எக்ஸ்கூயூஸ் மீ ப்ளீஸ் கொஞ்சம் பேனா தரமுடியுமா? இந்த பார்மை பில்லப் பண்ணிட்டு கொடுத்திடறேன்
சார் பாத்தா படிச்சவராட்டம் இருக்கறீங்க, வரும்போது பேனா கொண்டு வர மாட்டீங்களா?
சார் பேனா கேட்டா தர முடியும், இல்லை முடியாது அப்படீன்னு சொல்லுங்க, இதுக்கு எதுக்கு படிச்சிருக்கியா இல்லையா அப்படீன்னு கேட்கணும்.
பின்ன எப்படி கேக்கணும்கறீங்க? பாங்குக்கு வர்றொமுன்னு தெரியுதுல்ல, அப்பவே பாக்கெட்டுல பேனாவை எடுத்து சொருகி வச்சுக்க தெரியணும் இல்லை.
சாரி மறந்துட்டேன்
இப்படி சொல்லி எல்லாம் தப்பிச்சுக்குங்க.
இதுல தப்பிக்கறதுக்கு என்ன இருக்குது, நீ பேனாவே கொடுக்க வேணாம்யா, ஆளை விடு !
அதெப்படி பேனா கேக்கும்போது “சார்” அப்படீன்னு மரியாதையா கேக்க தெரியுது, முடியாதுன்ன்னு சொன்ன உடனே நீ, வா, போன்னு மரியாதை குறையுது.
ஐயா, நண்பர், சார், போதுங்களா மரியாதை. உங்க கிட்ட தெரியாம பேனா கேட்டுட்டேன், விட்டுடுங்க, நான் பக்கத்துல யார் கிட்டேயாவது வாங்கிக்கறேன்.
அப்பவும் ஓசியில தான் பேனா வாங்குனம்னுதான நினைக்கிறீங்க, போய் பேனா வாங்கிட்டு வந்து எழுதணும்னு தோண மாட்டேங்குது இல்லை உங்களுக்கு.
கொஞ்சம் என்னை விடறீங்களா, எனக்கு பேனாவும் வேணாம், ஒண்ணும் வேணாம், அவசரமா போகனும்,
நில்லுங்க சார், பேனா கேட்டீங்க, நான் கொடுக்கலை,என்ன பண்ணனும், வீட்டுக்கு போயோ, இல்லை கடையில வாங்கியோ பேனா வாங்கிட்டு வந்து எழுதணுமில்லை, அதை விட்டுட்டு ஒண்ணும் வேணாமுன்னுட்டு ஓடறதா?
ஐயா சாமி, தெரியாம உங்கிட்ட வந்து பேனா கேட்டுட்டேன், இன்னைக்கு முழிச்ச முழி சரியில்லை,
நீங்க பேனா கொண்டு வராத்துக்கு உங்க விதியை காரணம் சொல்லாதீங்க, அது உங்க மறதி குணம், இல்லை பொறுப்பில்லாத்தனம்
யோவ் என்னய்யா பெறுப்பில்லை, அப்படீன்னு பேசிகிட்டிருக்க… !
தம்பி சும்மா துள்ளாதீங்க, உங்க வயசு என்ன? என் வயசு என்ன? நீங்க மட்டும் என்னை வா,போ, அப்படீன்னு பேசலையா?
நான் எப்பயா உன்னை வா, போன்னு பேசினேன்?
கொஞ்சம் முன்னாடிதான பேசுனீங்க.
வேண்டாயா, அதுதான் பேனாவும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாங்கறனே, இப்ப ஆளை விட்டா போதும் நிம்மதியா போயிடுவயா !
தாராளமா போங்க தம்பி, நானா உங்களை தடுத்து நிறுத்திகிட்டு இருக்கேன், ஏதோ பேனா கேட்டீங்களேன்னு உங்களுக்கு கொஞ்சம் நல்லது சொல்லாமேன்னு நினைச்சேன்.
ஏய்யா நீ நல்லது நினைச்சா இப்படி பேசியே கொல்றே, இது ஆண்டவனுக்கே அடுக்காது, காலையிலே வந்து என் உசிரை வாங்கிட்டு இருக்கியேயா?
உசிரை வாங்கறது நானா,இல்லை நீங்களா? சிவனேன்னு எழுதிகிட்டு இருந்தவங்கிட்ட வந்து வம்பை வளர்த்துட்டு, இப்ப நான்தான் உங்களை ரொம்ப கொடுமை படுத்தற மாதிரி பேசறீங்க.
ஐயோ..ஐயோ..என்னை விடுய்யா, நான் போறேன், எனக்கு பேனாவும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்
அப்பொழுது வேகமாக ஒரு பெண் ஓடி வருகிறாள், வந்தவள், பேனா கேட்டவனை தள்ளிவிட்டு, எதிரில் இருந்த ஆளிடம் சென்று ஏங்க எழுதறதுக்கு பேனா வாங்குனா கொடுக்க தெரியாதா?நான் மறந்துட்டு கொஞ்ச தூரம் போயிட்டு திரும்ப வர்றேன் இந்த பேனாவுக்காக.
ஏன் சார் இந்த மாதிரி பண்ணறீங்க?சட்டென்று அந்த ஆளிடமிருந்து பேனாவை பிடுங்கிக்கொண்டு செல்கிறாள்.
எங்கேயாவது .தூ..தூ என்று சத்தம் கேட்டால் திரும்பி பார்க்காதீர்கள், பேனா கடன் கேட்டவனாக இருக்கலாம், கண்டு கொள்ளாமல் போய் விடுங்கள்.
தொடர்புடைய சிறுகதைகள்
இரவு மணி இரண்டு இருக்கும். அந்த தெரு விளக்குகள் ஒரு சில எரியாமல் இருந்ததால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்து இருந்தது. அந்த ஏரியாவே ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. வாகனங்களின் நடமாட்டம் கூட இல்லை. பாதையை ஒட்டி பங்களாக்கள் ...
மேலும் கதையை படிக்க...
நல்ல இருள்…வேகம்…வேகம், என் இரு சக்கர வாகனத்தின் வேகம் என்னை அந்தரத்தில் பறக்கவைப்பது போல் இருந்தது.தலைக்கவசமும் போடாமல் இருந்ததால் தலைமுடிகள் தறி கெட்டு பறந்தது, அப்படியே ஒரு கையால் தலையை அந்த வேகத்திலேயே அழுத்தி விட்டாலும் காற்றை எதிர்த்து எழுந்து பேயாட்டம் ...
மேலும் கதையை படிக்க...
காலையிலிருந்து நல்ல சவாரி கிடைத்துக்கொண்டிருந்த்து சரவணனுக்கு. இப்படியே பத்து இருபது நாட்கள் கிடைத்தால் சம்சாரத்தின் “பிரசவ” செலவை ஈடு கட்டி விட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவனை யாரோ கையை தட்டி கூப்பிடும் சத்தம் கேட்டவுடன் அனிச்சையாய் திரும்பி பார்த்தான்.
கை தட்டி ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் பல்வேறு மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அவைகள் தனக்குரிய இடங்களில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தன. அப்படி வாழ்ந்து வந்த மிருகங்களில் ஓநாயும் ஒன்று. ஓநாய் தன் குட்டிகளுடன் ஒரு குகையில் வாழ்ந்து வந்தது.
தினமும் குகையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
நடு இரவை தாண்டி இரண்டு மணி நேரம் ஓடியிருக்கும், அந்த இருளில் "திக்"திக்” மனம் துடிக்க கையில் ஒரு பெட்டியை எடுத்து கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தான் மாரி.
அப்பா..இதை எடுக்க மாலையிலிருந்து காத்திருக்கிறான். “பாவி பயல்” இந்த பொட்டியை விரித்து வைத்து ...
மேலும் கதையை படிக்க...
வளைந்து வளைந்து செல்லும் அந்த மலைச்சரிவில் அநாயசமாய் காரை ஒட்டி சென்று கொண்டிருந்த மகேசின் திறமை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் பிரமிப்பை தந்து கொண்டிருக்கலாம்.
ஆனால் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் அவனின் மனமோ பெளர்ணமி நிலவின் ஈர்ப்பில் கொந்தளித்து கொண்டிருக்கும் கடலின் நிலையில் ...
மேலும் கதையை படிக்க...
தலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன் டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தார். குதிரையில் இருந்து இறங்கிய வீரன் அவரை வணங்கி விட்டு நமது அரசர் இன்று மாலை உங்களை சந்திக்க ...
மேலும் கதையை படிக்க...
மலை உச்சியில் அமைந்திருக்கும் ஒரு நகருக்கு செல்லும் மலைப் பாதையில் ஒரு இடத்தில் மலையை சுற்றி வரும் பாதையை அதன் அருகில் இருக்கும் ஊரின் வழியாக குறுக்கு பாதை போட்டால் மலையை சுற்றி செல்லும் தொல்லை இருக்காது, தூரமும் குறையும், எரிபொருளும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பா இந்த படத்தை பாரேன்? அகிலா கொஞ்சம் பேசாம போறியா, எனக்கு இங்க தலைக்கு மேல வேலையிருக்கு. மகள் முகம் சுருங்கி போப்பா நீ எப்பவுமே இப்படித்தான் ! சொல்லிக்கொண்டே நின்று கொண்டிருந்தாள்
ஏங்க கொஞ்சம் அந்த குழந்தைகிட்ட பேசுனாத்தான் என்ன? பாருங்க ...
மேலும் கதையை படிக்க...
(நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி.பி.1774 க்கு போவோம்)
லண்டன் மாநகரில் பிரபல மருத்துவ மனை ஒன்றில் !.
"கிளைவ்" நீங்கள் இப்பொழுது குணமாகிவிட்டீர்கள், உங்கள் மனதை போட்டு அலட்டிக்கொள்ளாதீர்கள், தயவு செய்து அமைதியாக இருங்கள், நீங்கள் அமைதியாகிவிட்டால் இன்றே கூட உங்களை வீட்டுக்கு ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் மறைந்து விடவில்லை மனிதாபிமானம்
நன்றாய் இருக்கும்போது உறவுகள் தெரிவதில்லை