பண்புள்ள பையன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,080 
 

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன், அவனைக் காட்டிலும் பெரிய பையனை அடிக்க முற்பட்டான்.

சிறுவனின் அடிகள் தன் மீது விழாமல் தடுத்துக் கொண்டிருந்தான் பெரிய பையன். ஆனால், அவன் சிறுவனை ஒரு அடிகூட அடிக்கவில்லை .

அதைக் கவனித்த ஒருவர், பெரிய பையனிடம், “அவன் யார் ? ” உன் தம்பியா ? என்று கேட்டார்.

”அடுத்த வீட்டு பையன் !” என்றான் பெரிய பையன்.

சிறுவன் உன்னை அடித்த போதிலும் நீ ஏன் திருப்பி அடித்திருக்கக் கூடாது? என்றார் அவர்.

“அவனோ சிறுவனாக இருப்பதால், அவனை அடிக்க எனக்கு மனம் இல்லை ” என்றான் பெரிய பையன்.

அவன் ஒரு பண்புள்ள பையன்’ என்று எண்ணி மகிழ்ந்தார். வலிமையுள்ளவன் எளியவனை தாக்குவது வீரத்தனம் ஆகுமா?

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *