‘அவுட்’ அண்ணாஜி

 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேர்வகிடு , நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கையிலே தோல் பை, கலகலப்பான குரல் – இவை யாவும் அவுட் அண்ணாஜிக்கே உரிய அம்சங்கள்.

இந்த உலகத்தில் அண்ணாஜிக்குத் தெரியாத ஆசாமிகளே கிடையாது.

முன்பின் தெரியாதவர்களிடத்திலே கூட ரொம்ப நாள் பழக்கப்பட்டவனைப் போல் பேச ஆரம்பித்து விடுவான்.

அவுட் வாணம் உதிர்வது போல் சளசள வென்று பேசிக்கொண்டே இருப்பான். ஆனாலும் அவன் பேச்சிலே ஒரு சுவாரசியம் இருக்கும்.

“எங்கேடா , அண்ணாஜி! உன்னைக் கொஞ்ச நாளாய்க் காணோம்?” என்று யாராவது கேட்டுவிட்டால் போதும். புருடாக்களும், கப்சாக்களுமாய் உதிர்த்துத் தள்ளிவிடுவான். தன்னுடைய பொய்களைக் கேட்பவர்கள் நம்புவார்களா என் பதைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை.

“நேற்றுதான் டில்லியிலிருந்து திரும்பி வந்தேன். போன இடத்தில் ஒருவாரம் டிலே ஆகிவிட்டது. இப்போது தான் ப்ளேனில் மீனம்பாக்கம் வந்து இறங்கினேன். டாம் அண்டு டிக் கம்பெனி புரொப்ரைட்டரும் என்னோடுதான் விமானத்தில் வந்தார். அவர் காரிலேயே என்னையும் அழைத்து வந்து விட்டார்” என்று தன்னுடைய பிரதாபங்களை அவிழ்த்து விடுவான்.

அண்ணாஜியைத் தெரியாத பேர்வழிகளாயிருந்தால் அவன் போடுகிற போட்டைக் கண்டு அசந்து போவார்கள். ‘ரொம்ப செல்வாக்கு உள்ளவன் போல் இருக்கிறது!’ என்றும் எண்ணிக் கொள்வார்கள். அண்ணாஜி சமாசாரம் அவர்களுக்கு என்ன தெரியும்!

“டில்லியிலே ஏன் டிலே?” என்று நாம் அவனைக் கேட்க வேண்டியதில்லை; அவனாகவே சொல்வான்:

“டிபன்ஸ் மினிஸ்டர் வி.கே.மேனன் என் கிளாஸ் மேட்டாச்சே. தற்செயலா என்னைப் பார்த்துவிட்டார்.

‘ஹல்லோ அண்ணாஜி! எங்கே கவனிக்காமலே போறே? வா பங்களாவுக்கு!’ என்றார். அவரோ ஓல்ட் பிரண்ட்; டிபன்ஸ் மினிஸ்டர் வேறே. எப்படித் தட்டறது; சரின்னு அவரோட போனேன். டீ கொடுத்தார். மேனன் ஆச்சே! எனக்கு டீ பிடிக்காது. என்ன செய்யறது! குடிச்சு வைத்தேன்.”

“வந்தது வந்தே. என்னோடு கெய்ரோவுக்கு வறயா. நாசரைப் பார்த்துவிட்டு வரலாம்னார். எனக்கும் நாசர் கிட்டே கொஞ்சம் வேலை இருந்தது. சரின்னு புறப்பட்டேன்.”

“நாசர்கிட்டே உனக்கென்ன வேலை?”

“ஒரு பிஸினஸ் விஷயமாகத்தான். நாசரிடம் அஸ்வான் டாம் காண்டிராக்ட் கேட்டிருந்தேன். சூயஸ் தகராறு தீரட்டும்; அப்புறம் சொல்றேன் னு சொல்லியிருந்தாரு. கெய்ரோவுக்குப் போய்விட்டு இண்டியாவுக்குத் திரும்பினேன். பம்பாயில் இறங்கி டெஸ்ட் மாட்சைப் பார்த்து விட்டுக் கார் ஏறப்போறேன். கிரிக்கெட் பிளேயர் கண்டி ராக்டர் இல்லே கண்டிராக்டர் – அவன் என்னைப் பார்த்துட்டான். ‘செஞ்சுரி போட்டேனே, பார்த்தாயா அண்ணாஜி?”ன் னான். கையைப் பிடிச்சுக் குலுக்கினான். பிளேனலே ஏதோ அகாமடேஷன் தகராறு; கொஞ்சம் இடம் பிடிச்சுக் கொடுக்க முடியுமா?’ன்னான். சரின்னு ஏர் – இண்டியாவுக்கு டெலிபோன் பண்ணினேன். என் குயரி கால் மிஸ் கல்பனா தன்னுடைய ஸ்வீட் வாய்ஸலே ‘என்ன வேண்டும்? னா. நான் தான் அண்ணாஜின்னேன். அவ்வளவுதான் ஹல்லோ! அண்ணாஜியா? உங்க லெதர்பாக் இங்கேயிருக்குது. மறந்து வெச்சுட்டுப் போயிட்டீங்க. வந்து வாங்கிட்டுப் போங்கோன்னா. உடனே காரில் புறப்பட்டுப் போய் அந்தச் சிந்தி கால்கிட்டே பையை வாங்கிண்டேன். என் பிசினஸ்ஸே அதில் தானே இருக்குது?”

“‘அண்ணாஜி! நீங்க ஒரு மொபைல் மல்டிபிளைட் பிஸினஸ் இன்ஸ்டிட்யூஷன்’ ன்னு அவ எனக்கு ஓர் அட்சதையைப் போட்டாள். கிறிஸ்மஸ் பிரசண்டுக்குத்தான் அடிபோடறாங் கிறது எனக்குப் புரியாதா? சாக்லெட் டின்னை வாங்கிப் போட்டுட்டு, கண்டிராக்டருக்கும் ஒரு ஸீட் புக் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்”

அண்ணாஜி இப்படி அளந்து கொண்டேயிருப்பான். திடீரென்று ஏதாவது ஒரு காரில் தொத்திக்கொண்டு போய் விடுவான். மறுபடியும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ கழித்துத்தான் மீண்டும் தென்படுவான்.

அவனுக்கு எப்போதும் ஒரே அவசரந்தான். இறக்கை கட்டிக் கொண்டு பறந்தபடியே இருப்பான். ‘இன்றைக்கு ஓர் இடத்தில் ஓபனிங் செரிமனி’ என்பான். நாளைக்கு ‘ஓர் இடத்தில் மூடுவிழா’ என்பான்.

பம்பாய், கல்கத்தா, டில்லி, லண்டன், சௌத் ஆப்பிரிக்கா எல்லா இடங்களிலும் தனக்குப் பிஸினஸ் இருப்ப தாகவும், எல்லா இடங்களிலும் எல்லாரையும் தெரியும் என்றும் சொல்வான். எல்லாம் ஒரே ஹம்பக்!

எல்லாருக்கும் புத்தி சொல்வான். எல்லோரும் தன் பேச்சைக் கேட்காமல் கெட்டுப் போனது போல அங்கலாய்ப்பான். புதிய பிஸினஸுக்குப் பல யோசனைகளும் டாகுமெண்டுகளும் ரெடியாக வைத்திருப்பதாகப் பையைத் தூக்கிக் காட்டுவான்.

அப்படி என்ன பிஸினஸ் என்று யாராவது கேட்டால், ஆவாரம் தழையிலிருந்து காப்பியைப் போல் ஒரு பானம் தயாரிக்கப் போகிறேன். ஆவாரம் இலையிலிருந்து (Leaf) தயாரிப்பதால் காபிக்குப் போட்டியாக லீம்பி என்று அதற்குப் பெயர் வைக்கப்போகிறேன்” என்பான்.

“ஒரே தீக்குச்சியில் திருப்பித் திருப்பி நெருப்புண்டாகும் எடான் மாட்ச் ஸ்டிக், ரப்பர் பிளேடு, தேயாத டயர், உருகாத ஐஸ் – இப்படி எத்தனை எத்தனையோ நவீன அதிசயப் பொருள்களெல்லாம் உற்பத்தி செய்யப் போகிறேன். அமெரிக்காவிடம் டாலர் உதவி கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறேன். சரக்குகளைத் தயாரித்து உடனே மாதிரிக்கு அனுப்பும்படி இன்றுதான் பதில் கடிதம் வந்திருக்கிறது அமெரிக்கன் எம்பஸியில் என்னை ‘இண்டர்வியூ’ கேட்டிருக்கிறார்கள். எனக்கோ டயம் இல்லை.”

“ஏன் ரொம்ப பிஸியோ?”

“ஆமாம்; என் மச்சினியின் முதல் குழந்தைக்கு ஆண்டு நிறைவு. அதற்கு நான் அவசியம் இங்கே இருக்கவேண்டும்.

“யார் கூப்பிடறது? போன் காலா! பைனான்ஸ் மினிஸ்டரா? எனக்கா? இதோ வந்துட்டேன். உங்களை அப்புறம் மீட் பண்றேன், ஸார்”

குட் மார்னிங்…

- கேரக்டர், 9வது பதிப்பு-1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை. 

தொடர்புடைய சிறுகதைகள்
பரதனும் பாதுகையும்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் ...
மேலும் கதையை படிக்க...
வாஷிங்டனில் திருமணம்
(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 "இதுதான் வாஷிங்டன் டி.ஸி." என்றான் பஞ்சு. "அதென்னடா டி.ஸி.ஏ.ஸி.ன்னு?... வாஷிங்டன் என்று சொன்னால் போதாதோ?" என்று கேட்டார் மாமா. "ஒரு வேளை ...
மேலும் கதையை படிக்க...
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு காலை . ஒன்பது மணிக்கு நேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில் பெரிய மாநாடுபோல் ஷாமியானா போட்டு, 'இகபானா' அலங்காரங்களுடன் மேடை அமைத்திருந்தார். சக்ரவர்த்தி குடும்பத்தார், ஜப்பான் நாட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
வாஷிங்டனில் திருமணம்
(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 "பிள்ளைக்கு ஒரு கார், பெண்ணுக்கு ஒரு கார். தவிர, கல்யாணச் செலவுக்கென்று பத்து லட்சம் டாலரைத் தனியாக ஒதுக்கி ...
மேலும் கதையை படிக்க...
மாணிக்க முதலியார், ரத்னசாமிப் பிள்ளை இரண்டு பேரும் டயரி போட் டார்கள். இரண்டு பேர் போட்ட டயரி களும் லக்ஷக்கணக்கில் செலவழிந்தன. ஆனால், ஒவ்வொரு வருஷமும் முதலியா ருக்கு மட்டும் அதிக லாபம் கிடைத்தது. அதன் ரகசியம் பிள்ளைக்கு விளங்க வில்லை. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
வாஷிங்டனில் திருமணம்
(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 | அத்தியாயம் 6 "மிஸ்டர் பஞ்ச்! (பஞ்சைத் திரித்து 'பஞ்ச் சாக்கிவிட்டார் மிஸஸ் ராக்ஃபெல்லர்!) ஐ டோண்ட் நோ எனிதிங்... இந்த மேரேஜ்ல ...
மேலும் கதையை படிக்க...
‘நான்தான்’ நாகசாமி
கையிலே ரிஸ்ட் வாட்ச், விரலிலே வைர மோதிரம், குரலிலே ஒரு கம்பீரம். இந்த லட்சணங்களைக் கொண்டவர்தான் நாகசாமி. அவருக்குத் தெரியாத பெரிய மனிதர்கள் கிடையாது. அவரால் சாதிக்க முடியாத காரியங்களும் கிடையாது. யாருக்கும், எந்த நேரத்திலும், எம்மாதிரி உதவி தேவையானாலும் நாகசாமியைத் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 ஒன்று, இரண்டு என்று தொடங்கி ஐந்து வரை விரல் விட்டு எண்ணினார் புள்ளி சுப்புடு. அப்படி எண்ணும்போது நம் ஊர் வழக்கப்படி இல்லாமல், கட்டை விரலில் தொடங்கி சண்டுவிரலில் முடித்தார். "இதென்னய்யா தலைகீழ்ப்பாடமா கட்டை விரல்லேருந்து எண்றீங்க! ...
மேலும் கதையை படிக்க...
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆந்திரா நெய் வியாபாரியைப்போல் சட்டைப்பையில் திணிக்கப்பட்ட ஒரு சிறு கணக்கு நோட்டுப் புத்தகம், அத்துடன் இரண்டு பவுண்டன் பேனாக்கள், ஒன்றில் சிவப்பு மசி, இன்னொன்றில் நீல மசி. தெரிந்தவர்களுடைய ...
மேலும் கதையை படிக்க...
கையெழுத்து வேட்டை
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் ...
மேலும் கதையை படிக்க...
பரதனும் பாதுகையும்
வாஷிங்டனில் திருமணம்
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
வாஷிங்டனில் திருமணம்
டயரி ரகசியம்!
வாஷிங்டனில் திருமணம்
‘நான்தான்’ நாகசாமி
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
‘புள்ளி’ சுப்புடு
கையெழுத்து வேட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)