லோன் வாங்கலியோ… லோன்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,165 
 

‘‘ஹலோ… வி.ஆர்.எஸ். பேங்க், வில்லிவாக்கம் பிராஞ்ச்சுங்களா?’’

‘‘ஆமா, யார் பேசறீங்க? உங்க அக்கௌன்ட் நம்பர் என்ன?’’

‘‘என் பேரு சீதாராமன்…’’

‘‘யெஸ் மிஸ்டர் சீதாராமன், முதல்ல உங்க அக்கௌன்ட் நம்பரைச் சொல்லுங்க…’’

‘‘623801117484.’’

‘‘ஒன் மினிட்… ஓ.கே! டாலி ஆயிடுச்சு! மிஸ்டர் சீதாராமன், உங்களுக்கு 2 லட்ச ரூபாய் லோன் சாங்ஷன் ஆகியிருக்கு. நாளைக்கே வந்து செக்கை கலெக்ட் பண்ணிட்டுப் போங்க. அதுக்கு முன்-னாடி கொஞ்சம் வெரிபி-கேஷன் பண்ண வேண்டி-இருக்கு.’’

‘‘நான் சொல்றதைக் கேளுங்க மேடம்…’’

‘‘ஒன் மினிட்… உங்க அம்மா பேரு பங்கஜம் தானே?’’

‘‘அம்புஜம்.’’

‘‘பங்கஜம்னு இருக்கே. பரவாயில்லை, ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கலாம்… உங்க பிறந்த தேதி என்ன மிஸ்டர் சீதாராமன்?’’

‘‘16.11.1979. நான் என்ன சொல்ல வந்தேன்னா..?’’

‘‘எங்க ரிகார்ட்படி அஞ்சு வருஷம் கூடுதலா இருக்கு. ஆனா, உங்க குரலைக் கேட்டா அஞ்சு வருஷம் குறைவாதான் மதிப்பிட முடியும். தட்ஸ் ஓ.கே! உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல் லுங்க!’’

‘‘நான் சொல்றதைக் கேளுங்க, மேடம்…’’

‘‘மொதல்ல அட்ரஸைச் சொல்லுங்க மிஸ்டர் சீதா ராமன்!’’

‘‘நம்பர் 18, பிச்சாண்டி சந்து, பிராட்வே…’’

‘‘அட்ரஸை மாத்தினா எங்களுக்கு தெரிவிக்-கணும் மிஸ்டர் சீதாராமன்! பரவா யில்லை, புது அட்ரஸை நோட் பண்ணிக்கிட்டேன்!’’

‘‘மேடம்! நான் சொன்னது எதுவுமே சரி இல்லை. நீங்க பிடிவாதமா கேட்டதுனால, எல்லாத்தையுமே தப்புத் தப்பாதான் சொன்னேன்…’’

‘‘லோன் வேண்டாம்னு சொல்றதுக்குப் பதிலா அநேக கஸ்டமர்ஸ் இப்படித்தான் ஏடாகூடமா பதில் சொல்றாங்க. அதுக்காக, நாங்க லோன் குடுக்காம விட்டுடுவோமா, மிஸ்டர் சீதாராமன்?’’

‘‘ஸ்டாப் இட்! மேனேஜர் மாத்ருபூதம் இருக்காரா? நான் அவர்ட்ட கொஞ்சம் பேசணும்…’’

‘‘நீங்க யார் பேசறீங்க மிஸ்டர் சீதாராமன்?’’

‘‘உங்க பிராஞ்ச்சுல எஃப்டி செக்ஷன்லதான் நான் வேலை செய்யறேன். இப்ப அரக்கோணத் துலேர்ந்து பேசறேன். ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டுத் திரும்பி வரும்போது, அரக்கோணத்-துக்குப் பக்கத்துல ஒரு சரக்கு ரயில் தடம் புரண்ட துல, எல்லா வண்டியும் 4 மணி நேரம் லேட்! அதனால, நான் இன்னிக்கு வேலைக்கு வர முடியாது, லீவுன்னு சொல்றதுக்குதான் போன் பண்ணினேன்…’’

‘‘ஐ யாம் ஸாரி மிஸ்டர் சீதாராமன்!’’

வெளியான தேதி: 30 ஜூலை 2006

Print Friendly, PDF & Email

1 thought on “லோன் வாங்கலியோ… லோன்!

  1. என் பெயர் நாசர் நான் என்னை பற்றி சொல்ல போறேன் அது ஒரு கற்பன்னை இல்ல என் வாழ்வில் நடைந்த நிஜம் நான் அதிகம் படிக்கவில்லை அனல் அதிகம் கற்றூனெர்தென் கற்க ஒரு பெண் சொல்லிகொடுத்தால்
    அவளும் நெரிம் வெசயம் கற்று உணரத்தான்
    நான் இன்று மனட்லும் உண்டம்பளும் சேரி இல்ல ஆடு அவ உணரவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *