ஒரு ஊரில் சிறிய குடும்பம். கணவன், மனைவி, மகள், மகன் ஆகிய நால்வரும் மகிழ்ச்சியுடனும், பாசத்துடனும் வாழ்ந்து வந்தனர்.
சந்தைக்குப் போன தாய் திராட்சைக்குலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தாள். அதை தன் மகளிடம் கொடுத்தாள் தாய்.
அதில் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டுச் சுவைத்ததும் தன் தம்பியின் நினைவு வந்தது. உடனே தம்பியிடம் கொடுத்தாள்.
அவன் ஒரு பழத்தைச் சாப்பிட்டதும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தந்தையிடம் ஓடிப்போய்க் கொடுத்தான்.
அவர் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டதும், சமையல் அறையில் இருந்த மனைவியின் நினைவு வந்து; அவளிடம் ஒரு பழத்தைக் கொண்டு போய்க் கொடுத்தார்.
அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்ட மனைவி, இந்தத் திராட்சைக் கொத்து எங்கிருந்து புறப்பட்டதோ அந்த இடத்துக்கே திரும்பி வந்து விட்டது” என்று அன்புடன் கூறினாள்.
பாசம் என்பதும் இப்படித்தான் சுற்றிச் சுற்றி வரும் என்று நினைத்தனர் கணவனும் மனைவியும்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்