“மொழி” தந்த முழி பிதுங்கல்!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 48,748 
 

நம் நாட்டில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு புழகத்தில் இருந்து வருகிறது.

நான் என் குடும்பத்துடன் வெளி ஊரில் வசித்து வந்தேன்.அந்த ஊரில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஒரு குடும்பம் பல நண்பர்களீன் குடும்பங்களை மதிய உணவுக்கு அழைத்து சாப்பிட அழைக்க வேண்டும்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை சிங்கள நண்பர் ஒருவர் வீட்டிலே மதிய உணவு ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.அந்த சிங்கள நண்பருக்கு ஒரு வயது குழந்தை இருந்தது.பல குடும்பங்கள் சாப்பிட வந்து இருந்தார்கள்.ஒரு நண்பர் மட்டும் மணி ஒண்ணடித்து விட்டு இருந்த போதிலும் இன்னும் சாப்பிட வரவிலை.ஒரு வழியாக அவர் தன் மனைவி, குழந்தையுடன் அந்த வீட்டுக்கு சாப்பிட வந்தார்.வந்ததும் வராதததும் அவர் மனைவி,அந்த சிங்கள அம்மாவிடம் “எங்கெ குழந்தை ரவியை காணோம்.தூங்கி விட்டானா”என்று கேட்டவுடன் அந்த அம்மா கண்களில் இருந்து ‘பல’ ‘பல’ என்று கண்ணீர் வந்து விட்டது.கேட்ட அம்மா மிகவும் பயந்து போய் விட்டாள்.’நாம அவங்க குழந்தை தூங்கி விட்டானான்னு தானே கேட்டோம்.அவங்க ஏன் இப்படி அழறாங்க.நாம் ஒன்னும் தப்பாக கேக் கலையே’ என்று பயந்து போய் நின்றுக் கொண்டு இருந்தாள்.நிலைமையை சமாளிக்க அந்த சிங்கள நண்பர் பயந்து போய் நிற்கும் அம்மாவிடன் “அது ஒன்னும் இல்லீங்க,எங்க சிங்கள பாஷையிலே குழந்தை உறங்கி விட்டானான்னு தான் கேக்கணும்.நீங்க கேட்டதுக்கு ரொம்ப ‘தப்பான அர்த்தங்க’ எங்க பாஷயிலே” என்று சொன்னவுடன் உடனே அந்த அம்மா அவர் சொன்ன “அர்த்தத்தை” புரிந்துக் கொண்டாள்.தெரியாமல் செய்த “தவறுக்கு” அந்த அம்மா விடாமல் அந்த சிங்கள் அம்மாவிடம் பல முறை மன்னிப்பு கேட்டாள்.

இன்னொரு முறை நாங்க ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தின் வீட்டிற்கு சாப்பிட போனோம். அந்த அம்மாவுக்கு தெலுங்கு தான் பேச வரும்.சாப்பாட்டிற்கு ஒரு சீக்கிய குடும்பத்தை சேர்ந்த ஒரு நண்பர் அவர் மனைவியுடனும் நாலு வயசு பையனோடும் வந்து இருந்தார்கள்.சீக்கிய நண்பர் ஒரு சாப்பாட்டு பிரியர்.காரை ‘பார்க்’ பண்ணி விட்டு,மனைவியும் பையனும் வறாங்களான்னு பாக்காம சாப்பிட வந்து விட்டார்.நாலு வயது குறும்பு பண்ணி வந்த பையனை ஒரு வழியாக அடக்கி, அழை த்து வர கொஞ்சம் லேட்டாகி விட்டது அவர் மனைவிக்கு.ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அந்த அம்மா பையனுடன் உள்ளே நுழைந்தவுடன் அந்த தெலுங்கு அம்மா உடனே “ரண்டி,ரண்டி” என்று சொல்லி வரவேற்றாள்.

அந்த சீக்கிய அம்மாவுக்கு தூக்கி வாரிபோட்டது.அவங்க கண் ரெண்டும் சிவந்து விட்டது. வாசப் படியிலே நின்று விட்டாள் அந்த அம்மா.அந்த சீக்கிய நண்பருக்கு தெலுங்கு தெரிந்து இருந் ததால் அவர் அந்த தெலுங்கு அம்மா சொன்னதை புரிந்துக் கொண்டு விட்டார்.சாப்பாட்டில் இருந்த பூரியை ‘ஸப்ஜீயில்’ தோய்த்து தன் வாயில் போட்டுக் கொண்டு,நிலைமை சாளிக்க நினைத்து தன் மனைவி அருகில் போய் ரகசியமாக தங்கள் பாஷையிலே “தப்பா எடுத்தாதே டார்லிங்க்,அவங்க பாஷையிலே ’ரண்டி’ன்னா ‘வாங்க’ன்னு அர்த்தம்.நீ தப்பா எடுத்துக்காதே.நம்ம பாஷையுட அர்த்தம் இல்லே அவங்க சொன்னது” என்று சொன்ன பிறகு தான் அந்த சீக்கிய பெண்மணி வீட்டுக்கு உள் ளேயே வந்தாள்.இதற்கிடையில் தன் மனைவியிடம் தெலுங்கில் ரகசியமாக “டார்லிங்க்,இனிமே எந்த சீக்கிய அம்மா கிட்டேயும் ‘ரண்டி’கூப்பிடாதே. அவங்க பாஷையிலே “ரண்டி” என்கிற வார்த்தைக்கு ‘விபசாரின்னு அர்த்தம்” என்று சொன்ன பிறகு அந்த தெலுங்கு பெண்மணி ஓடிப் போய் அந்த சீக்கிய பெண்மணியிடம் பல முறை மன்னிப்பு கேட்டாள்!!!.

என் கல்யாணத்திற்கு முன்பு நான் என் நண்பர்களுடன் ஹாஸ்டலில் தங்கி இருந்து வந்தேன். நாங்க எல்லோரும் ரூமின் ‘பால்கனி’ சுவர் மேலெ உட்கார்ந்துக் கொண்டு இருந்தோம்.ஒரு சீக்கிய நண்பன் மட்டும் படுக்கையிலே சும்மா படுத்து கிட்டு இருந்தான்.என் நண்பன் ஒருவன் கீழே போய் கிட்டு இருந்த பெங்காலி நண்பனைப் பார்த்து “சமய் க்யா தோஸ்த” என்று கத்தி கேட்டான்.அந்த நண்பன் உடனே கத்தி “சார் குடி” என்று கத்தி சொன்னான்.அவ சொன்னதைக் கேட்டா சீக்கிய நண்பன் படுக்கையை விட்டு வேகமாக எழுந்து வெளியே வந்து “சார் குடி கிதர்,சார் குடி கிதர்”என்று சொல்லி கீழே பார்க்க ஆரம்பித்தான்.உடனே என் அருகில் இருந்த நண்பன் அந்த சீக்கிய நண்பனி டம் “அரே பாய்,ஓ ஏக் பெங்காலி.பெங்காலி பாஷா மே ‘சார் குடி கா மீனிங்க் சார் பீஸ் பை,சார் ‘கர்ல்ஸ்’ நை” என்று நான் சொன்னதும் அந்த சீக்கிய நண்பன் முகத்திலே எண்ணை வழிந்தது.பெங்காலி பாஷையிலே ‘குடி’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் ‘இருபது’ என்பது.சீக்கிய பஷையிலே ‘குடி’ என்றால் ஒரு வயசு பெண் என்று அர்த்தம்.!!!!

அடுத்த ஞாயிற்றுக் கிழமை மறுபடியும் மூன்று மணிக்கு நாங்கள் ‘பால்கனியிலே’ உட்கார்ந்துக் கொண்டு இருந்தோம். கான்டீனில் ‘டீ’ நாலு மணிக்கு மேல் தான் போடுவார்கள். அப்போது நாங்கள் ஹாஸ்டலின் வாசலில் இருந்த ‘டீக்கடையில்’ இருந்து ‘டீயை’ ஹாஸ்டலுக்கு கொண்டு வந்து கொடு க்கும் பையனைப் யதேச்சையாக பார்த்தோம்.நான் உடனே அவனைப் பார்த்து எங்களுக்கு நாலு டீ கொண்டு வரச் சொன்னோம்.ஒரு பத்து நிமிஷம் கழித்து அந்த ‘டீக்’கடைக்காரப் பையன் ஒரு எவர் சில்வர் தட்டிலே நாலு ‘டீயை’க் கொண்டு வந்து கொடுத்தான்.

அவன் கொண்டு வந்த ‘டீ’ ரொம்ப சூடாட இருந்ததால் நாங்கள் அந்த டீயைக் குடிக்காமல் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு இருந்தோம்.அந்த பையனுக்கு அவசரம் போல இருந்தது.அவன் நாங்கள் ‘டீயை’ குடிக்காமல் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து “சாப். பிளீஸ் பாஸ்ட் டிரிங்க். மை சிஸ்டர் அண்டர் ஸ்டாண்டிங்க். வெயிட்ட்ங்க் பார் மீ” என்று சொன்னதும் எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.எங்களில் ஒருவன் அவன் சொன்னதை புரிந்துக் கொண்டு கீழே நின்றுக் கொண்டு இருந்த ஒரு பெண்ணைக் காட்டி “ஷீ இஸ் யுவர் சிஸ்டர்.வெயிட்டிங்க் பார் யூ” என்று கேட்டதும் உடனே அந்த பையன் “எஸ் சாப்” என்று சொன்னதும் நாங்கள் எல்லோரும் அவன் சொன்ன ஆங்கிலத்தின் அர்த்தம் “என் தங்கை கீழே நிக்கறா.எனக்காக அவ காத்து இருக்கா” என்பதை கொஞ்சம் நேரம் கழித்துப் புரிந்துக் கொண்டதும் மத்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்!!

ஒரு விவசாயி டேராடூனில் இருக்கும் பையனை பார்க்க “கல்கா மெயிலில்” ‘ஸ்லீபர்’ முன் பதிவு பண்ணி விட்டு,தன் மனைவியை அழைச்சு கிட்டு புது டில்லி ஸ்டேஷனுக்கு வந்து ‘கல்கா மெயிலுக்கு’ காத்து இருந்தார்.

“கல்கா மெயில்” என்னும் வண்டி ஹௌராவில் இருந்து புது டில்லி வழியாக டேராடூன் வரை போகிற ஒரு ரயில் வண்டி.அந்த வண்டி எப்போதும் குறிப்பிட்ட சமயத்துக்கு புது டில்லி ரயில் நிலைய த்துக்கு வறவே வராது.தினமும் பத்து மணி,அல்லது பன்னாண்டு மணி தாமதமாகவே வரும்.

அன்று ”கல்கா மெயில்” வண்டி புது டில்லி ஸ்டேஷனுக்கு வந்து நின்றது.

அந்த விவசாயின் பையன் பல தடவை தன் அப்பாவிடம் “அப்பா, நீங்க ப்லாட்பாரத்லே இரு க்கும் TTE கிட்டே ‘இந்த “கல்கா மெயில்” இன்னைய வண்டியா,இல்லே நேத்து வர வேண்டிய “கல்கா மெயிலா”ன்னு’ நல்லா விசாரிச்சு விட்டு பிறகு வண்டி ஏறுங்க” என்று சொல்லி இருக்கிறான்.அது அந்த விவசாயிக்கு ஞாபகம் வரவே அவர் தன் மனைவியை அழைச்சுகிட்டு ஓடிப் போய் ஒரு பெட்டி யின் வெளியே நின்றுக் கொண்டு,எதிரே வந்த TTEயைப் பார்த்து “சாப்,ஏ கல்கா மெயில் யா,ஆஜ் கா மெயில்” (சார்,இந்த வண்டி நேற்றைய வண்டியா,இன்றைய வண்டியா’) என்று அவர் சந்தேகத்தை ஹிந்தியிலே கேட்டார்.

அந்த TTE மொட்டையாக “யே கல்கா மெயில்” என்று பதில் சொல்லி விட்டு,மற்ற பிரயாணி களிடம் பேச ஆரம்பித்தார்.விவசாயிக்கு சந்தேகம் வந்து,அந்த TTE யைப் பார்த்து தன் சந்தேகத்தை மறுபடியும் கேட்டார்.அந்த TTE தன்னிடம் இருந்த வண்டி “சார்ட்டை” பார்த்துக் கொண்டே மறு படியும் “யே கல்கா மெயில்” என்று சொல்லி விட்டு வேறே ஒரு நண்பர் இடம் பேசப் போய் விட்டார். உடனே அந்த விவசாயி ஓடிப் போய் மற்றோரு பெட்டி கிட்ட இருந்த TTE இடம் தன் சந்தேகத்தை கேட்டார்.அவரும் முன்னே சொன்ன TTE சொன்னது போல அதே பதிலையே சொன்னார்.(ஹிந்தி பாஷயிலே கல்கா மெயில் என்று சொன்னால் இரண்டு அர்த்தம்.

“ஒரு அர்த்தம்” இந்த வண்டி கல்கா மெயில் என்பது.

“இன்னொறு அர்த்தம்” இது நேற்றைய தோ,இல்லை நாளையதோ வண்டி என்பது).

ரெண்டு TTE சொன்னதையும் கேட்ட விவசாயி ‘சரி, இந்த வண்டி நேற்றைய வண்டி,நாம இன்றைய வண்டிக்குத் தானே முன் பதிவு பண்ணி இருக்கோம்.இந்த வண்டி ரொம்ப லேட்டா வந்து இருக்கு போல இருக்கு” என்று நினைத்து அந்த வண்டியில் அவர் ஏறவில்லை.

அந்த வண்டி புது டில்லி ‘ஸ்டேஷனை’ விட்டு கிளம்பிப் போய் விட்டது.

பதினைந்து மணி நேரம் கழித்து புது டில்லிக்கு வந்த கல்கா மெயில் வந்து நின்றது.

அந்த விவசாயி யாரையும் ஒன்னும் கேட்காமல் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தான் முன் பதிவு பண்ணி இருந்த “S4 ஸ்லீப்பர்” வண்டியில் ஏறி,தான் முன் பதிவு பண்ணி இருந்த “பெர்த்’ எண்ணைப் பார்த்து,அங்கு தன் சாமான்களையும் எல்லாம் வைத்து விட்டு தன் மனைவியுடன் உட்கார்ந்துக் கொண்டு ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டார்.

அவர் பெரு மூச்சு விட்டு முடியவில்லை.

ஒரு கணவன் மனைவி தங்கள் சாமான்களுடன் அந்த ‘பெர்த்து’க்கு வந்து தங்கள் சாமான் களை வைக்க ஆரம்பித்தார்.அவருக்கு இடம் போதாததால் அவர் விவசாயி வைத்து இருந்த சாமான்களை எடுத்து வேறே இடத்தில் வைக்க ஆரம்பித்தார்.

விவசாயிக்கு கோவம் வந்து அவரைப் பார்த்து “ஏன் என் சாமாங்களை எடுத்து வேறே இடத்லே வக்கிறீங்க” என்று கேட்டதும் வந்தவர் “இந்த ‘பெர்த்கள்’ ரெண்டும்,நான் எனக்கும் என் மனைவி க்கும் போட்டு இருக்கும் ‘பெர்த்துகள்” என்று சொல்லவே,இருவர் நடுவிலும் பலத்த விவாதமும் கை கலப்பும் ஏற்பட்டது.

உடனே அந்த பெட்டி TTE வந்து “என்ன சமாசாரம்.ஏன் சண்டை போடுறீங்க” என்று விசாரித்தார்.

பிறகு தன் “சார்ட்டை”ப் பார்த்து விட்ட பிறகு அந்த விவசாயிடம் “சாப்,இந்த ‘பெர்த்’ ரெண்டும் இவர் முன் பதிவு பண்ணி இருக்கார்” என்று சொல்லி விட்டு,விவசாயிடம் இருந்து அவர் முன் பதிவு பண்ணி இருந்த ‘டிக்கட்டை’ வாங்கிப் பார்த்து விட்டு “நீங்க,நேத்து கல்கா மெயிலிலே தானே முன் பதிவு பண்ணி இருக்கீங்க.தயவு செஞ்சு உங்க சாமான்களை எல்லாம் எடுத்துக் கிட்டு கீழே இறங்குங்க” என்று சொல்லி அந்த விவசாயியையும் அவர் மனைவியையும் கீழே இறங்கச் சொன்னார்.

அந்த விவசாயி தன் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மனைவியுடன் வண்டியை விட்டு கீழே இறங்கினார்.

‘நாம ரெண்டு TTEயையும் விசாரிச்சும் இந்த தப்பு நடந்து போச்சே’ என்று தன் தலை விதியை நொந்துக் கொண்டு இருந்தார்.

ஒரே சொல் ‘கல்’ தான்.

வண்டி பேரும் ‘கல்கா மெயில்’.அந்த வண்டி நேற்றைய வண்டியாய் இருந்தாலும்,இன்றைய வண்டியாய் இருந்தாலும் அது “கல்கா மெயில்” தானே!!!!!

பாவம் அந்த விவசாயியிக்கு அது தெரியவிலை!!

பிரபல நடிகர் ராஜ் கபூர் அந்த நாளில் “கல் ஆஜ் அவுர் கல்” என்று ஒரு வெற்றீ கரமான ஹிந்தி சினிமாவை எடுத்தார்.இந்த படத்தில் அவர் முதல் வார்த்தை “கல்” (அதாவது நேற்று) என்கிற வார்த் தைக்கு அவர் அப்பா ப்ருத்வி ராஜ் கபூரை நடிக்க வைத்தார்.’ஆஜ்’(இன்று) என்கிற வார்த்தைக்கு அவர் தானே நடித்தார்.கடைசி “கல்” என்கிற வார்த்தைக்கு அவர் தன் மகன் ரந்தீர் கபூரை நடிக்க வைத்தது நம்மால் மறக்க முடியாதே!!

ஒரு தடவை ஒரு மெல்லிசை கச்சோ¢யில் பாட S.P.பாலசுப்பிரமணியம் வந்து இருந்தார்.அவர் பாடலைக் கேட்க பல ரசிகர்கள் குழுமி இருந்தார்கள்.

S.P.பாலசுப்பிரமணியம் பல ஹிந்தி சினிமாக்களில் ஹிந்தி பாடல்கள் பாடியது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

அன்று அந்த மெல்லிசைக் கச்சோ¢க்கு கங்கை அமரனும் வந்து மேடையில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.

அவர் ஒரு பாடல் ஆசிரியர்.கூடவே நிறைய தமிழ் படங்களில் பாடல்களும் பாடி இருக்கிறார்.

அவர் திடீரென்று எழுந்து நின்றுக் கொண்டு “இப்போ பாலு அவர் பாடின ஒரு ஹித்திப் பாட்டின் ஒரு வரியைப் பாடுவார்.நான் அந்த பாடலின் வரியை தமிழில் பாடப் போகிறேன்”என்று சொல்லி விட்டு “பாலு,நீ பாடின ஒரு ஹிந்திப் பாட்டை இப்போ பாடு” என்று சொன்னதும் பாலசுப்பிரமணியம் “ஏக் தூஜே கேலியே” என்கிற ஒரு ஹிந்தி படத்தில் கமல் ஹாஸனும்,ரதி அக்னி ஹோத்ரியும் சேர்ந்து நடித்த ஒரு பாட்டைப் பாடினார்..

ஒரு பாடலின் முதல் வரியான “தேரே மேரே பீச் மே” என்று பாடி நிறுத்தினார்.

உடனே கங்கை அமரன் “நீயும் நானும் நேத்து பீச்சிலே” என்று பாடினார்.

பாலு பாடின ஹிந்தி “பீச்” என்கிற வார்த்தைக்கு “இடையே’ என்கிற அர்த்ததுக்கு கங்கை அமரன் அந்த வார்த்தையை “பீச்சிலே” என்று தமிழாக்கம் செய்ததைப் பார்த்து அந்த கச்சோ¢க்கு வந்து இருந்த எல்லா ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *