கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 371 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘காமத்தை அடக்கி, ஆன்மாவைத் தொல்பரமாகிய பரமாத்மாவுடன் ஐக்கியப்படுத்துவதுதான் மேலான நிலை’ 

அவர் ஒரு மகான். அவருக்கு ஒரு மகன். 

மகன் கன்னி ஒருத்திமீது காதல் வசப்பட்டான். அவ் விள வயதில், தன் மகன் மாம்ஸ இச்சைகளுக்கு மசிந்து கொடுப்பது பலவீனச் செயலென மகானுக்குத் தோன்றிற்று. 

‘மகனே! ஆசை மிக்கதானது காமம், புலன்வழி புகுந்து மனதை மயக்குவது. ஐம்பொறிகளையும் அடக்கி, புல்லிய காமத்தை ஒடுக்குக. காமம் ஞானத்தின் விரோதி. நுகருமிடத்து காமம் இனிக்கிறது. ஆனால், அறுவடை துன்பமே துன்பம்! இந்திரியங்களும், மனமும், புத்தியும் காமத்தின் இருப்பிடம் எனப்படுகின்றன. இதன் வழி அறிவை மறைத்து, பல்வகையாலும் காமம் மனிதனை மயக்கம் அடையச் செய்கின்றது. எனவே, நீ இந்திரியங்களை அடக்கிக் காமத்தைத் துரத்துவாயாக!’ என மகான் மகனுக்கு உபதேசித் தருளினார். 

மகன் மௌனத்தில் ஆழ்ந்தான். பின்னர், தியானத்தில் ஒன்றினான். 

நிஷ்டை கலைந்ததும் கோவணாண்டியனாகப் புறப்பட் டான். மலை உச்சி ஒன்றினை அடைந்தான். அங்குத் தவ வாழ்க்கையை மேற்கொண்டான். 

பாசம் மகானை உலைதல் செய்தது. தமது உபதேசங் கேட்டு, மகன் துறவு வாழ்க்கை பூணுவான் என மகான் எதிர்பார்த்தவரல்லர். மகனின் கோபத்தைக் கல்லியெறிந்து, அவனை வீட்டிற்கு அழைத்துவரும் ஆசை அவருடைய உள்ளத்தில் முற்றியது. 

மலையின் உச்சிக்கு ஏறினார். இரத்த உறவின் பாசம் முழுவதையும் குரலிலே குழைத்து, ‘மகனே!’ என அழைத்தார். 

மகன் விழி அலர்த்திப் பார்த்தான். தந்தை தன் முன்னால் மௌனியாகவே நிற்பதைக் கண்டான். 

அவரை அமரும்படி பணித்தான். மகனிடம் அதீத சக்தியொன்று குடிகொண்டிருப்பதாக மகானுக்குத் தோன்றியது. மகனின் பாத நிழலில் மகான் அமர்ந்தார். 

‘உமது உபதேசத்தைக் கேட்டுத் தெளிவடைந்து, இங்கு வந்து தவமியற்றலானேன். அப்பொழுது, என் சித்தத்தில் மகா உண்மையொன்று பிரகாசமாயிற்று….’ 

‘அதை எனக்கு உபதேசிப்பாயா?’ என மகான் பயபக்தியுடன் கேட்டார். 

‘என் சீடனுக்கே அதனை உபதேசிப்பேன்….’ 

மகான் தன் மகனையே உரிய முறைப்படி குருவாக வரித்தார்

‘தன் உபதேசங்களின்படி நடந்து காட்டுபவன்தானே மகான்?’-மகனின் கேள்வி. 

‘ஆமாம்.’ 

‘காமத்தை அடக்கி ஆன்மாவைத் தொல்பரமாகிய பரமாத்மாவுடன் ஐக்கியப்படுத்துவதுதானே மேலான நிலை?’ 

‘நிச்சயமாக!’-தன் மகன் ஆழ்ந்த மதத் தத்துவங்கள் பேசுவதைக் கேட்டு மகான் புளகாங்கிதம் அடைந்தார். 

‘நீர் உத்து காமத்தை உரிய முறைப்படி கட்டுப்படுத்தி யிருந்தீரானால், நான் பிறந்திருக்கமாட்டேன். அப்படி நீர் உமது நாமத்தை அடக்காருெந்தும், நீர் எப்படி மகானானீர்? 

மகான் ஒரு கணம் யோசித்தார். 

அடுத்த கணம், ‘நீயே அப்பன் சுவாமி! -மகன் அடிகள் முன்னர் மகான் அடி வீழ்ந்தார். 

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *