டுவிடப் போகிறேன். 

    ஸ்ரீஹ:-

    – காரும் கதிரும் (சிறுகதைகள்), ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர், மொழிபெயர்த்தோர்: த.நா.குமாரசுவாமி, த.நா.சேனாதிபதி, முதற் பதிப்பு: 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *