உண்மை உணர்ந்த முத்துமாணிக்கம்

 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதுகுன்று என்னும் ஊரிலே முத்துமாணிக்கம் என் னும் பெயருடைய இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பொழுது விடிந்து சாம நாழிகைக்கு மேலே தான் படுக்கையைவிட்டு எழுந்திருப்பான். அவனு டைய தாய் தந்தையரும் முத்துமாணிக்கத்தினுடைய இந்தக் கெட்ட பழக்கத்தைக் கண்டித்துத் திருத்துவ தற்கு முயலவில்லை. ‘நம்முடைய அருமைக் குழந்தை தூங்கினால் தூங்கட்டுமே; இதனால் குடிமூழ்கியா போய் விடப்போகிறது,’ என்று எண்ணிக்கொண்டு பேசாமல் இருந்தார்கள்.

ஒருநாள் முத்துமாணிக்கத்தினுடைய வீட்டிற்கு அவனுடைய உறவினர் ஒருவர் வந்தார். அவர் முத்துமாணிக்கம் நீண்ட நேரம் உறங்குவதைப் பார்த் தார். அவர் முத்துமாணிக்கத்தைப் பார்த்துத், “தம்பி! இவ்வாறு நீண்டநேரம் உறங்காதே . இதனால் உன்னுடைய வாணாள் குன்றிப்போகும்” என்று கூறினார். “அஃதெவ்வாறு?” என்று முத்துமாணிக்கம் கேட் டான். அந்த உறவினர் முத்துமாணிக்கத்தைப் பார்த்து, “கதிரவனுடைய தேரோட்டுபவனாகிய அருணன் மக்கள் வாணாளைக் கணக்கிடுபவனாவான். அந்த அருணன், தான் எழுவதற்கு முன் எழாதவர்களைத் தன்னுடைய ஒளியாகிய கையினால் தொடுவான். அவ் வாறு தொட்டுக்கூட எழாதவர்களுடைய வாணாளைக் குறைத்து எழுதிவிடுவான். அதனால் கூற்றுவன் மிக விரைவில் அவர்களுடைய உயிரையும், உடலையும் வேறு பிரித்துவிடுவான்,” என்று கூறினார். அன்று முதல் முத்துமாணிக்கம் பொழுது விடிவதற்கு முன் படுக்கையை விட்டு எழத் தொடங்கினான்.

“வைகறைத் துயிலெழு” (இ – ள்.) வைகறை – விடியற்காலத்திலே, துயில் – உறக்கத்தைவிட்டு; எழு – எழுந்திரு.

- கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955 

தொடர்புடைய சிறுகதைகள்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னாளில் தமிழ்நாட்டிலே ஒரு பெண்ணா அரசாட்சி செய்து கொண்டிருந்தாள். அவள் மிகவு கண்டிப்பானவள். அவள் தன்னுடைய உடன் பி, தான் ஒருவனை உயரிய அதிகாரத்திலே அமர்த் யிருந்தாள். அவன் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒருநாள் ஓர் ஊருக்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் எல்லா ஆற்றல்களும் இனிது அமையப் பெற்றவர். அந்த ஊரிலே அருள் தங்கிய உள்ள முடையவர்கள் எத்தனை பேர் என்று ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பஞ்சபாண்டவர் காலத்திலே அத்தினபுரியை அடுத்து ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டிலே ஒரு முனிவர் இருந்தார். அவருடைய பெயர் காளமுனிவர். அவர் முனிவராக விளங்கியிருந்தும் தீச்செயல்கள் பல வற்றைச் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னாளிலே பாண்டூர் என்னும் ஊரிலே பல்லவ ராயன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் நல்ல உடலாற்றல் அமையப்பெற்றவன். ஓரடி யிலே இரண்டு பேரை அவன் நிலத்திலே வீழ்த்தி ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பஞ்சபாண்டவர்களில் முதல்வராகிய தருமர் எந்தச் சமயத்திலும் நடுவு நிலைமையினின்றும் தவறாத உயர்ந்த கொள்கையை மேற்கொண்டிருந்தார். பாண்ட வர்கள் காட்டிலே தங்கியிருந்தபோது, புருட மிருகம் என்னும் ஒரு விலங்கிற்கும் வீமனுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குன்றை என்னும் ஊரிலே உண்மையறிவின்ப அடி கள் என்னும் துறவி ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உறைந்திருந்தார். அவர் துறவிக்கோலத்தை மேற்கொண்டிருந்தாராயினும் மெய் வாய் கண் மூக்குச் செவி ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருமாவளவன் என்னும் மன்னன் ஒருவன் முன்னாளில் உறையூரில் இருந்து அரசு செலுத்திக்கொண்டிருந்தான். அவன் ஆற்றலும், சூழ்ச்சியும் ஒருங்கே அமையப் பெற்றவன். அவனுக்குப் பகைவர்கள் பலர் ஏற்பட்டார்கள். அடிக்கடி பல ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னாளிலே மதுரையிலே நக்கீரர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார். அவர் எதற் கும் அஞ்சாத தறுகண்மையை உடையவராக விளங் கினார். மதுரைச் சொக்கநாதக் கடவுள் பாடிய பாட் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு புலவர் வறுமையால் மிகவும் வாடினார். ஒரு செல்வனைக்கண்டு ஏதேனும் பரிசில் பெற்று வரலா மென்று சென்றார். அந்தப் புலவர் எல்லா நூல்களை யும் நன்கு படித்துணர்ந்தவராக இருந்தும் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மெய்யூர் என்னும் ஓர் ஊரிலே கண்ணாயிரம் என் னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் பல நூல்களையும் படித்து அறிவிற் சிறந்திருந்தான். ஒருநாள் ஓர் அறிஞர் மெய்யூருக்கு வந்து ...
மேலும் கதையை படிக்க...
அறநெறி தவறாத அரசி
வறுமையிற் செம்மை
தன்வினை தன்னைச் சுடும்
பாண்டூர்ப் பல்லவராயன்
தருமரும் நடுவுநிலைமையும்
பழங்கறி இன்ப அடிகள்
பெருந் திருமாவளவன்
நக்கீரனாரும் சொக்கநாதரும்
வன்சொல் நன்மையைக் கெடுக்கும்
சிறப்படைந்த கண்ணாயிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)