கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 63,729 
 
 

வைதேகி, கடலில் நான் கட்டிய பாலத்தை பார். அதில் ஆர்ப்பரித்து மோதும் அலைகள் எவ்வளவு அழகாக காட்சியளிக்கின்றன என்று இராமன் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு போகும்போது சீதா தேவியிடம் பாலத்தை காட்டி சொன்னதாக ரகுவம்சத்தில் மகாகவி காளிதாசன் எழுதியிருக்கிறார்.

இராமர் பாலம் பற்றிய ஆதாரம் இராமாயணம் தவிர வேறு எதாவது காவியத்தில் இருக்கிறதா?

சந்தேகம் தெளிதல் நிகழ்ச்சியில் ஆன்மிக உபாசகர் கிரிதர ஸ்வாமியிடம் யாரோ கேட்ட கேள்விக்கு பதில் கூறி விட்டு அடுத்து .. என்று கூட்டத்தை பார்த்தார்.

எந்த கேள்விகேட்டாலும் அடுத்த வினாடியே டக்கென்று வில்லிருந்து அம்பு புறப்படுவது போல அவர் வாயிலிருந்து பதில் வரும்.

அவரை எப்படியாவது மடக்கி பதில் சொல்ல முடியாமல் விழிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் காத்து கொண்டிருந்த கேசவன்

”ஸ்வாமி, பிரமாண்ட உருவத்திலிருக்கும் விநாயகருக்கு மிகச்சிறிய உருவமாக இருக்கும் மூஞ்சுறு வாகனம் என்கிறார்கள். சிறிய மூஞ்சுறு அவ்வளவு பெரிய விநாயகரை எப்படித்தாங்கும்? என்று குறும்பாக கேட்டான்.

அதைகேட்டு புன்முறுவல் பூத்த கிரித ஸ்வாமி. அடுத்த விநாடியே சொன்னார். பாரம் ஏற்றிய பத்து டன் லாரியை ஒரு சாண் உயரத்திலிருக்கிற ஜாக்கி எப்படித் தாங்கி தூக்கி நிறுத்துகிறதோ அது மாதிரி தான் இதுவும்.

கேசவன் வாயடைத்து போனான்.

-நீரஜா (ஜனவரி 2014 )

நன்றி: குமுதம் &

(வாரமலர்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *