பிறந்த நாள்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,961 
 
 

அப்புசாமியைப் போன்ற துரதிருஷ்டக் கட்டையை எந்தக்       காட்டில்  தேடினாலும் சரி, விறகு டிப்போவில் தேடினாலும் சரி, கண்டுபிடிக்க இயலாது.

விடிந்தால் அவரது எண்பத்து மூன்றாவது பிறந்த நாள். அப்புசாமி தன் பிறந்த நாள் பற்றிய இன்பக் கற்பனைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் சீதாப்பாட்டி ஒரு பெரிய ‘கோபால்ட்’ குண்டைத் தூக்கி அப்புசாமியின் இனிய கற்பனைகளில் போட்டாள்.

“அடி! கைகேயி!” என்று இரண்டே வார்த்தைகளில் தன் ஆத்திரம் முழுவதையும் வடித்துவிட்டு, ‘உனக்கு இது அடுக்குமா? வேண்டாம் இந்த அநியாயம். ஒரு நாளும் உடன்படேன்,’ என்று பலவாறாக மனத்துக்குள் புலம்பினார்.

சீதாப்பாட்டி நியாயமாகத்தான் சொன்னாள்: “நாடு இருக்கிற ‘எமர்ஜன்ஸி’ நிலையில் கொண்டாட்டம் கேளிக்கை என்ன வேண்டியிருக்கிறது? சிக்கனமே பலம் என்று பத்திரிகைகள் கட்டம் கட்டி அலறுகின்றனவே, இந்த வருடம் உங்கள் பர்த் டே ஸெலிப்ரேஷனை நிறுத்திக் கொள்வோம்.” என்றாள்.

அப்புசாமி தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு இப்படித் துடிப்பானேன்? அந்த நாளைக் கொண்டாடாவிட்டால் அவர் பிறக்கவில்லை என்று ஆகிவிடுமா? அதெல்லாமில்லை. பாதாம்கொட்டைக்குள் வலுவான ருசியான பருப்பு பதுங்கி இருப்பதைப்போல, அப்புசாமி வருடா வருடம் பிறந்த விழா கொண்டாடுவதில் ஒரு ரகசியம் ஒளிந்திருந்தது.

பிறந்த தின விழாவில் மிஸஸ் அப்புசாமி, கணவரின் பாதங்களைக் கழுவி, அவருக்கு உபசாரங்கள் செய்து அவருக்கு நமஸ்காரம் செய்வாள். ஓர் அகன்ற எவர்சில்வர் தட்டு வைத்து அவர் பாதங்களைக் கழுவி, அந்தத் தண்ணீரில் சில துளிகள் தலையில் தெளித்துக் கொள்வது வழக்கம்.

சீதாப்பாட்டி என்ன நாகரீகமான கொள்கை உடையவளானாலும், ஒரு சம்பிரதாயம், ஒரு ‘ட்ரெடிஷன்’ இதற்குக் கட்டுப்பட்டவள். தினமும் கணவன் விழிக்குமுன் எழுந்து தன் பல்லைத் தேய்த்துக் கொண்டு கணவனின் பல்ஸெட்டையும் துலக்கி வைக்கும் பண்பு உடையவள்.

தினமும் எழுந்ததும் கணவனின் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டுதான் இருந்தாள்.

ஆனால் அப்புசாமியின் கால் ஒருநாள் மிகவும் அழுக்காக, புழுதி படிந்திருந்ததைக் கண்டு, “இவ்வளவு ‘ ‘நாஸ்ட்டி’யாகவா கால்களை வைத்துக்கொள்வது? ஹைஜீனுக்கம் உங்களுக்கும் காத தூரம் போலிருக்கிறது?’ என்று கண்டித்தாள். கண்டித்த கையோடு, நாலு கார் பாலிக் சோப்பும் ஒரு முப்பத்திரண்டு அவுன்ஸ் பாட்டில் டெட்டாலும் வாங்கிவந்து கொடுத்து ‘தினமும் கால்களை அவற்றால் சுத்தம் செய்துகொண்டு படுங்கள்,” என்று கட்டளை வேறு போட்டுவிட்டாள்.

அப்புசாமி தன் கால் எழுத்தை நொந்து கொண்டு, புது வேலையின் தொல்லை பொறுக்க முடியாமல், “இனிமேல் நீ காலையில் எழுந்ததும் என் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டாம். இன்றைக்கு டெட்டால் போடச் சொன்னாய், நாளைக்கு ஒருகால், காலே நன்றாயில்லை, வேறு ஒரு கால் செய்து வைத்து கொள்ளுங்கள் என்பாய்,” என்று சொல்லி, மறுநாள் மறந்தும் வெளியே கால் தெரியதவாறு துப்பட்டியால் மறைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தார். இப்படியாகத் தினமும் பெருமைப்படுவதற்கு இருந்த வாய்ப்பையும் தானே கெடுத்துக் கொண்டுவிட்டார். எஞ்சியது: வருடா வருடம் அவரது பிறந்த நாளன்று சீதாப்பாட்டி செய்யும் பாத சேவைதான்.

‘இந்த வருடம் அதற்கும் வெடி வைத்துவிட்டாளே கிழவி சாமர்த்தியமாக’ என்று எண்ணியவருக்குத் தூக்கம் கூட வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். மீண்டும் ஒரு சபலம். மனைவியிடம் எப்படியாவது சாமாத்தியமாகப் பேசி, அவளை வழிக்குக் கொண்டுவர முடியாதா என்று எண்ணியவராக, “சீதே, தூங்கிவிட்டாயா?” என்றார் அப்பு சொட்ட.

“தூக்கம் எப்படி வருடம்?” என்றாள் சீதாப்பாட்டி. “ஸ்பேஸ் டிராவல்’ பண்ணுகிறவர்கள்கூட நீங்கள் படுகிற மாதிரி அவதிப்படமாட்டார்கள். கட்டிலில் இப்படியும் அப்படியும் புரளு புரளு என்று புரளுகிறீர்களே? முதுகு பெய்னா, இல்லை ஸ்டமக் ஏக்கா?” என்றாள்.

“முதுகும் வலிக்கவில்லை. வயிறும் வலிக்கவில்லை. மன வலிதான்…” என்றார் அப்புசாமி. எண்பத்திரண்டு வருடமாக வெற்றிகரமாக நடந்து வந்த ஒரு வழக்கத்தை ஈவிரக்கமில்லாமல் வெட்டி வீழ்த்திவிட்டாயே?”

சீதாப்பாட்டி எரிச்சலுட்ன் கேட்டாள்: “பிறந்தநாள் என்கிற பெயரால் நாற்பது ஐம்பது செலவு செய்கிறதை, ‘டிபன்ஸ் பண்ட்’டுக்குத் தந்தாலும் பிரயோசனமுண்டு. நீங்கள் பிறந்த நாள் கொண்டாடியே தீரவேண்டும் என்று ஹோவ்ஹோவென்று உலகமே கதறுகிறதா என்ன? நாளைக்கு ஒரு நயா பைசா செலவழிக்க நான் அனுமதிக்கப் போவதில்லை.” காலை பத்து மணிக்கு அனைவரும் பதிவேட்டில் கையொப்பமிடவேண்டும். ஒரே கூட்டமாக இருக்கம். அதனால்தான் AT TEN DANCE என்று ஒருவர் மேல் ஒருவர் தொத்தி, தள்ளி, பேனா கடன் வாங்கி, கீதே போட்டு, எப்படியும் கையொப்பமிடுவார்கள். அந்த நடனத்தைக் குறிப்பிடத்தான் AT TEN DANCE என்றுஉள்ளதோ? – மணிவண்ணன்
 
அப்புசாமிக்குக் கோபம் வந்து விட்டது. “நீ பெரிய அமெரிக்கா? பார்க்கிறாயா நாளைக்கு ஒரு காட்சியை? நீ ஒரு பைசா தரவேண்டாம். இந்த அப்புசாமியின் பிறந்த நாளை நான் ஒருவனல்ல, நூற்றுக்கணக்கான பேர் கொண்டாடப் போவதை நாளைக்கு நீ பார்க்கத்தான் போகிறாய். ‘அப்புசாமி வாழ்க!’ ‘வாழ்க் அப்புசாமி!’ என்ற கோஷத்தால் உன் காதைச் செவிடாக்குகிறேன் பார்!”

“தாராளமாகச் செவிடாக்குங்கள், ஐ வெல்கமிட்! தினமும் உங்கள் குறட்டைச் சத்தத்தைக் கேட்டு அலுத்து, ‘காது செவிடாகாதா?’ என்றுதான் நான் ‘ப்ரே’ செய்து கொள்வது வழக்கம்.”

அப்புசாமி பதில் பேசவில்லை. ஒரு பைசா மனைவியின் கையை எதிர்ப்பாக்காமல் தன் பிறந்த நாளைக் கொண்டாடும் திட்டம் அவர் மனத்தில்; உருவாகிக் கொண்டிருந்தது.

காலையில் எழுந்தார். குளித்து முழுகி உடை மாற்றிக் கொண்டவர், சீதாப்பாட்டியை, “என்ன? இன்றைக்கு என் பிறந்த தினம் உண்டா இல்லையா?” என்று இறுதியாக ஒரு தரம் கேட்டுக் கொண்டார்.

“நோ, நோ!” என்தே சீதாப்பாட்டியின் பதில்.

அப்புசாமி, “ரொம்ப சரி, மிக்க நன்றி” என்று கூறியவர், அலமாரி அருகே இருந்த ஒரு கோணிப்பையைத் தூக்கிக்கொண்டு வெளியே கிளம்பினார்.

“என்ன அது பையிலே?” என்று சீதாப்பாட்டி விசாரித்தாள்.

“உன் தலை! நீ எனக்குத் தராவிட்டால் பணமே கிடைக்காதா?” என்று அப்புசாமி முணுமுணுத்துவிட்டு, விறுவிறென்று கோணிப் பை மூட்டையுடன் மார்க்கெட் பக்கமாக நடக்கலானார்.

அப்புசாமி தனது முப்பத்தெட்டாம் பிராயத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ‘யாம் கண்ட பள்ளிக் குழந்தைகளின் மனோதத்துவம்’ என்ற ஓர் அரிய நூலை அவர் எழுதித் தன் சொந்த செலவில் வெளியிட்டார்.

சீதாப்பாட்டி அதைப் படித்துவிட்டு ‘ராட்டன்’ என்று பலமாகக் கண்டித்தாள். உப்புச்சப்பு இல்லாத விஷயங்களைத் தப்பும் தவறுமாக எழுதி இருந்ததையாவது சீதாப்பாட்டி மன்னிக்கத் தயாராயிருந்தாள். ஆனால் புத்தகத்தின் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி, சமர்ப்பணம்-இந்நூலை நான் எழுதப் பேருதவியாக இருந்த என் மனைவி சீதாவுக்கு’ என்று வெளியாகியிருந்ததைச் சீதாப்பாட்டியால் பொறுக்க முடியவில்லை. ‘எனக்கு இது ஒரு வெரிய டிஸ்கிரேஸ். யாராவது பழைய புத்தக வியாபாரிக்குச் சமர்பபணம் செய்யுங்கள்’ என்று கண்டனம் தெரிவித்தாள்.

சீதாப்பாட்டியின் அன்றைய வாக்கித்தைச் சரியாக நாற்பத்து நாலு ஆண்டுகளுக்கப்புறம் இப்போது பரிபாலனம் செய்யக் கிளம்பினார் அப்புசாமி.

கோணியில் இருந்தது, விற்பனையாகாத அவரது அரிய இலக்கிய பொக்கிஷம்தான்.

அதைப் பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போட்டால் ஓர் ஐந்து ரூபாயாவது கிடைக்காதா? அந்த ரூபாயைக் கொண்டு ஆயிரம் ‘ஜே’க்கள் வாங்குவதற்கு அவர் திட்டம் தீட்டியிருந்தார்.

அப்புசாமியின் துரதிருஷ்டத்தை என்ன சொல்வது? பழைய பேப்பர் கடை பரமசிவம் அவரது இலக்கியம் தொல் தொல் தொல்காப்பியம் என்றும் இற்றுப்போகும் நிலையிலிருப்பதாகவும் கூறி, நிராகரித்துவிட்டான். ‘மாவாக ஆட்டிக் கூடை பண்ணுங்கள்’ என்று யோசனை கூ றினவன், அப்புசாமி பரிதாபமாக நின்றதைப் பார்த்துவிட்டு, ‘வேணும்னா இதிலே கலந்திருக்கிற பழைய நியூஸ் பேப்பரை மட்டும் எடுத்துக் கொண்டு ஏதாவது தருகிறேன்’, என்று கூறியவன், அன்னப் பறவை நீர் கலந்த பாலிலிருந்து பாலைமட்டும் பருகும் பாங்காகப் பரபரவென்று கோணிக் குப்பையில் கலந்திருந்த சுமாரான யோக்கியதையுடைய பழைய நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு இரண்டு ரூபாய் தந்தான். அப்புசாமி போன்ற கெளரவமானவர்கள் இப்படி இரண்டு ரூபாய்க்கு அல்லலுறுவதை விதியின் செயலென்றே கூற வேண்டும். புகழாசை பொல்லாதது. யாரை விட்டது?

இரண்டு ரூபாய்க்கு அப்புசாமி ஒரு கடையில் மிட்டாய்கள் வாங்கிக் கொண்டார். தானே தின்று தீர்ப்பதற்கா? சே, சே! ஒவ்வொரு மிட்டாயிலும் இருநூறு முன்னூறு ‘ஜே’க்கள் அல்லவா அடங்கியிருக்கின்றன?

மிட்டாய்ப் பொட்டலத்தையும் நிராகரிக்கப்பட்ட தன் இலக்கியச் செல்வத்தையும் எடுத்துக்கொண்டு அப்புசாமி அடுத்தாற்போல் அடைந்த இடம், ஒரு பள்ளிக்கூடம் .

ஒரு மரத்தடியில் உட்காந்து அவலுடன் காத்திருந்தார்.
எதற்கு?

அதோ……!

பள்ளிக்கூடத்திலிருந்து வாத்தியாரை ஏதோ சாக்குச் சொல்லி ஏமாற்றிவிட்டு, ஒரு பையன் வேர்க்கடலை உருண்டை வாங்க வெளியே வந்து கொண்டிருந்தான்.

அப்புசாதி, ஸ்ரீவள்ளியை மயக்க வந்த ஸ்ரீமுருகனைப்போல அந்தச் சிறுவனை அணுகினார். “தம்பீ! தம்பீ! இங்கே வா,! என்று கூப்பிட்டார்.

அந்த ஒற்றைத் தம்பி, “என்னயா தாத்தா?” என்று கேட்டவாறு கண்களில் மிரட்சியுடன் அப்புசாமியை நெருங்கினான்.

“ஆமாம். உன்னைத்தான். நீ ரொம்ப நல்ல பையனாக இருக்கிறாயே?” என்றார் அப்புசாமி.

பையன் சும்மா நின்றான்.

அப்புசாமி, “தம்பி உனக்குச் சாக்லெட் பிடிக்குமா?” என்றார். “நான் உனக்கு இப்போது ஒரு சாக்லேட் தரப்போகிறேன்.”

பையன் கண்களில் பெட்றோமாக்ஸ் விளக்கு எரிந்தது. “ஓ! பிடிக்குமே?”

அப்புசாமி அவனிடம் ஒரு சாக்லேட் எடுத்துத் தந்தார்.

பையன் தனக்குத் தோன்றிய சந்தேகத்தை வாய்விட்டுக் கேட்டுவிட்டான். “ஏன் தாத்தா, நீ நல்ல தாத்தாதானே? பைத்தியம் ஒன்றுமில்லையே! எனக்கு ஏன் நீ மிட்டாய் தர்றே?”

பைத்தியம்! அப்புசாமிக்குப் குபீர் என்று கோபம் வந்தது. ஆனால் காரிய சாதனைக்காக அடக்கிக்கொண்டு, முகம் மலர, “இல்லேடா கண்ணே? என் பேர் அப்புசாமி. நேரு மாமா பிறந்த நாள் என்றால் உங்களுக்கெல்லாம் மிட்டாய் கொடுப்பார்கள் அல்லவா? அதுமாதிரி என் பிறந்த நாள் இன்றைக்கு! மிட்டாய் கொடுக்க வந்திருக்கிறேன்,” என்ற அப்புசாமி, பையன்மேல் இப்போது தன் மனோதத்துவப் பிடியை லாகவமாக வீசினா “தம்பீ, முக்கியமான ஒரு விஷயம். பள்ளிக்கூட வாசலில் நான் இப்படி மிட்டாய் தருவதை உன் சினேகிதர்களிடமெல்லாம் சொல்லி விடாதே. அப்படியே சொன்னலும் மிட்டாயை வாங்கிக் கொண்டு அவர்கள் பேசாமல் போய்விட வேண்டும். ‘அப்புசாமித் தாத்தாவுக்கு ஜே! அப்புசாமித் தாத்தா வாழ்க!’ என்றெல்லாம் கோஷம் போடக் கூடாது. என்னோடு என் வீட்டுக்கு வந்தால் நிறைய மிட்டாய் தருவேன் என்று நினைத்துக்கொண்டு, கூடவே ‘தாத்தா, தாத்தா!’ என்று வரக்கூடாது? என்ன?”

பையன் தன் சகாக்களுக்குச் செய்தி தெரிவிக்க ஓடினான் பள்ளிக்கூடத்துக்குள்.

அப்புசாமி தன் புத்திசாலித்தனத்தைத் தானே மெட்சிக் கொண்டார். ‘எதை ரகசியம், அதைச் செய்யகூடாது, என்று சொல்கிறோமோ அதைத்தான் பள்ளிப் பையன்கள் முதலில் செய்வார்கள் என்பது அவர் அறியாததா? ‘யாம் கண்ட பள்ளிப் பையன்களின் மனோதத்துவம்’ எழுதியவராயிற்றே?

பையன் தன் சகாக்களிடம் விஷயத்தைக் கூற ஓடின அதே நேரம், பள்ளிக்கூடப் பியூன் முனுசாமியும் ஹெட்மாஸ்டரின் அறையை நோக்கி ஓடினான், தான் ஒட்டுக் கேட்ட ஏதோ பயங்கர சமாசாரம் ஒன்றை அவருக்குத் தெரிவிக்க அவன் ஓடினான்.

வெளியே புறப்பட்டுச் சென்ற கணவன் வேகுநேரமாகியும் வராததால், சீதாப்பாட்டிக்குப் பல விபரீத எண்ணங்கள் தோன்றலாயின. ‘ரொம்ப ‘ஹார்ஷாக’ நடந்து கொண்டு விட்டேனோ? கோணி நிறையப் பழைய புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு எங்கு அலைகிறாரோ? எதற்காக அதை அவர் தூக்கிக்கொண்டு போனார்? ஓ, ஒருகால் அதை விற்று அந்தப் பணத்தில் தன் பிறந்த நாளுக்கான வேஷ்டி முதலியன வாங்கிக்கொள்ளத் திட்டமே?’

நிலைக்கண்ணாடியில் இரண்டு சீதாப்பாட்டிகள் தோன்றனர். ஒருத்தி கறுப்புப் புடவை கட்டியிருந்தாள். முகம் கடுகடு என்றிருந்தது. இன்னொருத்தி தூய வெள்ளைப் புடவை கட்டியிருந்தாள். இரண்டு பேருக்கும் நடுவில்அசல் சீதாப்பாட்டி போய் நின்றாள். அடுத்த நிமிடம் ஆரம்பமாயிற்று வாதங்கள்.

கறுப்புச் சீதாப்பாட்டி கிழம் எங்கோ திண்டாடிவிட்டு வரட்டும். ஒய் டு யூ வொர்ரி? நீ ஏன் தேடப் போகிறாய்? உன்னைக் கேட்டுக்கொண்டா போனார்? இட் இஸ் ஹிஸ் ·பால்ட்!

வெள்ளைச் சீதாப்பாட்டி: சீ! சீ! யூ ரெச்சட் ஓல்ட் வுமன்! நீயும் ஒரு தர்மபத்தினியா? வெய்யிலில் கோணி மூட்டையுடன் கணவர் அலைகிறார். நிழலில் நீ சிங்காரமாக உட்கார்ந்து கொண்டு! எழுந்து போ. சீக்கிரம்! அவர் பிறந்த நாளை நீ அக்கறையாகக் கொண்டாட வேண்டியது உன் டியூடியன்றோ? நளாயினி, சீதா, சாவித்திரி முதலிய பத்தினிகள் தோன்றிய நாட்டில் நீயும்…பத்தினிக்கு அழகு வெறும் ‘யெல்லாம் கோட்டிங்’ மட்டும் அல்ல!

சீதாப்பாட்டி காதைப் பொத்திக் கொண்டு, “இதோ, இதோ புறப்பட்டேன்!’ என்று கணவனைத் தேடிக்கொண்டுஅப்போதே கிளம்பினாள்.

பள்ளிக்கூட வாசலில் சீதாப்பாட்டி கண்ட காட்சி அவளை மெய் சிலிர்க்க வைத்தது. அப்புசாமியை ஜே, ஜே, என்று பள்ளிப் பையன்கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள்.

‘அப்புசாமித் தாத்தாவுக்கு ஜே!’ ‘தாத்தா தாத்தா! எனக்கு!’ ‘தாத்தா வாழ்க!’ ‘வாழ்க தாத்தா!’ என்ற கோஷங்கள். ‘அப்புசாமித் தாத்தா வாழ்க!’ என்பதற்குப் பதில், யாரோ ஒரு பையன் ‘காந்தித் தாத்தா வாழ்க’ என்று கூடச் சொன்னான்.

சீதாப்பாட்டிக்கு ஒரு கணம் பெருமிதத்தால் மெய்சிலிர்த்தது. அடுத்த கணமே பயங்கர எண்ணமும் உதயமாயிற்று. எல்லாப் பையன்களும் அவரைத் துவையலாக அரைத்துவிடப் போகிறார்கள் என்ற பயம் எழுந்ததும் பையன்களைச் சமாளிக்கத் தானும் முன் விரைந்தாள்.

அப்போதுதான் எதிர்பாராதது ஒன்று நடந்தது.

திடீரென்று “பிடி! பிடி! அந்த ஆளைப் பிடி!” என்ற கூக்குரலுடன் இரண்டு மூன்று பள்ளிக்கூடப் பியூன்கள் திமுதிமுவென்று ஓடிவந்து அப்புசாமியைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள். அவர் கையில் இருந்த மிட்டாய்ப் பையை ஒருத்தன் பறித்து வீசி எறிந்தான்.

அப்புசாமி அலறினார். “ஏன், ஏன் என்னை வந்து பிடிக்கிறீர்கள்,”

“ஏனோ? தெரியுமய்யா நீ யாரு என்று? பிள்ளையா பிடிக்க வந்தே? உன் முதுகெலும்பை நொறுக்குகிறோம் வா!”

“ஆ! என்ன அபாண்டம்! நான்…நான்…நான்…” அப்புசாமி அலற அலற அவரைப் பள்ளிக்குள்ளே இழுத்துப் போய்விட்டார்கள்.

அப்புசாமி, தலைமை ஆசிரியரின் அறையில் தலை குனிந்து நின்றார். அவரது இருபுறமும் முரட்டு ஸ்கூல் பியூன்கள் நுன்று கொண்டிருந்தனர்.

ஹெட்மாஸ்டர் கேட்டார்: “பியூன் காதாரக் கேட்டிருக்கிறான். நீர் முதலில் மரத்தடியில் உட்கார்ந்து ஒரு பையனிடம் நைச்சியமாகப் பேசினீர். அவனுக்கு மிட்த்ஙய கொடுத்தீர்.”

“ஆமாம்.”

“பையன்களை மயக்கி, அவர்களை உமது வீட்டுக்கு எதற்காக அழைத்துப்போக முயச்சி செய்தீர்? கோணிப்பை கூட வைத்திருந்தீராமே?”  

“கோணி! கோணி! வந்து…வந்து…வந்து…சார், நான்…அப்புசாமிக்குப் பதட்டத்தில் வாய்வரவில்லை.

ஹெட்மாஸ்டர் சட்டென்று எழுந்தார். இவ்வளவு நேரம் கட்டுப்பட்டிருந்த அவர் கோபம் கரை உடைத்துக் கொண்டது. “முனுசாமி! புறப்படு போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ். ஐ.யைக் கையோடு கூட்டிவா. இம்மாதிரியான நச்சுப் பாம்புகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது!”

அதே நேரம் ஒரு பியூன் ஓடிவந்தான் ஹெட்மாஸ்ட்டரிடம். “சார்! யாரோ ஓர் அம்மாள் தலைவிரிகோலமாக, கையில் ஒரு கோணியுடனும், கண்களில் பெரும் சினத்துடனும், நமது காம்பவுண்டு வாசலில் நிக்கிறாள். உங்களைப் பார்க்க வேண்டுமாம்,” என்றான்.

“வரச் சொல்,” என்றார் ஹெட்மாஸ்டர்.

சீதாப்பாட்டி வந்த ஆவேசத்தைப் பார்த்துத் தலைமை ஆசிரியர் நடுங்கினாலும் மேலுக்குச் சாந்தமாக இருப்பவர் போல், “வாங்கள் பாட்டியம்மா. என்ன விஷயம்?” என்றார்.

“ஓ! யூ ஆர் தட் ஸில்லி ஹெட்மாஸ்டர்?” என்ற சீதாப்பாட்டி, தான் கொணர்ந்த கோணி மூட்டையைத் தூக்கித் தொப்பென்று மேஜை மீது போட்டாள். அதிலிருந்து பறந்த தூசி அறை முழுவதும் தெறித்தது.

“நீயே நன்றாகப் பார்! நான்ஸென்ஸாக என் கணவரை அக்யூஸ் செய்தாயே? நீ நன்றாயிருப்பாயா? என் கணவரா குழந்தை பிடிப்பவர்? கோணியிலே இருப்பதைப் பாருங்கள் மிஸ்டர் பாருங்கள்! ரைட்டரே, பியூனே, அக்கெளன்டண்ட்டே, ப்ளேக் போர்டே, அனைவரும் பாருங்கள்!” என்று சொல்லிக் கோணியிலிருந்த புத்தங்களில் நாலைத் தூக்கிக் கிழே அடித்தாள்.

“யாம் கண்ட பள்ளிக் குழந்தைகளின் மனோதத்துவம்!” அனைவரது உதடுகளிம் முணுமுணுத்தன.

சீதாப்பாட்டி தன் உக்கிரம் தணியாமல் கூறினாள்: “குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்தால் குழந்தை பிடிக்கிறவன் என்று அர்த்தமா? வொன்டர் ·புல்! வொன்டர் ·புல்! இப்படி அபத்தக் களஞ்சியமாக முடிவு கட்டும் நீர் எப்படி இந்த ஸ்கூலை நன்றாக மேனேஜ் செய்வீர்? தான் எழுதிய சிறுவர் இலக்கியத்தை இலவசமாக உங்கள் பள்ளிக்கு டிஸ்ட்ரிப்பூட் செய்ய வந்த என் கணவரை, ‘குழந்தை பிடிக்க வந்தவர்’ என்று குற்றம் சாட்டினீர்களே? தகுமா அது? அட்ராஷஸ்! அட்ராஷஸ்! அட்ராஷஸ்!”

ஹெட்மாஸ்டரின் தலை சுற்றியது. அவர் பதவி நாற்காலி. (அவர் சர்வீசுக்கு வந்தபோது உளுத்துக் போயிருந்தது) இப்போது தடாலென்று முறிந்தது கீழே விழுந்தார்.

“ஆ! தவறு என்னுடையது! என்னுடையதே தவறு,” என்று கீழே விழுந்தஅவர் முணுமுணுத்தார்.

தன்னை மீட்டு அழைத்துக் கொண்டு திரும்பிய சீதாப்பாட்டியிடம் அப்புசாமி, “இனிமேல் வருகிற என் பிறந்த நாட்களின்போது ஒரு சிறு திருத்தம் செய்துகொள்ள வேண்டும். நீ என் காலில் விழ வேண்டாம். நான் உன் காலில் விழுகிறேன்,” என்றார்.

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். ஐ ·பீல் இட்,” என்று அப்புசாமியின் வாயைப் பொத்தினாள் சீதாப்பாட்டி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *