ஒரு காட்டில் நிறைய பறவைகள்மிருகங்கள் வசித்து வந்தன. அது அங்கே கோடைகாலம். அதனால் அந்தப் பறவைகளும்மிருகங்களும் குடிப்பதற்குப் போதியதண்ணீர் வசதிஇன்றி அவதிப்பட்டன. அந்தக்காட்டின் நீர்நிலைகளில் இருந்த நீர் நாளுக்குநாள் வற்றிக்கொண்டு வந்தது. இதுபோன்ற சமயங்களில் அந்தப் பறவைகளும்மிருகங்களும் அருகாமையிலுள்ள அடுத்தகாட்டிற்குத் தற்காலிகமாக இடம்பெயர்ந்து செல்வது வழக்கம். அடுத்தகாட்டில் நீர்நிலைகள் ஏராளம் உண்டு. தண்ணீருக்குப் பஞ்சமில்லை. அதனால் அந்தப் பறவைகளும்மிருகங்களும் அடுத்தகாட்டிற்குச் செல்வது என்று முடிவுசெய்து அதன்படி செல்லஆரம்பித்தன.
அடுத்தகாட்டில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் தலைவர்வனராசன் வயதில் இளையவர். சற்றுக்குறுகிய கண்ணோட்டம் கொண்டவர். பக்கத்துக்காட்டு பறவைகளும்மிருகங்களும் இங்கே வருவதை அவர் விரும்பவில்லை. தனது படைபரிவாரங்களுடன் கிளம்பி வந்து இவைகளை எல்லையில் தடுத்துநிறுத்தினார்.
“ஒவ்வொரு கோடைகாலத்துலயும் நாங்க இங்கவர்றது வழக்கந்தான? இப்பஎன்ன புதுசா மறிக்கிறீங்க?”- இந்தக்காட்டுப் பறவைமிருகங்களின் தலைவர்சிங்கராசன் கேட்டார்.
“இருக்குற தண்ணிவசதி எங்களுக்கே பத்துமோபத்தாதோன்னு தெரியலை! இதுல நீங்கவேற வந்து தண்ணிப் பற்றாக்குறை வந்துருச்சுனா என்ன பன்றது!”- வனராசன் சொன்னார். அவர் சொன்னதில் உண்மையில்லை. அந்தக்காட்டில் வருடம்முழுவதும் வற்றாமல்ஓடும் ஆறு ஒன்று உண்டு@ அதன் நீரைக்கொண்டு இந்த இருகாடுகள் மட்டுமல்ல@ இன்னும் இருபதுகாடுகளுக்குக்கூடத் தண்ணீர்வசதி செய்துதர இயலும்@
“உங்ககிட்டத்தான் மலைலஇருந்து உற்பத்தியாகி வர்ற சீவநதி இருக்கே? பிறகு எதுக்காகத் தேவையில்லாத பொய்காரணம் சொல்றீங்க!”- சிங்கராசன் கேட்டார்.
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! நீங்க வரக்கூடாதுன்னா வரக்கூடாது! இந்தவருஷம் மட்டுமில்ல இனி எந்தவருஷமும் வரக்கூடாது! தண்ணிக்கஷ்டம் உங்கஷ்டம்! அதை நீங்கதான் தீர்த்துக்ககணும்!”- என்று அந்தக்காட்டின் பறவைகள்மிருகங்கள் ஓங்கிக்குரல் கொடுத்தன. வேறுவழியின்றி இந்தப் பறவைகளும்மிருகங்களும் வந்தவழியேத் திரும்பிநடந்தன.
சிங்கராசா தனதுகுகையின் முன்னே வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். இருக்கின்ற தண்ணீரைவைத்து இன்னும் ஒன்றிரெண்டு நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்க முடியும். அடுத்து என்ன செய்வது? தண்ணீரில்லாமல் மாண்டு போவதுதானா? கவலை அவர் மனத்தை வாட்டிஎடுத்தது. அப்போது மந்திகள் கூட்டத்தின்தலைவன் மந்தியன் அங்கே வந்தது. அது “ராஜா கவலைப்படாதீங்க! நல்லவங்களுக்குக் கடவுள் கஷ்டத்தக் கொடுப்பாரு! ஆனா கை விட்டுரமாட்டாரு! எல்லாம் நல்லபடியா நடக்கும்! நீங்கபோயி ஓய்வெடுங்க!” என்று ஆறுதல் கூறியது. மந்தியன் சொன்ன முகூர்த்தம்@ அதன் வாய்க்குச்சர்க்கரை அள்ளித்தான் போடவேண்டும். எங்கிருந்துதான் அவ்வளவு மேகக்கூட்டங்கள் திரண்டன என்று தெரியவில்லை. வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது. அன்றுஇரவு கொட்டியமழையில் நீர்நிலைகள் நிரம்பிவழிந்தன. சிங்கராசன் துள்ளிக்குதித்தார். இனி அடுத்தகோடை வரைக் கவலையில்லை. அதற்குள் மாற்றுஏற்பாடு செய்துவிடலாம். மற்ற பறவைகளும்மிருகங்களும் அவ்வாறே ஆனந்தக்கூத்தாடின.
இப்படியே ஒன்றிரெண்டு மாதங்கள் உருண்டோடியிருக்கும்@ ஒருநாள் பக்கத்துக்காட்டுப் பறவைகளும்மிருகங்களும் இந்தக் காட்டைநோக்கி பரபரப்பாய் ஓடிவந்தன. அவைகள் அனைத்தின் முகங்களிலும் பயம் பீதி@ விஷயம் கேள்விப்பட்டு தலைவர்சிங்கராசன் தன் படைபரிவாரங்களுடன் சென்று மறித்துக்கேட்டார்.
“என்ன விஷயம்?”
“எங்கபகுதில காட்டுத்தீ பத்திக்கிட்டு எரியுது! எவ்வளவு போராடியும் அதை அணைக்க முடியலை! அதான் உயிரைக் காப்பாத்திக்குறதுக்காக இங்க ஓடிவந்தோம்! எங்களுக்கு அடைக்கலம் கொடுங்க”- அவைகள் கேட்டன.
“கொஞ்சநாளைக்கு முன்னாடி தண்ணிப்பஞ்சம் வந்தப்பம் உங்களைத்தேடி வந்தோமே! அப்ப உதவிபண்ணுனீங்களா! இப்பமட்டும் எந்த முகத்த வைச்சிக்கிட்டு எங்ககிட்ட வந்து உதவிகேக்குறீங்க?’- இந்தக்காட்டுப் பறவைமிருகங்கள் கேட்டன.
“நாங்க அப்பத்தெரியாம தப்புசெஞ்சுட்டோம்! எங்களை மன்னிச்சிருங்க! தீ எல்லாத்திசையிலும் கொழுந்துவிட்டு எரியுது! எங்களுக்குத் தப்பிச்சுப் போக வேறமார்க்கம் கிடையாது! தயவுசெய்து உதவிபண்ணுங்க!”- அவைகள் கெஞ்சின.
“எப்படி தண்ணிக்கஷ்டம் எங்ககஷ்டம்னு சொன்னீங்களோ அதுமாதிரி காட்டுத்தீ உங்ககஷ்டம்! அதை நீங்கதான் சமாளிச்சுக்குனும்! எங்ககிட்ட வரக்கூடாது!”- இவைகள் பதிலுக்குக்குரல் கொடுத்தன.
தலைவர்சிங்கராசன் கையமர்த்தி அனைவரையும் அமைதிகாக்கும்படி செய்தார். அவர் சொன்னார். “ஒருத்தர் நமக்குத் தீங்கு செஞ்சா பதிலுக்கு நாம அவங்களுக்குத் தீங்குசெய்யனும்ங்குற அவசியமில்ல! தீயசெயல்களை எவ்வளவுக்கெவ்வளவு வேகமா மறக்குறோமோ அவ்வளவுக்கவ்வளவு எல்லாருக்கும் நல்லது! ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அவங்க நமக்கு அறியாமக் கெடுதல்செஞ்சுட்டாங்க! அதைத் தப்புனும் உணர்ந்திட்டாங்க! அவங்க நமது நண்பர்கள்! அவங்க இப்ப ஆபத்துல இருக்கும்போது உதவமாட்டேன்னு சொல்றது மிகப்பெரிய பாவம்! கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க! அடுத்தகாட்டுல பத்திக்கிட்ட தீ நம்மகாட்டுக்கு பரவுறதுக்கு எவ்வளவுநேரம் ஆகும்? இது ஒருத்தொருக்கொருத்தர் சண்டை போடுற நேரம்கிடையாது! ஒத்தாசையா செயல்படவேண்டிய நேரம்!”- என்ற சிங்கராசன் மளமளவென்று கட்டளைகளைப் பிறப்பித்தார்.
தலைவர்சிங்கராசனின் கட்டளைப்படி பக்கத்துகாட்டுத்தீ இங்கு பரவாதுஇருக்க துரிதமாகத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன@ மறுபுறம் புகலிடம் தேடிவந்த அந்தப் பறவைமிருகங்களுக்கு உணவுஉடைஇருப்பிட வசதிகள் செய்துதரப்பட்டன@ மேலும் தீயினால் நிர்மூலமாகிப்போன அவர்களின் காட்டைப் புனரமைக்கவும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன@ இதற்கு பலநாட்கள் ஆனது. மீண்டும் அந்தப் பறவைகள்மிருகங்கள் தங்கள்இருப்பிடம் திரும்பும்நேரம் வந்தது. அவைகள் சிங்கராசன் முன்னால் கரம்கூப்பி நின்றன. அவைகளின் தலைவர்வனராசன் சிங்கராசனின் கரங்களைப்பற்றிக் கொண்டார். அவர் “நாங்க உங்களுக்குத் தீங்கு செஞ்சோம்! நீங்க பெருந்தன்மையா அதை மன்னிச்சதோட இல்லாம மேற்கொண்டு நன்மைசெஞ்சு எங்களை வெட்கப்பட வைச்சுட்டீங்க! உங்களோட பட்டறிவு பகுத்தறிவு முன்னாடி எங்களோட ஆணவம் அகங்காரம் எல்லாம் சுத்தமா கரைஞ்சு போச்சு! இப்ப இந்த ரெண்டுகாட்டோட நிலபரப்பும் இதோட வளங்களும்; நாம எல்லோருக்கும் சொந்தம்! யார்வேணும்னாலும் எப்பவேணும்னாலும் எங்கவேணும்னாலும் சுதந்திரமா போகலாம்வரலாம்! உங்க அன்புக்கு நன்றி!”- என்று கூறி நா தழுதழுத்தார். வனராசனின் புகழாரத்தைப் பணிவுடன் ஏற்றுக்கொண்ட சிங்கராசன் “இணைஞ்சு போராடும்போது இயற்கையோட இடர்பாடுகளைக்கூட நம்மளால ஜெயிக்க முடியும்! நடந்த சம்பவங்கள் இதற்கு ஒரு உதாரணம்! இது நமக்கெல்லாம் ஒரு பாடம்!போயிட்டு வாங்க!”- என்று கூறி விடைகொடுத்தார்.