முடியாத கதைகள் பல…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 3,370 
 

Mudiyathakathaigal-pic2தலைத்துண்டை இறுக்கமாகத் தலையில் சுற்றிக் காது ஓரத்தில் சொருகியபின், இரு கைகளாலும் தலைப்பாகையைச் சரிசெய்து கொண்ட வேலாயுதம் சட்டைப்பையில் இருந்த கடிதங்களையும் மறுபடி வெளியே எடுத்துச் சரி பார்த்து வைத்துக்கொள்கிறார்.

அந்தக் கடிதங்களிடையே ஒரு சிறு தணி முடிப்பும் இருக்கிறது. அது அவர் மனைவி பாக்கியத்தின் காதுக் கொப்புகள். இன்றைய அவருடை! பயணத்திற்காக ஈட்டுக்கடையில் குடிபுகத் தயாரான ஆரண்டு அழகிய ஜிமிக்கி கோர்த்த கொப்புகள், அந்தப் பொட்டலத்தைத் தனியே எடுத்து, அதன் கனத்தை அறிய விரும்புவர்போல வலது உள்ளங்கையில் வைத்து மேலும் கீழும் ஆட்டியபடி அடுப்படிப்பக்கம் பார்க்கிறார், அங்க பாக்கியம் அவருக்காகத் தேனீர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள், நளினமான உணர்ச்சிகளை வெளியிடும் வித்தையை என்றோ மறந்துவிட்ட அவள் முகம் சிந்தனையால் இறுகிக் கிடக்கிறது தேனீர்க் கோப்பையையும் சீனிச்சாடியையும், எடுத்து வந்து அவரிடம் நீட்டியபடியே அவள் கேட்கிறாள்,

“பயணம் வைச்சாச்சா மாமா? எல்லாம் மறக்காம எடுத்துக்கிட்டிங்களா?”

ஆமா எல்லாம் எடுத்துக்கிட்டேன்.. .

வேலாயுதம் தேனீரை வாங்காமலே தன் கையிலிருந்த சிறு முடிச்சினைக் காட்டி அவளிடம் கேட்கிறார்.

“ஏன் பாக்கியம்? இதை முப்பது ரூபாவுக்கு வைச்சாப் பத்தாதா? நாப்பது எதுக்கு? வட்டியே எக்கச்சக் கமாக வருமாச்சே”

“அதுக்கு என்ன செய்யிறது?”

பாக்கியம் தேநீரைக் கணவன் கையில் கொடுத்தபடி தொடர் கிறாள்; ”வட்டி வருமுன்னு பாத்தா இப்ப நம்ப செலவுக்கு என்ன செய்யறது? நீங்க போக வர ரெண்டு மூனு ரூவா வேணும், அம்மாளுக்கு டொனிக்கு’ – அதான் கண்டாக்கையா சொன்னாரே என்னமோ சத்து! மருந்துன்னு? அதுக்குப் பனிரெண்டு ரூபா வேணும், அம்மா ஆசைப் பட்டுக் கேட்டுக்கிட்டு இருக்கு, அதுக்கு நல்ல இறைச்சியா ஒரு ரெண்டு சாத்தலாவது வாங்கிவாங்க? அதோட ஆட்டுக்காலு ‘சூப்’ வைச்சுக் குடுக்கச் சொன்னாரே டாக்டர் ஐயா? நல்லதா ரெண்டு காலு வாங்கிக்குங்க. அப்புறம் காய் கறி ஏதாச்சும் வாங்கி வரணும்; அரிசி யும் ஒரு மூணு கொத்து பார்த்து வாங்கி வாங்க? இந்த உக்கிப்போன வெள்ளையரிசிச் சோத்தைத் தின்னு நமக்கே வயிற்றுக்குச் சரியில்லே .. சொகமில்லாத மனுசருக்கு எப்படி? நீங்க வேற கல்லையும் மண்ணையும் வாங்கிவராம நல்லதா ஒரு மூணு நாலு கொத்து அரிசி வாங்கி வாங்க.. ? மேல ஒரு சாப்பாடு – கீப் பாடு உங்களுக்கு வேணாமா? மேட்டு லயத்து கருப்பாயி வீட்டிலே அன் னைக்கு வாங்கின அஞ்சு ரூவாக் கடனை யும் திருப்பிக் கொடுக்கணும் எல் லாத்துக்குமா நாற்பது ரூவாயாச்சும் வாங்கினாத்தானே கட்டுப்படியாகும்? வட்டிய பாத்தா ஆச்சா?”

மூச்சு விடாமல் பேசி முடித்த பாக்கியத்தின் முகத்தைப் பார்த்தப டியே தேனீரைப் பருகி முடித்து விட்ட வேலாயுதம் கோப்பையை அவளிடம் கொடுத்துவிட்டுப் புறங்கையால் உதடு களைத் துடைத்துக் கொண்டார். “உம், – உம்…. அப்ப சரிதான்… நாப் பதே வாங்குறேன்” என்று தலையை ஆட்டியபடி அவர் கூறினாலும், நீ சொல்லுற சுணக்கப் பார்த்த நாற்பது என்ன அம்பது ரூபாக்கூடப் பத்தா துப் போ!” என மனத்துள் கூறிக் கொண்டார். அதே சமயம், இரவெல் லாம் இருமியும் முணகியும் களைத்துப் போய்ச் சற்று முன்புதான் கண்ணயர்ந்திருந்த பொன்னம்மா மறுபடி யும் விழிப்புற்று இருமத் தொடங்கி னாள்.

பொன்னம்மா வேலாயுதத்தின் அக்காள் – பாக்கியத்தின் தாய். கம் பளிச் சுருணைக்குள் முடங்கிச் சுருண்டு இருமியவள் சாம்பல் உள்ள சிரட்டை யில் எச்சிலைத் துப்பத் தலையைத் தரக் கினாள். அந்நேரத்தில் தன் தம்பி புறப் பட்டு நிற்பதையும் கண்டுவிட்டாள். பீளை கலந்த பிசுபிசுத்த கண்ணீரைத் துடைத்தவாறு மெல்ல எழுந்து சுவ ரீல் சாய்ந்து கொண்டாள் பொன்னம் ம.

“ஏம்பா வேலு? பொறப்பட் டுட்டியா?”

“ஆமக்கா!” பாசமும் துயரமும், சலிப்பும் கலந்த பார்வையைத் தமக் கையின் புறம் ஓட்டியபடிப் பதிலளித்த வேலாயுதம் தொடர்ந்து கேட்டார்.

வாய்க்கு ருசியா ஏதாச்சும் வேணுமானாச் சொல்லு அக்கா? பார்த் து வாங்கியாறேன்…”

“அதெல்லாம் ஒன்னும் வேணாப்பா! நீ எந்த மகராசன் காலுல விழுந்தா வது இந்தப் பிரசாவுருமச் சங்கதி யைச் முடிச்சுட்டு வந்துரு. அதுதான் சனியன் புடிச்ச கரைச்சலா இருக்கு…”

பொன்னம்மாளின் குரல் கமறு கிறது. கண்ணீ ருடன் அவள் இருமிபடி புலம்புகிறாள் .

இல்லாட்டிப்போனா. ஒரு தொந் தரவுமில்லாமே ‘அந்த ஊருக்குப் போயி தாயிபுள்ளைக மொகத்தைக் கண் ணால பாத்துட்டாச்சும் நிம்மதியாச் சாவலாமே…”

வேலாயுதம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். பாக்கியம் தன் தாயைக் கண்டிக்கும் பாவனையில் தேற்றுகிறாள்,

“சரி, சரி, இப்ப ஏன் விடியங் காட்டியும் ஒப்பாரி வைக்கிறேம்மா? மனுச ஒரு காரியத்துக்காக வெளியே போறப்ப இப்படி ஒப்பாரி வைச்சுக் கிட்டிருந்தா நல்லா இருக்கும்? பேசா மப் படுத்திருப்பியா , அதெ விட் டுட்டு …..!”

அடிவயிற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய அவல மான துன்பத்தை வலுக்கட்டாயமாக வாயைப்பொத்தி அடக்கிக் கொள்கிறாள் பொன்னம்மா.

“அப்ப சரி நேரமாவுது போயிட் டுவாரேன்” என்றபடி கதவு மூலை யில் தொங்கிய குடையை எடுத்துத் தோளில் கொளுவிக் கொண்ட வேலா யுதம் பக்கவாட்டில் சுவரில் மாட்டி யிருந்த படத்தைப் பார்த்துக் கும்பிடு கிறார். பின்னால் பொன்னம்மாவின் குரல் சன்னமாய் ஒலிக்கிறது.

‘நல்ல எறச்சியாப்பாத்து வாங் கிட்டு வா வேலு? ரோட்டுக் கடை யாழ்ப்பாணத்தாரு கடையில் ஒரு கட்டுப் போயலையும் வாங்கி வந்

“ஆங் எல்லாம் வாங்கியாரேன். நீ சாப்பாட்டுக்கு மொதல்லே பறந்து டாமே மருந்தைக் குடி? இந்தா பாக் கியம்! நீயும் நேத்து மாதிரி மறந்து போயிடாம். அக்காளுக்கு மருந்தை ஊத்திக்கொடு?” ‘சரி மாமா! நேத்து மழையோட மழையா நனைஞ்சு போய் வந்ததுலே எல்லாம் பறந்து போச்சு.”

பக்கும்! என்ன மருந்து அது! பச்சைத் தண்ணி! அதைக் குடிக்கிற துக்கு பைப்புத் தண்ணி புடிச்சாந்து குடிக்கலாம், கரும்! பொன்னம்மா பேசிக்கொண்டிருக்கையிலே வேலாயு தம் வந்து வெளி வாயிற்படியில் நின்று வெளிப்பக்கம் எட்டிப் பார்க்கிறார், அடுத்த வீட்டுப் பையன்- எட்டுவயது ஆண்பிள்ளை திகம்பரனாக வாசல் முற் றத்திலுள்ள வேலியோரம் குந்திக் கொ கா டிருக்கிறான். லயத்து நாயொன் றும் அவனருகே வாலையும் உடம்பை யும் ஆட்டியபடி நிற்கிறது. தொங் கல் வீட்டுக் கந்தசாமி தேயிலைக் குச் சியால் பல்லைத் தேய்த்தபடி. முக்கா டிட்ட தலையுடன் தோட்டத்துப் பக்கமிருந்து வருகிறார். இன்னும் இருள் முற்றாக விலகாத அந்த அதி காலை நேரத்தில் லயம் வேறு சந்தடி யின்றி உறங்கிக் கிடக்கிறது.

“என்ன மாமா நேரமாகலையா?”

Mudiyathakathaigal-picமுதுகுக்குப் பின்னால் பாக்கியத் தின் குரல் மெதுவாகக் கேட்கிறது. இரண்டடி பின்னால் நகர்ந்த வேலா யுதம், ”ஆமா பாக்கியம், அந்தத் துணிப்பையை எடு’ என்கிறார். பாக் கியம் அறைக்குள் நுழைந்து சுருட்டி வைத்திருந்த துணிப்பையை எடுத்து வந்து தர, அதை வாங்கிக்கொண்டு ‘நான் போயிட்டு வாரேன்” என்ற படி லைசன்கல் வாசலில் இறங்கி நடக்கிறார் வேலாயுதம். குறுக்குப் பாதையில் வேகமாய்ப் போனால் அதை மணி நேரத்திலே ரோட்டுக்கடையை அடையலாம். ஆறே காலுக்கு முதல் பஸ் வரும். அதைப் பிடித்தால் எட்டு எட்டரை மணிக்குக் கண்டிக்குப் போட்ச் சேரலாம். சிந்தனையும், நடையும் துரிதமாகின்றன.

ஏறக்குறைய நாற்பது வருடங் களுக்கு முன்பு தம்முடைய ஏழாம் வயதில் அக்காள் பொன்னம்மாவுடனும், அவள் கணவனுடனும் இலங்கைக்கு வந்தவர் வேலாயுதம். பொன்னம்மாளுக்கு அப்போது வயது இருபது தான். அவளுக்கும் வேலாயுதத்துக்கும் இடையில் ஐந்து சகோதர சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டில் இருந்தனர். அந்த ஐவரில் மூவர் மாத்திரம் பிள்ளை குட்டி களுடன் வாழ்வதாகவும், மற்றும் இரு வர் இறந்து போனதாகவும் *மீபகால ங்களில் வந்த ‘எயார் மெயில்’கள் தெரிவித்திருந்தன. அந்தக் காலத்தில் –அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பு கட்டிய கணவனுடன் கடைசித் தம்பியையும் உடன் அழைத்துக் கொண்டு பொன்னம்மா சிலோனுக்கு வந்தபோது அப்படி அவள் பிரிவதை விரும்பாத தகப்பனும், சகோதரர்க ளும் எவ்வளவோ தடுத்துப் பார்த் தார்கள். ஆனால், புருஷனுடைய கட் டளையை மீறமுடியாத நிர்ப்பந்தமும், புரிந்தும் புரியாமலும் அவளுக்குள் இருந்த சில ஆசைகளும் அவனைப் புறப்பட வைத்து விட்டன. பிறந்த உடனே தாயை இழந்து தனது கையி லும் மடியிலும் வளர்ந்த வேலாயுதத் தையும் எப்படியோ அவள் அழைத்து வந்து விட்டாள். பொன்னம்மாளுக்கு இரண்டு பெண்கள் பிறந்தனர். மூத்த வள் பருவமடைந்ததும் அவளைத் தன் தம்பிக்கே கல்யாணம் செய்து வைத்து விட்டாள், இரண்டாமவள் லட்சுமி யையும் நல்ல தாரு மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்தான். அந்தப் பெண் தன் தலைப் பிரசவத்திலேயே ஜூன்னி கண்டு இறந்துவிட்டாள். அவள் குழந்தையும் தாயைப் பின்பற்றிவிட்டது. மூத்த வள் பாக்கியத்திற்குப் பிள்ளைப் பாக் கியம் கிடைக்கவில்லை. எத்தனையோ கோடங்கிகள் வைத்தும், சாமி பார்த் தும், நூலுக்கு மேல் நூலாக எத்த கனயோ நூல் கட்டியும் பாக்கியம் தாய் மையடையவில்லை. வேலாயுதத்துக்கு உள்ளதைவிடப் பொன்னம்மாளுக்கே இது பற்றி அதிக மனக்குறை. அந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு வந்து எத்தனையோ பாடுகள் பட்டுவிட்டு தன் னுடையதும் தம்பியுடையதும் வம்சம் விளங்க ஒரு பிள்ளை இல்லையே என்று ஏக்கம். எத்தனையோ தோட்டத்தில் பொன்னம்மாவின் குடும்பம். உழைத் த்து. . அப்படி ஒரு தோட்டத்தில் தான் பொன்னம்மாவின் கணவனும் மாண்டு போனான். அதன் பின்னும் பொன்னம்மா தனியாக வாழ்ந்து வந்தாள். தொழிற்சாலை யில் தான் அவள் வழக்கமாக வேலை செய்வாள், தேயிலைத் தொழிற் சாலையில் ‘இலை பொறுக்குதல்’ சல்லடைக் காம்பிரா வில் வேலை செய்தல் முதலியவற்றில் பாராட்டு வாங்கியவள் அவள். ஏதோ தகராறின் காரணமாகத் தம் பியுடனும் மகளுடனும் கோபித்துக் கொண்டு இப்போதிருக்கும் இந்தத் தோட்டத்திற்குத் தனியாககே வந்து பதிந்து கொண்டாள் பொன்னம்மா. அவள் வந்த புதிதில் பிரஜாவுரிமை க்காக ஏதேதோ எழுதினர்கள், யார் யாரோ வந்து தோட்டத்தில் உள்ளவர்களையெல்லாம் நூற்றி எட்டுக் கேள் விகள் கேட்டு எழுதிக் கொண்டு போனார்கள். அப்போது பொன்ன ம்மா தம்பியின் மீதும், மகள் மீதும் இருந்த ஆத்திரத்தில் ‘ ‘நான் நாதி யற்ற அனாதைங்க தொரை, எனக்கு ஒட்டு உறவு யாருமே இல்லீங்க. நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சிலோன் தாங்க. தாயும் தகப்பனும் சின்ன வயசிலேயே விட்டுட்டுச் செத் துப் போனாங்க. நெனைவு தெரிஞ்ச. நாள் முதலா கூலி வேலை தாங்க செய்யறேன்” என்று அந்த விசாரணை யாளர்களிடமும் பிரலாபித்து விட்ட ‘டாள். அவள் நிலை மைக்கு இரங் கியோ என்னவோ ஒரு சில மாதங் – களில் பொன்னம்மாவுக்குப் பிரஜா வுரிமைக் கார்ட்டும் கிடைத்து விட் டது! அந்த நாளில், அது பின்னால் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை உண ராத நிலையில் டிரெங்குப் பெட்டியில் பத்திரமாய் வைத்துப் பூட்டினாள் பொன்னம்மா.

இரண்டு வருடங்கள் கழித்து ஊரிலேயிருந்து கறுப்பு மை பூசி வந்த கடுதாசி கொண்டு வந்த திகப்பனாரின் சாவுச் செய்தி அக்கா தம்பியை மீண்டும் ஒன்ாக்கியது. ஸ் டோரில் தனக் இருந்த நல்ல பெயரைப் பயன் படுத்தித் தம்பியையும் மகளையும் தன்னுடனே வந்து இருக்கச் செய்து தோட்டத்திலும் பெயர் பதிந்து கொண்டாள் பொன்னம்மா. அதன் பிறகு அடுத்தடுத்து இரண்டு சகோத ரர்களின் சாவுச் செய்தி கடித மூலம் வந்தது. மஞ்சள் பூசிய லெட்டர்கள் இரண்டு மூன்று கூட வரத் தான் செய்தன. உண்மையில் தான் மட்டு மல்லாது தன் தம்பியும் மகளும் கூடத் தன் பறந்து வளர்ந்த சுற்றத்தின் வாழ்விலும் சாவிலும் பங்கெ நீக்க முடியாதபடித் தனிப்பட்டுப் போப் விட்ட அநியாயம் படிப் படியாகப் பொன்னம்மாவுக்குப் புரிந்தது. எந்த நாட்டு உரிமையைப் பற்றியும் அவள் கவலைப்படவில்லை, கடல் கட ந்த நாட்டில் எஞ்சியிருக்கிற தன் இரத்த உறவுக்காரர்களைத் தான் மடியு முன்னர் ஒரு முறையேனும் கண்ணா ரக் காண அவள் ஆசைப்பட்டாள். தேயிலைத் தொழிற்சாலைகளின் அடுப் புச் சூட்டில் இரத்தமெல்லாம் வற்றி வேலையிலிருந்து கழிக்கப்பட்டு வீட்டின் மூலையில் முடங்கிய பின் அவள் ஆசை விசுவமாகி விட்டது.

அறியாமையின் மந்த நிலை, அரசி யலின் குழறுபடிகள், வறுமையின் தடைக்கற்கள் எனக்காலம் கரைந்து கொண்டிருந்தது. மூன்று பாதங்க ளுக்கு முன்னால் பீலியிலே தண்ணீர் எடுக்கப் போய் நிறை குடத்துடன் வழுக்கி விழுந்து, அதே அடியுடன் படுக்கையில் விழுந்துவிட்டாள் பொன் னம் மா. அன்றிலிருந்து அவளுடைய நச்சரிப்பும் அதிகரித்து விட்.–து. எப்படியாவது பிறந்த ஊருக்குப் போய்த்தான் ஆக வேண்டும் விரை வில் என்று துடிக்கத் தொடங்கி விட் டாள். அவளுடைய நச்சரிப்பைத் தாங்க முடியாமலும், தனது மனதின் ஆசை காரணமாகவும் வேலாயுதமும் அந்த காருக்குப் போக வேண்டிய முயற்சிகளில் இறங்கலானார். அந்த வேளை மயில் பார்த்துத் தான் எப் போதோ பொன்னம்மாவுக்கு அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்த ‘பிரஜா உரிமைப் பிரச்சினை பூதமாகக் கிளம் பியது! மலைத்துப் போன வேலாயு தம்கண்டாச்கையா, கிளார்க்கர் ஐயா, தலைவர் ஐயா, தலைவருக்குஐயா போன்ற ஐயாமார்களின் ஆலோசனைப்படி எங்கெங்கோ சென்றார், யார் யார் சொன்னதையோ ‘செவி மூடி வாய் திறந்து’ கேட்டார். மனைவி கழுத் திலும், காதிலும் மின்னிய உழைப் பின் பயனையெல்லாம் அடவு வைத் தும் தட்டு முட்டுச் சாமான், வெண் கலப் பானைகளை அரை விலைக்கு விற் றும் செலவிட்டார். ஒரு பயனாவது விளையவில்லை!

“இன்னைக்கோ இல்லாட்டி நாளை க்கோ நான் சாகப் போறேண்டா தமிட்! கண்ணை மூடுறதுக்குள்ளே பொறந்த வீட்டுப் பிள்ளைகளைக் காண ட போகப் போறேனே. நீ ஒரு ஆம்பிள்ளைச் சகோதரன்னு கிட்டத்திலே இருந்து என்னடா புரோசனம்?” என்று அடிக்கடி ஒப் பாரி வைக்கத் தொடங்கினாள்.

வலகத்துக் குப் போக முடிவு செய்து விட்டார். அந்த முடிவு தான் இன்று காலை செயலாகிப் பயணமாகியது….

அருண்டு பிரண்டு எப்படியோ அந்த அலுவலகத்துள் துழைந்து. தட்டுத் தடுமாறித் தன் பிரச்சினையை வெளியிட்டார் வேலாயுதம். அங்கி ருந்த அதிகாரி அனு தாபத்து டன் எல்லாவற்றையும் கேட்டு விட்டுச் சற்று யோசித்தார். எழுந்து போய்ச் சற்றுக் கழித்து வந்து பத்து நான் கழித்து வரும்படியும் தாம் ஆலோ சி த்து, ஏற்பாடு செய்வதாயும் கூறி விடை கொடுத்தார். ஏதோ பெரும் பாரத்தை அவர் காலடியில் இறக்கி விட்ட நிம்மதியுடன் மார்க்கெட்டுக் குப்போய் இறைச்சியும், காய் கறியும், மாம்பழங்களுமாய் வாங்கிக்கொண்டு மறக்காமல் கண்டக்டர் யோ சிபாரிசு செய்த ‘டொனிக்’கையும் வாங் திக்கொண்டு பஸ் ஏறினார் அவர்.

ரோட்டுக் கடை முடக்கில் இற ங்கி யாழ்ப்பாணத் தார் கடையில் திறம் புகையிலை ஒரு கட்டும் வாங் கிக்கொண்டு தங்கப்படவுன் மாதிரி விலையேறிவிட்ட நாட்டரிசியில் ‘கா ஓ கொத்தும் தேடி வாங்கிக் கொண்டு அந்தச் சின்னக்கடைத் தெருவில் மிட் டாய் விற்கிற மொக மது காக்கா-வீடம் தனது அன்றைய அனுபவங்களைச் சுவை சொட்ட விவரித்து விட்டுப் புறப் பட்டார் வேலாயுதம். நெஞ்சேற்ற மான குறுக்குப்பாதையில் தலையிலும் கையிலும் மூட்டைகள் கனக்க, விய ர்வை வழிந்து கண்ணெல்லாம் எரிய, மூச்சுமுட்டப் படியேறிக்கொண்டிருந் தவர்நெஞ்சிலே நடந்த, நடக்கிற நட க்கப் போகிற காலங்களைப் பற்றிய நினைவோட்டங்கள் பின்ன நெளிந்தன. இடையில் அன்றைய அடை வுக் காசில் வரவு செலவு பற்றிய கணக் கையும் கூட்டிப் பார்த்துக் கொண் டார். அத்துடன் வீட்டுக்குப் போன வுடன் பாக்கியத்திடம் சொல்லி நாட் டரிசிச் சோறாக்கி ஆட்டிறைச்சிக் கறியும் ஆக்கி அக்காவின் ஆசை தீர தின்னச் செய்யவேண்டும் என்ற பாச உணர்வும் கசிந்தது. ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கு அவர் தமது லயத்துக் கோடியை அண்மியதும் முதலில் அவரைக் கண்ட சின்னையா துக்கத்துடன் மெல்லக் கூறினார். ‘என்னப்பா வேலாயுதம் இப்பத்தான் வாரியா? இங்கே எல்லாம் முடிஞ்சு போச்சு…சித்தே முன்னாடி….”

வேலாயுதத்தின் கண் முன்னே ஒரு குண்டு வெடித்தது!

“என்ன சொல்றே சின்னய்யா?”

உன் அக்காப்பா .. நாலு நாலரை மணியிருக்கும்…முடிஞ்சிது” சின்னையா சொல்லிக் கொண்டிருக்கை யிலேயே தன் வீட்டு வாசலில் நடக்கும் ஆரவாரம் பெண்களின் பிலாக்கணம் எல்லாம் மங்கலாய்ப் புரிகின்ரன வேலாயதத்திற்கு, அவருடைய வாய் அலறுகிறது.

“ஐயோ முடிஞ்சு போச்சா?” உள்ளே மனம் கதறுகிறது, “அக்கா நீ கேட்ட எதுவுமே முடியலையே!”

மயங்கி வீழ்த்த வேலாயுதத்தை இரண்டு மூன்று பேர் வீட்டிற்குள் தூக்கி வருகின்றனர். பாக்கியம் தலை யில் அடித்துக் கொண்டு கதறுகிறாள். லயத்துப் பெண்களின் கூட்டம் ஓங் கிய குரலில் ஒப்பாரி வைக்கிறது. அதற்குப் பக்க வாத்தியமாக வந்து சேர்ந்த பறைத்தப்பின் கர்ண கடூர ஒலி மலைச் சரிவுகளில் முடிவில்லாமல் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. மலை முகடுகளில் கவியும் இருளினூட நடுங்கி நடுங்கிப் பரவுகிற அந்த எதி ரொலி காலத்தின் சிரிப்பைப் போல் தொனிக்கிறது. .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *