நபிகள் நாயகம் ஒருநாள் மாலைநேரத்தில் பள்ளி வாசலுக்குத் தொழப் போனார்கள். அங்குள்ள தண்ணிரி தொட்டியில் கைகால்களை சுத்தம் செய்யும் பொழுது மரத்திலிருந்து ஒருதேள் தண்ணீர் தொட்டியில் விழுந்து துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. நாயகம் அவர்கள் இரக்ககுணம் கொண்டு, அத் தேளைத் தரையில் எடுத்துவிடத் தொட்டார்கள். அவ்வளவுதான். தேள் கொட்டி விட்டது. கையில் நெறி ஏறுகிறது. அந்த நிலையிலும் தண்ணியில் நீந்த முடியாமல், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் துடியாய் துடிக்கும் தேளின் துன்பத்தைப் பார்த்து, மனம் சகியாமல் மறுபடியும் அதை தண்ணிரிலிருந்து எடுத்து விட முயற்சித்தார்கள்.
உடனே, பக்கத்திலிருந்த அசரத் அபூபக்கர் அவர்கள் “என்ன பெருமானே! தேள், தங்களைக் கொட்டுகிறது; மறுபடியும் அதை எடுத்துவிடப் போகிறீர்களே!” என்று கூறித் தடுத்தார்கள்.
அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், “நஞ்சுள்ள ஒரு உயிரே தன் குணத்தைக் காட்டத் தவறாதபோது மனிதன் தன் குணத்தைக் காட்டத் தவறலாமா?” என்று கூறிக் கொண்டே இருகைகளாலும் அத்தேளை தண்ணிரோடு சேர்த்து அள்ளி வெளியில் விட்டுவிட்டு, அதற்குப்பின் தொழுகைக்குச் சென்றார்கள் என வரலாறு கூறுகிறது.
இப்போதனை தன்னை மனிதன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
“அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி என்பது இதன் பொருள்.
இரவு 11 மணி அடித்தும் உறங்காமல் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்த கணவனைப் பார்த்து, “ஏன் இப்படிப் புரண்டு புரண்டு ...
மேலும் கதையை படிக்க...
ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி—வெளியூருக்குப் புறப்பட்டனர்.
வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம்—திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.
இருவரும் யோசித்தார்கள். நம் இருவருக்கும் பூணூல்தான் இருக்கிறதே. இந்த ஊரிலே நம்மை யார் அடையாளம் கண்டு பிடிப்பது—திருமண வீட்டிலே போய்ச் சாப்பிடலாமே, சாப்பிட்டுவிட்டே ...
மேலும் கதையை படிக்க...
குப்புசாமி என்ற சிற்றூர்வாசி தன் தந்தைக்கு திதி கொடுக்க நினைத்தார். ஒரு ஐயரை அணுகினார். அவர் கொடுத்த பாட்டியல்படி சாமான்களை வாங்கி வைத்திருந்தார்.
ஐயர் வந்ததும் திதி கொடுக்கத் தொடங்கினார்.
குப்புசாமி, “இந்தச் சாமான்கள் எல்லாம் எதற்காக?" - என்று ஐயரைக் கேட்டார்.
அவர், “மேல் ...
மேலும் கதையை படிக்க...
தில்லி மாநகரத்திலே ஒரு இடுகாட்டின் நடுவில் பல சமாதிகள் இருந்தன. பெரியவர் ஒருவர் மிகவும் பயபக்தியுடனே இறந்தவர்களுக்கெல்லாம் அஞ்சலி செய்து கொண்டே சமாதிகளைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.
அங்கே இருபது வயதுடைய இளம்பெண் ஒருத்தி, தன் கணவனின் சமாதி அருகே அமர்ந்து, அழுது கொண்டே ...
மேலும் கதையை படிக்க...
அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளை முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும் புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் ...
மேலும் கதையை படிக்க...
பெரிய கடைவீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் மற்றொருவன் சென்று குறுக்கிட்டு, என்னவோ கேட்டான். அவர் நின்று, ‘பளிர்’ என்று அவன் கன்னத் தில் ஓங்கி அறைந்தார்.
அதைக்கண்ட மற்றவர்கள், ‘ஏன் ஐயா, அவரை அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.
அதற்கு அவர், ‘இவன் என்ன சாதி? ...
மேலும் கதையை படிக்க...
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களிடம் புலவர் பெருமக்கள் மேலும் கல்வி கற்க அடிக்கடி சென்றுவருவதுண்டு. பலரும் கவிபாடிப் பெருமையடைவதை அறிந்த பள்ளி மாணவன் ஒருவன் தானும் கவிபாட விரும்பினான். பிள்ளையவர்களை நெருங்கிக் கவிபாடச் சொல்லிக் கொடுக்கும்படி வேண்டிக் ...
மேலும் கதையை படிக்க...
ஒருவிட்டில் கன்னம் வைத்துத் திருடும்போது சுவர் இடிந்து விழுந்து கள்வன் ஒருவன் இறந்து போனான. கள்வனின் மனைவி, “ஈரச் சுவரை கட்டி வைத்து என் கணவரைக் கொன்றுவிட்டார்கள்” என்று வழக்குப் போட்டாள். மன்னன் விசாரிக்கப் போனான். வீட்டுக்காரன் சொன்னான்.
“சுவரை நான் வைக்கவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர்.
ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில்,
சிற்றுாரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை ...
மேலும் கதையை படிக்க...
பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான்.
‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது.
இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் ...
மேலும் கதையை படிக்க...
பாரக் கழுவுக்குப் பழுத்த கோமுட்டி