விவசாயி நினைத்தால் அரசனும் அடிமையாகுவான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 16,485 
 
 

ஏழ பசுமையான கிராமங்கனை கொண்டு ஒர் அரசன் அவர்களை ஓர் அடிமைகளைப் போல் பாவித்து ஆட்சி நடத்தி வந்தான் அதில் பிச்சாண்டி எனும் விவசாயி இருந்தான். இந்த விவசாயி எப்பேர்ப்பட்ட தரிசாகக் கிடைக்கும் நிலங்களையெல்லாம் அழகிய பசுமையான வயல்வெளியாக மாற்றிடும் வல்லமைக் கொண்டவன் இந்த விவசாயி.

கிராம மக்களை தன்மையாகவே அனுசரிப்பான், அன்பாக பழகும் மனோபாவம் கொண்டவன். ஊர் மக்கள் இவனை நிலத்தில் இராஜா என்று அழைப்பார்கள்.

தனது மனைவி மற்றும் மகள் இவர்கள் மூவருமாக சேர்ந்து எங்கலாம் தரிசுநிலங்கள் உள்ளாதோ அங்கே இவர்களின் உதவிகலோடு வளமான விளைநிலமாக மாற்றுவார்கள்.

ஓரு நாள் இவ்விவசாயி பற்றி அரசர்க்கு தெரியவந்தது. இவனை அழைத்து இவனது திறமையை சோதித்துவிடலாம், அப்போதுதான் ஊர்மக்கள் கூறுவது சரியா இல்லை தவறா என்று தீர்மானிக்க முடியும் என்று நினைத்து, அந்த விவசாயிக்கு அழைப்பு விடுக்கிறான் அரசன்.

ஏன் இவ்வளவு காலம் கழித்து நம்மை அழைக்கிறார் என்று விவசாயி மனதில் நினைத்துக் கொண்டே தன் மனைவியிடம், “அரசர் என்னை பார்க்க வேண்டுமாம், ஆகையால் அரசவைக்கு செல்கிறேன்” என்று அரை மனநிலையுடன் அரண்மனையை நோக்கி சென்றான் விவசாயி.

அரண்மனையை அடைந்தான். முகப்பில் தலைமைக் காவலாளிடம், “அரசர் என்னை அழைத்துள்ளார், அவரை பார்க்க அனுமதி வேண்டும்”, என்று கேட்டான் விவசாயி. காவலாளியும், “சரி போ, உனக்காக தான் அரசர் காத்துக் கொண்டுயிருக்கிறார். சிக்கிரம் போ”, என்று முறைத்தான்.

விவசாயி கோபம் கொள்ளாமல் உள்ளே சென்றான், அரசன் அரசவையில் அமர்ந்துக் கொண்டியிருந்தான்.

“அரசே! அரசே!” என்று தன் மெல்லியக் குரலில் அழைத்தான். அரசனும், “யாராட நீ” என்று அழைத்தான். அதற்க்கு விவசாயி, “அரசே! தாங்கள் தான் என்னை பார்க்க அழைத்தீர்கள்” என்று கூறினான்.

அரசனுக்கு விவசாயியை பார்த்து சிரித்துக் கொண்டே, “நீயா? கிராம மக்கள் உன்னையா தலை மேலே வைத்துக் கொண்டு ஆடும் அரசன் நீயா?”, என்று கோபமாக வார்த்தைகளை உச்சரித்தான்.

விவசாயியோ, “ஆம் அரசே! அது நான் தான். ஆனால் நீங்கள் தான் எங்களின் அரசன். உங்களுக்கு கீழ்ப்பணிந்தவர்கள். நீங்கள் என் மீது கோபப்பட்டால், நான் அக்கோபத்திர்க்கு கூட தகுதியில்லாதவன்”, என்று விவசாயி பதிலலித்தான்.

அரசர் இவனை மக்கள் மத்தியில் வைத்து அவமானம் செய்ய வேண்டும், என்ன செய்யலாம் என்று தனது மந்திரியிடம் தன் சந்தேகங்களை கேட்டான். மந்திரியும் அரசனுக்கு ஓர் யோசனை கூறினான். பின் அரசன் ஓர் காவலாளியை அழைத்து, “ஊர்மக்களை அரசவைக்கு உடனடியாக வரசசொல், இல்லையென்றால் அனைவருக்கும் சரியான தண்டனை வழங்கப்படுமென்று சொல்லிவிடு”, என்று அரசன் தன் காவலாலிடம் கூறிவிட்டான். அதைப்போன்று காவலாளியும் ஊர் மக்களிடம் அரசனின் கட்டளையை கூறிவிட்டுச் சென்றான்.

ஊர் மக்கள் அனைவரும் அரசவைக்கு வந்தார்கள்.

அரசன் பேசத் துவங்கினான், “இங்கே நிற்கும் விவசாயி உங்களுக்கு பரிச்சையமான முகம். இவன் கைப்பட்டால் தரிசாக கிடக்கும் நிலம் கூட செம்மையாக மாறிவிடுமென்று உங்கள் அனைவருக்குமே தெரிந்தவை தான். நான் இவனுக்கு ஓர் போட்டியை வைக்கப் போகிறேன், அதில் இவன் வெற்றிப் பெற்றால் உயிர் வாழலாம். இல்லையேல் இவனது கைகள் இரண்டும் துண்டிக்கப்படுமென்று அரசன் தன் கட்டளைகளை கூறினான்.

விவசாயி செய்வதறியாது அப்படியே ஆனி அடித்தார்ப் போல் கலகமுற்று நின்றான். நான் தரிசான நிலங்களை செம்மைப்படுத்துவது அரசருக்கு பிடிக்கவில்லைப் போலும். ஆகையாலே தான் இவர் நம் இவ்வாறு செய்கிறார் என்று புரிந்துக் கொண்டான் விவசாயி. பின் மனதை கொஞ்சம் தைரியத்தை வரவைத்துக் கொண்டு, “அரசே! தாங்கள் கூறுவதையே நான் அதை அப்படியே செய்கிறேன். உங்களின் கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை, அரசே!” என்று விவசாயி கூறினான்.

அதற்க்கு பதிவுலரைத்த அரசர், “எனக்கு சொந்தமாக இருக்கும் பத்து காணிநிலங்களை இவனுக்கு தருகிறேன். அதை இவன் விளை நிலமாக மாற்ற வேண்டும். அதுவும் ஏழு மாததில் முடிக்கப்படவேண்டும். ஏழ மாதம் கழித்து மீண்டும் அரசவைக்கூடும், அப்போது விளைநிலமாக இல்லையென்றால் நான் கூறினார் போல இவனது கைகள் உங்கள் முன் துண்டிக்கப் படும்”, என்று கூறி அரசவையை கலைத்தான் அரசன்.

காவலாளிகள் அரசின் நிலத்தை காண்பிக்க அந்த விவசாயியை அழைத்துக் சென்றார்கள். விவசாயி அந்நிலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தான். நிலம் முழவதும் கருவேலியும், சிறு மரங்கலும், சிறு பாரைகலுமாக இருந்தது. இவனை கண்காணிக்க ஓர் காவலாளியை அரசன் நியமித்தான். இந்த விவசாயி ஊரைவிட்டு வெளியேறாமல் பார்க்கும் பணியினை கொடுத்தான் அரசன்.

விவசாயியோ என்னச் செய்யப் போகிறோம் என்றுத் தெரியாமல் கண்ணீருடன் தன் வீட்டிர்க்கு சென்றான்

விவசாயின் மனைவி அவன் வருவதை பார்த்துக் கண்ணீருடன் வீட்டிற்க்குள் அழைத்துச் சென்றாள். அரசனின் இந்தக் கொடுமையானச் செயலை நினைத்து அழுதான் விவசாயி.

ஏழே மாதத்தில் என்னால் என்னச் செய்யமுடியும் என்று நினைத்து மனதை வருத்திக் கொண்டியிருந்தான் விவசாயி.

அரசனோ இந்த விவசாயியை பழிவாங்கப் போற மகிழ்ச்சியில் ஆனந்தமாய் இருந்தான்.

இப்படியாகவே இரண்டு நாட்கள் கடந்தது. வீட்டின் திண்ணையில் அமர்ந்து சிந்தித்தான். அரசன் தரிசு நிலம் தருகிறேன்று கூறி இப்படி கருவேளிக் காட்டை தந்துவிட்டாரே?. இதை எப்படி நாம் விளைநிலமாக மாற்றமுடியும்?. அதும் ஏழே மாதத்தில் எப்படி மாற்றலாமேன்று யோசனை செய்து கொண்டியிருந்தான் விவசாயி.

அப்போழுதுதான் ஓர் குரல் கேட்டது, “விறகு, விறகு”. இதை நன்றாக கவனித்த விவசாயிக்கு ஒர் யோசனை வந்தது, உடனே அரசர் கொடுத்த அந்த கருவேலி நிலங்களை பார்க்க சொன்றான்.

எண்ணில் அடங்காத பெயர் தெரியாத மரங்கள மற்றும் கருவேலி மரங்கள் அந்நிலத்தில் இருந்தன. எல்லா மரங்களும் மூன்று மாதத்தில் நன்றாக வளர்ந்துவிடும். பின் இவைகளை விற்பனைச் செய்துவிடலாம் என்று யோசித்தான் விவசாயி.

மூன்று மாதங்கள் கடந்தன. முல்வேலிகலும் மரங்கலும் நன்றாக வளர்ந்து விட்டது. பின் கிராமத்து மக்களிடம் சென்று, “உங்களால் முடிந்தவையை என்னிடம் தந்துவிட்டு, மரங்கள் மற்றும் கருவேலிகளை வெட்டிக் கொள்ளுங்கள்”, என்று சொன்னான். பின் கிராம மக்களும் அவர்களால் முடிந்தவற்றை அளித்து, மரங்கள் மற்றும் கருவேலிகளை வெட்டி எடுத்துச் சென்றார்கள். விறகு விற்பனை செய்யும் நபரை பார்த்து, “நீ காட்டிற்கு மூன்று மாதத்திர்க்கு செல்ல வேண்டாம், உனக்கு தேவையான மரங்கள் என்னிடம் உள்ளது. நீ அதை வெட்டி விற்பனை செய்யலாம்” என்றான். அதற்கு மரவெட்டியும் சற்று சிந்தித்து பின் சரியென்றான். இப்படியே முன்று மாதம் சொன்று விட்டது.

அரசனுக்கும் இந்த விவசாயி என்ன செய்கிறான் என்று தகவல் அவனது காவலாளர் மூலம் சென்றது.

அந்த விவசாயி முதல் மூன்று மாதகாலம் கருவேலிக் காட்டின் முன் சிறு குடிசைப் போட்டு காவல் காத்தான். இப்போது மற்ற மூன்று மாதங்கலாக மரங்களையும் முல்வேலிகளையும் அகற்ற ஆரம்பித்துவிட்டான் அரசே! ஆனால் நீங்கள் கட்டளையிட்ட ஏழுமாதங்கள் அந்த விவசாயிக்கு போதாது அரசே!”, என்று காவலாளி சொன்னதும் அரசனுக்கு மகிழ்ச்சி தாங்காமல் சிரித்தான். “அந்த விவசாயின் கைகள் துண்டிக்கபடும்” னு சிரித்துக் கொண்டே இருந்தான் அரசன்.

ஏழுமாதம் முடிவுக்கு வந்தது. அரசன் தயார் நிலையில் இருந்தான். இரவோடு இரவாக விவசாயி ஊரைவிட்டு ஓடிவிடுவானோ என்று விவசாயி வீட்டிற்க்கு பாதுகாவளார்களை அனுப்பிவைத்து, காலை சூரியன் உதித்ததும் அந்த விவசாயி இங்கே இருக்க வேண்டும் என்றுக் கட்டளையும் விடுத்திருந்தான்.

சூரியனும் வந்தாயிற்று. அரசவையும் கூடியது. விவசாயி அரசன் முன் நின்றான்.

அரசன் இந்த விவசாயி நம்மிடம் தோற்றான் என்ற மகிழ்ச்சில் விவசாயியை பார்த்து, “அடேய் விவசாயி! என்னிடம் நீ சவால் விட்டாயே?. என்ன நடந்தது பார்த்தாயா?. இப்போ பார் உனக்கு கைகள் இல்லாமல் போக போகிறது”, என்று சொல்லி ஏலனம் செய்தான் அரசன்.

விவசாயி பேசாமல் அமைதிக் காத்தான். அரசன், “விவசாயி தன் சவாலில் தோற்றதால் அவன் கைகளை துண்டியுங்கள்!!” என்றான். ஊர்மக்கள் விவசாயின் கைககள் துண்டிக்கப் போகிறார்கள் என்று சோக முகங்களாக மாறின.

“அரசே! நான் கொஞ்சம் பேசலாமா?” என்று அரசனிடம் அனுமதிக்கேட்டான் விவசாயி. அரசனோ, “சரி! உன் கைகளைத் துண்டிக்கப் போகிறேன் என்று நீ என் காலில் விழுந்து என்னை விட்டுவிடுங்கள் என்று அழப்போகிறாயா…?”, என்று ஏலனம் செய்தான் அரசன்

விவசாயியோ, “இல்லை அரசே! நீங்கள் எனக்கு ஆணையிட்டது போல் நான் உங்கள் நிலத்தை, விளைச்சல் நிலமாக மாற்றிவிட்டேன். அதனுடன் உங்கள் பெயரில் ஓர் குளத்தையும் அந்த நிலத்தில் வெட்டி வைத்துள்ளேன்” என்றான்.

அரசனுக்கும் ஊர்மக்களுக்கும் விவசாயி சொன்னது புரியவில்லை. எல்லாரும் அதிர்ச்சியிள் ஆழ்ந்தார்கள்.

“அரசே! நீங்கள் அதிகம் யோசிக்காதீர்கள். அதற்கு நானே விளக்கம் தருகிறேன்”, என்றான் விவசாயி.

“அரசே! தாங்கள் என்னிடம் உங்கள் நிலத்தை தரும் போது, அதில் இருந்தப் பயிர்களில் காலம் பதினாங்கு மாதம். ஆனால் நீங்கள் என்னிடம் தரும் போது சரியாக ஓர் ஆண்டு பயிர்கலாகத் தந்தீர்கள். அதை நான் மேலும் மூன்று மாதங்கள் பாதுக்காத்து, பின் நான்கு மாதங்களாக அறுவடை செய்துக்கொண்டு இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், மரங்களின் வேர்களை அகற்றும் போது அங்கு நிறைய பல்லம் ஏற்பட்டது. மழை வந்ததில் அவ்விடம் குளமாகவும் மாறிவிட்டது.

நீங்கள் எனக்கு அளித்தக் கட்டளைகள் அனைத்தையுமே நான் நிறைவேற்றிவிட்டேன். இனி அது உங்கள்.நிலம். தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்தால் தாங்களே வந்து உங்கள் நிலத்தின் அழகை பார்க்கலாம்”, என்றான் விவசாயி.

அரசன் விவசாயின் விளக்கத்தைக் கேட்டு அதிர்ந்துப் போனான்.

அரசன் தன் தவறை உணர்ந்தான்.

விவசாயியின் காலடியில் நமது அரசாங்கமே இயங்குகிறது. அவன் இல்லையென்றால் உலகில் மனித இனமே இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *