கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 14,908 
 
 

(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 7 | அத்தியாயம் 8 – 14 | அத்தியாயம் 15 – 19

அத்தியாயம் 8

லாக்கப்பிலிருந்து அழைத்து வரப்பட்ட அந்த மனிதனைப் பார்த்ததும் பிரபுவும் ஜானியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் . பிரபு ஜானியிடம் கண்களால் பேச, புரிந்தது என்பதற்கு அடையாளமாய் தலையை ஆட்டினான் ஜானி.

” பிரபு …! நீங்க இறந்தவனோட போட்டோவைக் காட்டினீங்களே … அவன்தானே இவன் …?” சற்குணம் இவர்களைப் பார்த்துக் கேட்க,

” ஐயயோ … என்ன சொன்னீங்க…! நா இறந்து போயிட்டேனா … இப்பிடி பட்ட பகல்ல குத்துக் கல்லாட்டம் உங்க முன்னால நிக்கும்போதே இப்பிடி சொல்றீங்களே …. இது நியாயமா ..?”

லாக்கப்பிலிருந்து வெளியே வந்தவன் அலறினான். ” ஏய் .. என்னசத்தம் அதிகமா வருது . இது போலீஸ் ஸ்டேசன் தெரியுமுல்ல . நீ உயிரோடு இல்லாம ஆவியை புடிச்சிட்டு வந்தோம்னா சொன்னோம். வாயை மூடிக்கிட்டு நில்லு . வாயத்துறந்தே கையக் கால முறிச்சிடுவேன் .” சற்குணம் அதட்டலில் அவன் அமைதியாக கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.

” சற்குணம் …. இந்த ஆளை எங்கே புடிச்சீங்க…?” பிரபு கேட்க,

‘நேத்து அந்த பங்களா இருக்குற காட்டுப் பக்கம் சர்ச் பண்ணிணோம் . இவன் அந்த பங்களா பக்கமா சுத்திக்கிட்டு இருந்தான்.

டவுட் வந்ததாலே அவனை கொண்டு வந்தோம். இப்ப சொல்லுங்க… செத்தவன் எப்படி உயிரோடு வந்தான்?”

கண்டிப்பா இந்த ஆள்தான். ஏன்னா … நாங்க இவரை நிறுத்திதான் வழி கேட்டோம் . கொஞ்ச நேரத்துல பின்னாடி பொணமா கிடக்கிறான் . இப்ப இங்க இருக்கிறான் . அதுதான் எனக்குப் புரியவில்லை.”

” பாஸ் …! ஆனா அந்த ஆளுக்கு ஒரு கால் கட்டைக்கால் மாதிரி இருந்துதே …”

” ஆமாம் … நா அத மறந்தே போனேன் . சற்குணம் அந்த அப்ஸ்கான்டட் பாடிக்கு கால் ஒண்ணு கட்டைக்கால் …” ” ஐயா …. நா உங்ககிட்ட ஒண்ணு சொல்லலாமா…?”

சற்குணத்தைப் பார்த்து அம்மனிதன் பணிவாக கேட்க ” என்ன …. நான் அவனில்லை என்று சொல்லப் போறியா … சொல்லு …”

ஆமாங்கய்யா…. கண்டிப்பா அது நானில்லை . ஏன்னா …. என்தம்பிக்குத்தான் கட்டைக்கால் . நாங்க இரட்டைப்பிறவிங்க.

என்னைப்போலவே என் தம்பியும் இருப்பான் . என் பெயர் ராமன் . தம்பி பேரு லட்சுமணன்.

ஆனா … ஒரு ஆக்ஸிடென்டுல அவனுக்கு ஒரு கால் போயிடுச்சி. அதுலேருந்து அவனுக்கு
கட்டைக்கால்தான்தான்.

ரெண்டு வருசத்துக்கு முந்தி காணாம போயிட்டாங்க. நாங்களும் எங்கெல்லாமோ தேடினோம் . ஆனா கிடைக்கவேயில்லீங்க… இப்ப நீங்க சொல்றவன் அவனாதான் இருக்கணும்.

ஐயோ தம்பி..! உன்னை நான் இப்பிடியா பாக்கணும் ….!” என்று அழ ஆரம்பிக்க

” ஏய் … வாய மூடு . இல்லன்னா ஒரே மிதி . தெரியுமில்ல போலீஸ்காரன் மிதி எப்பிடி இருக்கும்னு …”

அப்போது ஜானி ஒரு துண்டு பேப்பரை சற்குணம் கையில் திணிக்க,

கேள்விக்குறியோடு அவனைப் பார்த்து விட்டு அந்த பேப்பரை படித்தார் சற்குணம் .
அதில் ‘ அவனை விடுவித்து விடுங்கள். மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம் ‘ என்று இருந்தது.

சற்குணம் பிரபுவைப் பார்க்க, பிரபுவும் தலையாட்ட, இன்னும் அழுது கொண்டிருந்த அவனைப் பார்த்து ” ஒகே…! ஏய் இங்கப்பாரு முதல்ல அழுகையை நிறுத்து . உன் பேர் ஊரு எல்லாத்தையும் எழுதி கையெழுத்துப் போட்டுட்டு போ. எப்ப வேணுண்ணாலும் கூப்பிடுவோம். புரியுதா … அப்புறம் அந்த பங்களா பக்கம் மறுபடியும் உன்ன பார்த்தேன் அவ்வளவுதான் …” சற்குணம் கூற,

“சரிங்கய்யா…! நீங்க சொல்றபடியே நடந்துக்கிறேன். ஒரு விண்ணப்பம் … சீக்கிரமா என் தம்பி பாடியை கண்டுபிடிச்சி குடுத்துடுங்க . அவனுக்கு பொண்டாட்டி புள்ளக்குட்டி யாரும் கிடையாது நான்தான் அவனுக்கு எல்லாம் மத்த காரியம் பாக்கணும் …”

” சரி .. போ … பாடி கிடச்சா இன்பார்ம் பண்றோம் … கனி இந்த ஆளுக்கிட்ட கையெழுத்து வாங்கிகிட்டு அனுப்புங்க…”

அவன் சென்றதும் இருவரையும் பார்த்து ” என்ன விசயம் … ஏன் அவன அனுப்பச் சொன்னீங்க …?’ சற்குணம் கேட்க,

“யாரையாவது அனுப்பி அவனை பாலோ பண்ணச் சொல்லுங்க … அவனுடைய நடவடிக்கையை அப்டேட் பண்ணச் சொல்லுங்க ….” பிரபு கூறியதும்

அப்படியா சரி …. வெற்றி…! இங்க வாங்க . இப்ப போனவனை பாலோ பண்ணுங்க . அவனுடைய நடவடிக்கையில் ஏதாச்சும் சந்தேகம் இருந்தால் உடனே இன்பார்ம் பண்ணுங்க” என்று சொல்லியதும்,

” ஓகே சார்…!” என்று கூறிவிட்டு வெற்றி என்கிற கான்ஸ்டபிள் வெளியே செல்ல,

“இப்ப சொல்லுங்க … என்ன விசயம் …?”

” நாங்க இப்ப சொன்னேமே செத்தவனுக்கு கட்டக்காலுன்னு … அது பொய் . ஏன்னா … அது மனுசனே இல்லை . இப்ப போனானே அவன மாதிரியே உள்ள மெழுகு பொம்மை .”

பிரபு கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த சற்குணம் “என்ன …!” என்று நாற்காலியை விட்டு எழுந்து விட்டார்.

மீண்டும் “என்ன சொன்னீங்க …. மெழுகு பொம்மையா அன்பிலீவுபுள்! ரொம்ப குழப்புதே உங்க பதில் ….” படபடப்புடன் பேச,

ஆமாம் சற்குணம் …! நாங்க கூட அன்னிக்கி அப்படித்தான் குழம்பி போனோம் . அத அன்னிக்கே உங்ககிட்ட சொல்லியிருக்கலாம் . ஆனா கண்டிப்பா இந்த ஆளு வெளியே வருவான்னு நம்பினோம். நீங்க கண்டிப்பா அவனை புடிப்பீங்கன்னும் தெரியும். அவனை வெச்சித்தான் இதுக்கெல்லாம் விடை கண்டுபிடிக்கணும்னு நினைச்சோம் . சோ ஐஅம் சாரி ..! உங்ககிட்ட மறைச்சதுக்கு …” பிரபு கூறியதைக் கேட்ட சற்குணம்
இட்ஸ் ஒகே..! அப்ப இதுல பெரிய பேக்கிரவுண்ட் இருக்குன்னு சொல்றீங்க …?”

“யெஸ் … நாங்க அந்த பங்களாவை பாக்ககூடாதுன்னு யாரோ நினைக்கிறாங்க …”

“கண்டிப்பா அதுதான் . பை த பை நீங்க ரெணாடு பேரும் கேர்புல்லா இருங்க … நா இதை டீல் பண்ணீக்கிறேன் …”

“நா அந்த பங்களாவை பாக்கணுமே …. எப்ப பாக்கலாம்…?”

“கொஞ்ச நாள் போகட்டும் . இந்த கேசு எப்பிடி எப்படி முடியுதுன்னு பார்க்கலாம் … ஏன்னா … நீங்க சொன்னமாதிரி இதுல ஏதோ ஒரு கிரைம் இருக்கு. அதனால் பல பிரச்சினைகள் ஏற்படலாம் … அதனால சொல்றேன் “

“ஆமாம் . நீங்க சொல்றதும் சரிதான் . சரி… அப்ப நாங்க கிளம்புறோம் … கோர்ட்டுக்கு போகணும் ..” இருவரும் சற்குணத்திடம் விடை பெற்று சென்றனர். பிரபுவும் ஜானியும் தங்கள் ஏரியா காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.”

சிறிது நேரத்தில் எஸ் . பி . சிரீதரன் உள்ளே நுழைய பிரபுவை கண்டதும் ” நண்பா … எப்படா வந்தே..? போன் பண்ணியிருந்தா சீக்கிரம் வந்துருப்பேனே …” என்று கூறிக்கொண்டே கட்டிப் பிடித்தார் எஸ் . பி .

“ஜஸ்ட் ஆப் அன் அவர் தான் ஆச்சு . அபிசியலா உன்னைப் பாக்கணும் . அதான் இங்கே வந்தோம்” பிரபு கூற,

அப்பொழுதுதான் ஜானியைக் கவனித்தவர் ” ஹாய் ஜானி …! ஹெள ஆர் யூ அண்ட் டினா ..?” என்று கேட்டபடி கை குலுக்க

‘ஒகே…. வீ ஆர் பைன். தென் ஹௌ ஆர் யூ அண்ட் யுவர் வொர்க்ஸ் …?” ஜானியும் கை குலுக்கியபடி கூற, “பைன் …!, ஆல்வேஸ் அஸ் யூஸ்வல்.

என்ன பிரபு … அபிசியலா இருந்தாலும் நீ போன் பண்ணி இருந்தா வீட்டுக்கே வந்திருப்பேனே … எனி திங் ஸ்பெசல் …?

யெஸ் … ” என்று கூறிய பிரபு நிலாவின் பேக் எரிந்த சம்பவமும் அதற்கு தாங்கள் எடுத்த
நடவடிக்கைகளையும் கூறி விட்டு புட்டேஜ் கேசட்டை சீரியிடம் கொடுக்க
அதை வாங்கி லேப்டாப்பில் போட்டு பார்த்தவர் பிரபு … அந்த சேனா உள்ளே இருந்தும் அடங்க மாட்டேங்குறான் . இவன் சேனாவோட ஆளுதானே …. அவனை புடிச்சி மிதிமிதின்னு மிதிக்கிறதுல எல்லா உண்மையையும் கக்கப் போறான்.
அதுக்கப்புறந்தான் இருக்கு அந்த லேனாவுக்கு. சரி நிலா நல்லாயிருக்காங்க இல்ல …”

“அவங்கதான் ரொம்ப பயந்துட்டாங்க… அப்புறம் சமாதானப்படுத்தி ஆறுதல் சொன்னதாலே அமைதியானங்க …” ஜானி பதில் கூறவும்

“பிரபல லீடிங் கிரிமினல் லாயர் வொய்பா ஆகப்போறவங்க இதுக்கெல்லாம் பயந்தா சரிப்படுமா …? என்ன ஜானி நா சொல்றது …”

‘ எக்ஸாட்லி ..! ஆமா இந்த விசயம் உங்க காதுக்கும் வந்தாச்சா…?’

ஜானி கேட்ட கேள்வியில் இருவரும் சிரித்து விட்டனர் .

‘என்னப்பா … இப்பிடி கேக்குறே … நாங்க ரெண்டு பேரும் எல்கேஜி லேயிருந்து ஒண்ணா படிச்சி அவரவர் லைன்ல ஒண்ணா வேலைக்கி வந்தவங்க .

எங்க ரெண்டு பேருகிட்டயும் எந்த ஒளிவு மறைவும் இருக்காது தெரியுமா…?”

அப்புறம் ஜானி…! உன்னோட ப்ளேபாய் லெவல் எப்பிடி இருக்கு…. ஸ்மூத்தா போகுதா …?”
‘போங்க சார் … நீங்ககூட என் பாஸ் மாதிரியே கலாய்க்கிறீங்க …” வெட்கத்துடன் ஜானி பேச,

” என்ன ஜானி … சிரீ ரொம்ப கலாய்க்கிறானா .. அவன் உன்னை மட்டுமல்ல… என்னையும் அப்படித்தான் கலாய்ப்பான்.

‘இட்ஸ் ஒகே பாஸ் … உங்க பிரண்டு எனக்கும் பிரண்டு தான் . அப்ப அந்த விசயம் சொல்லீட்டீங்களா …?”

‘இல்லை … இப்ப வேணாம். பாத்துக்கலாம்.”

‘என்ன பாத்துக்கலாம் … என்ன பிரபு ..?”

” நத்திங்… ஒரு கேசு சம்பந்தமா பேசினோம் … சரிப்பா …நாங்க கிளம்புறோம் …”

‘ஏய்…! என்னப்பா … அதுக்குள்ள கிளம்புற. ஒன் அவர் இரு. நானும் வரேன் . அம்மாவைப் பார்த்து நாளாச்சு..”

” இல்ல சிரீ … வேல இருக்கு. நீ உன் வேலையை முடிச்சிட்டு வா … அப்புறம் வராம மட்டும் இருந்துடாதே .. அம்மா ரொம்ப கோவிச்சிப்பாங்க…”

இருவரும் பேசிக்கொண்டே காரில் ஏற காரில் சீட்டின் மேல் ஒரு கவர் இருந்தது. அதைப் பார்த்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஜானி அதை எடுக்க

“ஏய் … அதை வெறும் கையால எடுக்காதே… சயனைட் ஏதும் தடவி இருக்கப் போகுது .”
ஜானி அதை தனது கர்சீப்பால் எடுத்து பிரித்தான். அதில் …

அத்தியாயம் 9

ஜானி அந்தக் கவரை கர்சீப்பால் எடுத்து மெல்ல பிரித்தான் . அதில்,
‘உயிரோடு கலந்தவள்
உணர்வோடு இருக்கிறாள்
காயமின்றி கடிதில்
கனலோடு கலக்க வா….’

படித்தவன் நெற்றியை சுருக்கியவாறு பிரபுவிடம் கொடுத்தான் . பிரபுவும் அதைப்படித்து விட்டு சிறிது நேரம் மௌனமானான் .

காரை ஓட்டிக்கொண்டே ஜானி ” பாஸ் … நாம காரை பூட்டிட்டு தானே போனோம் . காருக்குள்ளே இந்த கவர் எப்படி வந்திருக்கும் …. புரியாத புதிரா இருக்குதே …?” என்றவனிடம்,

காருக்குள்ளே கடிதம் போடறது ஒண்ணும் பெரிய விஷயமல்ல. எல்லாம் டெக்னாலஜி இம்ருவ்தான் . என்னவானாலும் செய்ய முடியும் . இப்ப அதல்ல பிரச்னை . இது இரண்டாவது கடிதம் . இது என்ன சொல்ல வருதுன்னு தான் என் யோசனை .”

” நா ஒண்ணு சொல்லட்டுமா பாஸ் …! அன்னிக்கி அந்த லேடி வந்துட்டு போனதிலிருந்துதான் இப்பிடியெல்லாம் நடக்குது . அந்த லேடிதான் உங்ககிட்ட ஏதோ மெசேஜ் சொல்லிட்டு இருக்காங்க …. தூய தமிழ்ல விடுகதை போல இருக்குது . அர்த்தம் தெரிஞ்சா ஷெல்ப் பண்ணலாம் …”

‘ம் … ம் .. அப்படித்தான் என் மனசும் சொல்லுது . ஏதோ ஒரு விஷயம் நம்மால செய்ய முடியும்னு அவங்க நினைக்கிறாங்க போல. அடுத்த வாரம் சித்தரை போயி பாத்துட்டு வரலாம் .

அப்புறம் இந்த லெட்டரைப் பத்தி நிலாவுக்கு தெரிய வேணாம் . வீணா அவ டென்சன் ஆக வேண்டாம் …” இந்த வாரம் மூணு கேசு ஹியரிங் வருது . நிறைய வேலை இருக்கு . முதல்ல வேலையை கவனிப்போம். ”

“பாஸ் … எனக்கொன்னு தோணுது . நாளைக்கே நாம ஏன் அவரப் போயி பார்க்க கூடாது
‘நாளைக்கு ஈவினிங் அம்மாவை செக்கப்புக்கு கூட்டிக்கிட்டு போகணும். இந்த வார சண்டே போயிட்டு வந்திடலாம் …அ … அப்புறம் நீ ஒரு முக்கியமான வேலை ஒண்ணு செய்யனும் …’

‘ என்ன பாஸ் … நா வேணா அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போகட்டா …?”
வேணாம் … அம்மாவுக்கு கோவம் வந்துடும். அவங்களை கவனிக்ககூட எனக்கு நேரமில்லையான்னு வருத்தப்படுவாங்க . அத நா பாத்துக்கிறேன். நீ உடனே ஒரு ஜூனியரை அப்பாயிண்ட்மென்ட் பண்ண ஏற்பாடு பண்ணு

“ஏன் பாஸ்… வேற இடத்துல பிராஞ்ச் ஓப்பன் பண்ணப் போறோமா …?”

‘ஆமா … இங்க வர்ற கேசுங்களையே கவனிக்க முடியலை … இப்ப நடந்துக்கிட்டு இருக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் நமக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தனும்னு தோணுது.
நாம அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் நிலாவுக்கு பாதுகாப்பு அவசியம் . அதனாலத்தான் சொல்கிறேன் … அப்புறம் ஜீனியர் ஜென்ட்ஸ்ஸா இருக்கட்டும் ….

“அதுவும் சரிதான் . ரெண்டு லேடீஸ்னா சமாளிக்க முடியாது ….”

“சே …. நீ வேறய்யா …! பாதுகாப்புக்குன்னு சொல்றேன் . நீ என்னன்னா லேடி ஜூனியரைப்பத்தி சொல்றே …? ஜென்ட்ஸ்தான் வேணும்”

“ஒகே … டன் …! அடுத்தவாரத்துக்குள் இன்னொரு ஜூனியர் நம்ம ஆபிசில .”

ஞாயிறு அன்று விடாப்பிடியாக நிலாவும் இவர்களுடன் கிளம்பிவிட்டாள்.

நடுமலை அடிவாரத்தில் சித்தர் பரமனடியார் குகை ஒன்றில் அமர்ந்திருக்க
மூவரும் அவர் எதிரே அமர்ந்திருந்தனர்.

அவர் கையில் இவர்கள் கொடுத்திருந்த இரு கடிதங்களும் இருந்தன .

மூவரையும் ஒருமுறை பார்த்த சித்தர் பேச்சைத் தொடங்குமுன்பு ” சர்வம் சிவமயம் ..!” எனக் கூறிவிட்டு, நிலாவைப் பார்த்து ” இவர்கள் யார் … உனக்கு உறவா …?” எனக் கேட்டார்.

நிலாவைப் பார்த்து ” இவர் என் மனைவியாகப் போகிறவர் … இவர் என் நண்பர் …” என்று ஜானியை அறிமுகப் படுத்த,

“அப்ப இவரை கொஞ்சம் வெளியில இருக்கச் சொல்லுங்க …” என்று அவர் கூறியதும்,
கண்களால் அவளைப் போகச் சொன்ன பிரபுவிடம் மாட்டேன் என்று தலையாட்டினாள் நிலா .

“ப்ளீஸ் …” என்று உதட்டசைவில் பிரபு கூற சம்மதமின்றி வெளியே சென்றாள் நிலா.

சிவார்ப்பணம் …! தம்பி உங்களோட குழப்பம் நியாயமானதுதான் . இது ஆண்டவனின் விளையாட்டு. இதை மாற்ற யாரால் முடியும்.

இதற்கு விடை அந்த பங்களாவில்தான் இருக்கு . உங்களின் பிரிய ஆத்மா ஒன்று
ஏதோ ஒரு தேவைக்காக உங்களைத் தேடுகிறது .. ஆனால் உன்னை உன் நிலையிலேயே வைத்திருக்கவும் விரும்புகிறது

அந்த ஆத்மாவின் நிழல் உம்மைத் தொடரும் வரை எந்த எதிரிகளாலும் உமக்கு ஆபத்து வராது …’

‘சுவாமி…. இதனால பெரிய பிரச்சினை ஏதும் வருமா …” ஜானி கேட்க,

‘எல்லாம் அந்த பரமன் சித்தம். நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும் …”

” இப்ப நான் என்ன செய்யனும் சுவாமி …”

” நீங்க உங்க வேலையை பாருங்க … அதது தானா நடக்கும் …. நீங்க போயிட்டு வாங்க “

வெளியே வந்தவர்களிடம் நிலா விவரம் கேட்க,

” பயப்படும்படி ஒன்றுமில்லை . இது வேண்டாதவர்களின் செயல் என்று கூறினார் … ” என்று கூற

தான் நம்பவில்லை என்பதற்கு அடையாளமாக உதட்டை பிதுக்கினாள்.

அந்த வாரம் படு பிசியாக நகர்ந்தது அவர்களுக்கு. மூணு கேசும் முடிவுக்கு வரும் நிலையில் இருந்தது.

புதிய ஜுனியர் வந்தியத்தேவன் படு சுறுசுறுப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான் .

இண்டர்வியூவில் பலர் கலந்து கொள்ள அதில் படு சுறுசுறுப்பாக இருந்த இளைஞனை இவர்கள் மூவருக்கும் பிடித்துப்போக,

அதற்கேற்றாற்போல் அவன் பெயர் வந்தியத்தேவன் எனக் கூற,

பிரபுவுக்கு மிகவும் பிடித்துப்போனது அவனை . உடனே அவனையே அப்பாயிண்ட்மென்ட் பண்ணிவிட்டார்கள்.

இவர்கள் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் தேவையின்றி யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. வெளியே இருக்கும் சிட்டவுட்டில் சேரை போட்டு உட்கார்ந்திடுவான்.

வெள்ளியன்று மூன்று கேசுமே இவர்கள் பக்கம் வெற்றியைக் கொடுக்க,
அந்த ஞாயிறு அதை கொண்டாட நால்வரும் வெளியே சென்றார்கள்.

கடற்கரையோரம் மிகவும் அமைதியான இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்தார்கள்.

நிலாவும் பிரபுவும் ஒருவரையொருவர் கைகோர்த்தபடி அருகருகே அமர்ந்திருக்க
மற்ற இருவரும் எதிரே அமர்ந்திருந்தனர்.

ஜானி இவர்கள் இருவரையும் கலாய்த்துக் கொண்டிருக்க, நிலா வெட்கப்பட பிரபு அதை ரசித்துக் கொண்டிருந்தான் .

அவர்கள் அமர்ந்திருக்கும் நேரெதிரே மூலை ஓரமாக ஒரு உருவம் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

இவர்களின் சுவாரசியமான பேச்சில் எதிரே இருந்த உருவம் தன் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்தது திடீரென்று பிரபுவின் தோளே யாரோ தொடுவது போலத் தோன்றவே திரும்பி பார்த்த பிரபு யாரையும் தன் அருகே காணததால் மீண்டும் அவர்களின் பேச்சில் கலந்து கொள்ள,

அந்த உருவம் மெல்ல துப்பாக்கியின் டிரிக்கரை பிரபுவை நோக்கி நீட்டியது .
அந்த நேரம் பார்த்து பிரபுவின் நண்பரொருவர் வந்து பேச,

கர்சீப்பால் தன் கையிலிருந்த துப்பாக்கியை மறைத்தது அவ்வுருவம்.
அதற்குள் அவர்கள் சாப்பிட்டு முடித்து சிரித்துக் கொண்டே வெளியேறினர் .

அவர்களைப் பின் தொடர்ந்த உருவம் சுடுவதற்கு தயாராய் துப்பாக்கியை கையில் பிடித்தபடி நடக்க,

காரை அவர்கள் நெருங்கினர் . சரியான சமயம் இதுதான் என்று பிரபுவை நோக்கி சுட,
திடீரென்று யாரோ பின்னால் இருந்து தள்ளுவதைப் போலிருக்கவே பிரபு தடுமாறி கீழே விழ, குண்டு காரைத் துளைத்து கீழே விழ,

வீல் என்று அலறி பிரபுவை ஓடித் தூக்கினாள் நிலா.

சட்டென்று நடந்துவிட்ட நிகழ்வால் நிலைகுலைந்த பிரபு ஜானியைக் கண்களால் கவனிக்க,

ஜானி பின்னால் ஒடிச்சென்று சுட்டவன் யாராயிருக்கும் என்று தேட,

வந்தியத்தேவனும் வேறொரு பக்கம் ஓடிச்சென்று தேட

சத்தம் கேட்டு உணவகத்திலிருந்து பலரும் ஓடிவந்தார்கள்.

ஓரமாக பிரபு அமர்ந்திருக்க நிலா அருகில் அழுதுகொண்டிருந்தாள்.

ஜானியும் வந்தியத்தேவனும் திரும்பி வந்து பிரபுவின் அருகில் அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்கள்.

கேப்டன்…. அடி ஏதும் பட்டுருக்கா …?” வந்தியத்தேவன் பரிவுடன் கேட்க,

” எப்படி பாஸ் நாம கவனிக்காம விட்டோம் … நீங்க மட்டும் கீழே விழாம இருந்திருந்தா… ஐயோ…. நினைக்கவே நடுக்கமா இருக்கு ..” ஜானி கண்கலங்கியபடி கூற,
திடீரென்று நினைவு வந்தவனாக ” ஆமாம் பாஸ் …. எப்படி கீழே விழுந்தீங்க … கீழே கல்லு எதுவும் இல்லியே ….”

“எனக்கும் புரியலை ஜானி … யாரோ திடீர்னு என்னை புடிச்சித்தள்ளன மாதிரி இருந்தது.
அது மட்டும் நடக்காம இருந்திருந்தா என்னவாயிருக்கும் ….?”

” கண்டிப்பா இது மிராக்கிள் தான் . நம்மள பாலோ பண்ற தெய்வம் தான் இப்ப காப்பாத்தி இருக்கு…” ஜானி கூறுவதைக் கேட்ட நிலா,

என்ன ஜானி …. யாரு நம்மள பாலோ பண்றாங்க… நடக்கறதல்லாம் பார்த்தா எனக்கு பயமாயிருக்கு …” மீண்டும் அழ ஆரம்பித்தாள் நிலா .

அதற்குள் போலீஸ் வந்துவிடவே அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

சிரீ பிரபுவைப் பார்த்தவுடன் படபடப்புடன் என்ன பிரபு …. விஷயத்தைக் கேட்டவுடன் நிலைகுலைந்து போய்விட்டேன் . ஏதோ ஒரு ஆபத்து உன்னை தொடர்ந்துகிட்டே இருக்கு … ராஸ்கல்ஸ் … கையில மட்டும் கிடைச்சான் மர்கைய்யாதான். யாருகிட்ட விளையாடுறான் … பிரபு … ஆர் யூ ஆல்ரைட் …?” டென்சனுடன் எஸ் பி விசாரிக்க,

‘ஒண்ணும் இல்லடா … ஐஅம் ஆல்ரைட் … கொஞ்சம் நெர்வஸா ஆயிட்டேன் . அவ்வளவுதான் …”

“சரி நீங்க கிளம்புங்க … பர்தர் ஆக்ஸன் நா பாத்துக்கிறேன் … ஜானி … உங்களுக்கு துணையா கான்ஸ்டபிளை அனுப்புறேன் …வீட்டுக்கு போனதும் போன் பண்ணுங்க…” என்று கூறிவிட்டு தன் பணியை செய்ய ஆரம்பித்து விட்டார் சிரீ.

நீ ஒண்ணும் வொரீ பண்ணிக்காத சிரீ . என்னை பாதுகாக்க எனக்கு வேண்டியவங்க இருக்காங்க… அவங்க இருக்கிறவரைக்கும் எனக்கு எந்த ஆபத்தும் வராது ….” தன்னை காப்பாற்றிய தெய்வத்தை நினைத்து பிரபு கூற,

ஜானிக்கும் அது விளங்கியதால் பிரபுவின் கையோடு கைசேர்த்து அழுத்தினான்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த உருவம் புன்சிரிப்புடன் அவர்களின் காரில் அமர்ந்து கொண்டிருந்தது.

அத்தியாயம் 10

காரில் நால்வரும் சென்று கொண்டிருந்தனர் .

ஜானி காரை ஓட்டிக்கொண்டிருக்க வந்தியத்தேவன் முன்புறச் சீட்டில் அமர்ந்துக் கொண்டிருந்தான் .

பிரபுவும் நிலாவும் பின்புறச் சீட்டில் அருகருகே அமர்ந்திருந்தனர் . நிலா பிரபுவின் கையோடு தன் கையை பிணைத்திருந்தாள் .

தன் தலையை அவன் தோளின் மீது சாய்த்து கண்களில் நீர் வழிய தன் கர்சீப்பை எடுத்து கண்களை அடிக்கடி துடைத்துக்கொண்டிருந்தாள்.

அவள் அழுவதைக் கவனித்த பிரபு

“நிலா …! அதான் எனக்கு ஒன்னும் ஆகலியே … இன்னமும் அதையே நினைச்சி அழுதுகிட்டு இருந்தா எனக்கு கஷ்டமா இருக்காதா …? ப்ளீஸ் …. சொன்னா கேளு…”
நிலா … அழாதீங்க… பாஸிக்கு எந்த ஆபத்தும் கிட்ட நெருங்க முடியாது . அதான் நாலு பில்லர் போல நாம அவரு பக்கத்திலே இருக்கிறோமே … டோண்ட் ஒர்ரி . இனிமே இது போல நடக்காம இருக்க நாம உறுதியா இருப்போம்…”

“நிலா … நீங்க அழுதுகிட்டே இருந்தா கேப்டன் கஷ்டப்படுவாறு . தயவு செய்து அமைதியா இருங்க …” வந்தியத்தேவனும் தன் பங்குக்கு ஆறுதல் கூற,

“சரி … இனிமே நா அழல நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை .
ஆனா … பிரபு அம்மாவுக்கு தெரிஞ்சிருக்குமா …?” கவலையுடன் நிலா கேட்க,

மே பி … இருந்தாலும் அம்மா உன்ன மாதிரி கிடையாது . அழுமூஞ்சித்தனமா இருக்கமாட்டாங்க. ஷி இஸ் எ பிரேவ் லேடி …சொன்னாப் புரிஞ்சுப்பாங்க…!” பிரபு கூறியதைக் கேட்ட நிலா,

‘க்கும் … நா அழுமூஞ்சியா …. நீங்க என் இடத்துல இருந்திருந்தா … அந்த இன்சிடண்ட் எனக்கு நடந்திருந்தா …. நீங்களும் இப்படித்தான் இருப்பீங்க….”

“எக்ஸாட்லி ….! ஆனா இந்நேரம் அவனை துரத்தி போய் புடிச்சி நாலு சாத்து சாத்திருப்பேன். இப்பிடி அழுதுகிட்டு இருக்க மாட்டேன் ….!”

“பாஸ் …. நிலாவ ரிவால்வர் ரீட்டா ரேஞ்சுக்கு கற்பனைப் பண்ணி பாருங்க … எப்படி இருக்கும் …?” ஜானி சொன்னதைக் கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
‘ப்பா … இப்பத்தான் நிலா பளிச்சினு கண்ணுக்குத் தெரியுது ….” பிரபுவின் பேச்சை ரசித்த நிலா பிரபுவின் தலையை மெல்ல கோதிவிட,

தன்னுடைய மற்றொரு பக்கம் அனல்காற்று காதோரமாய் படவே, சட்டென்று திரும்பி பார்த்த பிரபு யாருமில்லை எனத் தெரிந்தும் ஏன் பார்த்தோம் ‘ என நினைத்து வெட்கப்பட்டான் .

“என்ன பிரபு …. ஏன் அந்த பக்கம் பார்த்தீங்க … யாராச்சும் பாலோ பண்ணுறாங்களா ….?” பயத்துடன் நிலா கேட்க,

“நத்திங்…. அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை. எறும்பு கடிச்சமாதிரி இருந்தது …” பேச்சை திசை மாற்றி வேறு பேச்சை பேச ஆரம்பித்தான்.

வீட்டை நெருங்குவதற்குள் எல்லா சேனல்களிலும் லைவ்வாக இந்த நியூஸ் ….”

வீட்டில் அம்மா நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்க, சித்தப்பா அவரை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார்.

இவர்கள் காரின் சத்தம் கேட்டதுமே வெளியே ஓடி வந்தனர் இருவரும்.

இறங்கிய பிரபுவை ஆரத்தழுவிக் கொண்டார் .

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு உள்ளே இருந்து வேலைக்கார பெண்மணி சித்ரா ஆரத்தி கொண்டுவர அம்மா அதை வாங்கி பிரபுக்கு திருஷ்டி சுற்றிப் போட
ஜானி அருகில் வந்து ” அம்மா … எங்களுக்கு கிடையாதா ….?” என்று கேட்க,

உனக்கு இல்லாமலா … வாப்பா ” என்று கூறி அனைவரையும் சேர்த்து சுற்றிப் போட்டார்.

ஜானி நிலாவின் அருகில் வந்து அவள் காதில் கிசுகிசு குரலில் ” பாத்தியா …. இப்பவே உன் மாமியார் உனக்கு ஆரத்தி எடுக்கிறார் ” என்று கூற

வெட்கத்தில் முகம் சிவந்தாள் நிலா.

உள்ளே வந்து அனைவரும் அமர

என்னப்பா நடந்தது…. நியூசைப் பாத்துட்டு நாங்க ஆடிப்போயிட்டோம் . சொல்லு ஜானி … யார் அவன் …. எதுக்காக இந்த வேலை செய்தான் ….?” அடுக்கடுக்காக சித்தப்பா கேள்வி கேட்க,

ஜானி நடந்தவற்றை கூறினான்.

“தாயே கற்பகாம்பா …! நீதான் எம்புள்ளயை பத்திரமா காப்பாத்தி குடுத்திருக்கே….” கோயில் திசைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டார் பிரபுவின் தாய்.

” சரி … இனிமே இதப்பத்தி பேச வேணாம் . அவனோட பீல்டு அப்படி …. நிறைய கிரிமினல்ஸ் அவனோட எதிரியா இருக்காங்க…. அதுல எவனோ செஞ்ச
வேலையாத்தான் இது இருக்கும் . எம்புள்ளக்கி ஆயுசு கெட்டி. எனக்குத் தெரியும். எதுவும் ஒன்னும் பண்ண முடியாது. சரி…. நீங்களும் பத்திரமா வீடு போய் சேருங்க ….”

அனைவரும் விடைபெற்றுச் சென்றபின் பிரபு தன் அறைக்குச் சென்றான் .
விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்த பிரபு தன் அருகில் யாரோ இருப்பதுபோல் உணர்ந்தான் .

இது தன்னுடைய மனப்பிரமையாக இருக்கக்கூடும் என நினைத்தவன் அசதியின் காரணமாக உடனே உறங்கிப் போனான்.

‘நிர்மலேஷ்வரா….நிர்மலேஷ்வரா….!’ கூப்பிடும் குரலுக்கு ‘ ம் … ம் …’ என்று பதில் வரவே,

நீ ஏன் என்னை விட்டுச் சென்றாய்….உனைத் தேடி தேடி அலைந்தேனே….நீ ஏன் எனைத்
தேடவில்லை….மாயவன் உனைத் தொடர்கிறான்… உன்னிலே உள்ளவள்
உணர்வோடு இருக்கிறாள்….கடமையை நீ மறந்து விட்டாய்….உன் கண்மணி காத்திருக்கிறேன்….நம் கடமையை நிறைவேற்றும் காலம் நெருங்குகிறது…. வா….உனக்கான கடமை அழைக்கிறது…. வா…வா’ வருகிறேன் …. வருகிறேன் …. முணுமுணுத்த படி புரண்டு படுத்தான் பிரபு…

காலை வழக்கம்போல் எழுந்தவனுக்கு தலை பாரமாக இருந்தது.

அவன் வருவதைக் கவனித்த அவனுடைய தாயார் ” நல்லா தூங்கினியா … ரெண்டு தடவை உன் ரூமுக்கு வந்தேன் . புரண்டு புரண்டு படுத்திக்கிட்டே இருந்தே …. வந்து நெத்தியிலே விபூதி வெச்சிவிட்டு வந்தேன் ….”

“தெரியலையே … நல்லா தூங்கிட்டேன் . யாராச்சும் போன் பண்ணாங்களா …?” ” ஆமாப்பா … சீரி போன் பண்ணான் . நீ எழுந்திட்டியான்னு கேட்டான் . மதியமா வர்ரதா சொன்னான் .”

” சரிம்மா … நா குளிச்சிட்டு வரேன் … டிபன் ரெடியா இருக்கா …

“ம் … ம் .. ரெடியாத்தான் இருக்கு …”

காலை வழக்கம்போல் பிரபு அலுவலகம் வர வணக்கங்களுடன் வேலை தொடங்கியது.
மதியம் சிரீ வந்தவுடன் பிரபுவும் மற்றவர்களும் வரவேற்க

” நல்லா தூங்கினியா …. டிஸ்டர்ப் எதுவும் இல்லியே ….?” சிரீ விசாரிக்க

‘எனக்கென்னப்பா … ஒரு பிரச்னையும் இல்ல …. சரி … என்னாச்சு மேட்டர்…?”

‘விட்டுடுவோமா …. நேத்து நைட்டே புடிச்சாச்சு … நீ ஆறு மாசத்துக்கு முந்தி
கவுன்சிலர் தம்பி கொலை வழக்குல வாதாடி தண்டனை வாங்கி கொடுத்தில்ல …”

ஆமாம்… கவன்சிலரோட சம்பந்தி ராசாராம் . அவரா….?”

“ஆமாம்… அரசாங்க வக்கீலை பணம் குடுத்து வாங்கியும், நீ உனது கிளையண்ட் கொலை செய்யப்பட்டவரோட மனைவிக்காக வாதாடி அந்த ஆளுக்கு ப்ரீ பிளான் மர்டர்னு ஆயுள் தண்டனை வாங்கிக் குடுத்தேல்ல…. அதுக்கு பழிவாங்க கவுன்சிலர் ஏவி விட்ட துருப்பு சீட்டுதான் அவன். அவனுக்கு குடுத்த மரியாதையில எல்லாத்தையும் கக்கிட்டான் . ஆனா கவுன்சிலர் முன்ஜாமீன் வாங்கிட்டான் . ஸ்கௌன்ட்ரல்….! எத்தனை நாளுக்கு இந்த பாதுகாப்பு…?

இந்த பீல்டுல இதெல்லாம் சகஜம் தானே … என்னா நாம எங்கிருந்தாலும் மூணாவது கண்ணோட வலம் வரணும் …”

பிரபுவின் பேச்சுக்கு தலையாட்டிய சிரீ

” பிரபு …. சற்குணம் நேத்து நடந்த இன்சிடண்ட் பத்தி விசாரிச்சாரு. அப்புறம்
நீ போன வாரம் அங்க போயிருந்தியா…?”

” ஆமாம் …. அவர்கிட்ட ஒரு ஷெல்ப் கேட்டிருந்தேன் ….”

சொன்னாரு … அங்கேயும் ஒரு கொலை கேசு போல …”

“ஹஹஹாஅது செம காமெடி . கொலையே நடக்காம கொலை மாதிரி …..”

” என்னப்பா… என்ன சொல்ற … எனக்கு புரியலையே…?”

அப்புறமா உனக்கு விளக்கமா சொல்றேன் …”

அப்படியா… சரி … டேக் கேர் … பிரண்ட்ஸ் … வீ வில் மீட் அகெய்ன் …’

சீரி புறப்பட்டு போனவுடன் பிரபுவிடம் அந்த கவுன்சிலர் கேசைப் பத்தி தீவிரமா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தவர்கள் சட்டென்று பேச்சை நிறுத்தினார்கள்.
உள்ளே இளம்பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வந்ததைப் பார்த்த பிரபு ஆச்சரியமானான் .

“ஹேய் …. அஞ்சனா ….! வாட் எ சர்ப்ரைஸ் …” எப்ப வந்தே … இந்தியாவுக்கு …?”
அவள் அருகில் வந்து பிரபுவை கட்டிப்பிடிக்க அதிர்ச்சி அடைந்தாள் நிலா.

என்னடா … ஷாக் கொடுத்திட்டேனா… சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் இன்பார்ம் பண்ணல.. அப்புறம் எப்படி இருக்கே … முன்னவிட ஹாண்ட்ஸ்சம்மா இருக்கே …’ என்று கூறிக் கொண்டே அவன் வயிற்றில் லேசா ஓரு குத்து குத்தினாள் .

அதைப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் காதில் புகை வரத் தொடங்கியது.
யாரிவள்… சொந்தமோ … இல்லை .. பிரண்டா ..? இந்தளவுக்கு குலோசா இருக்கா .. இருக்கட்டும் …. அவ போன பிறகு அவருக்கு இருக்கு மனதுக்குள் புகையத் தொடங்கினாள்.

ஜீன்ஸும் லூசான டி சர்ட்டும் அணிந்தவள் முடியை பாய்கட் பண்ணியிருக்க,
கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தாள்.

கழுத்திலோ கையிலோ எந்த நகையுமில்லை . காதில் சிறு வளையம் கையில் வாட்ச் .
ஐந்தரைஅடி உயரமிருப்பாள் … போல. எடுப்பான நாசி … நல்ல கலர்.

ஜானியும் வந்தியத்தேவனும் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக் கொள்வதைப் பார்த்தவள் ” ஹாய் … ஐ அம் அஞ்சனா …! பிரபுவின் கஸின் சிஸ்டர்.. யூ …?” என்று இழுக்க,

ஜானி சட்டென்று கையை நீட்டி ” ஜானி … ஜுனியர் லாயர் …’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் .

ஓ… ஜானி நீங்கதானா … உங்களைப்பத்தி நிறைய விசயம் எனக்குத் தெரியுமே ….!”
என்று கூறிவிட்டு அவள் சிரிக்க,

” பாஸ் … என்ன சொல்லி இருக்கீங்க … என்னை டேமேஜ் ஆக்குறதுல பாஸுக்கு ரொம்ப குஷி …” முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டான் ஜானி.

“ஹேய் …. கூல்… கூல். நா எதுவுமே சொல்லல … அவ போட்டு வாங்குறா …. ஜாக்கிரதை …” பிரபு சிரித்துக் கொண்டே கூற,

“இல்ல ஜானி …. அவன் பொய் சொல்றான் … உங்க டினா கோவிச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்குத்தானே போயிருக்காங்க … சரியா நா சொல்றது …”

சிரித்துக்கொண்டே அஞ்சனா கூற, பாஸ் ஆனாலும் நீங்க ரொம்ப போங்கு …”

” ஏய் … வந்தவுடனே வம்பு பண்ண ஆரம்பிச்சிட்ட பாத்தியா …?” பிரபு அவள் காதை பிடித்து திருக,

இந்த விளையாட்டில் கலந்து கொள்ளாமல் சிஸ்டர் எனத் தெரிந்தவுடன் மனசு லேசாகி புன்சிரிப்புடன் இருந்த நிலாவின் அருகில் சென்றவள் ” ஹாய் நிலா …! யூ லுக் வெரி சார்மிங் . அதனாலத்தான் பிரபு மயங்கிட்டான் போல …” என்று கூறவும்,

திடுக்கிட்ட நிலா ” உங்களுக்கு எப்படி இந்த விசயம் …” என்று கேட்க,

‘நா எவ்வளவு தூரத்துல இருந்தாலும் அப்டேட் விசயம் என் காதுக்கு வந்திடும் … ஏன்னா … எங்களுக்குள்ளே அப்படிப்பட்ட அக்ரிமெண்ட் ….” என்ன பிரபு நா சொல்றது சரிதானே …”

‘ அப்கோர்ஸ் …. இதுநாள் வரைக்கும் இதுல ஏதாவது மாற்றம் வந்திருக்கா …?” பிரபு கேட்க,

” பாஸ் … அதுக்காக எங்களை இப்பிடி மாட்டிவிடுறது டூ மச் …’

” ஹஹஹா …. ஜானி எதை செஞ்சாலும் ஹண்ட்ரண்ட் பர்சண்ட் கரெக்டா செய்யிறது என் பழக்கம்னு உனக்குத் தெரியாதா …?” சிரிப்புடன் அவன் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்த நிலா பிரபுவை முறைத்தாள்.

” சரி … சொல்லு … திடீர் பிரவேசம் எதுக்கு …?” பிரபு கேட்க,

“இதோ இவன் என்னோட சென்னை ஆபிஸ் கொலீக் . என்னோட பெஸ்ட் பிரண்டு . இவனுக்கு இந்த சண்டே திருநெல்வேலியில மேரேஜ் நா வராட்டி தாலியே கட்ட மாட்டேனுட்டான் . அதான் அவசரமா கிளம்பி வந்தேன் ….” என்கூறவும்

” ஹாய் … ஐஅம் ஆதித்யன் . அஞ்சனா உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா.
உங்களுடைய இமேஜ் தமிழ்நாட்டுல பேமஸ் . நானும் உங்க பேன் . உங்கள பாக்கணும்னு அஞ்சனாகிட்ட கேட்டுகிட்டே இருப்பேன் …. இன்னிக்கிதான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு …!” நெர்வஸா ஆதித்யன் கூறுவதைக் கேட்ட பிரபு

‘ஆதி … இவ எப்பவுமே எதையும் மிகைப்படுத்திதான் சொல்வா … அதையெல்லாம் நம்பாதீங்க…”

“அப்பிடி இல்ல சார் … வெளியில நீங்க எவ்வளவு பேமஸ் லாயர்னு உங்களுக்கு தெரியாம இருக்கலாம் … எத்தனை கேர்ள்ஸ் உங்க பேரை பச்சை குத்தி வச்சி இருக்காங்க தெரியுமா ….?”

” ம் … பாஸுக்குதான் மச்சம் அதிகம் .. அதிர்ஷ்டக்காரர் தான் பாஸ் நீங்க …” பெருமூச்சு விட்ட ஜானியைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.

“பிரபு … இவர் யாருனு நீ சொல்லவே யில்லையே …?” வந்தியத்தேவனைப்பார்த்து அஞ்சனா கேட்க

“இவரும் என்னோட ஜுனியர்தான் . லேட்டஸ்டாதான் சேர்ந்தாரு. பேரு வந்தியத்தேவன் …” என்று பிரபு கூறவும்

“வாவ் …! என்ன பேரு சொன்னீங்க… வந்தியத்தேவனா …. என்னுடைய பேவரிட் ஸ்டோரி ஹுரோ நேம் . ஹேய் ஐ லைக் யுவர் நேம் ….! என்று கூறிக்கொண்டே அவன் கைகளைப்பற்றிக் குலுக்கினாள் .

கூச்சத்துடன் தன் கைகளை விடுவித்துக் கொண்டான் வந்தியத்தேவன்.

ஆதித்யன் திருமண பத்திரிகைகளை எடுத்து தனித்தனியாக எல்லோருக்கும் கொடுத்துவிட்டு ‘” சார் … நீங்க எல்லோரும் என் வெட்டிங்குக்கு அவசியம் கலந்து சிறப்பிக்கணும் . நீங்க வந்தா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் …” எனக்கூற,

“சாரி ஆதி …! இந்த வாரம் நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு தப்பா நினைச்சிக்காதீங்க …” பிரபு கூறியதைக்கேட்ட அஞ்சனா

” இதோ பார் பிரபு …. உங்கிட்ட நா நிறைய பேசணும் . ஆனா இப்பவே இவன் கூட நான் இவன் ஊருக்கு போறேன்.

அதனால நீ கண்டிப்பா நீ வந்துதான் ஆகணும் . அதுவுமில்லாம நா அவனுக்கு ப்ராமிஸ் பண்ணியிருந்தேன் … அவனோட கல்யாணத்துக்கு உன்ன அழைச்சிக்கிட்டு வர்ரதா … என் பேரை ரிப்பேராக்கிடாதே… நீ மட்டும் வரலேன்னா நா அப்பிடியே கிளம்பி போயிடுவேன் … சம்மதமா …?” அஞ்சனாவின் கெஞ்சலில் ஆர்டரில் பிரபு வருவதாக ஒத்துக் கொண்டான் .

‘ வீட்டுக்குப் போயி அம்மாவை பாக்கலியா …? அப்புறம் அவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியாது …”

” ஏய் … பெரியம்மாவை பாக்காம வருவேனா… அப்புறம் அவங்க தங்கச்சி என்னை காய்ச்சி எடுத்துடுவாங்க … டிபன் அங்கதான் சாப்பிட்டோம். திரும்பி வரும்போது ஒருநாள் இருந்துட்டு போறேன்னு சொன்னப்புறம்தான் பர்மிசனே குடுத்தாங்க “

” பிரபு நீ மட்டும் தனியா வந்திடாதே… இவங்களும் கண்டிப்பா வரணும் … வந்தியத்தேவன் …. நீங்க வராம இருந்துடாதீங்க … உங்கள நா ரொம்ப எதிர்பார்ப்பேன்.”

அவனை ஒரு மாதிரி பார்த்து சொல்வதை அனைவரும் கவனித்தனர் .

அவர்கள் இருவரும் சென்ற பின்பு வந்தியத்தேவனை கலாய்க்க ஆரம்பித்தார்கள்.
அதுவரை நடந்தவற்றை கவனித்துக் கொண்டிருந்தது ‘ வேண்டாம் …. அங்கே போக வேண்டாம் … ஆபத்து … ஆபத்து …’ எனக் கூவியது .

அத்தியாயம் 11

திருநெல்வேலிக்கு போக வேண்டாம் என்று குரல் ஒன்று கேட்டுக் கொண்டிருந்து அவர்களுக்கு கேட்கவில்லை….

பிரபு அன்று கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருக்க,

அவனுடைய அலுவலகத்தில் அவனுக்கு ஒரு சோதனை காத்துக் கொண்டிருந்தது.
அலுவலகத்தில் வந்தியத்தேவனும் நிலாவும் தங்கள் பணிகளில் மூழ்கியிருக்க
அப்போது சீனு உள்ளே வந்து

” சார் …. ஒரு விசிட்டர் பிரபு சாரை பாக்கணும்னு காத்திருக்கிறார் . அவர்மதியந்தான்
அப்பாயிண்ட்மெண்ட் குடுப்பாரு …. ன்னு சொல்லியும் போகாம உங்களையாவது பாக்கணும்னு சொல்றார் … என்ன சொல்லட்டும் ?” என்று கேட்க

” சரி … நான் வெளிய வந்து அவரைப் பார்க்கறேன் …” என்று கூறிவிட்டு வெளியே வந்தான் வந்தியத்தேவன்.

சுமார் அறுபது வயசிருக்கும் பெரியவர் ஒருவர் வந்தியத்தேவன் வந்ததும் எழுந்திருந்து வணக்கம் சொல்ல

பதில் வணக்கம் சொன்ன வந்தியத்தேவன் ” சொல்லுங்க சார் … என்ன விசயம் …. சொல்லுங்க ….?’

பிரபு சாரைப் பார்க்கணும்னு வந்தேன் … மதியந்தான் பாக்கமுடியும்னு சொலறீங்க… முக்கியமான விசயம் … ஆனா எனக்கு டிரெயின் அதனாலத்தான் உங்ககிட்ட சொல்றதுக்கு பர்மிசன் கேட்டேன்…”

” சொல்லுங்க… சார் வந்ததும் சொல்றேன் … மனு எழுதி கொண்டு வந்திருக்கீங்களா …?”

” இல்லை …. நேர்ல சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் ஏன் மனுவாத்தான் கொடுக்கணுமா …?”

பரவாயில்லை சொல்லுங்க… நான் மனுவா எழுதித்தரேன் … கையெழுத்துப் போட்டுக் கொடுங்க ” என்று கூறிவிட்டு பேப்பரும் பேனாவும் கொண்டு வந்தான் வந்தியத்தேவன்.
அவர் கூறியதை எழுத தயாரானான்.

என் பெயர் சாருதேவன் மாயாவி . நான் வளவனூரைச் சேர்ந்தவன். எனக்கும் பிரபு சாருக்கும் ஒரு வழக்கு இருக்கிறது . அவர் அதை மறந்து விட்டார் … எனக்கு செய்து கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை …. என் வழக்கு என்னவாயிற்று …?”

இதுதான் நான் கேட்கவிருந்த கேள்வி. அவர் வந்தவுடன் இதைக் கொடுங்க….’ என்று கூறி எழுதியதில் மாயாவி என்றும் அதன் அருகில் குத்தீட்டி ஒன்றையும் வரைந்து கொடுத்துவிட்டு விரைந்து சென்று விட்டார் அந்தப் பெரியவர் .

வந்தியத்தேவன் சற்று குழப்பத்துடனே அந்த மனுவை நிலாவிடம் கொடுக்க
அவளும் அதைப்படித்து விட்டு

‘ என்ன பிரதர் … பிரபுவுக்கும் அந்த பெரியவருக்கும் வழக்கா … புரியாத புதிர் போல இருக்கிறதே … ?” என்று கூற

‘ஆமாம் அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது… கேப்டன் வந்தாத்தான் விவரம் புரியும் …” என்று வந்தியத்தேவனும் பதிலுரைக்க

நிலா சேரில் சாய்ந்து கண்ணை மூடி யோசனையுடன் இருந்தாள்·

இந்த நேரத்தில் பொன்ராயன் மங்கலம் காவல் நிலையத்தில் எஸ் பி சற்குணம்
தன் எதிரே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஐவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.

முதலில் அமர்ந்திருந்த நாம் முன்னமே சந்தித்திருந்த இராமன் என்று தன்னைக் கூறியிருந்தவனிடம் விசாரனை நடத்திக் கொண்டிருந்தார்.

” சொல்லு … உன் பெயர் என்ன ..?”

‘ஐயா …. ஏற்கனவே நா உங்ககிட்ட சொல்லி இருக்கேனே .. என் பெயர் இராமன்னு …!”

அது பொய்யானப் பேருன்னு எனக்குத் தெரியும். உண்மையானப் பேரைச் சொல்லு … இல்லாட்டி போலீஸ்காரன் கவனிப்பு எப்படி இருக்கும்னு தெரியுமில்ல …”

“சொல்லிடறேன் ஐயா …. சாரங்கன் என்பது தான் என் பெயர் …”

“ம்ம் … தடி எடுத்தா எல்லாம் வந்து விடும் . சரி இங்கயிருந்து பேசினே ….?”

போனவன் வழியில்யாருகிட்ட போன்ல என் சம்சாரத்துக்கிட்ட தான் ஐயா ….”

“மறுபடியும் பொய்தான் வருது . நீ யார் கிட்ட பேசினேன்னு எனக்குத் தெரியும் . உண்மையைச் சொல்லிட்டா உனக்கு நல்லது …’

‘அது வந்துங்கய்யா முதலாளி தென்னவன் ஐயாகிட்டத்தான் பேசினேன் …” என்று கூறிவிட்டு, தன் அருகில் அமர்ந்திருந்தவரை பார்க்க

பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த நபர் அவனை எரித்து விடுவது போல் பார்க்க,

” ஏய் .. என்ன முறைப்பு … பண்றதும் பண்ணிவிட்டு …. சரி அந்த காட்டுல என்ன பண்ணிக்கிட்டு இருந்த .. உண்மையை மட்டுந்தான் சொல்லணும் ….?”

ஐயா …. நா எந்த தப்பும் பண்ணல … ஊரூல இருந்து வரும்போது நா வேலை செய்யிற முதலாளி’, ஏன் வேலைக்கு வரவில்லை என்று போன்ல கேட்டார் .’ அதான் நேர்ல போயி விசயத்தை சொல்லிட்டு வந்தேன்

” மறுபடி மறுபடி பொய் சொல்ற … என் கோவத்த கிளறாதே … காட்டுல நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க….?”

“மரம் வெட்டி லோடு அனுப்புவோம் …”

அடுத்து இருந்த முதலாளி என்றழைக்கப்பட்டவனிடம் விசாரிக்க ஆரம்பித்தவர் ” உன் பெயர் என்ன …?”

‘தென்னவன் …”

‘ காட்டுக்குள் எவ்வளவு நாளா மரம் வெட்டுறீங்க..?” “ரொம்ப வருசமா இதுதாங்க எங்க தொழில் …” ‘என்ன மரம் வெட்டுறீங்க …?”

‘முள்ளு மரங்களும் சவுக்கு மரங்களும் …” “அப்புறம் வேற என்ன மரம் …?”

“அவ்வளவுதான் ஐயா ….”

இங்க பாரு …. ஒழுங்கா உண்மையைச் சொன்னா உனக்கு நல்லது … நீங்க வெட்டிய மரத்தோடு தானே பிடிச்சோம் … இப்ப சொல்லு …. என்னன்ன மரங்கள் …?” அது வந்து… சந்தன மரங்களும் … செம்மரங்களும் …”

“அப்படி வா வழிக்கு … அரசாங்கத்தை ஏமாத்தி சொகுசான வாழ்க்கை …! ஆமா …செக்போஸ்ட்டுல ஒருதடவை கூட மாட்டலையா….?”

அது வந்துங்கய்யா …” என்று அவன் நீட்டி இழுக்க

” ஏய் … சும்மா இப்படி பயப்படறமாதிரி எல்லாம் நடிக்காதே …. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும் ….”

செக்போஸ்ட்டுல எங்க லாரி வந்தா விட்டுடுவாங்க. மாசா மாசம் அவங்களுக்கு கலெக்சன் போயிடும் ….” ” தெரியும் …. அவங்களும் சேர்ந்துதான் மாட்டப்போறாங்க. அதுசரி … அந்த காட்டுக்குள் வர்ரவங்களை மிரட்டி ஏன் அனுப்புறீங்க… உங்க தொழிலுக்கு இடையூரா இருக்கும்னு தான் அப்படி செஞ்சீங்களா …?”

“ஆமாங்க ஐயா …! டிஸ்டர்ப் இல்லாம தொழில் செய்யத்தான் பங்களாவுல ஆவி நடமாடுறதா பொய் சொன்னோம் … அது மட்டுமில்லாம யாராவது அந்தப்பக்கம் வந்தா அவங்களை பயமுறுத்த ஆள் மாதிரி இருக்கிற மெழுகு பொம்மைக்கு அடிபட்ட
மாதிரி சிவப்பு பெயிண்டை அங்கங்கே பூசிவிட்டு கார்ல வந்தாங்கன்னா காருக்கு முன்னால சட்டுனு போட்டுவிடுவோம் அவங்க ஆக்ஸிடண்ட் பண்ணிட்டதா நினைச்சி பயந்து போய் காரை நிறுத்தாம போயிடுவாங்க….

நடந்து வராங்கன்னா அவங்க தூரத்தில வரும்போதே இந்த பொம்மையையும் அதன் மேல் ஒரு கத்தியையும் சொருகி கொலை நடந்த மாதிரி வச்சிடுவோம் .
வரவங்க பாத்துட்டு அலறி அங்கிருந்து ஓடிடுவாங்க….”

‘பக்கா ஹைடெக் கிரிமினல்ஸ்டா நீங்க. அது சரி அந்த பங்களாவில வேற என்ன கிரிமினல் வேலை செய்யறீங்க…. நீங்களா சொல்லிட்டா நல்லது . நாங்களா கண்டுபிடிச்சா அவ்வளவுதான் உங்க கதி.

ஆண்டவனே நினைச்சா கூட உங்களை காப்பாத்த முடியாது…

என்னங்கய்யா சொல்றீங்க…. பங்களாவுல கிரிமினல் வேலையா ….! நல்லா சொன்னீங்க போங்க …. பங்களா பக்கமே போக முடியாது…. அப்புறம் எப்படி இந்த வேலையெல்லாம் செய்யிறது …?”

” ஏன் …. எதுக்கு பங்களா பக்கம் போகமுடியாது…? கார்ட்ஸ் யாரும் இருக்காங்களா …?”

“பங்களா பக்கம் போகணும்னு நினைச்சி அங்கே போனா மறுபடி நாம எங்க நின்னுக்கிட்டு இருந்தோமோ அங்கேயே வந்து இருப்போம் …. நாம அங்க போனோமா என்பதே நினைவில் இருக்காது … ஏதோ ஒரு மந்திரசக்தி அங்கே இருக்குது .
அதனாலேயே யாரும் அந்த பங்களா அருகே போகவே மாட்டோம் ….’

இதைக் கேட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர்களும் சற்குணமும் ஆச்சரியமடைந்து ” என்னய்யா …. எங்ககிட்டயே உன் வேலைய காட்டுறியா …? இந்த தில்லுமுல்லு எல்லாம் எங்ககிட்ட செல்லாது ….”

‘ஐயயோ …! நிசமாலுமே இது உண்மைதானுங்க. எங்களை நீங்க நம்பளைன்னா அந்த ஊர்ல இருக்குறவங்களை கேளுங்க…..

இல்லாட்டி நீங்களே அங்க போயி பாருங்க …. அப்பத்தான் உங்களுக்குத் தெரியும் …”
“நாங்க போக மாட்டோம்னு நினைப்பா… போயிட்டு வந்ததுக்கப்புறம் தான் உங்களுக்கு இருக்கு மண்டகப்படி…”

ஐயா… நிசமாலுமே நான் சொல்றது உண்மைதானுங்க…. இவங்களை வேணா கேட்டுப்பாருங்க…’

உடனே அங்கிருந்த அக்கியூஸ்டுகளும் ‘ ஆமாம் …. இது உண்மைதான் ‘ என்று ஏகக் குரலில் கூற, சற்குணமும் மற்ற போலீஸ்காரர்களும் ஒருவரை ஒருவர் குழப்பமாய் பார்த்துக் கொண்டனர் .

மதியம் இரண்டு மணியளவில் பிரபுவும் ஜானியும் தங்கள் அலுவலகம் வந்தனர் .

அன்று நடந்த கேசைப்பற்றி மற்றவர்களுடன் கலந்து பேசி விட்டு
அந்த பைலை நிலாவிடம் கொடுத்து கம்ப்யூட்டரில் பதிவேற்ற சொல்லி விட்டு
ரெப்ரெஸ் பண்ண ரெஸ்ட்ரூம் சென்று விட்டு உணவருந்த அமர்ந்தனர்.

இன்னிக்கி அப்பாயிண்ட்மெண்ட் எத்தனை இருக்கு என்று சீனுவிடம் கேட்டுவிட்டு உணவருந்திக் கொண்டே

வந்தியத்தேவனிடம் அவர்கள் இன்று பார்த்த வேலையைப் பற்றிக் கேட்க,

வந்தியத்தேவன் தன்னுடைய வேலையை எந்தளவுக்கு முடித்திருக்கிறான் என்பதை
கூறிவிட்டு நிலாவை ஏறிட்டுப் பார்த்தான்.

நிலாவும் அவனுடைய குறிப்பை உணர்ந்து

” பிரபு … உங்களைப் பாக்கணும்னு ஒரு பெரியவர் வந்திருந்தார். மதியம் பார்க்கலாம் என்று கூறியும் தான் மதியம் ரெயிலில் செல்லவேண்டும் என்று கூறியதால், வந்தியா விசாரிச்சார் .

அவர் கூறியதை மனுவாக எழுதி இருக்கிறார். இந்தாங்க….” என்று கூறியபடி
அந்த காகிதத்தை நீட்ட அதை வாங்கிய பிரபு படித்தான் .

அதைப் படித்து முடித்தவுடன் பிரபு ” இது என்ன …. எனக்கு புரியவில்லையே ….?” என்று கூற,

“அதுதான் நாங்களும் என்னவென்று புரியாமல் குழப்பத்தில் இருந்தோம் ….” என்று நிலா கூற,

ஜானிக்கு ஒன்றும் புரியாமல் அந்த மனுவை வாங்கி படித்து அவனும் புரியாமல்
பிரபுவைப் பார்க்க,

“வந்தியா …. அவர் எப்படி இருந்தார் …?” என்று பிரபு கேட்க,

அவரின் அங்க அடையாளங்களை விவரிக்க ஒன்றும் புரியாமல் பிரபு கண்மூடி யோசனையில் ஆழ்ந்தான்.

திடீரென்று அவன் சிந்தனையில் மாயவன் உனைத் தொடர்கிறான் என்ற வார்த்தை
நினைவில் வந்து போனது ….

‘ இது என்ன … கனவில் வந்த பெயர் போலவே இருக்கு… என்னைச் சுற்றி ஏதோ ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கிறது …

என்னவென்றுதான் புரியவில்லை ….

யாரிந்த மாயவன் … அவருக்கும் எனக்கும் என்ன வழக்கு….

அம்மாவிடம் இதைப்பற்றிக் கேட்கலாமா … சே.. சே… அவங்க ரொம்ப பயந்துடுவாங்க… நிலா இப்பவே பயந்த மாதிரி இருக்கிறா … ஜானியை கூட்டிக்கிட்டு அந்த சித்தரை முதலில் பார்த்தால்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கும் ….

ஓகே … முதல்ல நாளை திருநெல்வேலி போறதப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம் …

அஞ்சனாகிட்ட அங்க ரூம் எங்க போட்டு இருக்காங்கன்னு கேட்கணும் ‘…

தன் இயல்பு நிலைக்கு திரும்பிய பிரபு

ஜானி … நாளைக்கு திருநெல்வேலி போறதப் பத்தி எப்படி பிளான் …?”

” நாலு பேரும் கார்லேயே போயிக்கலாம். நானும் பார்ட்னரும் மாறி மாறி கார் ஓட்டிக்கிறோம் … நிலா … நீங்க வீட்ல சொல்லீட்டீங்களா…?”

” ம் … பர்மிசன் வாங்கிட்டேன் … உங்களோட வரதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ….”

நிலா கூறியதைக் கேட்ட ஜானி ” ஹை …. எதுக்கு இந்த டயலாக்… நீங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்கிறதுக்கு நாங்க சப்போர்ட்டா …?”

ஜானி இறுக்கமான சூழ்நிலையை கலகலப்பாக மாற்ற

பிரபு புன்னகையுடன் தன் மொபைலில் அஞ்சனாவுக்கு போன் பண்ணிணான்.

போனில் அஞ்சனா வர, தங்களுக்கு எந்த ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறாய் என்று பிரபு கேட்க, அங்கே சிறு மௌனம் .

‘ஹலோ … அஞ்சனா …. லைன்ல இருக்கியா …?” என்று பிரபு கேட்க,

” சொல்லுடா … நீ சொல்றது எனக்குப் புரியலை …. எதுக்கு ரூம் … நீ சிகாகோ வரியா என்ன … அப்படியே வந்தாலும் நம்ம வீடு இருக்கிறப்ப நீ ஏன் ஹோட்டல்ல தங்கணும் …?”
அஞ்சனாவின் பதிலால் குழப்பமடைந்த பிரபு ” ஏய் வாயாடி… என்ன விளையாட்டு இது. நீ இங்க இருக்கறப்ப நா எதுக்கு அங்க வரணும் …”

“ஏய் … கொஞ்சம் இரு…. என்ன சொன்ன …? நா அங்க இருக்கிறேனா …? ஆர் யூ டிரங் ….! நா இப்ப சிகாகோவிலத்தான் இருக்கிறேன் …

இராத்திரி மூணு மணிக்கி போன் பண்ணி ஏண்டா படுத்துற ….”

அவன் பேசுவதைக் கவனித்தவர்கள் ‘ என்ன ‘ வென்று கேட்க,

கை சைகையில் கொஞ்சம் இருங்கள் என்று கூறிய பிரபு

“இங்க பாரு சிஸ்டர் …. விளையாடாம பதில் சொல்லு …. நீயும் உன்னோட நண்பர் ஆதித்யாவும் இரண்டு நாளுக்கு முந்தி இங்க வந்தியா இல்லியா … உன் நண்பன் திருமணத்திற்கு திருநெல்வேலிக்கு வருமாறு அழைப்பிதழ் குடுத்தியா …. இல்லியா …?”

‘போனிலேயே பதறியபடி பேசிய அஞ்சனா …. ஏய் .. அண்ணா என்னடா சொல்ற …? நா எங்கடா அங்க வரப்போறேன் … இப்ப அங்க வர ஐடியாவே எனக்கு இல்லியே ….?
ஆபிசுல இப்ப லீவு கேட்டாக்கூட குடுக்கமாட்டாங்க …. அதுவுமில்லாம அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கிறாரு . வேணா .. உன்னோட சித்திக்கிட்ட பேசு ….” என்று கூறியவளாய் யாரிடமோ போனைக் கொடுக்க,

மறுமுனையில் பிரபுவின் சித்தி பேசுவது மட்டுமே அவன் காதில் விழுந்தது .

சம்பிராயத்துக்காக அவர்களிடம் ஏதோ பேசிவிட்டு போனை வைத்தவன் பிரமை பிடித்தவன் போல் அமர்ந்திருக்க,

அனைவரும் அவன் அருகில் வந்து அவனைப் பிடித்து உலுக்க,

தன் நிலைக்கு வந்தவன் அவசரமாக ” ஏய் … வந்தியா … அந்த கல்யாணப் பத்திரிகையை சீக்கிரம் கொண்டுவா …” என்று கூற

தான் வைத்த இடத்தில் பத்திரிகையை காணாது பரபரப்படைந்த வந்தியா மற்ற இடங்களிலெல்லாம் தேடினான்.

ஜானி நிலா தன் பங்குக்கு அவர்களும் தேட, எங்கும் அந்த பத்திரிகை காணவில்லை …

அத்தியாயம் 12

பிரபுவும் தன் பங்குக்கு தேட எங்கும் காணவில்லை பத்திரிகை.

அனைவரும் திகைப்பு மாறாமல் சிலை போல நின்றிருக்க,

நிலா மெல்ல ” பிரபு …. என்ன நடக்குது இங்கே… எல்லாம் மர்மமா இருக்கு ….”

” நிலா …. இது அமானுஷ்ய வேலை எல்லாம் கிடையாது யாரோ நமக்கெதிரா திட்டம் போட்டு காய் நகர்த்தற மாதிரி எனக்கு பட்சி சொல்லுது …. சரிதானே பாஸ் …!” ஜானி கூறியதைக் கேட்ட பிரபு

“அப்ஸ்யூட்லி யூ ஆர் கரெக்ட். இது எல்லாமே கொஞ்ச கொஞ்சமாய் காய் நகர்த்தி நம்மை குழப்பவைக்கிற வேலைதான் . ஆனா எனக்கு இது மட்டுந்தான் கன்ப்பூயூஸ்டா இருக்கு .

அஞ்சனா வந்தது நிஜம் . ஒருத்தர் பார்த்திருந்தா கூட அது பிரமை அப்படீன்னு சொல்லலாம் .

ஆனா நாமெல்லாரும் பார்த்தது நிசம்தானே ….?”

” ஆமாம் …. நாமெல்லாரும் பார்த்ததுதானே … அது எப்படி உண்மையாய் இல்லாம இருக்க முடியும் …?” வந்தியத்தேவன் பதிலுரைக்க

“பிரபு … உங்க அம்மாவை பாத்துட்டு வந்ததா அவங்க சொன்னாங்க இல்ல … அன்னிக்கு
உங்க அம்மா அவங்க வந்ததா சொன்னாங்களா …?”

ஆமா … அதை நா மறந்தே போனேனே … அன்னிக்கி வீட்டுக்கு லேட் நைட் தான் வீட்டுக்குப் போனேன் … அம்மா தூங்கிட்டாங்க… காலையில நானும் கேட்க மறந்துட்டேன்

ஆனா அம்மா கண்டிப்பா அவ வந்ததை சொல்லாம இருக்க மாட்டாங்களே ….

சரி … நா போயி இதபத்தி விசாரிச்சிட்டு வரேன் …” என்று அலுவலகத்தின் பின்புறம் இருக்கும் தன் வீட்டிற்குச் சென்றான்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் உதட்டை பிதுக்கினான் .

“பாஸ் … அம்மாகிட்ட நேரடியாவே கேட்டீங்களா …. அஞ்சனா வந்ததைப் பத்தி …?”

“இல்லை … சித்தியை விசாரிக்கிற மாதிரி பேச்சுக் கொடுத்தேன். அப்படியே அஞ்சனாவுக்கு நல்ல வரன் ஒன்னு வருது …

அவங்களை கேக்கிறீங்களான்னு கேட்டேன் . அப்பதான் அவங்களா சொன்னாங்க… அவளைப் பாத்து வருசக்கணக்காச்சு… எப்ப வருவாளோ .. கண்ணுலேயே இருக்கிறா … அப்பிடீன்னு சொன்னாங்க

நா கெஸ் பண்ணினது சரியாத்தான் இருக்கு …

பாஸ் …. கண்டிப்பா இதுக்கு பின்னாடி ஏதோ சதி வேலை நடக்குதுன்னு மட்டும் புரியுது … ஆனா எதுக்காகன்னு மட்டுந்தான் புரியாம இருக்குது …”

“பிரபு … எனக்கு அப்படி தோணலை … இது கண்டிப்பா ஏதோ ஆவியோட வேலைதான் … நாம எதுக்கும் மறுபடி அந்த சித்தரை பார்த்து விட்டு வருவோம் … என்ன சொல்றீங்க …?” நிலா சற்று நடுக்கத்துடனே பேச,

நான் கூட ஆரம்பத்தில் அப்படித்தான் நினைச்சேன் ஆனா போகப்போக நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தா இது கண்டிப்பா மனுச சூழ்ச்சி மாதிரி தெரியுது … விடு
நடப்பதற்கு இனிமே தடாலடி வைத்தியந்தான் …!”

பாஸ் … முதன்முதல்ல இந்த பிரச்னை எப்ப ஆரம்பிச்சது… அந்த லேடி வந்துட்டு போனதிலேருந்து தானே ….

அப்ப அவங்க சொன்ன விசயத்திலேயிருந்து …. ஆரம்பிக்க வேண்டியது தானே …!”
ஆரம்பிக்கணும் . இதுக்கு தீர்வு கிடைச்சாத்தான் ரிலாக்ஸ் ஆகும் . யோசிச்சி யோசிச்சி மண்டை காஞ்சதுதான் மிச்சம் .

எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு எங்கியாவது போய் மைண்ட்ஸை ப்ரீ பண்ணணும்
அதுக்கு ஏதாவது பிளான் போடுங்க …”,

கேப்டன்…. எங்கியாவது ஜாலியா ஒரு டிரிப் போகலாமா ஆயிடுச்சி ….”

ஏற்கனவே போட்ட பிளான் டௌன்

குட்… நீ சொல்ற யோசனை நல்லாதான் இருக்கு … நீங்க என்ன சொல்றீங்க ….?”

பாஸ் ….’ தம்மை நோக்கிய நோக்கியா ….

இப்பிடி நொடியில் நோக்காமல் நோயை தந்ததுவே ‘ என்று விரக்தியாய் விட்டான் வந்தியா … பாருங்க … அவன் கண்ணில் வலியை ….” சிரிக்காமல் ஜானி கூறியதைக் கேட்டு கலகலவென்று அனைவரும் சிரித்தனர்.

‘என்ன நிலா …. நீ ஒன்னும் சொல்லலை …. பிளான் ஒகே வா ….”

“எனக்கும் ஆசைதான் . ஆனா லீவு நாளா இல்லாம வொர்க்கிங் டேஸ்சா இருந்தா பெட்டரா இருக்கும் ….”

ஆஹா … வீட்டுக்கு அடங்கின பொண்ணு . எப்பிடி ஸ்மார்ட்டா பிளான் பண்ணுது பாரு …”

ஜானியின் கலாய்ப்பில் முகம் சுருங்கி போனாள் நிலா

அதைக்கவனித்த பிரபு ” ஹேய் … ஜானி … போதும் கலாய்ப்பு …. அவ அப்பாவுக்கு பயந்தவ …. வேற என்ன பண்ணுவா … நிலா …! வொர்க்கிங் டேஸ்ல போனாலும் வீட்டுக்கு தெரியாம போக முடியுமா …?”

“வேலை விஷயமா வெளியூர் போக வேண்டிய சூழல் … அப்பிடீன்னு சொல்லிடுவேன் … அப்ப ஒன்னும் சொல்ல மாட்டாங்க….”

“சரி …. அப்படியே பண்ணிடுவோம் … எங்க போகணும்னு சொல்லுங்க…”

‘ம் … ம் … எங்க போகலாம் … நிலா உனக்கு புடிச்ச இடமா சொல்லு … இரண்டு நாள் பேக்கேஜ் …”

“ஹில்ஸ் ஏரியா போகலாமா ….?”

“ஆல்ரெடி ஊட்டி, கொடைக்கானல், மூணாறு எல்லாம் பலதடவை பாத்தாச்சு…
வேற இடமா சொல்லு ….”

பேசிக்கொண்டிருக்கையில் பிரபுவின் கைப்பேசியில் சற்குணம் அழைக்க,

“வணக்கம் …. சொல்லுங்க சற்குணம் ….” பிரபு பேச

மறுமுனையில் சற்குணம் ” பிரபு … நாளை இங்க வந்துட்டு போக முடியுமா …?” என்று கேட்க,

“எனிதிங்க் இம்பார்ட்டண்ட்….?”

“யா ….! கொஞ்சம் கிரிடிகலான மேட்டர் . நீங்க வந்தா நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது.

“ஒகே …. டுமாரோ ஐ வில் கம் ஸ்யூர்லி …”

“வெல் பிரபு . நாளைக்குப் பார்க்கலாம் ..” சற்குணம் போனை வைத்து விட

“நிலா …. நாளை என்ன புரோகிராம் …” என்று பிரபு கேட்க,

“தாம்பரம் கிருபாகரன் நில மோசடி புராஜக்ட் 875 வாய்தா வாங்கணும் ….”

“… ஜானி நம்ம கேஸ் எத்தனை மணிக்கு வருது ..”

“லெவனோ கிளாக் ….”

“‘ “சரி …. அத முடிச்சிட்டே போகலாம் … சீனுவைக் கூப்பிடு ….மறுநாள் சற்குணத்தை மீட் பண்ண சென்றனர் இருவரும்.

‘வணக்கம் … எஸ் . பி . சார் …! ஜானி வணக்கம் சொல்ல, பதில் வணக்கம் சொன்னவர் ” பிரபு … மயிரிழையில் உயிர் பிழைத்து வந்திருக்கிறீர்கள் … கடவுள் கருணை உங்களுக்கு நிறைய இருக்கு… ஆல் தி பெஸ்ட் …!”

“கடவுள் கருணை இருக்கிறதோ இல்லையோ … என் அம்மாவின் பாசம்
என்னைக் காப்பாற்றும் … அப்புறம் …. சொல்லுங்க… அந்த இராமன் விவகாரம் என்னவாச்சு ….?”

“அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன் … நாம நினைச்ச மாதிரி வுட் ஸ்மக்ளிங் தான் . ஒரு குரூப்பே மாட்டிஇருக்குது. இதுல அரசியல்வாதிகளும் உடந்தை.
கண்டிப்பா பிரசர் இருக்கும் .”

அது நமக்கு தெரிஞ்சதுதானே …. நம்ம கடமையை நாம பர்பெக்டா செஞ்சா போதும் .” என்று பிரபு கூற

‘ எக்ஸாட்லி ….! ஆனா இப்படி கஷ்டப்பட்டு உழைச்சது வேஸ்டா போகும்போது மனசு வலிக்குது .”

“சரியா சொன்னீங்க சார்… என்னிக்கு உழைக்கிற காசு போதும்னு நினைக்கிற
தலைவர்கள் வருவார்களோ … அன்றுதான் உண்மை நிலைக்கும் …” ஜானி கூறிய கருத்துக்கு

“இருந்தாங்களே …. காமரசர் போன்ற பெர்பஃசனிஸ்ட் லீடர்ஸ் … இனி இதுபோல
தலைவர்கள் கிடைப்பது அரிதுதான் …” பிரபு கூற,

அதை ஆமோதிப்பது போல் தலையாட்டிய சற்குணம் டீ கொண்டுவரச் சொல்ல
அதைக் குடித்துக் கொண்டே ” பிரபு … நான் உங்களை வரச் சொன்னதுக்கு இராமன் விவகாரம் மட்டுமல்ல … வேறோரு விசயமும் இருக்கு … அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன் …” என்று கூறவும்

“இப்படித்தான் இருக்கும் என்று நினைச்சேன். சொல்லுங்க… என்ன விசயம் …?”

” இதச் சொல்றதுக்கு எனக்கே ஒருமாதிரி தான் இருக்கு . இருந்தாலும் உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணணும்னு தோணிச்சி…. அதான் …”

“என்ன சார் … பீடிகை பலமா இருக்கு. ஏதாச்சும் அடல்ஸ் ஒன்லி மேட்டரா …?”
ஜானியின் கேள்வியால் சிரித்துவிட்டசற்குணம்

“சீரியசான நேரத்துல கூட மொக்க ஜோக் சொல்லியாவது மைண்டை டைவர்ட் பண்ணிடுறீங்க ஜானி … ஐ லைக் யுவர் பிரசண்டேசன் …”

“சார் … இது வஞ்சப்புகழ்ச்சி இல்லியே …!’

சே சே அப்படியெல்லாம் இல்லை. நிசமாலுமே உங்க ஸ்பாட்லைட் எனக்குப் புடிச்சிருக்கு . பிரபு கொடுத்து வைத்தவர்.

உங்களைப்போல உள்ளவங்களை தன் பக்கத்தில் வைத்திருப்பதற்கு …”, என்று சற்குணம் பாராட்ட ஜானி கூச்சப்பட்டு தலைகுனிந்துக் கொண்டான்.

ஜானிக்கு தற்பெருமை பிடிக்காது … அப்படித்தானே ஜானி …!”

புன்னகையுடன் பிரபு கேட்க,

அதானே பார்த்தேன்… எங்கடா இன்னும் புகை தெரியலையேன்னு … முதல்ல விட்டுக்குப் போனதும் சுத்திப் போடச் சொல்லனும் எனக்கு ….”

” ஹே …. பாத்து… அப்படியே அலேக்கா தூக்கிப் போட்டுடப் போறா டினா …” பிரபு சொல்வதைக் கேட்டு சற்குணமும் சேர்ந்து சிரிக்க,

பாஸ் … ஆனாலும் நீங்க போங்கு …” சொல்லிவிட்டு ஜானியும் சிரிக்க சிரிப்பலை சிறிது நேரம் நீடித்தது.

“சரி … நா விசயத்துக்கு வரேன் . நீங்க உங்க பிரண்டுக்கு வாங்கப் போறதா அந்த ஜமீன் மாளிகையை விசாரிக்க சொன்னீங்கல்ல… அதப்பத்தி ஒரு விசயம் தெரிய வந்துருக்கு …” சற்குணம் கூறியதைக் கேட்ட இருவரும் நிமிர்ந்து அமர்ந்தனர் .

” இஸிட் …! என்ன …?”

‘ நேத்திக்கி ஐந்து அக்கீயூஸ்டுகளை பிடிச்சி விசாரிச்சோம்னு சொன்னேன் இல்லியா …. அப்ப அந்த மாளிகைப் பத்தி கேட்டதுல அவங்க சொன்ன விசயத்தை நம்பறதா …. இல்லயான்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு …”

“உங்களையே கன்ப்யூஸ் பண்ணிட்டாங்களா …. அப்ப ஸ்டராங் கிரிமினல்ஸ் தான் …”

” நான் கூட முதல்ல அவனுங்க குழப்பறானுங்கன்னு தான் நினைச்சேன்.

அதனால இன்னிக்கி பக்கத்துல இருக்கிற கிராமத்துல விசாரிக்கச் சொன்னேன் .
அவங்களும் இவனுங்க சொல்றமாதிரி தான் சொல்றாங்க…”

“சற்குணம் …. நீங்க சொல்றதப் பார்த்தா அங்கே ஏதோ வில்லங்கம் இருக்கும் போல தோணுதே …?”

“அப்ஸ்யூட்லி . யூ ஆர் கரெக்ட்… வில்லங்கம் மட்டுமல்ல … மர்மமானதும் கூட ….”

“என்னங்க சார் ….!, அநியாயத்துக்கு எங்களை இப்படி சஸ்பென்ஸ்லேயே இருக்க வைக்கிறீங்க … மனசு படபடன்னு அடிச்சிக்கிது …”

“கூல் … கூல் . சொன்னதுக்கப்புறம் ஹார்ட்டே நின்னாலும் நின்னுடும் …”

‘என்ன சற்குணம் … நீங்க கூட இப்பிடி பேசுறீங்க …. நாமெல்லாம் எல்லா ஹாரர்ஸ்ஸையும் பாத்து வந்தவங்கதான் . இதுக்கெல்லாமா பயப்படுவோம் . பரவாயில்லை சொல்லுங்க …”

“அந்த மாளிகை பக்கம் ஸாரி கேட்டுப்பக்கம் கூட யாரும் இதுவரை போனதில்லையாம் ….”

‘ஏன் … போனவங்க உயிரோடு திரும்பி வந்ததில்லை … அப்படித்தானே சொல்லப்போறீங்க…?”

” நீங்க நினைக்கிறது தப்பு ஜானி …!

இது அப்படி அல்ல. நாம பங்களாவுலேருந்து குறிப்பிட்ட இடம் வரைதான் போக முடியுமாம் . அதற்கு மேலே போனாலும் நம்மை அறியாமலேயே எந்த இடத்தில் ஆரம்பித்தோமோ அங்கேயே மீண்டும் வந்துவிடுவோமாம் …. அதனால் இது வரைக்கும் யாருக்குமே அந்த பங்களா எப்படி இருக்கும்னு தெரியாதாம் …”

‘ என்ன சற்குணம் …. இது நம்பறமாதிரியா இருக்கு … இதெல்லாம் சுத்த ஹம்பக் …
அது சரி … நீங்க அங்க போயி பாத்துட்டு வந்தீங்களா…?!!

‘இல்லை … நாம ஒண்ணா சேர்ந்து போயி கன்பார்ம் பண்ணிக்கலாம் …”

‘ம் … ம் .. ஒகே… என்னிக்கி போகலாம் …?”

” இந்த வாரம் வொர்க்லோடு அதிகமா இருக்கு … நெக்ஸ்ட் வீக் போலாமா ..?”

” பாஸ் … நாம போட்டுருக்கிற பிளான் …?”

“ஆமா … மறந்துட்டேன் . சற்குணம் நெக்ஸ்ட் வொர்க்கிங் டேஸ் நாங்க வெளியூர் புரோகிராம் போட்டிருக்கிறோம் … பிகாஸ் ஆப்டர் வீக் போலாமா …?

“ஒகே… நீங்க டிசைட் பண்ணிட்டு சொல்லுங்க …”

‘பாஸ் … ஏன் நாளைக்கு போகக்கூடாது …?”

சாரி ஜானி… சேட்டர்டே ஒன்லி என்னோட பேமிலிக்கு மட்டும். வேற கமிட்மென்ட்ஸ் நோ வே …. இட்ஸ் ஒகே … மறுபடி பாக்கலாம் ….”

அலுவலகத்தில் இன்று நால்வரும் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியுடன்
காணப்பட்டனர் .

” நிலா … எப்ப வீட்ல சொல்லப் போறீங்க …”

“அப்பாவை நினைச்சா பயமா இருக்கு ஜானி …. மெல்ல அம்மாகிட்ட சொல்லிட்டு அவங்களை கன்வின்ஸ் பண்றேன் ….”

“அதுதான் எப்போ ….? இப்படியே ஆபிஸ்லேயே லவ் பண்ணிகிட்டே இருக்கலாம்னு நினைப்பா …”

“ஏய்… என்னப்பா …. உங்க பாஸ் கேக்க சொன்னாரா……..?”

“ஹேய் …. என்ன … என்னை கோத்துவிடற … இவன் பேச்சுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை… ஏதோ அவனுக்கு கேக்கணும்னு தோனிருக்கு ….”

“ஏன் பாஸ் …. இப்பவே இப்பிடி பயப்படுறீங்க… தைரியமா சொல்லுங்க … ஆமா நாந்தான் கேக்க சொன்னேன் என்று ….”

“பிரபு… ஆல்ரெடி உங்ககிட்ட நா சொல்லியிருக்கேன். ஆனாலும் நீங்க கன்வின்ஸ் ஆகலன்னு தெரியுது … உங்களோட அவசரத்துக்கு என்னால வரமுடியாது . சரி … இதோட பிரேக்கப் பண்ணிக்கலாம் .”

‘ஹே … நிலா …. அவன்தான் உன்னை கடுப்பேத்துறான் நீயும் அதை நம்புறே …
ஜானி … ஏண்டா … இவ்வளவு வன்மம் உனக்கு….?”

ஆஹா … யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டாமா ….?”

“கேப்டன்….! பிரதர் நல்லாவே கோத்து விடுறாரு …” ‘ என்ன பிரபு … பயந்துட்டீங்களா … சும்மா உல்லாலங்கடி …”

‘நிலா …. பாத்தீங்களா … பாஸை எப்படி நடுங்க வச்சிட்டேன் ….

ஜானியும் நிலாவும் விழுந்து விழுந்து சிரிக்க,

“ரெண்டு பேரும் பேசி வச்சி வார்ரீங்களா …”

” தொப்பி … தொப்பி ” என்று இருவரும் கோரஸாக கத்த

பிரப ஜானியை துரத்த வந்தியா மறுபக்கம் ஜானியை பிடிக்க முயல,

சிரிப்பலை தொடர்ந்தது.

‘நிர்மலேஸ்வரா… மாயாவி விடவில்லை…மகுடத்தை சுமந்து விடு’

காதோரம் கிசுகிசுத்த குரலில் சட்டென நின்றான் பிரபு.

அத்தியாயம் 13

கார் சென்னை டூ கன்னயாகுமரி சாலையில் சென்று கொண்டிருந்தது.
காரை வந்தியத்தேவன் ஓட்டிக்கொண்டிருக்க,

ஜானி அவன் அருகில் முன்னால் அமர்ந்திருந்தான். வழக்கம் போல் பிரபுவும் நிலாவும் நெருக்கியபடி கைகளைப் பிடித்துக் கொண்டு கைகளால் பேசியபடி அமர்ந்திருந்தனர்.
மௌனமாக கார் பயணம் சென்று கொண்டிருக்க, ஜானி ” பாஸ் … மேகமலை பிளான் ஒகே தானே ….?” ” ஏன் வேண்டாம்னா மாத்திடுவியா …?

‘ஏன் பாஸ் உங்களுக்கு பிடிக்கலையா …? நிலாதான் அங்க போகலாம்னு சொன்னாங்க…’

‘ சே … சே … சும்மா சொன்னேன் …. அதிக ஆரவாரமில்லா அழகான மலைத்தொடர். பிடிக்காம போகுமா … ஆக்சுவலா ரொம்பநாளாவே அங்க போகலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன் …. ‘பிரபு … நா காலேஜ் டேஸ்ல வந்திருக்கேன் … அழகான பள்ளத்தாக்குகள் . ரம்மியமான காபி தோட்டங்களும் தேயிலை தோட்டங்களும்…. இதமான சீதோஷ்ண நிலையும் அப்ப்பா … வாட் எ பியூட்டிபுல் லொகேசன் ….!”

கண்களை விரித்து காட்சியை அவள் வர்ணித்தவிதம் பிரபுவுக்கும் மற்றவர்களுக்கும் ஆச்சரியமாய் இருந்தது.

ஹே … நீ இப்படியெல்லாம் கூட பேசுவியா …? லாயருக்கு படிச்சவ பேசறதுக்கு கூலி கேக்கறாளேன்னு நினைச்சிருக்கேன்.

ஆனா … இப்பிடி ரம்மியமா பேசுவியா ..!”

“பாஸ் … பேசறதுக்கு கூலி வாங்கத்தானே நாம படிச்சிருக்கோம் …’

‘சரி சரி சும்மா வாயடிக்காம பாட்ட போடு…

எதையாவது பேசி அவளை இம்ப்ரஸ் பண்ணலாம்னு பாத்தா … நடுவுல ஏதாச்சும் பேசி கெடுத்துவிடுறது … ஆமா … டினாவை கூட்டிக்கிட்டு வாடான்னு சொன்னா அவ இல்லாம நீ மட்டும் வந்து நிக்கிற … அவ வந்தா உன் ஜாலி பணால் ஆகும்னுதான் விட்டுட்டு வந்தியா…..?”

“ஆமா ஜானி … டினாவை கூட்டிக்கிட்டு வந்திருந்தா… எனக்கு கம்பெனியா இருந்திருப்பா …!”

“நீங்க வேற நிலா …! அவளுக்கு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ் என்னை கவனிக்கிறத தவிர … பேருக்குத் தான் நாங்க லவ் மேரேஜ் …. ஆனா அங்க துளிகூட லவ்வு இல்ல …”

“நா ஒருநாள் டினாவ மீட் பண்றேன் … அவளுக்கு புரியவைக்கிறேன்…” நிலா கூற,

“ஏய் நிலா .. . அவள நீ மாத்திரியோ இல்லியோ அவ உன்னை மாத்திடுவா ஜாக்கிரதை …”

ஜானி கூறியதைக் கேட்ட நிலா

“நா என்னிக்குமே என் பிரபுவை லவ் பண்ணாம இருக்கமாட்டேன்.

யாரும் என்னை மாத்த முடியாது….”

நிலா சட்டென்று பிரபுவின் மேல் சாய

‘ஓ … ஓ .. சோ ஸ்வீட் …!” பிரபு நிலாவை தன் பக்கம் இழுத்து அணைக்க

“பாஸ் … இங்க ஒரு கல்யாணமாகாத வயசுப் பையன் இருக்கிறான் …. பாத்துக்குங்க …”

‘அவனுக்கு வயித்தெரிச்சல் . அதை வந்தியா மேல போடறான் பாரு …’ சிரித்தபடி பிரபு கூற

” எனக்கென்ன எரிச்சல் … பெரியகுளத்துல என் ஆளு இருக்கிறா … எனக்கு எந்த பீலும் இல்லை … பாவம் பையன்னு சொன்னா எனக்கே வத்திகுச்சியா …?”

“பிரதர் … நா பேசாம காருதானே ஓட்டிக்கிட்டு இருக்கேன் . என்னை ஏன் வம்புல மாட்டி உடுறீங்க…?”

‘ஹீம் … நல்லதுக்கே காலமில்லை … யாரோ எப்படியோ ரொமான்ஸ் பண்ணா எனக்கென்ன ….வந்தியா … அந்த கேபி சுந்தராம்பாள் பாட்டைப் போடு. நா கண்ணு மூடி ரசிச்சிக்கிட்டு வர்ரேன் …”

“இதுக்குதான் வயசானவங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு வரக்கூடாது …. சொன்னா கேட்டீங்களா பிரபு …”

சிரிக்காமல் நிலா கூற

“நிலா …. யூ டூ பூரூடஸ் …! நா நினைச்சே பாக்கலை இப்பிடி மாறுவீங்கன்னு…?”

“பிரதர் … யூ டோண்ட் வொரி… நா காரை நிறுத்துறேன். அப்படியே பொடி நடையா சென்னைக்கு திரும்பிடுங்க …” வந்தியாவும் தன் பங்குக்கு ஜானியை கலாய்க்க,

‘அப்படியா …. வா அங்க … கொசு கடி ரூமா பாத்து உனக்கு ஒதுக்குறேன் …”

ஜானி சீரியஸானவன் போல் பேச

அனைவரும் சிரிக்கத் தொடங்கினர்.

“சரி வேற எதுனா பேசலாம் … பிரபு உங்களுக்கு எந்த ஆர்த்தர் ரைட்டிங் மிகவும் பிடிக்கும் …?”

நிலா பேச்சை மாற்றி கேட்க

“ம் .. ம் . என்று சிறிது நேரம் யோசித்த பிரபு

“ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை சமீபத்தில் படிச்சேன்.
ப்பா …. என்ன நடை…. என்ன தாட்ஸ் …ஷி இஸ் வெரி கிரேட்… அவங்க வாழ்ந்திருந்த காலத்துல நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமைதான் ….”

‘ஆமா பிரபு … எனக்கு அதுல ஹீரோயின் கங்கா கேரக்டர் ரொம்ப பிடிக்கும் …” நிலா பதில் கூற,

‘ சரி உனக்கு யாருடைய எழுத்து ரொம்ப பிடிக்கும் …?” பிரபு நிலாவைப் பார்த்துக் கேட்க,
‘நா காலேஜ் டைம்ல’ பொன்னியின் செல்வன் படிச்சேன். அதுல வந்தியத்தேவன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

பிரதர் இண்டர்வியூவுக்கு வந்தப்போ இவர் பேரைக் கேட்டே இவரை எனக்கு ரொம்ப புடிச்சிப்போச்சு…”

‘வந்தியா … உன் பேருதான் உனக்கு வேலையை வாங்கிக் குடுத்துருக்கு … பார்த்தியா …?”

ஜானி கூறியதைக் கேட்ட வந்தியா

எங்கம்மாவுக்கு பொன்னியின் செல்வன் நாவல் ரொம்ப புடிக்குமாம் … அதனாலத்தான் எனக்கு அவங்க பேவரிட் ஹீரோ பேரை வெச்சாங்கலாம்

அப்பறம் எனக்கு சிவகாமியின் சபதம் சிவகாமி கேரக்டர் ரொம்ப பிடிக்கும் …”

நிலா கூறுவதைக் கேட்ட பிரபு

“ஏன் அவங்க டான்சர் என்பதாலா …?’

“இல்ல … அவங்களோட காதல் துணிச்சல் தைரியம் தியாகம் …. ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி..”,

‘ஆமா …. ஏன் டிராஜடி கேரக்டரையே பிடிக்குது உங்களுக்கு ….எனக்கு எப்பவுமே … நம்ம ஹீரோ ரைட்டர் சுஜாதா தான். அவரோட சயின்ஸ்பிக்ஷன் நாவல்ஸ் தான் நம்ம பேவரிட்…அப்புறம் வந்தியா … உனக்கு யாரோட ரைட்ஸ் பிடிக்கும் ..?’ ஜானி கேட்க

“எனக்கு நாவல்ஸ்ல அவ்வளவா இன்ட்ரஸ் கிடையாது. வைரமுத்து கவிதைகள், மு மேத்தா, அப்துல் ரகுமான் போன்றோரின் கவிதைகள் தான் மிகவும் பிடிக்கும் … சமீபத்துல ஜெயமோகனின் ஏழாம் உலகம் படிச்சேன். அது என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி … அதுல பண்டாரம்னு ஒரு கேரக்டர் வரும் … வெரி இன்டரஸ்டிங் கேரக்டர்…’

“வந்தியா … நீ ரொம்ப மெச்சூரானவன்தான்… நீ படிக்கிறத வச்சே சொல்லத் தோணுது …” பிரபு கூறியதைக் கேட்ட ஜானி

‘அதென்னவோ வாஸ்தவந்தான் பாஸ்… ஒருத்தருடைய கேரக்டரை புரிஞ்சுக்க அவங்களோட வாசிக்கும் புத்தகங்களை வெச்சே சொல்லிடலாம் …”

“பாஸ் … திருச்சிய நெருங்கிட்டோம் … மதிய உணவை இங்கேயே முடிச்சிக்கலாமா …?”

‘ரெண்டு ஆயிடுச்சே … சாப்டுட்டே போகலாம் .. சரி நைட் எங்க தங்கறது … அரேஞ்ச் பண்ணியிருக்கியா…?”

” நாம பெரியகுளத்துலதான் நைட் தங்கப்போறோம் … அங்க என் கிளாஸ்மேட் இருக்கிறான் … அவன் எல்லாம் ரெடி பண்ணியிருப்பான் .

காலையிலதான் நாம மலைமேல போகிறோம் … அதுக்கும் ஜீப் அரேஞ்ச் பண்ணிட்டான்.
கைடா நமக்கு துணையா அவனும் வரான் …”

“கிரேட்.. நல்லா பிளான் பண்ணியிருக்குற …”

சரி .. சாப்பிட்டு பிறகு நீ டிரைவ் பண்ணு . வந்தியா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் …”

ஒகே… அப்புறம் நிலா … உங்க பிரண்டு உமா நல்லா இருக்கிறாங்களா ..?”,

அவளுக்கென்ன நல்லாத்தான் இருக்கா … ஏன் கேக்குறீங்க…?”

“போன வாரம் லைப்ரரிக்கு போயிருந்தேன் .. அங்க அவங்களை ஒரு பையனோட பார்த்தேன் … அதான் கேட்டேன்.”

“பையனோடவா … அவ அப்படி எல்லாம் போக மாட்டாளே … அவ ரிலேசன் யாராவது இருக்கும் …’ “இல்லங்க … நானும் அப்படித்தான் நினைச்சேன் …. அதை அவங்ககிட்டயும் கேட்டேன் …

அவங்க இவர் என் லவர். இப்பத்தான் கொஞ்சநாள் முன்பு நாங்க பிரண்ட்ஸா
ஆனோம் . இன்னம் நிலாவுக்கு சொல்லலை … தயவுசெய்து அவகிட்ட சொல்லிடாதீங்க …
நானே அப்புறமா சொல்லிக்கிறேன்னு சொல்லிட்டாங்க

நானும் எதுக்குடா பிரண்ட்ஸுக்குள்ள சண்டையை மூட்டி விடுறதுன்னு சொல்லல …”
ஜானி கூறியதைக் கேட்ட நிலா ” அப்படியா சொன்னா அவ … கிராதகி …!,

நா இது வரைக்கும் எதுவுமே மறைச்சதில்லை … பிரபு … நம்ம கமிட்மெண்ட்ஸ் உருவான அன்னிக்கே அவளைத் தேடி போயி சொல்லிட்டு டீரீட் கேட்டா குடுத்துட்டு வந்தேன்.
ஆனா அவ என்கிட்ட இவ்வளவு முக்கியமான விசயத்தை மறைக்கிறாளா …

இருக்கட்டும் … அவளை போயி வச்சிக்கிறேன் …” நிலா கோவத்துடன் முகம் மாறி உர்ரென்று அமர்ந்திருக்க

‘இப்ப உனக்கு எதுக்கு கோபம் … அவ சொல்லலன்னா. இல்ல டிரீட் கொடுக்கலன்னா ..” பிரபு நிலாவைப் பார்த்து கேட்க,

என்னயப் பார்த்தா எப்பிடித் தெரியுது

தீனிப்பண்டமா தெரியுதா … பிரண்ட்ஸிக்குள்ளே எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு எங்களுக்குள்ளே அக்ரிமெண்ட் தெரியுமா … அவளுக்கு இருக்கு சென்னை போனதுக்கப்புறம் …’

“ஏன் நிலா … பிரண்டு சொல்லலேன்றதுக்கே இப்படி கோவப்படறீங்களே ….
பாஸ் உங்ககிட்ட ஏதாச்சும் மறைச்சார்னா என்ன பண்ணுவீங்க…?”

ம்…. மறைச்சாதானே …. அவரு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு … ‘

‘அப்படி இல்ல … இனிமேல மறைக்க வேண்டிய சூழல் வராலாமில்லையா ….?”

“ஏண்டா … எல்லாம் சுமூத்தாதானே போய்கிட்டு இருக்கு… இப்ப இது தேவையா …? அது சரி அவ பிரண்டு சொல்லவேணாமுன்னு சொன்ன விசயத்தை ஏன் இப்ப சொன்னே …?”
பிரபு கேட்க,

“அது போனவாரந்தானே சொல்லமாட்டேன்னு சொன்னேன் …இது இந்த வாரம் …”

‘ ஒழுங்கா ஓடிக்கிட்டு இருந்த வண்டியை சட்டுனு பிரேக் போட வச்சிட்டியே … நல்லா இருக்கா …?”

பிரபு ஆதங்கத்தை ரசிச்ச ஜானி ” வண்டி ஓவர் ஸ்பீடு போகக்கூடாது… அதுக்குதான் சடன் பிரேக் போட்டேன் … எப்படி பாஸ் … என்னை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டனும்போல இருக்குதா …?” சிரிக்காமல் ஜானி சொன்னதைக் கேட்டு மற்ற மூவரும் கலகலவென்று சிரிக்கத்தொடங்கினர்.

இரவு ஒன்பதுமணியளவில் அவர்கள் பெரியகுளம் சென்றடைய,

ஜானியின் நண்பன் கதிரவன் அவர்களை ரிசீவ் செய்து நல்ல பிரபலமான ஓட்டலில் தங்க ஏற்பாடு பண்ணினான் .

ஜானியும் வந்தியனும் ஒரு அறையிலும் நிலா பிரபுக்கு தனித்தனி அறைகளும் ஒதுக்கப்பட நால்வரும் தங்கள் அறைகளில் தஞ்சமடைந்தனர். புது இடம் என்பதால் பிரபுவுக்கு தூக்கம் வரவில்லை … தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினான்.

அப்படியே உறங்கிவிட தன் கால்களை யாரோ பிடித்து விடுவது போல் உணர்வு தோன்ற
நிலா தான் தூக்கம் வராமல் இங்கே வந்து தன் காலை பிடிக்கிறாள் என நினைத்து,
‘ கள்ளி … மனசுல ஆசையை வச்சுக்கிட்டு தான் பட்டும் படாமலும் எங்கிட்ட பழகுகிறாளோ …

கண்ணைத் திறக்காமலேயே மெல்ல எழுந்திருக்கலாம் ‘ என நினைத்து மெல்ல கட்டிலில் எழுந்து அமர்ந்து கண்ணைத் திறந்தான்.

யாரும் அங்கிருப்பதாக தெரியவில்லை

ஆமாம் நாம் தான் கதவை லாக் பண்ணியிருக்கோமே

அப்படியிருக்க நிலாவால் எப்படி வர முடியும் …? தூக்கத்துல கனவா இருக்கும் ‘ என நினைத்துக் கொண்டவனாய் மீண்டும் உறங்கிப் போனான் .

காதோரம் உஷ்ணக்காற்று படவே திரும்பி படுத்தான். அவனருகில் அமர்ந்திருந்த உருவம் மெல்ல சிரித்தது பின் அவன் காதோரம்

‘நிரமலேஷ்வரா…. நிலவு மயங்கி முற்றம் வரும். நீசனுடைய
நிர்மலங்கள் நீராய் போகும்… மாறனின் வம்சம் களித்திடும்….
சிகரம் சங்கடம்… சஞ்சினியை விட்டு விடாதே… சதிகாரன் சடுதியில் சுட்டெரிப்பான்… சமயம் சாதிக்கும்…!’

காதோரம் கேட்ட குரலுக்கு ம் … ம் ‘… என்று முனகிக்கொண்டே பதில் உரைத்தான் பிரபு.
‘காலையில் கண்விழித்தவனுக்கு இரவு கனவில் கேட்ட வார்த்தைகள் மனதில் வந்து நின்றது .

‘ ஏதோ சங்கடம்னு கேட்டேமே … ஏதாச்சும் பிரச்னை வருமா…. எதற்கும் ஜாக்கிரதையா இருக்கனும் …’ என்றெண்ணியவாறு எழுந்தான்.

காலை ஏழு மணிக்கெல்லாம் அனைவரும் ரெடியாகி மலைமேல் செல்வதற்கு தயாரானார்கள்.

ஜீப் நின்று கொண்டிருக்க அனைவரும் அதில் ஏறினார்கள்.

கதிரவன் உரத்த குரலில் தூரத்தில் நின்றிருந்தவனை ” மாயவா வண்டியை எடு ” என்று கூற,

நால்வரும் திடுக்கிட்டுப் பார்த்தனர் அவனை ..

முரட்டு மீசை உடைய ஆஜானுபாகுவாய் கறுத்த நிறத்துடன் உடையவன் அவர்களை நோக்கி வந்தான்.

வந்தவன் பிரபுவை வைத்த கண் வாங்காமல் உற்று நோக்கியவாறு விரைப்பாக வந்து நின்றான்.

அத்தியாயம் 14

மாயவா என்று கதிரவன் அழைக்க,

முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாய் பிரபுவை பார்த்துக் கொண்டே வருவதைப் பார்த்த நால்வரும் சிறிது திகைத்துதான் போனார்கள்.

இப்பொழுதெல்லாம் மாயவன் என்கின்ற வார்த்தை அடிக்கடி கேட்கப்படுவதால் ஏற்பட்ட நிலை.

மாயவன் என்ற ஜீப் டிரைவர் பிரபுவிடம் வந்து,

வணக்கம் சார் … நீங்க லாயர் பிரபுதானே ..?” என்று கேட்க

“ஆமாம்…. உங்களுக்கு என்னை தெரியுமா …?” என்று பிரபு கேட்க,

“நாலு வருசத்துக்கு முந்தி என்னோட பங்காளி என் நிலத்தை எனக்குத் தெரியாம வித்துட்டான்னு கேஸ் குடுத்தேன்… நீங்க அதுக்காக வாதாடி எனக்கு அந்த நிலத்தை திருப்பி வாங்கிக் குடுத்தீங்களே … ஞாபகம் இல்லீங்களா …?” என்று மாயவன் கேட்க,

சிறிது நேரம் யோசித்த பிரபு “ஆமாம்… இப்ப ஞாபகம் வருது . பெரியதுரை தானே அவரு பேரு…?”

‘சரியா ஞாபகம் வச்சிருக்கீங்க … உங்களை தூரத்துல பார்த்ததுமே நா கண்டுபிடிச்சிட்டேன் ….

ஐயா … நல்லாயிருக்கீங்களா …?”

ம் … நல்லா இருக்கேன் … இங்க மேகமலை போகலாம்னு கிளம்பி வந்திருக்கோம் …

கதிரவன் உங்களைத்தான் எங்களுக்கு கைடா கூட்டி வராரா ?”

“ஆமாங்கய்யா … யாரு வந்தாலும் என்னைத்தான் அனுப்புவாரு … எனக்கு இங்க சுத்து வட்டாரம் முழுக்க அத்துப்படி…இன்னிக்கி உங்களுக்காக வரேன்னு ரொம்ப சந்தோசமா இருக்குங்க …

என்னோட நன்றியை இப்பிடியாவது தீர்த்துக்கிறேன் …”,

“ரொம்ப நல்லது … நீங்க என் மேல வச்சிருக்கிற பிரியம்.

“ரொம்ப அழகான அமைதியான வெண்பணி மேகங்கள் சூழ்ந்த இடமுங்க… நீங்க உங்க பேமிலியோட நல்லா என்ஜாய் பண்ணலாங்க… எனக்கு இந்த மலையில நிறைய இடம் தெரியுங்க… நா உங்களுக்கு எல்லா இடத்தையும் சுத்தி காட்டுறேனுங்க

ஐயா … அங்க தங்கி பாக்கறதுங்களா … இல்ல சாயங்காலமே திரும்பிடறதாங்க …?”

‘ இல்லை … நைட் ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு ஈவினிங் கீழே இறங்கிட வேண்டியதுதான் …” ” இன்னிக்கு பௌர்ணமி வேற … மலை சூப்பரா இருக்கும் … “

ஜீப்பில் அனைவரும் ஏற மாயவன் ஜீப்பை ஓட்டியபடி அந்த இடங்களைப்பற்றிக் கூறிக்கொண்டே வந்தான் . சின்னமனூரிலிருந்து மேகமலை அடிவாரம் வந்தனர் .

பார்க்கும் இடங்களிலெல்லாம் முந்திரி மரங்கள் காணப்பட

“என்ன இங்கு அதிகமா முந்திரிதான் இருக்கு …?” வந்தியத்தேவன் கேட்க,
“இங்க விளையிற முந்திரிப்பழம் ஒயின் தயாரிக்கப்படுகிறது …” என்று கதிரவன் கூற,

“இஸிட் … திராட்சையிலதானே ஒயின் தயாரிப்பாங்க..?” நிலா கேட்க,

“பேக்டிரி எங்க இருக்கு…? போகும்போது நிறைய வாங்கிட்டுப் போகலாம் …”, ஜானி கூற,
எங்க போனாலும் இந்த நினைப்பு போகாதா …?” நிலா கடிந்து கொள்ள,

‘ஹலோ மேடம் … நாம எந்த இடத்துக்கு வந்தாலும் அங்க என்ன சீப்பா கிடைக்குதோ அதை வாங்கிக்கிட்டா மணி சேவ் ஆகும் தெரியுமா …?

‘ஆமா … வாங்கறதே வேஸ்டுதான் . இதுல மணி சேவ் பண்ணப் போறீங்களா …?”

‘மேடம் … இங்க பேக்டிரில இத வாங்க முடியாது … எல்லாம் எக்ஸ்போர்ட் தான் …’
கதிரவன் கூற,

“போதுமா… உன் வயித்தெரிச்சல் … சரியாயிடுச்சா …?” ஜானி வருத்தப்படுபவன் போல் முகத்தை வைத்துக் கொள்ள,

” ஜானி .. இந்த முகம் நல்லாயில்லை … வேற முகத்தை கொண்டுவாங்க …” நிலா சிரித்துக் கொண்டே கூற, ” இந்த முகத்தைப் பார்த்துதான் எத்தனைப் பொண்ணுங்க பின்னால சுத்துராங்க… என் பிரண்ட்ஸெல்லாம் என்னப் பாத்து பொறாமைப் படறாங்க தெரியுமா ….?”,

‘ஐயோடா … சிங்கப்பூர் பொண்ணு சுத்தி வராங்க… ஜப்பான் பொண்ணு ஜாக்கிங் வராங்கன்னு ரீல் விடறதுல மன்னனா நீங்க… நம்பிட்டோம் நாங்களும் …’ நிலா கிண்டல் பண்ண

“நிலா … சூப்பர் . உங்கிட்ட இதை நா எதிர்பார்க்கலே … வெல்டன் …” நிலாவின் கையில் ஹைஃபை பண்ணிணான் பிரபு.

“பாஸ் இது ரொம்ப ஓவரா தெரியல ..

ம் … காதலுக்கு கண்ணில்லைன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க …”

பிரதர் … அதனாலதான் நீங்க கண் இல்லாமலே திரிஞ்சி டினா அண்ணி மேல மோதி அடிவாங்கிக்கிறீங்களா …?”

வந்தியத்தேவனும் தன் பங்குக்கு ஜானியைக் கலாய்க்க,

“பாருடா … மீன்குஞ்சுகூட நடனம் ஆடுது …” ஜானி பேச சிரிப்பலை தொடர்ந்தது.

அடிவாரத்திலிருந்து தென்பழனி செக்போஸ்ட் வர அங்கு உள்ள வழிவிடும் முருகன் கோவிலில் இறங்கி அனைவரும் வழிபட்டனர் .

பல ஏர்பின் வளைவுகள் தாண்டி ஜீப் சென்று கொண்டிருந்தது.

பள்ளதாக்குகளில் நீர்நிலைகள் காணப்பட்டது.

சரிவுகளில் தேயிலைத் தோட்டங்கள் கண்ணுக்கு குளுமையாய் காட்சியளிக்க,
நால்வரும் அதிக உற்சாகத்தோடு காட்சிகளை ரசித்து வந்தனர்.

12 கிமீ தொலைவில் ஹைவேவிஸ் என்ற ஊர் வந்தது . அங்கே உள்ள ஓட்டலில் அனைவரும் இறங்கி சூடாக காபி அருந்தி விட்டு மீண்டும் பயணத்தை
தொடங்கினார்கள் .

தூரத்தில் காணப்பட்ட ஹைவேவிஸ் டேமை கதிரவன் சுட்டிக்காட்ட
தூவானம் எனுமிடத்தில் ஜீப்பை நிறுத்தி அனைவரும் இறங்கி வியூ பாயிண்டை ரசித்தனர்

இடத்தின் பெயருக்கேற்றாற்போல அங்கே சிறுதூரல்கள் போட்டுக்கொண்டே இருந்தது.
கதிரவன் இவ்விடத்தின் சிறப்புகளை கூறிக்கொண்டே வந்தான்.

மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளதாகவும் அதில் இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியே சுருளியாறாக மாறி வைகைநதியில் கலக்கிறது எனக் கூறும் போது, மலைச்சரிவுகளில் வரையாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அனைவரும் தங்கள் போன்களில் போட்டோ எடுத்துக் கொண்டனர் .

இருநூறு சதுரகிமீ சுற்றளவில் காபி தேயிலை பயிரிடப்படுவதாகவும் தனியார் நிறுவனங்களே இங்கு உள்ளதாகவும் கூற

முப்பது கிமீ தூரம் போனதும் சாலை மண்சாலையாக கரடு முரடாக இருந்தது.
ஜீப் மெல்ல செல்ல ஆரம்பித்தது.

அங்குள்ள மரங்களிலும் ரோட்டோரங்களிலும் சிங்கவால் குரங்கு அலைந்துக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த நிலா குழந்தையைப் போல் உற்சாகமானாள்.
1996 வரை தேனி மாவட்டம் மதுரை மாவட்டமாக இருந்ததாகவும் அதன்பிறகே தேனி மாவட்டமாக மாறியதாகவும்,

தமிழ்நாடு 2009 முதல் தான் சுற்றுலாத்தலமாக மேகமலையை அறிவித்தது என்றும் கதிரவன் கூற அவன் கூறும் தகவல்களை ஆர்வத்துடன் கேட்டனர் . இங்கு ஊர்கள் அதிகமில்லாதது போல இருக்கிறதே என்று வந்தியத்தேவன் கேட்க,

பள்ளத்தாக்கில் கொஞ்சம் மக்களே வசிப்பதாகவும், இங்கிருக்கும் தேயிலை காபி தோட்ட வேலைகளுக்கு கீழிருந்துதான் மக்கள் வந்து செல்வதாகவும் கூற,
நாம் இவ்வளவு தூரம் வந்தபிறகும் பேருந்துகள் எதுவும் வந்த மாதிரி இல்லியே என்று ஜானி கேட்க,

ஒரு நாளைக்கு மூன்று முறைதான் பேருந்து விடப்படுவதாகவும் தனியார் ஜீப்புகளே அதிகம் பயணத்திற்கு பயனில் இருப்பதாகவும் மாயவன் கூறினான்.

மூன்று மணி நேர பயணத்தில் மேகமலையை அடைந்தனர்.

கீழே இறங்கிய அனைவரும் அங்கே மேகங்கள் கைகளில் தவழ்ந்து செல்வது போல் செல்வதைப் பார்த்ததும் குதூகலமாயினர் .

அங்கே தங்குவதற்கு மிகவும் வசதியான காட்டேஜில் புக் செய்யப்பட்டு இருந்ததால் அனைவரும் ரெஸ்ட் எடுக்க சென்றனர்.

மதியம் ஒருமணி … சாப்பிடுவதற்கு அனைவரும் ஒன்றுகூடினர் .

எங்கே செல்வது என்று டிஸ்கஸ் பண்ணி அதற்கு தயாரானார்கள்.

திடீரென்று யானைகள் வழி மறிக்கும் என்றும் அதனால் தகுந்த பாதுகாப்புடன் செல்வதே நல்லது என்றும் ரிசார்ட் நிர்வாகம் கூறவே

ஒரு கைடை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். மதியநேரத்திலேயே குளிர் எடுக்க ஆரம்பித்து விட்டது . அமைதியான அதிக ஆரவாரமில்லாத வியாபார் நெரிசல் இல்லாமல் மனதுக்கு இதமான சூழ்நிலை நிலவியதால்

காதலர்களுக்கு அது உன்னத பூமியாக இருந்தது. பிரபுவும் நிலாவும் ஒருவரையொருவர் கைகளைப் பற்றிக் கொண்டு கண்களால் காதல் மொழி பேசி அவர்களுடன் வந்துக் கொண்டிருந்தனர்.

ஜானியும் வந்தியனும் அவர்களை விட்டு விலகி அவர்களை பிரீயாக்கினர் .

இரவு அவரவர்களுக்கு தனித்தனி அறைகள் இருந்தாலும் அனைவரும் பிரபுவின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

‘பாஸ் … ரொம்ப அமைதியான சூழலா இருக்குல்ல …!”

“ஆமாம்… அதிக ஆரவாரமாவே பழகிட்டமா …இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கு….”

“மற்ற ஹில் ஸ்டேசன் போல இன்னும் மக்களிடையே இன்னும் இந்த இடம் ரீச்சாகலை … இப்பத்தான் நெட்டிசன்கள் இந்த இடத்தைப் பற்றி மக்களிடையே கொண்டு போராங்க…”

அதனால இப்ப மக்கள் சீசன்ல அதிகமா வர ஆரம்பிச்சிருக்காங்க …” கதிரவன் கூற,

“ரீச்சாயிடுச்சினா இதுவும் பொலூசன் எர்த்தா மாறிடும் …” பிரபு கூற

வேண்டாம் … இப்படியே இருக்கட்டும் …” நிலா பேசவும்

சரி போரடிக்குது … கார்ட்ஸ் போடலாமா … ?” ஜானி கேட்கவும் அனைவரும் விளையாடுவதற்கு தயாரானார்கள்.

இரவு நீண்ட நேரம் விளையாட்டு முடிவடையாமல் நீண்டுக் கொண்டிருக்க
தனக்கு தூக்கம் வருவதாக நிலா கிளம்பி சென்று விட்டாள்.

விடிந்து வெகுநேரம் அனைவரும் தூங்கிவிட கதிரவன் வந்து அனைவரையும் வந்து எழுப்பி ” நேரமாகிவிட்டது … பார்க்க கூடிய இடங்களைப் பார்த்து விட்டு இருட்டுவதற்குள் கீழே இறங்கி விடலாம் என்று கூறவே

அனைவரும் தங்கள் கடமைகளை செய்ய கிளம்பினார்கள்.

அனைவரும் கிளம்பி காட்டேஜின் விசிட்டர் அறையில் கூடினார்கள்.

நிலா இன்னம் வரவில்லை …

சிறிது நேரம் காத்திருந்த பிறகும் நிலா வராததால் பிரபு நிலாவிற்கு போன் செய்ய போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது.

‘சரி நான் போய் அவளை அழைத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு பிரபு நிலாவைத் தேடி அவள் அறையைத் தேடிச் சென்றான்.

அவள் அறைக்குச் சென்று கதவைத் தட்டினான். எந்த பதிலும் இல்லாததால் கதவைத் தள்ள கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது .

உடனே கீழிறங்கி வந்தவன் அறை பூட்டப்பட்டிருப்பதாக கூறவும் அனைவரும் கலக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ரிசப்ஷனில் சென்று நிலாவை விசாரிக்க ” ஆமாம் சார். நீங்க தானே அவருடன் இன்று காலை ஆறுமணியளவில் வெளியே செல்வதாக சாவியை குடுத்துவிட்டுச் சென்றீர்கள் … நான் கூட இவ்வளவு காலையில் வெளியில் சென்றால் பனி அதிகமாக இருக்கும் என்று கூறினேன் … இல்லை … பக்கத்தில் தான் செல்கிறோம் … அரைமணி நேரத்தில் வந்து விடுவோம் என்று கூறிச் சென்றீர்கள் …. இப்ப என்னிடம் வந்து கேட்கிறீர்கள் …?”
என்று கூற,

” என்ன …. நான் அழைச்சிக்கிட்டு போனேனா …! என்ன சொல்றீங்க… நான் இப்பதானே எழுந்திருச்சேன் …?” அதிர்ச்சியுடன் பிரபு கூற

“என்ன சார் குழப்புறீங்க… இருங்க அவங்க குடுத்த சாவி இருக்கான்னுப் பாக்கிறேன் …”
என்று கூறிவிட்டு மாட்டப்பட்டிருந்த சாவிகளைப் பார்த்த ரிசப்ஸனிஸ்ட்

” சார் … இங்க பாருங்க அவங்க ரூம் சாவி. அவங்க வந்து கலெக்சன் பண்ணிக்கலை…”
அவர் கூறிய செய்தி அனைவருக்கும் பயத்தைக் கொடுத்தது.

பிரபுவுக்கு இரவு தன் கனவில் கூறிய ஆபத்து செய்தி நினைவுக்கு வர

” ஜானி … எனக்கு பயமா இருக்குடா … நம்மைத் தொடரும் ஆபத்து இங்கேயும் தொடருதா …?” என்று கலக்கத்துடன் கேட்க,

“அப்படியெல்லாம் இருக்காது … நீங்க அதைரியப்படாதீங்க… நாம போயி அவங்களைத் தேடுவோம்… வாங்க ” என்று கூறவும்

ஜீப்பை எடுத்துக் கொண்டு வழியெங்கும் பார்த்துக் கொண்டே சென்றனர்.

ரொம்ப நேரமாகியும் நிலாவை அவங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..

– தொடரும்…

– உள்ளே வராதே (திகில் நாவல்), துப்பறியும் செவென் ஸ்டார் சீரீஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *