சோம்பேறி மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 11,023 
 
 

ஒரு ஊரில் ஒரு சோம்பேறி மனிதன் இருந்தானாம்.

எந்த வேலையும் செய்யாமல் தின்பதும்,தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள்.
வைத்தியர் வீட்டுக்குப் போகக்கூட முடியாமல்
ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.

அவர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு.சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம்.

சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம்.

எதற்கு?எப்போது வேர்க்குமென்று.

அப்போது அவன் மனை சொன்னாளாம்’நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும்’என்று.

அவனும் தன் துணிகளைத் துவைப்பது,தோட்ட வேலை செய்வது,கடைக்குப் போவது,நிலத்தில் வேலை செய்வது என் உழைக்க ஆரம்பித்தானாம்.

ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை.

கொஞ்சநாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.

ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது.

மீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம்’எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானது’என்று.

அதற்கு அவர்’உன் வியாதி மருந்தால் தீரவில்லை.சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குண்மடைந்து விட்டாய்.நான் கொடுத்தது மருந்தேயில்லை.வெறும் துளசி,வெல்லம் கலந்தது’ என்றாராம்.

அவனும் நன்றி சொல்லி விட்டுச் சென்றானாம்.

புது வார்த்தை:சூரணம் என்பது நன்கு பொடி செய்யப்பட்ட மருந்து.

நீதி:சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருந்தால் நோயின்றி வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *