ஒரு கதாசிரியரின் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 1,389 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் கதையைப் படிக்கின்ற யாரும் இது உண்மை என்று நம்பவே மாட்டார்கள். யாரோ ஒரு பைத்தியக்காரன், ‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்; என்ற பழமொழிக்கு ஏற்ப எதையோ கிறுக்குகிறான் என்று தான் நினைப்பார்கள். அப்படி நினைப்பார்களே என்றால் அது நிச்சயமாகத் தவறு இருக்கவே முடியாது. ஆனால், இந்தக் கதை உண்மையாகவும் நடக்கலாம் என்று கூர்ந்து படிப்பவர்கள் உணர்வார்கள்.

பெரும்பாலான பாவலர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் ஏதாவது போட்டால்தான் கற்பனை வரும் என்று எத்தனையோ பேர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அது உண்மையா அல்லது பொய்யா? என்பது அவர் அவர்களுக்கும், அடுத்து இருந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்; வெளிச்சம்.

ஆனால், இந்தக் கதாசிரியர் அப்படிப்பட்டவரில்லை. ஏனென்றால் இவர் கதை எழுத வேண்டும் என்றோ, கவிதை புனைய வேண்டும் என்றோ அவற்றை எல்லாம் தொகுத்து நூலாக்க வேண்டும் என்றோ திட்டமிடவில்லை. ஆனால் அவர் எழுதினார். ஏன்?

உலகில் வாழ்கின்ற மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர். பல நிறங்களில், பல வடிவங்களில் வாழ்கிறார்கள். யார் எப்படி இருந்தாலும் அவர் மனிதர்தானே! மற்றவர்களைப் போலத்தானே அவரையும் மதிக்க வேண்டும்? இந்த உலகம், எல்லோரும் மக்கள்தான்; அவர்கள் யாவரும் சமம்தான் என்று கருதுகிறதா? நடத்துகிறதா?

படித்துப் பட்டம் பெற்றிருந்தால் ஒரு விதம், பெரிய பதவியில் இருந்தால் ஒருவிதம், பணக்காரராக இருந்தால் ஒருவிதம். இப்படி வித விதமாக மக்களைப் பிரித்தும் வகுத்தும் நடத்துவதைப் பார்க்கும்போது. கேட்கும்போது வருத்தமாக இருந்தது.

படித்தவனையும், படிக்காத பாமரனையும் ஒன்றாகக் கருத முடி யுமா? அனைத்து வசதிகளையும் பெற்று அரசன் போல் வாழ்பவனை யும் ஒன்றுமே இல்லாத ஆண்டியையும் சமமாக நடத்த முடியுமா? என்று கேட்டால் சாதாரண மனிதன் முடியாது என்றுதான் கூறுவான். சற்று மேல் நிலையில் நின்று பார்த்தால், சிந்தத்தால் முடியும் என்றும் சொல்லலாம்.

இந்த ஆசிரியர் முடியும் என்று சொல்லக்கூடிய கூட்டத்தைச் சேர்ந் தவர். படித்திருந்தாலும் பணம் பெற்றிருந்தாலும் அவர், அவர் நிலைக்கு வாழட்டும். ஆனால், மக்கள் என்ற இடத்திற்கு வந்துவிட்டால் எல்லோ ரும் ஒன்றுதானே. அதில் வேறுபாடு இல்லையே. எடுத்துக்காட்டாக இறந்துவிட்ட ஒரு படித்த பணக்கார மனிதனையும் இறந்து போன ஒரு, படிக்காத, ஏழை மனிதரையும் ஒன்று புதைக்கிறோம்; அல்லது எரிக்கிறோம். அதில் எந்த வேறுபாடும் இல்லையே.

ஆனால், இந்த வேதாந்தமும் தத்துவமும் யாருக்கு வேண்டும்? யார் ஏற்றுக் கொள்வார்கள்? பேசுவதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறைக்குப் பொருத்தமாக, ஏற்றதாக இருக்குமா? கதாசிரியர் இதையும் எண்ணிப் பார்த்தார்.

சிங்கப்பூர் சிறிய நாடுதான்; குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடுதான். சிங்கப்பூர் மக்கள் ஒரே இனத்தையோ, ஒரே மொழி யையோ கொண்ட நாடல்ல. பல இன மக்களும் தம் தம் மொழியும், கலை, கலாசாரமும், இனமும் முன்னேற வேண்டும்; பிறர் புகழத் திகழ வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.

ஆனால், கதாசிரியரின் இனமோ எந்த முயற்சியும், எந்த சிந்தனை யும் இன்றி “ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்; அவன் ஏனோ மரம் போல் வளர்ந்துவிட்டான்” என்று எண்ணத்தக்க அளவில் வாழ்ந்துவரு கிறது. இதைப் பற்றி யோசித்தார். சென்ற இடங்களில் எல்லாம் காதுக ளையும், கண்களையும் கூர்மையாக்கினார். தம் எண்ணத்தைப் பறக்க விட்டார் இன்று, நேற்றல்ல. அவர் இளமைப் பருவத்திலேயே கவ னித்து வளர்ந்து வந்தார்.

தன் இனத்திற்கு அறிவும், ஆற்றலும் இருக்கிறது; கற்பனையும் கருத்தும் இருக்கிறது; உழைப்பும், உயர்வும் இருக்கிறது; வீரமும் விவேகமும் இருக்கிறது; துணிவும் பணிவும் இருக்கிறது. இத்தனை பண்புகள் ஏராளமிருந்தும் மற்ற இனம் மதிக்கும் வண்ணம் வாழாத நிலை ஏன்?

ஒற்றுமையும், உண்மையும் ஒரு சிறிதும் இல்லாத காரணத்தால் அத்தனை பெருமைகளையும் அழித்து ஒழித்து விட்டு அவதிப்படுகிறார் கள் என்பதை அறிந்தார். இந்தப் பொல்லாத குணம் இல்லாது போக எழுதுகோலை எடுத்து எண்ணத்தில் எழுந்ததை எழுத்துக்களாக்கினார்.

அவரின் சில கருத்துக்களும் ‘கற்பனைகளுமே ஏற்றுக் கொள்ளப் பட்டன. ஏனையன எங்கோ சென்று மறைந்தன. காரணம் கதாசிரியரின் கற்பனைக்கு மக்கள் பக்குவம் பெறவில்லையா? அல்லது மக்களின் போக்குக்கு ஒத்துவரவில்லையா?

சமத்துவம் பேசிய சான்றோர்களில் சிலர் ஜாதி குணத்திற்கு அடிமையாகி வாழ்வதைக் கண்டார்; மூடப்பழக்கங்கள் முற்றாக நீங்க வேண்டும் என்று முழங்கிய பலர் மனைவியின் பின்னால் நின்றுகொண்டு அறிவுக்கொவ்வாத அப்பழக்கங்களைக் கையாண்டனர்.

திரைமறைவில் நடந்த இந்த வேண்டாத விளைவுகளை விளக்க மாக எழுதினார். விவரித்தும் எழுதினார். மொழியின் மீதும், இனத்தின் மீதம் பற்றும் மதிப்பும் கொள்ள வேண்டும் என்று பாரதிதாசனின் புது மைக் கருத்துக்களைப் புகுத்தி எழுதினார். படித்து சிலர் பக்குவம் பெற்றனர்.

எந்தக் கருத்தை, கொள்கையை மற்றவர்கள் பின்பற்றி மொழிக் கும், இனத்திற்கும் பெருமையும் பேரும் சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அந்த அடிப்படையில் அவர் வாழ்ந்து வந்தார்.

இல்லறம் என்னும் நல்லறத்தில் இணைகின்ற இளம் தம்பதிகள், பல்லோர் முன்னிலையில் புரியாத மொழியில் புகன்றதைக் கேட்டு தலையாட்டும் மாடு போல் தம்பதிகள் ஆகின்றனர். ஆனால், கதாசிரியர் அறிவுக்குந்த நல்லறிவுகளை புரிந்த மொழியில் சொல்லக்கேட்டு தெளிந்த அறிவோடு மனதிற்குப் பிடித்த மங்கையைக் கைப்பிடித்தார்.

வீடு என்று இருந்தால் வாசல் என்று இருந்து ஆக வேண்டும். கதாசிரியர் வீட்டுக்கு மட்டும் வாசல் இல்லாது இருக்க முடியுமா? இவர் வாழ்க்கையிலும் பல கசப்புகள் வந்திருக்கின்றன. மன வருத்தங்கள் மலர்ந்திருக்கின்றன. ஆனால், எத்தனை சிக்கல்கள் எழுந்தபோதும் வள்ளுவன் காட்டிய வழியைப் பின் பற்றியதால் அத்தனை சிக்கல்களும் அறுந்து ஒழிந்தன. அதனால்,

”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’

என்ற நிலையில் இல்லறம் நல்லறமாக ஒளி வீசியது.

”நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற கருத்து நிலவிய காலத்தில் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுப் பேணி வளர்த்து வந்தார். மக்களின் வளர்ச்சியில் மன நிறைவு கொண்டு,

“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட் பேறு அல்ல பிற”

என்ற கருத்தில் மன நிறைவு அடைந்துள்ளார்.

‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்பார்கள். அந்த அடிப்படையில் கதாசிரியர் எல்லாப் பிள் ளைகளும் இனிதே வளர வேண்டும்; வாழ வேண்டும். பிள்ளைகளின் வளமான வாழ்வுக்குப் பலமான அடிப்படை கல்வியே ஆகும் என்று எழுதினார். ஆனால், எத்தனையோ பெற்றோர்கள் கல்வியின் அருமை தெரியாது, அதன் பெருமை புரியாது. ‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்று வான்’ என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.

‘தலைவிதி’ என்று சொல்லிக் கொண்டு எவ்வித முயற்சியும் செய் யாது வாளா இருக்கின்ற பெற்றோர்களைக் கண்டு மனம் வருந்தி அவர்க ளிடத்தில் பேசிப் பார்த்தார். முடிவு வேதனையாக இருந்தது.

இவர் எல்லாம் தெரிந்தவர் என்ற நினைப்பில் எங்களுக்கெல்லாம் புத்தி சொல்ல வந்திட்டார். அவருடைய கடமைகளை அவர் ஒழுங்காகச் செய்கிறாரா என்று தெரியவில்லை. மற்றவர்களுக்குப் புத்தி சொல்கிறார். இப்படிப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

‘சொந்தப் புத்தியும் இல்லை; சொல் புத்தியும் கேட்பப்தில்லை’ என்ன சமுதாயம் இது? தெரியாத ஒன்றைச் சொன்னால் நல்லதென்றால் எடுத்துக் கொள்ள வேண்டும்; கெட்டதென்றால் விட்டுவிட வேண்டும். தெரியாத ஒன்றைச் சொல்லியதற்கு நன்றி சொல்ல வேண்டாம். குறை சொல்லாமல் இருக்கக் கூடாதா?

அப்படி எல்லாம் தெரிந்த இவர்கள் செய்த சாதனை என்ன? செய்த சேவைதான் என்ன? விண்ணை முட்டும் கட்டிடங்கள் கண்ணைக் கவர்ந்து நிற்கின்றன. அவற்றில் எத்தனை கட்டிடங்கள் இவருக்குச் சொந்தம்? இவர்களின் சமுதாயத்திற்குச் சொந்தம்? வீராப்புப் பேச்சுக் கும் பழம் பெருமை பேசுவதற்கும் இவர்களைவிட உலகில் வேறு எவ ரும் இலர் என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு எண்ணங்கள்” எழுந்தபோது எங்கிருந்தோ மின்னல் போல் உண்மை ஒன்று எழுந்தது. தலைவனில்லா கப்பல் கரை சேருமா? தளபதி இல்லா படை வெற்றிபெற முடியுமா? அந்நிலையில் சமுதாயம் இருக்கும்போது தலைநிமிர்ந்து இயங்க முடியுமா?

இந்த இழிநிலை மாற வேண்டும். ஏற்றமிகு சமுதாயம் மலர வேண் டும். இதற்கோர் வழி எழுதுவதேயாகும் என்று முடிவெடுத்த கதாசிரியர் எழுதினார்; எழுதினார்; எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுதிய, எழு துகின்ற அவரின் எழுத்துக்கள் எங்கே?

யார் படிக்க வேண்டும்? எவர் சிந்திக்க வேண்டும்? ஏன் அவர்கள் படிக்க வேண்டும்? அவர்கள் படிப்பதினால் விளையும் பயனென்ன? அவர்கள் படிக்காததினால் ஏற்படும் பாதகம் யாது? யாருக்காக அவர் எழுதுகிறார்? அவர்களுக்குச் சென்று அடைகிறதா? என்று கேள்விமேல் கேள்விகளைக் கேட்கலாம். பதில் பாதகம் தான்.

படித்த பகுத்தறிவாளர்களில் சிலர் மொழியே விழி என்றும், தாய் மொழி படிக்காதவன் தருதலை என்றும், தாய்மொழியை கற்காதவன் பெற்ற தாயை மதிக்காதவன் என்றும், கண்களிரண்டையும் விற்று ஓவி யம் வாங்குகின்ற கசடனுக்கு ஒப்பாவான்; என்றும் அன்னை மொழியை அறி யாத அப்பாவி என்றம் மேடையில் தொண்டை கிழிய கத்துகிறார்கள்; முழங்குகிறார்கள்.

மேடையை விட்டுக் கீழே வந்ததும், “வேர் இஸ் மை கார்?” என்பார்கள். வீட்டுக்குச் சென்றதும் “வேர் இஸ் யுவர் மம்?” என்பார்கள். இந்த நல்ல நடிகர்களை நம்புகின்ற சில அப்பாவிகள் அவர்களுக்காக ஆடாத ஆட்டம் ஆடுவார்கள்; பாடாத பாட்டுகளை எல்லாம் பாடுவார்கள். கதாசிரியர் இந்த உண்மைகளை எல்லாம் வெளிக்கொணர எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை, ஓய்வான நாள். ஆனால் அந்தக் கதாசி ரியருக்கு அன்று மறக்க முடியாத நாள். இதயத்தில் இடம் பெற்ற இனிய நாள். மனதிலிருந்து மறக்க முடியாத. நீக்கமுடியாத, அகற்ற முடியாத அரிய நாட்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கலாம். அந்த நாள் (19.11.89) அற்புதங்கள் நிகழவில்லை. ஆச்சரியங்கள் நடக்கவில்லை. ஆயினும்

மலேசிய எழுத்தாளர்கள் பண்போடு வந்து அன்போடு ஆக்கப்பூர் வமான கருத்தோட்டங்களைப் பரிமாறிக் கொண்டனர். எண்ணங்களைத் தொகுத்து நூல் வண்ணங்களாக்கி அந்நூல்களை மூலை முடுக்கெல்லாம் கொடுத்து ஏழை எளியோர்களை எல்லாம் எடுத்துப்படிக்க வைக்க வேண்டும். அவர்கள் படித்துப் பயன்பெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு எழுத்தாளனும் தன் எழுதுகோலை ஈட்டியாக, பீரங்கியாக, ஜப்பானின் நாகசாகி நகரை நாசமாக்கிய அணுகுண்டாக மாற்ற வேண்டும் என்று முழங்கினார்கள். அப்போதுகூட கதாசிரியரின் நெஞ்சம் நெகிழவில்லை.

ஒவ்வொர் எழுத்தாளரினின் பெயரைக் கூறி அவர் எழுந்ததும் அவர் உடலைப் பற்றி, நிறத்தைப் பற்றி, தலையைப் பற்றி, தலைக்குள் இருக்கும் சரக்கைப் பற்றி, அவர் பின்னணியைப் பற்றி, அவரின் தொழி லைப் பற்றி, அவரின் எண்ணங்களைப் பற்றி, கொள்கையைப் பற்றி, குறிக்கோளைப் பற்றி, அவர் இதுவரை செய்த சாதனைகளைப் பற்றி, இப்படியாகக் கூடை கூடையாகக் கொட்டினார்கள். இல்லை! இல்லை! சாக்கு சாக்காக அளந்தார்கள்.

கேட்பதற்கும், பார்ப்பதற்கும் உண்மையிலேயே இனிமையாக, மிகச் சுலபமாக இருந்தது. மகிழ்ச்சி மிகுந்த போது கைதட்டி ஆரவாரம் செய்தனர். நந்தவனத்தில் முதன்முதலில் எதிர்பாராமல் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொண்டால், அவர்களின் மனநிலை, அவர்களின் உணர்ச்சித்துடிப்புக்கள், அவர்களின் எண்ண எழுச்சிகள், இதயத் துடிப்பு எப்படி இருக்குமோ? அப்படித்தான் மலேசிய, சிங்கப்பூர் எழுத் தாளர்கள் சந்தித்தபோது இருந்தனர்.

என் வாழ்நாளில் இன்றுதான் முழு இன்பம் பெறுகிறேன்; என்றார் ஒருவர். இதுவரை நான் கடந்து வந்த நாட்களிலும், இனிமேல் கடக்கப் போகும் நாட்களிலும் இன்றைய தினத்தைப் போல மகிழ்வு பெற்ற தில்லை; மனம் நிறைந்ததில்லை; என்றார் பிறிதொருவர். இறைவனை வணங்குவதே ஈடில்லா இன்பம், என்பார்கள். அந்த இன்பத்தைவிட அளவற்ற பேரின்பம் இப்போது பெறுகிறேன் என்றார் அடுத்தவர். இவ் வாறு ஒவ்வொருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.

எங்கிருந்தோ ஓசை கேட்டது. கதாசிரியர் காதுகளைக் கூர்மையாக் கிக் கொண்டு கவனித்தார். ‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்பார்கள். அதைப் போல கதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி நாம் ஏடுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதைப் படித்துப் பார்க்கின்ற கற்றவர் கள் பேசிப் பேசித் தாங்களும் கெடுகின்றனர்; மற்றவர்களையும் கெடுக்கின்றனர்…

அவர் முடிப்பதற்குள் இடையில் ஒருவர் எழுந்து, ‘அப்படி என்றால் நாம் எழுதக்கூடாது; என்கிறீரா?’ என்று கேட்டுவிட்டுச் சற்றுக் கோபத்தோடு அமர்ந்தார்.

ஆத்திரம் வேண்டாம்; அன்பரே. அமைதியாகக் கேளுங்கள். வள் ளுவன் சொல்லாத கருத்தையா நீரும், நானும் சொல்லி விட்டோம்? பாவேந்தர் பாடாத பாட்டையா நாமெல்லாம் பாடி விட்டோம்? இவ்வாறு பற்பல புலவர்கள் பாடிச் சென்ற பின்னரும் நாம் பண்படவில் லையே ஏன்? உலகம் எதிர்பார்க்கும் உயர்ந்த நிலைக்குச் செல்லவில்லையே ஏன்?

ஏன்? என்று எங்களைக் கேட்டால் எப்படி? சொல்லவந்த கருத்தைச் சுருக்கமாகச் சொன்னால்தானே தெரியும் என்று எரிந்து விழுந்து விட்டு உட்கார்ந்தார்.

கர்வம் கொள்ளாமல் சற்று காது கொடுத்துக் கேளுங்கள். சொல்லி வருகிறேன்; சுருக்கமாக முடிக்கிறேன் என்றவர், கல்வியில் சிறக்க வேண்டும் என்கிறோம். நாம் சிறிதேனும் கற்று உயர்ந்தோமா? பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிறோம். எந்தக் கவிஞனாவது பணக்காரன் ஆனதுண்டோ?

‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’ என்கிறோம். எத்தனை எழுத்தாளர்கள் கைத்தொழிலைக் கற்று வருகிறோம்? வியாபாரம், வாணிகம், வர்த்தகம் முதலியவற்றில் ஈடுபடு என்கிறோம். நாம் எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா?

ஜாதிகள் இல்லை என்கிறோம். நம் பிள்ளைகளுக்கோ, உறவினர்களுக்கோ நம் ஜாதியை விட்டு அடுத்த ஜாதியில் பெண் எடுக்கிறோமா? அல்லது கொடுக்கிறோமா? சமத்துவம் வேண்டும் என்கிறோம். யாராவது பணம் கொடுத்துவிட்டால், அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வள்ளல் என்றும் பாரி எனறும் புகழ்ந்து அவரை எவரெஸ்டு சிகரத்திற்கு அனுப்பி விடுகிறோம். அதேவேளையில் நம்மை விட வசதி குறைந்தவரைக் கீழ் நோக்கிப் பார்க்கிறோம். இப்படி வரிசையாக அடுக்கலாம்.

‘உனக்காடி சொன்னேன்; ஊருக்கல்லவோ சொன்னேன்;’ என்ற கதைக்கேட்ப நாம் வாழ்ந்தால், நாமும், நமது சமுதாயமும், நமது இனமும் எந்தக் காலத்திலும் முன்னேறாது.

மனிதன் நூற்றுக்கு நூறு விழுக்காடு தவறு செய்யாமல் வாழ முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளையில் நாம் எந்தக் கருத்தை வலியுறுத்துகிறோமோ அந்தக் கருத்திற்கு ஏற்ப வாழ வேண்டும்; அப்படி வாழ முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்படி வாழ ஒவ்வொரு எழுத்தாளனும் சபதம் எடுத்துக் கொண்டால் நமது சமுதாயம் சிறந்து விளங்கும். அப்போதுதான் சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களின் சந்திப்பு பொன்னேட்டில் பொறிக்கப்படும்; என்று சொல்லி முடித்தபோது,

அத்தனை எழுத்தாளர்களும் அவைதனில் எழுந்து, மிக அடக்கத்துடன், ‘என் மீதல்ல, என் தாய் மீதல்ல, தமிழ் மீது ஆணையாகக் கூறுகிறேன்; என் உயிரினும் மேலான இந்த எழுதுகோலின் மீது ஆணை யாகக் கூறுகிறேன்; இந்த உடலில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும்வரை சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டுகிறேன். அப்படிச் செயல்படும் போதுதான் வாளினும் கூரான இந்தப் பேனாவைப் பயன்படுத்துவேன். இதுவே எனது முடிந்த முடிவாகும். ஆகவே இன்று நாம் எடுக்கும் இந்த அற்புதமான முடிவு நம் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான எதிர் காலத்தை ஏற்படுத்தும்; என்று எல்லோரும் உறுதிமொழி கூறியபோது கதாசிரியன் மனம் களிப்படைந்தது.

‘தமிழர்களைச் சோடா புட்டிக்கு ஒப்பிட்டுப் பேசக் கேட்டிருக்கிறேன். வீரமும் உணர்ச்சியும் வீறிட்டு எழும்போது வானத்தை வில்லாக வளைப்பேன் என்பார்கள். அப்படிப்பட்ட உறுதிமொழியா இது? அல்லது சொல்லிய வண்ணம் செய்யப்படும் உண்மை மொழியா?’ என்ற ஐயம் எங்கிருந்தோ வந்து ஏனோ கதாசிரியரின் கருத்தைக் குழப்பியது.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *