ஸ்ட்ரிப் க்ளப்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,570 
 
 

“மச்சி ஆஸ்டின் போகும் போது கண்டிப்பா ஸ்ட்ரிப் க்ளப் போறோம்”

“வித் அவுட்ல ஆடுவாங்களா?”

“அதே அதே”

“துணியில்லாம ஆடினா அதுல என்னடா த்ரில்?”

“த்ரில் இல்லையா? வேற எதுக்கு ஸ்ட்ரிப் க்ளப் நடத்திட்டு இருக்காங்க? சமூக சேவைக்கா?”

“சரி விடு. பார்த்துடலாம்”

“செலவு?”

“ஆஸ்டின்ல ரிக்ஸ்ன்னு ஒரு க்ளப் இருக்கு. பத்து டாலர்தானாம்”

“சூப்பர்”

“ஓகே…வீட்டுக்கு கிளம்பறேன்”

“ஏங்க, அமெரிக்கா போனா எத்தனை நாள் கழிச்சு வருவீங்க”

“ஒரு மாசம் ஆகும்ன்னு நினைக்கறேன். ப்ராஜக்ட் மேனஜர் அப்படித்தான் சொன்னான்”

“சாப்பாட்டுக்கு எல்லாம் ஒண்ணும் பிரச்சினை இருக்காதாங்க?”

“அமெரிக்காவுல எங்க போனாலும் நம்ம ஊர்க்காரங்கதான். கொஞ்ச நாள்ல அமெரிக்கபாளையம்ன்னு பேர் மாத்தினாக்கூட மாத்திடுவாங்க”

“எங்களுக்கு எல்லாம் என்ன வாங்கிட்டு வருவீங்க”

“அங்க கிடைக்குற ஐட்டம் எல்லாமே சீனா தயாரிப்புதானாம். இங்கேயே வாங்கிக்கலாம்”

“என்ன இருந்தாலும் அங்க வாங்குற மாதிரி இருக்குமாங்க”

“ம்ம்ம் பார்க்கலாம்”

“ஃபோன் வைப்ரேட்டர் மோட்ல இருக்குமாட்ட..அதுருது பாருங்க”

“சொல்லு மச்சி….என்ன இந்த நேரத்துல?”

“ஸ்டிரிப் க்ளப் பத்தி நெட்ல தேடினேன். செம இண்டரஸ்டிங். காசு சேர்த்து கொடுத்தா நம்ம மடி மேல உக்காந்து ஆடுவாங்களாமாடா”

“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…காலையில பேசிக்கலாம்…இப்போ வீட்ல இருக்கேன்”

“ஓகே மச்சி…குட் நைட்”

“என்ன மச்சி நேத்து நேரங்கெட்ட நேரத்துல போன் பண்ணியிருந்த.. அதிதீவிர தேடுதல் வேட்டையா?”

“ஆமாம் தூக்கமே இல்லை”

“பாஸ்போர்ட் கொண்டு வந்துட்டியா இன்னைக்கு விசாவுக்கு அனுப்பறதா சொன்னாங்க”

“யெஸ்”

“மேனேஜரை பார்த்துட்டு ட்ராவல் டிபார்ட்மெண்ட்டுக்கு போலாம்”

“ஹேய்…ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் இருக்கீங்களா? நானே உங்ககிட்ட வரலாம்ன்னு இருந்தேன். ஒரு அப்டேட். நீங்க இந்த மாசம் ஸ்டேட்ஸ் போகலை. இப்போத்தான் மெயில் வந்துச்சு”

“என்னாச்சு?”

“ரிஷஸன் வரலாம்ன்னு க்ளையண்ட் சைட்ல பயப்படுறாங்க….மூணு மாசம் கழிச்சு பார்க்கலாமாம்..பை த வே…நீங்க ரெண்டு பேருமே இதுவரைக்கும் ஃபாரின் ட்ரிப் போனதில்லையா?”

“ஆமா…போனதில்லை”

“ஓ..பிட்டி….ஐ ம் ஸாரி”

“வேற ஏதாச்சும் ஆப்ஷன் இருக்கா? நாங்க போறதுக்கு”

“ஓயெஸ்…நீங்க சொந்தமா டிக்கெட் எடுத்தா போகலாம்…ஹாஹா….ஸாரி, உங்க ஃபீலிங் புரிஞ்சுக்க முடியுது. பட் நோ அதர் ஆப்ஷன்”

”………….”

“என்ன மச்சி யுஎஸ் போகலைன்னு வருத்தமா?”

“இல்லை..ஸ்ட்ரிப் க்ளப் போகலைன்னு”

“விடு மச்சி. சேலம் பக்கம் ஜலகண்டாபுரத்துல ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும். அதுக்கு ப்ளான் பண்ணலாம்”

– ஜூன் 27, 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *